ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Today at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Today at 6:21 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Today at 6:08 pm

» ஆலோசனை
by Shivramki Today at 3:34 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Today at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Today at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Today at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Today at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Today at 7:41 am

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:39 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Today at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Yesterday at 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Yesterday at 7:26 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Yesterday at 7:19 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 6:53 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:51 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by Dr.S.Soundarapandian Yesterday at 6:47 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Yesterday at 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Yesterday at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Yesterday at 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Yesterday at 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Yesterday at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Yesterday at 12:26 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Yesterday at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Yesterday at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Yesterday at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Mon Nov 23, 2020 11:13 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Mon Nov 23, 2020 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Mon Nov 23, 2020 10:44 pm

Admins Online

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:37 pmகடந்த சில வாரங்களுக்கு முன் ஒருநாள், சென்னை, விருகம்பாக்கம், சின்மயா நகரிலிருக்கும் சீனியரான ஒரு டாக்டரின் கிளினிக்கில் நாம் காத்திருந்தோம். அப்போது துவண்டு துவண்டு விழும் ஒரு குழந்தையுடன், இளம்பெற்றோர் அங்கே ஆஜரானார்கள். இருமல், தும்மல், மூச்சிரைப்பு என்று படாதபாடுபட்டுக் கொண்டிருந்தது அந்தப் பிஞ்சு. வெளியில் எட்டிப்பார்த்த டாக்டர், உடனடியாக ஒரு ஊசியைப் போட்டுவிட்டு, ''குழந்தை என் கண்காணிப்பிலேயே கொஞ்ச நேரம் இருக்கணும். அதனால, இங்க இருந்து போயிடாதீங்க...'' என்று சொல்லிவிட்டு, மற்ற நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தார். இடையிடையே குழந்தை எப்படி இருக்கிறது என்றும் எட்டிப் பார்த்துக்கொண்டார்.

அந்த இளம்பெற்றோர் டாக்டர் முன் அமர்ந்திருக்க, நாமும் அந்த நேரம் உள்ளே இருந்தோம் (ஒரு நோயாளி இருக்கும்போதே, இன்னொருவரையும் உள்ளே அழைத்து உட்கார வைப்பது இவருடைய வழக்கம்).

அப்போது குழந்தை நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்க... ''குழந்தையை ரொம்ப சீரியஸான கண்டிஷன்ல கொண்டு வந்திருக்கீங்க. பொதுவா இப்படிப்பட்ட கண்டிஷன்ல வந்தா... எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகச் சொல்லிடுவேன். ஆனா, அந்த நிலையிலயும் குழந்தை இல்ல. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிச்சேன். குழந்தை பொழைச்சுடுச்சி. முதல்லயே சொன்னா பயந்துடுவீங்கனுதான் சொல்லல.

ஒருவாரமா நீங்க ஒரு டாக்டர்கிட்ட குழந்தையைக் காட்டியிருக்கீங்க. அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து போலியானது. நீங்க கொண்டு வந்த இந்த சிரப்ல பாருங்க... ஏதோ ஒரு தெரு பேரைப் போட்டு, வளசரவாக்கம்னு எழுதியிருக்கு. இப்படி ஒரு மருந்து கம்பெனியே இல்ல. ஒருவேளை அந்தத் தெருவுல போய் விசாரிச்சீங்கனா... 'இது ஆபீஸ்... கம்பெனி காட்டாங்குளத்தூர்ல இருக்கு'னு பொய் சொல்லுவாங்க. ஆனா, விவரம் புரியாம இந்த மருந்தையே நீங்க கொடுத்திருக்கீங்க. அதேபோல, தேவையில்லாத ஆன்டிபயாடிக் மருந்தையும் கொடுத்திருக்கீங்க. இதையெல்லாம குழந்தைக்கு கொடுக்கவே கூடாது. அந்த டாக்டர் தெரிஞ்சுதான் எழுதினாரா... இல்லையாங்கிறது கடவுளுக்கே வெளிச்சம்'' என்று பெற்றோரிடம் சொன்ன டாக்டர், 'இனி யாச்சும் கவனமா இருங்க. குழந்தைக்கு ஏதாச்சும்னா.. எந்த நேரம் வேணும்னாலும் போன் பண்ணுங்க...' என்று சொல்லி அக்கறையோடு சொல்லி அனுப்பினார்.

நம் பக்கம் திரும்பியவர், 'ம்... இப்படி மருந்து, மாத்திரைகள் விஷயத்துல ஏகப்பட்ட வில்லங்கம் நடக்குது. மக்களோட உயிரோட விளையாடறாங்க. சில டாக்டர்களும் இதுக்கு உடந்தையாயிட்டாங்க. அதேபோல, மக்களும் தாங்களாவே இஷ்டம்போல மருந்து, மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறாங்க. என்ன பண்றது?' என்றபடியே... நமக்கான சிகிச்சையை முடித்து அனுப்பினார்.

நமக்கு வந்த காய்ச்சல் குணமானது... ஆனால், டாக்டர் சொன்ன அந்த விஷயம், மூளைக்குள் போய் உட்கார்ந்துகொண்டு குடைய ஆரம்பித்துவிட்டது.

''சார், அமாக்ஸ்லின் (Amoxicillin) மாத்திரை பத்து கொடுங்க...''

''எனக்கு பெனிசிலின் (Penicillin) மாத்திரை ஒரு இருபது கொடுங்க...''

- டாக்டர் பரிந்துரைத்த மருந்து சீட்டுடன், மருந்துக்கடைகளில் நாம் நின்று கொண்டிருக்கும்போது, பரபரவென்று வந்து நிற்கும் சிலர், இப்படி மாத்திரைகளின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி கேட்க... சட்டென்று கடைக்காரர் எடுத்துக் கொடுக்க... நம்மில் பலர் ஆச்சர்யமாக பார்த்திருப்போம் அவர்களை! 'அட, மாத்திரை பேரெல்லாம் என்ன அழகா தெரிஞ்சு வெச்சிருக்காங்க' என்று அவர்களைப் பற்றி பெருமிதமாக நினைத்தது நினைவுக்கு வந்தது.

சிலர், 'எனக்கு பத்து நாளா வயித்த வலிக்குதுங்க. போன தடவை கொடுத்தீங்களே... அதே மாத்திரை பத்து கொடுங்க' என்று கேட்க...

'புரூஃபென் மாத்திரைதானே... இதோ தர்றேன்' என்றபடி கடைக்காரர் எடுத்துக் கொடுக்க...

'அட, இது தெரியாம நாம டாக்டர்கிட்ட இல்ல அடிக்கடி போறோம். நேரடியா இங்கயே வந்துட்டா... டாக்டர் செலவு மிச்சமாச்சே' என்று யோசித்ததும்... நினைவிலாடியது.

ஆனால், இப்படி டாக்டரின் பரிந்துரை இல்லாமலும், ஏற்கெனவே ஒரு தடவை பரிந்துரைத்த மருந்து என்பதற்காகவும் இஷ்டம்போல மாத்திரைகளை வாங்கிச் சென்று பயன்படுத்துவது மிகமிக ஆபத்தானது என்கிற உண்மை, நன்றாகவே உறைத்தது! சொல்லப் போனால், டாக்டரின் பரிந்துரையோடு சாப்பிடும் மருந்து, மாத்திரைகளே... 'சைடு எஃபெக்ட்' என்ற பெயரில் வயிற்றுவலி, தலைவலி, அலர்ஜி என்று பலவித உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த் துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், டாக்டர் சொல்லாமலே மருந்துகளைச் சாப்பிடுவதும்... எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பதும் பெருங்கொடுமைதானே!

நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:38 pm

மருந்தே விஷமாகும்!

''புதிதாக செல்போன் வாங்கினால், 'இது என்ன மாடல், லேட்டஸ்ட் வெர்ஷனா, என்னென்ன வசதிகள் உண்டு..?’ என்று, கேட்க பல கேள்விகள் உண்டு நம்மிடம். ஆனால், மாத்திரை, மருந்து வாங்கும்போது, 'எந்த பிரச்னைக்கு எந்தெந்த மாத்திரைகள்..?’ என்று அதை எழுதிய டாக்டரிடமோ, 'காலாவதியாகும் தேதி என்ன?’ என்று மெடிக்கல் ஷாப்பிலோ யாரும் கேட்பதில்லை. ஆனால், மருந்தே விஷமாகும் அபாயம்கூட இன்றைய மருத்துவச் சந்தையில் சாத்தியம்!'' என்று அதிர்ச்சி கூட்டுகிறார், ஓய்வுபெற்ற அரசு பொதுநல மருத்துவர் நாராயணன். மருந்து, மாத்திரை குளறுபடிகள் பற்றி, தன் 48 ஆண்டுகால மருத்துவ அனுபவத்திலிருந்து பேசினார் டாக்டர்.

'ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரை கொடுங்க..!’

''ஆன்டிபயாடிக் மருந்துகளை இன்று மருத்துவர்களின் பரிந்துரை இன்றி மக்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்வது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு தடவை ஜுரத்துக்காக டாக்டர் எழுதிக் கொடுத்த அதே மருந்தை, அடுத்த முறை ஜுரம் வரும்போது... 'ஏற்கெனவே இதைத்தானே எழுதினார்' என்றபடி நேரடியாக மருந்துக்கடைக்குச் சென்று வாங்கிச் சாப்பிடுவதும் வழக்கமாகி வருகிறது. ஆன்டிபயாடிக் மருந்து என்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, உடலில் உள்ள கிருமிகளின் தாக்கத்தை நிறுத்தி, மேலும் வளரவிடாமல் தடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பிரச்னைகளைத் தீர்க்கும். ஆனால், எல்லாவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளும், உட்கொள்ளும் அனைவருக்கும் இதைச் செய்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. எனவே, ஒவ்வொருவரின் உடல் பிரச்னையைப் பொறுத்து, துல்லிய சோதனைக்குப் பிறகு, அவருக்கான மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார்.

பலரும் இன்றைக்கு மருந்துக்கடைகளுக்குச் சென்று, தங்களின் பிரச்னையை அங்கே எடுத்துச் சொல்லி, மருந்துகளையும், ஆன்டிபயாடிக் மாத்திரைகளையும் வாங்கி உட்கொள்கிறார்கள். இதனால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படலாம், அழிக்கப்படாமலும் போகலாம். ஒருவேளை அது அவரது பிரச்னைக்கு ஏற்ற மருந்தாக இல்லாமல் இருந்தால், வாய்ப்புண், குடற்புண், எரிச்சல் என அது கூடுதல் பிரச்னைகளை விளைவிக்கும். மேலும் 5 - 7 நாட்கள் உட்கொள்ள வேண்டிய இதை, அதைவிடக் குறைந்த அல்லது அதிகமான நாட்களுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். இதுவும் கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நம் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது, அதன் பெருக்கத்தைக் குறைத்தோ, அதை முற்றிலுமாக அழித்தோ நம்மை நோயிலிருந்து காக்கும் மருந்துகளே, ஆன்டிபயாடிக் மருந்துகள். பொதுவாக, பாக்டீரியா தொற்று ஏற்பட்டால்... நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடி, நோயில் இருந்து காக்கும். அது திறன் குறையும் போதோ அல்லது தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்போதோ, இந்த மருந்துகள் தேவையாகின்றன. இதுவே தொடர்ச்சியாக இந்த மருந்தை எடுக்கும்போது, ஒருகட்டத்தில் குறிப்பிட்ட பாக்டீரியா, அந்த மருந்தை எதிர்க்கப் பழகிவிடும். பின் மருந்து பயனற்றுப் போக, அந்த பாக்டீரியா தொற்றை ஒழிக்க முடியாமலேயே போய்விடும். எனவேதான், அதிகமாகவோ... தொடர்ச்சியாகவோ இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

மேலும், ஆன்டிபயாடிக் மருந்துகள்... பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு... வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடாது. சளி, தடுமன் போன்ற வைரஸால் ஏற்படும் உடல் அசௌகரியங்களுக்கு இது தீர்வாகாது. சோர்வு, வாய் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்படும் பூஞ்சைத் தொற்று முதலிய பக்கவிளைவுகளையும் இந்த மருந்துகள் ஏற்படுத்தும். இந்த மருந்துகளை, மற்ற மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது அலர்ஜி ஆகும் வாய்ப்புகளும் உண்டு. சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் ஆன்டிபயாடிக் எடுப்பது கூடாது. இத்தனை ஆபத்தான விஷயங்கள் உண்டு என்பதால், மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துக்கடை யில் நீங்களாகவே வாங்கி உட்கொள்வது கூடவே கூடாது'' என்று வார்த்தைகளில் கண்டிப்பு காட் டிய டாக்டர் நாராயணன், தொடர்ந்தார்...


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:38 pm

விளம்பரத்தால் ஏமாறாதீர்கள்!

டி.வி. விளம்பரங்களில் வரும் மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை, மருத்துவர்கள் மற்றும் உரிய நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் வாங்கி உட்கொள்வது, ஆபத்தையே விளைவிக்கும். 'ஆல்ப்ஸ் மலையிலிருந்து வரவழைக்கப்பட்டது... ஆப்பிரிக்க காடுகளில் இருந்து பறித்து வரப்பட்டது' என்றெல்லாம் விற்பனையைக் கூட்டுவதற்காக கலர்கலராக படம் காட்டி விளம்பரப்படுத்துவார்கள். அதையெல்லாம் நம்பி ஏமாறாமல் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். தரமற்ற பொருட்களையும், விளம்பரங்களையும் மக்களிடம் பரப்புவதை அரசாங்கம் தடை செய்யவேண்டும்.

'சுகர் இருக்கா... என்ன வேணும்னாலும் சாப்பிடுங்க. கூடவே இந்த சுகர் மாத்திரையைச் சாப்பிட்டா சரியாப்போச்சு.'

'கர்ப்பத்தைத் தடுக்கணுமா... அதுக்காக எதுக்கு உங்க இன்பத்தை இழக்கணும். சந்தோஷமா இருங்க... கூடவே இந்த மாத்திரையை மறக்காதீங்க!'

- இப்படி எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை விளம்பரப்படுத்துவதும்... தயக்கமே இல்லாமல் வாங்கி விழுங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பின்விளைவுகளைப் பற்றித்தான் யாருமே யோசிப்பதில்லை. இதையெல்லாம் யோசிக்க வைப்பதற்காகத்தான் 'ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரள வைக்கும் உண்மைகள்!' என்ற தலைப்பில் அவள் விகடன் சிறப்புப் பார்வை கட்டுரை கடந்த இதழில் வெளியாகியிருந்தது. அதன் தொடர்ச்சி இங்கே இடம் பிடிக்கிறது.

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... மருந்துகளால் அதிகம் பாதிக்கப்படுவது... குழந்தைகளும் பெண்களும்தான். அந்த பாதிப்புகள் எந்தெந்த வகைகளில் வருகின்றன... அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பதையெல்லாம் இங்கே பேசுகிறார்கள்... இரண்டு மருத்துவர்கள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:38 pmபெண்களே உஷார்... உஷார்!

''மாதவிடாய், கருத்தரிப்பதைத் தவிர்க்க, கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் என பெண்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்!'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஹேமலதா, அதைப் பற்றி விரிவாகவே பேசினார்.

''மாதவிடாய் நேரங்களில் சில பெண்களுக்கு 4 முதல் 6 மணி நேரம் வரை வலி ஏற்படும். இது இயற்கையானதுதான். அந்த வலியைப் பொறுத்துக்கொள்ளப் பழகி, அதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவே ஒரு சிலருக்கு மாதவிடாய் நாட்களில் நாள் முழுக்க தீவிர வலி இருக்கும். கர்ப்பப்பையின் உள்பகுதியில் உள்ள அணுக்கள் வெளிப்பகுதியில் வளர்வது, இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். இது மருத்துவரின் ஆலோசனையோடு தீர்க்க வேண்டிய பிரச்னை. அதற்கும் மெடிக்கல் ஷாப்பில் கேட்டு வாங்கி ஏதாவது ஒரு வலிநிவாரணி மாத்திரையை விழுங்கினால், கருப்பையின் வெளிப்பகுதியில் வளரும் அணுக்கள் இன்னும் அதிகமாக வளர்ந்து அதிக வலியைத் தருவதுடன், கருத்தரிப்பில் பிரச்னை வரை கொண்டுசெல்லும்.

மரணம் வரை அழைத்துச் செல்லும் 'தள்ளிப்போடும்' மாத்திரைகள்!

சில பெண்கள் மாதவிடாய்க் காலத்தை தள்ளிப்போட மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள். இதுபோன்று மருந்துகளை எடுப்பதால் தலைவலி, உடல் நீர்கோத்தல், உடல் வீக்கம், வாந்தி, பேதி என்று தொடங்கி... வயிற்றுப்புண், மூச்சுவிடுவதில் சிரமம், கிட்னி பாதிப்பு, லிவர் பாதிப்பு என கொஞ்சம் கொஞ்ச மாக பிரச்னைகள் பெரிதாகும். மாதவிடாயைத் தள்ளிப்போடும் மாத்திரை என்பது, அந்த நேரத்தில் நம் உடலின் ஹார்மோன் செயல்பாட்டை மாற்றிஅமைத்து, நாட்களைத் தள்ளிப்போடும். இப்படி தள்ளிப்போடுவது என்பது, இயற்கைக்கு விரோதமான செயல். இதைச் செய்யவே கூடாது. எப்போதாவது ஒருதடவை தவிர்க்கவே முடியாத ஒரு காரணத்துக்காக, இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது

சரி. ஆனால், சின்னச் சின்ன காரணங்களுக்காக எல்லாம் அடிக்கடி எடுத்துக்கொண்டால், குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் ஆபத்துகூட உண்டு. கருப்பையை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏன்... உயிரிழப்பேகூட நிகழலாம்.

கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரையின்றி பெண்கள் எந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. தவறான மருந்துகள், கருவைப் பாதிக்கும். குறிப்பாக, கர்ப்பமுற்ற முதல் மூன்று மாதங்களில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது கரு கலையவும், அடுத்து வரும் மாதங்களில் எடுத்துக்கொள்வது குழந்தை குறைபாட்டோடு பிறக்கவும், கடைசி இரண்டு மாதங்களில் எடுத்துக்கொள்வது குழந்தையின் இதயத்தை பாதிப்படையச் செய்யவும் வாய்ப்புள்ளது. கர்ப்ப காலத்தில் அதிகமாக காபி அருந்துவதுகூட கரு கலைய வாய்ப்பாக அமையலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

கருத்தடை மாத்திரைகளை, மருத்துவ ஆலோசனையோடு மிகத் துல்லியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஏதாவது தவறு ஏற்பட்டால் இதனால் வரும் பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல'' என்று எச்சரித்தார் ஹேமலதா.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:39 pm

குழந்தைகள் விஷயத்தில் கவனம்!

''குழந்தைகளின் உலகம், மருந்து சூழ் உலகமாகவே மாறிவிட்டது!'' என்று வருத்தப்படுகிறார், ஓய்வுபெற்ற குழந்தைகள்நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ். குழந்தைகளின் மருந்து விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட் டினார் அவர்.

''சுயமருத்துவம் பெரியவர்களுக்கு ஏற்படுத்தும் சிக்கல்களைச் சரிசெய்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். ஆனால், குழந்தைகளின் மருந்து விஷயத்தில் சுயமருத்துவம், தாமதிக்கப்பட்ட சிகிச்சை எல்லாம் உயிரிழப்பு வரை கொண்டு செல்லலாம். பொதுவாக குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படாது. ஒருவேளை கொடுக்க நேரிட்டாலும்... குழந்தையின் பிரச்னையை வைத்து மட்டுமல்ல, அந்த மருந்தின் வீரியத்தை உடல் தாங்குமா என்பதை குழந்தைகளின் வயது, எடை என எல்லா காரணிகளையும் வைத்தே மருத்துவர் முடிவெடுப்பார். 'அஞ்சு வயசுப் பையன்... காய்ச்சலா இருக்கு, யூரின் மஞ்சளா போகுது...’ என்று மருந்துக் கடைகளில் வாங்கிக் கொடுப்பது... குழந்தைக்கு, அதன் பெற்றோரே எமனாகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கு வலிநிவாரணி, விட்டமின் உள்ளிட்ட மருந்துகளையும் பெற்றோர்கள் பரவலாக குழந்தைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். இது குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று பிரச்னைகளை ஆரம்பித்து நுரையீரல், கிட்னி, மூளை என்று பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தி சில சமயங்களில் உயிரிழப்பு வரை அழைத்துச் செல்கிறது.

விட்டமின் ஆபத்துகள்!

உடலுக்குத் தேவையான அனைத்துவிதமான விட்டமின்களும் நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளின் மூலமே கிடைக்கின்றன. இதையும் தாண்டி ஒருவருடைய உடலுக்கு விட்டமின் தேவைப்பட்டால்... மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். முடிந்த வரையில் மருத்துவர்கள் உணவுப் பொருட்கள் மூலமாக நோயாளிக்குத் தேவையான விட்டமின் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். அப்படியும் முடியாதபட்சத்தில் மட்டுமே மருந்துகளை எழுதிக்கொடுக்க வேண்டும்.

இவற்றையும், மருத்துவரின் பரிந்துரைபடி குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலத்துக்கு உட்கொண்டால் பாதிப்பு இருக்காது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமலோ, தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொண்டால்... உடலில் தேவையில்லாத பல வளர்ச்சிகளை உண்டாக்கிவிடும். அதனால் பலவிதமான பாதிப்புகள் வரத்தொடங்கிவிடும். உதாரணமாக, அளவுக்கு அதிகமாக வைட்டமின்-ஏ எடுத்துக்கொள்வதால்... தோல் வியாதிகள் தொடங்கி கண் பாதிப்புகள் வரை பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஒருவர் சத்தான உணவை சரிவர தொடர்ந்து உட்கொண்டாலே போதும்... அதன் மூலமாக கிடைக்கும் விட்டமின்களைக் கொண்டு ஆரோக்கியமாக கடைசிவரை வாழமுடியும். உணவே மருந்து என்பதை மனதில் கொள்ளுங்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:40 pm

தாய்ப்பால்கூட விஷமாகும்!

1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் உள்ளிட்ட பால் பொருட்கள் ஒவ்வாமல் போகலாம். இதனால் குழந்தைக்கு பேதி, வாந்தி, உடலில் தண்ணீர் வற்றிப்போவது, உட்காரும் இடம் வெந்து போவது போன்ற பாதிப்புகள் எழும். இதற்கு மருத்துவர் பரிசோதனையின் அடிப்படையில் தொடர் சிகிச்சையையும், மாற்று உணவுகளையும் பரிந்துரைப்பார். இந்தப் பிரச்னை மட்டுமல்ல, எந்தப் பிரச்னைக்கும் 'பால்கூட குடிக்காம குழந்தை அழுதுட்டே இருக்கே... என்னமோ ஏதோ தெரியலையே...’ என்று மந்திரித்த கயிறுகளைக் கட்டுவது, கோயிலுக்கு அழைத்துச் சென்று விபூதி வாங்குவது, கை வைத்தியமாக பலதையும் செய்து பார்ப்பது... இவைஎல்லாம் குழந்தையின் அழுகையை இன்னும் அதிகரிக்கவே செய்யும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் உடலில் தண்ணீர் வற்றிய நிலை உருவாகும். இதனால் குழந்தையின் இதய ஓட்டம் நின்று உயிரிழப்புகூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது'' என்று கடுமையாகவே எச்சரிக்கை செய்தார் மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்.

'விலை கொடுத்து வினையை வாங்குவது’ என்பது மருந்து, மாத்திரைகளின் விஷயத்தில் பலித்துவிடாமல் இருப்பதற்கு தேவை... கவனம், அதிக கவனம், மிக அதிக கவனம் மட்டுமே!

மருந்து, மாத்திரை... ஜாக்கிரதை!

டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டை வைத்து மட்டுமே மருந்துகளை வாங்கவேண்டும். அவற்றுக்கு உரிய 'பில்’ வாங்குவது முக்கியம்.

மாத்திரைப் பட்டியிலும், மருந்து பாட்டில்களிலும் மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி போன்றவை தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கவனித்து வாங்கவேண்டும். அடித்தல் திருத்தல் இருந்தாலோ, அல்லது லேபிள் ஒட்டியிருந்தாலோ, காலாவதியாகி இருந்தாலோ... திருப்பிக் கொடுத்துவிடுங்கள்.

காலாவதியான மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தோல் ஒவ்வாமை தொடங்கி, அரிப்பு, தடிப்பு, தோல்வீக்கம் உள்ளிட்ட பக்கவிளைவுகள் வரத்தொடங்கும். வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வாய்ப்புண், அஜீரணப் பிரச்னை தலைகாட்டும். கல்லீரல், சிறுநீரகம், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மருந்துகளை சூரிய வெளிச்சம் அதிகமுள்ள இடத்தில் வைத்தால், சீக்கிரமே காலாவதி ஆகிவிடும். ஆகவே, நிழலான இடத்தில்தான் வைக்கவேண்டும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் 4 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் வைக்கவேண்டும்.

மாத்திரை உறையைத் திறக்கும்போதே, மாத்திரை உடைந்து, பவுடராக இருந்தாலும், குழாய் மாத்திரைகள் (டியூப் மாத்திரைகள்) ஈரப்பசையுடன், பிசுபிசுப்பாகக் காணப்பட்டாலும், காலாவதியாகிவிட்டன என்று புரிந்து கொள்ளுங்கள்.

மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு ஆன்டிபயாடிக் மாத்திரைகள், இந்தியாவில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. ஏன், இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகளும் சந்தையில் கிடைக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, 'KETOCONAZOLE’ என்ற மாத்திரை வெளிநாடுகளிலும், இந்தியாவின் சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:40 pm

விழிப்பு உணர்வு திரைப்படம்!

ஆன்டிபயாடிக் ஆபத்துகளை நன்கு உணர்ந்திருக்கும் கஸாலி முகமது, இதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்கிற நோக்கத்தில்.... 'சாய்ந்தாடு.. சாய்ந்தாடு..’ என்கிற பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜனரஞ்சகமான கதையில், இந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி வரும் கஸாலி, விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்.

படம் குறித்து பேசியவர், ''பி.எஸ்ஸி., அக்ரி படிச்ச நான், வெளிநாட்டில் 15 ஆண்டுகள் 'நிலச்சீர் அமைப்பு’ சார்ந்த பணியில் பணியாற்றினேன். இந்தியா திரும்பியதும், சகோதரர் மூலமாக ஆன்டிபயாடிக் குறித்த ஆபத்துகளையும், அதனால் ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள் மற்றும் தவறுகள் குறித்தும் தெரிந்துகொண்டேன். இதன் ஆபத்துக்களை மக்கள் உணரவேண்டும் என்கிற எண்ணம் மனதுக்குள் எழுந்தது. அப்போதுதான், திரைப்படமாக எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கினேன். 'சாய்ந்தாடு.. சாய்ந்தாடு’ என்கிற என் முதல் திரைப்படத்தைத் தொடங்கினேன். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடக்கின்றன. கூடிய விரைவில் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முழுவதுமாக நம்புகிறேன்'' என்று நம்பிக்கையோடு சொன்னார் கஸாலி!

தொடர்ந்து சாப்பிடுவதால்..!

உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா இரண்டின் வித்தியாசம், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தெரிவதில்லை. இப்படியிருக்க, இதுபோன்ற மருந்துகளை தொடர்ந்து சாப்பிடும்போது, உடலுக்குள் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அது எளிதில் சாகடித்துவிடும். கெட்ட பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரித்து 'க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிசிள்' (Clostridium Difficile) என்ற பயங்கரமான கிருமியாக வளர்ந்துவிடுகிறது. இதனால் பேதி, குடல்புண் என்று பிரச்னைகள் வரத்தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படலாம். ''இத்தகைய கிருமிகளை அழிப்பது சுலபமல்ல. இதற்கான போதிய மருத்துவர்களோ... மருந்துவ வசதிகளோ நம் நாட்டில் சரிவர இல்லை. செலவழிக்க வேண்டிய பணமும் மிக அதிகம்'' என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

விழிப்பு உணர்வு வாரம்..!

ஏ.பி.ஐ (API-Association of Physicians of India) என்கிற அமைப்பானது, கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து நவம்பர் 18 முதல் 24-ம் தேதி வரையிலான காலத்தை 'ஆன்டிபயாடிக் விழிப்பு உணர்வு’ வாரம் என கடைப்பிடிக்கிறது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by சிவா on Sun Jun 08, 2014 1:41 pm

வலி நிவாரணி தரும் வலிகள்!

''சோர்வு, சத்துக்குறைபாடு உள்ளிட்ட காரணத்தால்கூட தலைவலி, உடல்வலி ஏற்படலாம். இதற்கு ஓய்வும், ஊட்டச்சத்து உணவுமே மருந்து. ஆனால், மக்களுக்கோ... 'வலி நிவாரணியே... இன்று சர்வரோக நிவாரணி' என்றாகிவிட்டது. பலரும் எல்லாவிதமான உடல் சௌகரியங்களுக்கும் ஏதோ சாக்லேட் சாப்பிடுவதைபோல, வலிநிவாரணியைப் போட்டுக்கொள்கிறார்கள். இதனால் ஒவ்வாமை, அலர்ஜி, வாந்தி, பேதி என்று தொடங்கி... நரம்புத்தளர்சி, கிட்னி பாதிப்பு வரை ஏற்படலாம். உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவது கிட்னியின் பொறுப்பு. அதிகமாக வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும்போது, அந்த மருந்துக் கழிவுகளை ஓயாமல் வெளியேற்றிக்கொண்டே இருக்கும் செயல்பாடு காரணமாக சிறுநீரகம் பழுதாகலாம். எனவேதான் வலி நிவாரணி எடுத்துக்கொள்ளும் பலரையும் அது சிறுநீரகப் பிரச்னையில் கொண்டுபோய் விடுகிறது'’ என்று எச்சரிக்கை தந்த டாக்டர் நாராயணன்,

தரமற்ற மருந்துகள்..!

''ஊழல் இல்லாத இடம் எதுவுமில்லை. அது மருந்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். விளைவு, தரமில்லாத மருந்துகள் இப்போது அதிகமாக புழக்கத்துக்கு வருகின்றன. அவற்றை சிரமமின்றி மக்களிடம் கொண்டு சேர்க்க, மருத்துவர்களுக்கு 'காம்ப்ளிமென்ட்’ என்ற பெயரில் கமிஷன் கொடுத்து, தங்கள் நிறுவன மருந்துகளையே அதிகமாக எழுத வைக்கின்றன சில நிறுவனங்கள். எனவே, நீங்கள் நாடிச் செல்லும் மருத்துவர் நம்பகமானவராக, நீங்கள் நீண்ட நாள் அறிந்தவராக இருக்க வேண்டியது அவசியம். 'பெரிய மருத்துவமனை’ என்பதைவிட, நல்ல மருத்துவமனையை நாடிச் செல்லுங்கள்.

எல்லா மருந்து, மாத்திரைகளையும் 'எக்ஸ்பைரி டேட்’ (காலாவதி தேதி) பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம். மருந்துக்கடைகளில், நீங்கள் கொடுத்த மருத்துவச் சீட்டில் உள்ள மருந்துக்குப் பதிலாக, 'இந்த கம்பெனி மருந்து இல்லை, வேற கம்பெனி மருந்து தரட் டுமா?’ என்று கேட்பது பெரும்பாலும் நடக்கும். இத்தகைய சூழலில், வேறொரு கடையை நாடிச் செல்வது நலம். அங்கும் கிடைக்கவில்லை என்றால்... இரண்டு நிறுவன மருந்துகளின் சேர்க்கைப் பொருட்களும் ஒன்றுதானா என்பதை உறுதிபடுத்திக்கொண்ட பிறகு வாங்குங்கள். இது தொடர்பாக டாக்டரின் அறிவுரையையும் கேட்டுப் பெறுங்கள்.

மருத்துவச் சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை வழங்குவது தடை செய்யப்பட்டிருப்பதைப் போல, ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, விட்டமின், ஹார்மோன், மனஅழுத்த மருந்துகளையும் இஷ்டம்போல விற்பனை செய்யாமல், மருத்துவ பரிந்துரையின் பேரில் விற்பனை செய்யும் வகையிலான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் இதற்கு விடிவு காலம் பிறக்கும்'' என்று அக்கறை யோடு சொன்னார்.

[thanks]விகடன்[/thanks]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்! Empty Re: ஆன்டிபயாடிக்... பெயின் கில்லர்... விட்டமின்... விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum