புதிய பதிவுகள்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Today at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Today at 8:14 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Today at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Today at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Today at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Today at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Today at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Today at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
30 Posts - 16%
krishnaamma
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
24 Posts - 13%
T.N.Balasubramanian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
18 Posts - 9%
Anthony raj
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
5 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
4 Posts - 2%
Rathinavelu
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
3 Posts - 2%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
3 Posts - 2%
Nithi s
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
502 Posts - 51%
ayyasamy ram
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
194 Posts - 20%
T.N.Balasubramanian
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
105 Posts - 11%
Anthony raj
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
45 Posts - 5%
heezulia
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
44 Posts - 4%
mohamed nizamudeen
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
30 Posts - 3%
krishnaamma
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
24 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
15 Posts - 2%
prajai
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
11 Posts - 1%
Malasree
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_m10பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!


   
   

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 21, 2014 9:45 pm

First topic message reminder :




பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! - Page 13 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு
பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 9:59 pm

ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய வாக்னர் குழு: விமான பயணத்தில் அந்நாட்டு நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி



ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது புதிய திரும்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டு ராணுவ குழு திரும்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் வாக்னர் ஆயுதக் குழு புதின் அரசுக்கு எதிராக திரும்பி தாக்குதல் நடத்தியது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இந்த அமைப்பு ரஷ்யா தலைநகர் மாஸ்கோ நோக்கி படையெடுத்த நிலையில் அங்கு உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தை முடித்து வாஷிங்டன் டி.சியில் இருந்து கெய்ரோ சென்ற போது ரஷ்யாவின் தற்போதைய நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகள், தூதர்களிடம் நேற்று(சனிக்கிழமை) கேட்டறிந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், யெவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான வாக்னர் குழுவை “ஆயுதமேந்திய கலகம்” என்று அவர் எச்சரித்த நிலையில் விவகாரம் உலகம் நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

புடினின் ரஷ்யாவைப் பற்றியும், அங்குள்ள தற்போதைய நிலவரத்தைப் பற்றியும் நன்கு அறிந்த தூதர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் மோடியிடம் எடுத்துரைத்தனர்.

ஜூலை 4-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்படும் ஷாங்காய் உச்சி ஒத்துழைப்பு மாநாட்டில் புதின்கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த மெய்நிகர் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெல்லியில் மாநாடு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காணொலி வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரஷ்யா விவகாரம் குறித்து இந்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை, ஆனால் வாக்னர் குழுவின் நடவடிக்கைகளை இந்தியா “குவிப்புப் போரின்” பிரதிபலிப்பாகக் கருதுகிறது. புடின் புதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில், “நாம் எதிர்கொள்வது அடிப்படையில் ஒரு துரோகம்.

பெருக்கப்பட்ட லட்சியங்கள் மற்றும் தனிப்பட்ட நலன்கள் தேசத்துரோகத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. நமது நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரான தேசத்துரோகம் மற்றும் வாக்னர் குழுவின் வீரர்கள் மற்றும் தளபதிகள் தோளோடு தோள் சேர்ந்து நமது மற்ற பிரிவுகள் மற்றும் துருப்புக்களுடன் சேர்ந்து போராடி இறக்கும் பொதுவான காரணமாகும். இது பிரிகோஜினின் தெளிவான இலக்காக இருந்தது.

எந்தவொரு உள் கிளர்ச்சியும் நமது மாநிலத்திற்கும் நமது தேசத்திற்கும் ஆபத்தான அச்சுறுத்தலாகும். இது ரஷ்யாவிற்கு, நம் மக்களுக்கு அடியாகும். இந்த அச்சுறுத்தலில் இருந்து தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான எங்கள் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும். துரோகத்தின் பாதையை உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுத்து, ஆயுதமேந்திய கலகத்தைத் திட்டமிட்டு, அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்தின் பாதையை எடுத்த அனைவரும் தவிர்க்க முடியாமல் தண்டிக்கப்படுவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:00 pm

மோடி- ஆண்டி ஜாஸ்ஸி சந்திப்பு: இந்தியாவில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் அமேசான்



அமேசான் நிறுவனம் இந்தியாவில் மேலும் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார். நேற்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்புக்கு பின் ஆண்டி ஜாஸ்ஸி அறிவித்தார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 3 தினங்களுக்கு முன் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவு மேம்பாடு குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதோடு அமெரிக்கா- இந்தியா தொழில் அதிபர்கள், பெரு நிறுவனங்களின் சி.இ.ஓ-களை சந்தித்து பேசினார். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் வணிக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியை மோடி சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாஸ்ஸி, இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் அதிக முதலீடு செய்த நிறுவனங்களில் அமேசான் முக்கிய பங்காற்றுகிறது.

தற்போது வரை நாங்கள் இந்தியாவில் 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளோம். தற்போது மேலும் 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் இந்தியாவில் எங்கள் முதலீடு 26 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றார். 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கு எட்டப்படும்” என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:50 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:53 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 25, 2023 10:55 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 27, 2023 8:58 pm

பொது சிவில் சட்டம்: எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சி… முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் – மோடி



பாஸ்மாண்டா முஸ்லிம்களின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை போபாலில் பொது சிவில் சட்டத்திற்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். ‘முத்தலாக்கை’ ஆதரிப்பவர்களுக்கு எதிராக அவர், “இது இஸ்லாத்தின் முக்கியமான அம்சமாக இருந்தால், பாகிஸ்தான், இந்தோனேஷியா, கத்தார், ஜோர்டான், சிரியா மற்றும் வங்கதேசத்தில் ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “80-90 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்து இந்த்ந முத்தலாக் நடைமுறையை அகற்றிவிட்டது என்றும், சிலர் முத்தலாக் மூலம் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக எப்போதும் பாகுபாடு காட்ட உரிமம் பெற விரும்புகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஐக்கிய முன்னணியை உருவாக்க முயற்சிப்பதை மோடி கடுமையாக சாடினார். “எதிர்க்கட்சிகள் இப்போது செய்வது போல, வேகமாக சுழன்று கொண்டிருப்பதை நான் பார்த்ததில்லை. துஷ்பிரயோகம் செய்தவர்கள், இப்போது சாஷ்டாங்க பிராணாமம் செய்கிறார்கள், கும்பிடுகிறார்கள். இது அவர்களின் நிர்பந்தம் என்று கூறினார். “2024 தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டுவர பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர் என்பது அவர்களின் பதட்டத்திலிருந்து தெளிவாகிறது. அதனால்தான், இந்தக் கட்சிகள் வெறிகொண்டு, தேர்தலுக்கு முன் பொதுமக்களை தவறாக வழிநடத்தி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்துள்ளன.” என்று மோடி கூறினார்.

எதிர்க்கட்சிகள் ‘ஊழலுக்கு உத்தரவாதம்’ அளிப்பதாகவும் அதைப் பற்றி பொதுமக்களிடம் தெளிவுபடுத்துவது பா.ஜ.க தொண்டர்களின் மிகப்பெரிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் பாட்னா கூட்டத்தில் கூடிய எதிர்க்கட்சிகள் மீது மோடி பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஹெலிகாப்டரில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் வரை காங்கிரஸின் கையால் கொள்ளையடிக்கப்படாத துறையே இல்லை. ஆர்.ஜே.டி-ஐப் பாருங்கள், அவர்கள் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள். ஆர்.ஜே.டி ஊழல் மிகப் பெரியது. நீதிமன்றங்கள் கூட சோர்வடைகின்றன. ஒன்றன் பின் ஒன்றாக தண்டனைகளை வழங்குகிறார்கள். தமிழகத்தில் சட்ட விரோதமாக சொத்து குவித்ததாக தி.மு.க மீது குற்றச்சாட்டு உள்ளது. 23,000 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக டி.எம்.சி மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், மேற்கு வங்க மக்களால் இந்த ஊழல் சம்பவங்களை மறக்க முடியாது. என்.சி.பி மீது ரூ.70,000 கோடி ஊழல் புகார்கள் உள்ளன. இந்த கட்சிகளின் ஊழல் அளவு ஒருபோதும் குறையாது” என்று மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் ஊழலுக்கு உத்தரவாதம் வைத்திருப்பார்கள் என்றால், மோடியிடமும் உத்தரவாதம் உண்டு. ஒவ்வொரு ஊழல் ஆசாமிக்கு எதிராகவும் விசாரணை இருக்கும். ஒவ்வொரு திருடனுக்கும் எதிரான விசாரணைக்கு உத்தரவாதம் இருக்கும். நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு ஒரு கணக்கு இருக்கும். சட்டம் செயல்படுவதால், அவர்கள் சிறைக் கம்பிகளைப் பார்க்க முடியும் என்பதால், இந்த ஜுகல்பந்தி நடைபெறுகிறது. ஊழல் வழக்கில் ஜாமீனில் இருப்பவர்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், இப்படிப்பட்டவர்களை சந்தித்து சிறை அனுபவங்களைப் பேசுவதை இப்போது பார்க்கிறோம். அவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்” என்று மோடி கூறினார்.

வாரிசு அரசியலுக்கு எதிராக பேசிய மோடி, “உங்கள் மகனுக்கும் மகளுக்கும் நல்லது செய்ய விரும்பினால், பா.ஜ.க-வுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார்.

பொது சிவில் சட்டம் குறித்து பேசிய மோடி, “இந்த அரசியல் கட்சிகள் உங்களைத் தூண்டிவிட்டு, அழித்து ஆதாயம் தேட முயல்கின்றன என்பதை இந்தியாவின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் தங்களைத் தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள்.” என்று கூறினார்.

“ஓட்டு வங்கி அரசியல் செய்பவர்களால் நமது பஸ்மாண்டா முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கை நரகமாகிவிட்டது. போராட்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களை யாரும் கேட்பதில்லை. அவர்கள் மிகவும் பாகுபாடு காட்டப்பட்டுள்ளனர். ஆனால், இது குறித்து எந்த விவாதமும் இல்லை. இன்றும் பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்கு சம பங்கு வழங்கப்படவில்லை. அவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறார்கள். பா.ஜ.க கடந்த ஆண்டு முதல் சமூக நலன் கருதி செயலூக்கமான செயல்திட்டத்தை நடத்தி வருகிறது.

பல தலைமுறைகள் பாதிக்கப்படும் அளவுக்கு அவர்கள் பாகுபாடு காட்டப்பட்டுள்ளனர். ஆனால், பா.ஜ.க ஒவ்வொரு குடிமகனுக்காகவும் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற எண்ணத்துடன் பாடுபடுகிறது. நமது பூத் கமிட்டி நிர்வாகிகள் இந்த மனநிலையுடன் முஸ்லிம் சகோதர சகோதரிகளிடம் சென்று அவர்களுக்கு புரிய வைக்கும் போது, தவறான புரிதல்கள் அனைத்தும் நீங்கும்.” என்று மோடி கூறினார்.

போபாலின் கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து ஐந்து வந்தே பாரத் ரயில்களை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த பின்னர், மோடி நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க கமிட்டி நிர்வாகிகளிடம் காணொலி மூலம் உரையாற்றினார், அவர்களை பா.ஜ.க-வின் பெரிய சக்தி என்று அழைத்தார்.

“வந்தே பாரத் ரயில் இணைப்புக்காக மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்” என்று மோடி ‘மேரா பூத் சப்சே மஸ்பூத்’ நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இதுவரை போபாலில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளனர். இப்போது போபாலில் இருந்து இந்தூர் மற்றும் ஜபல்பூர் பயணம் அனைத்து வசதிகளுடன் வேகமாகவும் நவீனமாகவும் இருக்கும்.” என்று கூறினார்.

அக்கட்சியின் பூத் ஊழியர்களிடம் உரையாற்றிய மோடி, “நீங்கள் அனைவரும் உங்கள் வாக்குச் சாவடிகளில் வேலை செய்கிறீர்கள், ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். மத்திய அரசின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீங்கள் உழைத்த கடின உழைப்பால் இது பற்றிய செய்திகள் எனக்கு அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. நான் அமெரிக்காவில் இருந்தபோதும் உங்கள் முயற்சிகள் பற்றிய செய்திகள் எனக்குக் கிடைத்தன. அதனால்தான், அங்கிருந்து வந்த பிறகு, உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பா.ஜ.க-வின் மிகப்பெரிய சக்தி நீங்கள் அனைவரும் காரியகர்த்தாக்கள்தான்.” என்று கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார். “நான் இன்று 10 லட்சம் பூத் கமிட்டி உறுப்பினர்களை, சந்திப்பதால், நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியும் நம்முடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சி வரலாற்றிலும் இப்படி ஒரு களத்தில் அடிமட்ட அளவிலான வேலைத்திட்டம் இருந்திருக்காது. முதல்வர்கள் முதல் மண்டல காரிய சமிதிகள் வரையிலான கூட்டங்கள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. ஆனால், ஒரு பூத் கமிட்டி நிர்வாகி கூட்டம் நடப்பது வரலாற்றில் முதல் முறையாகும்.” என்று கூறினார்.

“அன்றாட அரசியலைத் தவிர்த்து நீங்கள் கேள்விகளைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று மோடி பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் கூறினார். “வாக்குச் சாவடி ஒரு அலகு, அதை ஒருபோதும் சிறியதாக பார்க்கக்கூடாது. அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு மேலாக நாம் நிற்க வேண்டும். சமூகத்தின் மகிழ்ச்சியிலும் சோகத்திலும் நண்பர்களாக நம் அடையாளத்தை உருவாக்க வேண்டும். களத்தில் இருந்து வரும் கருத்து மிகவும் முக்கியமானது. பிரதமரும், முதல்வரும் ஒரு வெற்றிகரமான கொள்கையை உருவாக்கினால், வாக்குச்சாவடி அளவில் உள்ள தகவல்கள் சக்திவாய்ந்தவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” என்று மோடி கூறினார்.

பா.ஜ.க-வை உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக மாற்றியதில் மத்தியப் பிரதேசம் பெரும் பங்காற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்த கூட்டத்தில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “பா.ஜ.க வெற்றி நாட்டுக்கும் மாநிலங்களுக்கும் முக்கியம். 5 சட்டப்பேரவைத் தேர்தல்களில், மோடியின் வழிகாட்டுதலின் கீழ், வாக்குச்சாவடிகளில் வெற்றி பெறுவோம் என்று தீர்மானம் எடுப்போம். பூத்தில் வெற்றி பெற்றால் தேர்தலில் வெற்றி பெறுவோம். இந்த எண்ணத்துடன் தேர்தல் களத்திற்கு செல்வோம். 5 மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெறும், 2024-ல் வரலாற்று சிறப்புமிக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். மோடி ஜி நம் உலகை வழிநடத்துவார்.” என்று கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் 2024-ல் நடக்க உள்ளது.

மேலும், சிவராஜ் சிங் சௌஹான் மேலும் கூறுகையில், “நாம் இந்தியாவில் பிறந்தது நம்முடைய அதிர்ஷ்டம். நாம் பா.ஜ.க-வின் பூத் கமிட்டு உறுப்பினர்கள், மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இருப்பதால், வளர்ச்சியின் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. மோடி எங்கு சென்றாலும் உலகமே சுழல்கிறது. அவர் அமெரிக்கா சென்றபோது, அவர் தனது பயணத்தின் போது பேசிய 15 முறை அமெரிக்க தலைவர்களின் கைத்தட்டல் கிடைத்தது. மோடி நமது தலைவர் மட்டுமல்ல. அவர் நம்முடைய வழிகாட்டி, தத்துவவாதி, நம்முடைய பெரிய சகோதரர். அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பூத் கமிட்டி அளவிலான உறுப்பினர்களிடம் பேச வந்துள்ளார். இது அற்புதம்.” என்று கூறினார்.

இதற்கிடையில், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, “மோடி-யின் தலைமையைப் பார்ப்பது நம்முடைய அதிர்ஷ்டம். இந்தியாவின் மிகப்பெரிய தலைமை நிர்வாகியான நமது பிரதமர், இரவும் பகலும் பிஸியாக இருக்கிறார். ஆனால், விருந்துக்கு வரும்போது, அவர் எப்பொழுதும் எங்களுக்கு நேரம் கொடுக்கிறார். அவர் ஒருபோதும் தயங்குவதில்லை. மக்களுக்காக தன் வாழ்க்கையைக் கொடுத்தவர், கட்சியை உலக வரைபடத்தில் இடம்பிடிக்கச் செய்தவர். நாம் பலவீனமாக உள்ள வாக்குச் சாவடிகளில் வேலை செய்யும்படி மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.” என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 27, 2023 9:08 pm

திமுகவிற்கு வாக்களித்தால் கருணாநிதியின் வாரிசுகள் மட்டுமே பயன் அடைவார்கள் என்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்..



அப்போது அவர் பேசியதாவது:-

முலாயம் சிங் யாதவ் குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலனை நீங்கள் விரும்பினால் சமாஜ்வாடிக்கு வாக்களியுங்கள்.

லாலு குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலன் வேண்டுமானால் ஆர்ஜேடிக்கு வாக்களியுங்கள்.

சரத் ​​பவார் குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலனை நீங்கள் விரும்பினால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள்.

அப்துல்லா குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலன் வேண்டுமானால் தேசிய மாநாட்டிற்கு வாக்களியுங்கள்,

கருணாநிதி குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்கள் நலன் வேண்டுமானால் திமுகவிற்கு வாக்களியுங்கள்,

கே. சந்திரசேகர் ராவ் குடும்பத்தின் மகன்கள் மற்றும் மகள்களின் நலன் வேண்டுமானால் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களியுங்கள்.

ஆனால், உங்கள் மகன், மகள் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் நலன் வேண்டுமானால், பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 27, 2023 10:49 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 01, 2023 11:28 pm

'உலக அளவில் நம் மதிப்பும் மரியாதையும் வளர்கிறது' பல்கலை விழாவில் பிரதமர் பெருமிதம்



புதுடில்லி, ''இந்தியாவின் திறன் வளர்ச்சி மற்றும் நம் இளைஞர்கள் மீது உலக அளவில் நம்பிக்கை உயர்ந்து வருவதால், நம் நாட்டின் மீதான உலகளாவிய மதிப்பும், மரியாதையும் வளர்ந்துள்ளன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லி பல்கலைக்கழகத்தின் நுாற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

டில்லி பல்கலைக்கழகம் என்பது வெறும் பல்கலை மட்டுமல்ல, அது ஒரு இயக்கம். இந்தியாவின் வளமான கல்வி முறையே நம் செழுமைக்கு காரணம்.

தேக்க நிலை


ஒரு காலத்தில் உலகின் மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு அதிகமாக இருந்தது. நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில், நம் கல்வி நிலையங்கள் அழிக்கப்பட்டு, நாட்டின் அறிவுசார் வளர்ச்சியில் தடை ஏற்பட்டதுடன், நம் வளர்ச்சியும் தேக்க நிலையை அடைந்தது.

நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்த நிலை மாறியது. இந்திய பல்கலைகள், திறமையான இளைஞர்களுடன் ஒரு வலுவான தலைமுறையை உருவாக்கின. இதில் டில்லி பல்கலைக்கு முக்கியப் பங்கு உள்ளது.

சர்வதேச அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தும், 'கியூஎஸ் குளோபல் ரேங்கிங்'கின் சமீபத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய பல்கலைகளின் எண்ணிக்கை 12ல் இருந்து 45 ஆக உயர்ந்து உள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்கும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தியாவின் திறன் வளர்ச்சி மற்றும் நம் இளைஞர்கள் மீது உலக அளவில் நம்பிக்கை உயர்ந்து வருவதால், நம் நாட்டின் மீதான உலகளாவிய மதிப்பும், மரியாதையும் வளர்ந்துள்ளன.

சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் வாயிலாக நம் இளைஞர்களுக்கு பல புதிய வாசல்கள் திறக்க உள்ளன.

அங்கீகாரம்


நம் இளைஞர்களுக்கு இதுவரை கிடைத்திடாத தொழில்நுட்பங்கள் நம் கைகளுக்கு வர உள்ளன. மைக்ரான் முதல் கூகுள் வரை பல்வேறு நிறுவனங்களும் நம் நாட்டில் பெரும் முதலீடுகளை செய்ய முன்வந்துஉள்ளன.

கல்வித்துறையில் கடந்த சில ஆண்டுகளாக நாம் எடுத்து வரும் முடிவு களும், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கைகளும் சர்வதேச அளவில் இந்திய பல்கலை களின் அங்கீகாரத்தை உயர்த்தி உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 05, 2023 6:30 pm

இந்திய வளர்ச்சிக்கு 5 கொள்கைகளை பின்பற்ற அறிவுரை- 30 லட்சம் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்



பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் ஆர்வம் மிக்கவர். குறிப்பாக ஆண்டுதோறும் பள்ளி இறுதித்தேர்வை எழுதப்போகும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவது எப்படி என்று ஆலோசனை வழங்குவார். அப்போது மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார்.

மாணவர்களை மிகவும் கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து பங்கேற்பது வழக்கம்.

அவ்வாறு பங்கேற்றவர்களில் பலர் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிகளில் படிப்பை தொடர்பவர்களாகவும், பலர் பள்ளிகளில் படிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளின் பெயர், முகவரியை திரட்டி அவர்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்துடன் கடிதம் எழுதுகிறார்.

அந்த கடிதம் முழுவதும் நாட்டுப்பற்றை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் உன்னதமான வளர்ச்சிக்கு 5 முக்கிய கொள்கைகளை கடைபிடிக்க வலியுறுத்தி இருக்கிறார்.

ஒவ்வொரு மாணவரின் பெயரையும் குறிப்பிட்டு கடிதத்தை எழுதி கடைசியில் பிரதமர் கையெழுத்து போட்டுள்ளார்.

கடிதத்துடன் பிரேம் பண்ணி மாட்டும் அளவுக்கு சிறந்த வடிவமைப்புடன் கூடிய ஒரு சான்றிதழையும் இணைத்துள்ளார். அதில் இந்திய வளர்ச்சிக்கான 5 முக்கிய கொள்கைகளாக அவர் குறிப்பிட்டு இருப்பது வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த கடிதம் செல்கிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் சுமார் 1 லட்சம் பேர் அடங்குவார்கள். அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் 6 லட்சம் பேர்.

இந்த கடிதங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழியில் அமைந்துள்ளது.

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக