புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
44 Posts - 43%
heezulia
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
43 Posts - 42%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
4 Posts - 4%
prajai
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
kargan86
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
8 Posts - 5%
prajai
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_m10மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:27 pm

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள்:

13.09 PM: பட்ஜெட் உரையை அருண் ஜேட்லி நிறைவு செய்தார்.

13.06 PM: பயோ - மெடிக்கல் கழிவு அகற்றும் பணிக்கு சேவை வரியில் விலக்கு.

13.05 PM: தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி விதிப்பு. அச்சு விளம்பரங்களுக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.

13.00 PM: புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது.

12.59 PM: கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி 3% ஆகவே நீடிக்கும் என அறிவிப்பு.

12.58 PM: நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

12.55 PM: நேரடி வரி, மறைமுக வரி வசூல் இலக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டதே பின்பற்றப்படும்.

12.50 PM: ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.

12.47 PM: வரிவிதிப்பின் மூலம் ரூ.9.77 லட்சம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது.

12.46 PM: 80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

12.45 PM: வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.

12.44 PM: சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு.

12.43 PM: தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

12.42 PM: வருவாய் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 2.1% ஆக இருக்கும்.

12.40 PM: வடகிழக்கு மாநிலங்களுக்காக பிரத்யேகமாக 'அருண் பிரபா' என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்படும்.

12.38 PM: வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்த ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.

12.35 PM: இமாலய மலை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள உத்தராகண்டில் தேசிய அகாடமி நிறுவப்படும்.

12.30 PM: இடம்பெயர்ந்த காஷ்மீரிக்கள் மறுவாழ்விற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

12.26 PM: கங்கை நதியை சுத்தப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர் நிதி திட்டம்.

12.25 PM: கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமாமி கங்கா ("Namami Ganga") என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

12.25 PM: வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

12.24 PM: மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். தேசிய விளைடாட்டு அகாடமி அமைக்கப்படும்.

12.23 PM: தற்போது நாடு முழுவதும் 15,000 கிமீ தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் இருக்கின்றன. பொதுத்துறை - தனியார் துறை பங்களிப்பில் இது இருமடங்காக அதிகரிக்கப்படும்.

12.07 PM: காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

12.20 PM: 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

12.19 PM: தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

12.18 PM: ரூ.100 கோடி செலவில் போர் நினைவிடம் கட்டப்படும்.

12.17 PM: மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம் மறு சீரமைக்கப்படும்.

12.16 PM: கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.

12.15 PM: புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.

12.12 PM: தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்

12.12 PM: இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

12.11 PM: புதிய யூரியா கொள்கை கொண்டு வரப்படும்

12.10 PM: விவசாயிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். விவசாய கடன்களை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்.

12.09 PM: நடப்பு நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

12.08 PM: வேளாண் துறையில், 4% வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

12.05 PM: படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 எய்மஸ் மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும்.

12.02 PM: சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

12.01 PM: 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

12.00 PM: கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11.56 AM: விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.

11.55 AM: நிலமில்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம் நிதியுதவி வழங்க பரிந்துரை.

11.54 AM: காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும்.

11.54 AM: ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.

11.54 AM: கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

11.54 AM: கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும்.

11.52 AM: விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.

11.50 AM: தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

11.48 PM: பஞ்சாப், இமாச்சல பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தானில் ஐ.ஐ.எம்.கள் அமைக்கப்படும்.

11.47 AM: ரூ.500 கோடி செலவில் மேலும் 5 ஐ.ஐ.டி.க்களும், 5 ஐ.ஐ.எம்.களும் நிறுவப்படும். ஜம்மு, சத்தீஸ்கர், ஆந்திரம், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.டி.,கள் அமைக்கப்படும்.

11.46 AM: பெருநகரங்களில் பெண்கள் பாதுகாக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11.45 AM: பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும்.

11.41 AM: ஆண் - பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

11.40 AM: பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது.

11.39 AM: பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்.

11.38 AM: வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.

11.37 AM: பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

11.35 AM: அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.

11.33 AM: அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.

11.30 AM: தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது.

11.29 AM: ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.

11.27 AM: சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத் ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்.

11.25 AM: நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். இதற்காக 'பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா' செயல்படுத்தப்படும்.

11.22 AM: 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

11.20 AM: கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

11.19 AM: வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

11.18 AM: 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11.17 AM: வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.

11.15 AM: உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம்.

11.13 AM: வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

11.12 AM: அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு.

11.11 AM: வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

11.11 AM: மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான மானியம் மறு சீரமைக்கப்படும்.

11.10 AM: பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும். நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% என்ற சவாலான இலக்கை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

11.10 AM: கவர்ச்சித் திட்டங்கள், அநாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும். அரசு செலவினங்களை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

11.09 AM: இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த மிக முக்கியமான, துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

11.08 AM: இராக் உள்நாட்டு சர்ச்சையும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக பெய்துள்ளதும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

11.08 AM: கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருந்தது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

11.05 AM: மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறது.

11.04 AM: வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது.

11:00 AM: மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உரையாற்றி வருகிறார்.

தி இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:28 pm

பட்ஜெட் எதிரொலி: விலை உயர்பவையும், விலை குறைபவையும்

மத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக, சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கிறது. செல்பேசி, கம்ப்யூட்டர் விலை குறைகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின் விவரம்:

விலை உயர்பவை:

* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்

* குளிர்பானம்

* இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்

* எவர்சில்வர் பொருட்கள்.

* தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.

* உடைந்த வைரம்

* இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள்

* போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்

விலை குறைபவை:

* மொபைல் போன்கள்.

* கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்

* 19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி. டிவி-க்கள்

* காலணிகள் விலை

* சோப்பு

* தீப்பெட்டிகள்

* லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்

* பிளாஸ்டிக் பொருள்கள்

* ஆடம்பர கற்கள்

* அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்

* அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்

* மின் புத்தகங்கள்

* ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்

* எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்

* ஸ்போர்ட்ஸ் உறைகள்

* பிராண்டட் பெட்ரோல்

* எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்

* டி.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:29 pm

மேலும் 5 ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள்

தொழில்நுட்பக் கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி வளர்ச்சிக்காக மேலும் 5 ஐ.ஐ.எம் மற்றும் 5 ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் நாடு முழுதும் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

"ஜம்மு, சத்தீஸ்கர், கோவா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதேபோல் மேலாண்மைக் கல்வி வளர்ச்சிக்காக, இமாச்சல், பீகார், ஒடிஷா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது” என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நாட்டுக்குத் தேவைப்படுவதால், ஜெயபிரகாஷ் நாராயண் திறன் வளர்ப்பு மையம் ஒன்றை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைக்க இந்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:29 pm

விவசாயிகளுக்கு விலை நிலைநிறுத்த நிதியம்

வேளாண் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களினால் விவசாயிகள் அவதிப்படுவதைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ ரூ.500 கோடிக்கான விலை நிலைநிறுத்த நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

"விவசாயிகள் பெரும்பாலும் வேளாண் பொருட்களின் ஏற்ற இறக்கத்தினால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ ரூ.500 கோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்" என்று கூறிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடன் தொல்லைகளிலிருந்து விவசாயிகளை மீட்க தனியாக நிதி ஒதுக்கப்படும் என்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:31 pm

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், வருமான வரிவிலக்கு தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:

தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. எனவே, ரூ.2.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் ரூ.50,000 உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது.

பிரிவு 80 (சி)-ன் கீழ் முதலீடு வரம்பு ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அருண் ஜேட்லி அறிவித்தார்.

வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:31 pm

அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.

2014-15 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், "படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 எய்மஸ் மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும்.

கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:33 pm

பட்ஜெட் தாக்கல்: பங்கு சந்தையில் வீழ்ச்சி

பாராளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ½ மணி நேரத்தில் சென்செக்சில் 250 புள்ளிகள் குறைந்தது. இதே போல நிப்டியிலும் 55 புள்ளிகள் குறைந்தது. பின்னர் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.

நேரம் செல்ல செல்ல குறைவதில் மாற்றம் காணப்பட்டது.

ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பங்கு சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது.

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 3:33 pm

நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு

விவசாயத்தில் 4 சதவீதம் வளர்ச்சியை எட்ட இலக்கு. விவசாய விளை பொருட்களை பாதுகாக்க ரூ.5000 கோடியில் கிடங்குகள். நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி. நகரங்களில் விவசாயிகளே சந்தைகள் அமைக்க ஊக்குவிப்பு. விவசாயிகளுக்கான தனி தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும்.

விவசாயிகளுக்கான வட்டி மானிய திட்டம் தொடரும். மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தேசிய அளவில் வேளாண் சந்தைகள் அமைக்கப்படும். சென்னை- பெங்களூர் தொழிற்பாதை விரிவாக்கப்படும். தனியார் பங்களிப்புடன் அகமதாபாத், லக்னோவில் மெட்ரோ ரெயில் திட்டம். நடப்பு நிதியாண்டில் ரூ.8 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு. புதிய யூரியா கொள்கை கொண்டுவரப்படும். ரூ.200 கோடி முதலீட்டில் தமிழ்நாடு, உபி உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஜவுளி தொழில் மண்டலம். சுற்றுலா துறையில் 49 சதவிகித அந்நிய நேரடி முதலீடு. சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு புத்துயிர் தர நடவடிக்கை. 7 புதிய தொழில் நகரங்கள் உருவாக்கப்படும். வன்பொருள் உற்பத்தியை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்படும். தமிழ்நாடு, ராஜஸ்தானில் சூரிய மின்சக்தி திட்டம் தொடங்க ரூ.500 கோடி.

புதிதாக 16 துறைமுகங்களை அமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு அரசின் அனைத்து அமைச்சகங்களும் மின்னணு முறையில் ஒருங்கிணைப்பு. கூடுதலாக 15,000 கி.மீ. நீளத்துக்கு எரிவாயுக் குழுக்கள் அமைக்கப்படும். உயர் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் திட்டப்பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. சுரங்க தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிம வள சட்டம் திருத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்புக்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு.

ஒரு குடும்பத்திற்கு 2 வங்கி கணக்குகள் தொடங்க நடவடிக்கை. ஐதராபாத், சிலிகுரி உள்ளிட்ட 6 இடங்களில் கடன் வசூல் மையங்கள் அமைக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு சிறப்பு சேமிப்புத் திட்டம். அனைத்து பணப்பரிமாற்றங்களுக்கும் ஒரே டிமேட் கணக்கு. பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.5000 கோடி திட்ட ஒதுக்கீடு. நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு. நமாமி கங்கா என்ற புதிய திட்டத்திற்காக ரூ.2,307 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக