ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் பாடல் பிறந்த கதை!
by ayyasamy ram Today at 10:06 pm

» முதல் பெண் தட்டச்சர்!
by ayyasamy ram Today at 10:03 pm

» சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர் திருக்கோவில்
by ayyasamy ram Today at 10:01 pm

» திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து
by ayyasamy ram Today at 9:57 pm

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by ayyasamy ram Today at 9:55 pm

» பாணிபாத்திர சுவாமி
by ayyasamy ram Today at 9:53 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by ayyasamy ram Today at 9:50 pm

» மனசுக்குள் மலை தீபம்
by ayyasamy ram Today at 9:49 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 9:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by ayyasamy ram Today at 9:48 pm

» முல்லாவின் தந்திரம்
by ayyasamy ram Today at 9:46 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by ayyasamy ram Today at 9:44 pm

» நினைவின் எடை – கவிதை
by ayyasamy ram Today at 9:44 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by ayyasamy ram Today at 9:42 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 9:33 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Today at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Today at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Today at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

Admins Online

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்

Go down

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம் Empty புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்

Post by சிவா on Wed Jul 09, 2014 6:40 pm


ஆண்டாண்டு காலமாக நாம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தாக்கம் அதிகரித்ததற்கான ஆணிவேர். அதிலும், இந்தியாவில் எட்டிக்கூடப் பார்க்காத குடல் புற்றுநோய்களும் தற்போதுள்ள உணவுப்பழக்கத்தினால் மிக அதிகமாகிவிட்டன. 'வரும் முன் காக்கவும், வந்த பின் கடைப்பிடிக்கவும் புற்றுநோயைப் புறந்தள்ளும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.

''புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகள், மருந்துகள் வந்துவிட்டாலும், அதற்கான விழிப்பு உணர்வு, மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, இதைத் தீர்க்க முடியாத வியாதியாகவே பலரும் எண்ணுகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறி யும்பட்சத்தில், குணப்படுத்துவது சாத்தியம். எளிய உணவுப்பழக்கத்தின் மூலமே இந்தக் கொடிய நோயை வராமல் தடுத்துவிட முடியும். வந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தியும் விடலாம். நம்முடைய உடலில் தினமும் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. இதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான், இந்தப் புற்றுநோய் செல் வளர்ச்சியடைந்து மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. மருத்துவக் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்'' என்கிற சிவராமன், உணவுகளைப் பட்டியலிடுகிறார்.

அடர்நிறப் பழங்கள்

அடர் நிறப் பழங்களில் ஃப்ரீ ராடிகல்சை (Free radicals) வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு, நீலம், பர்ப்பிள் நிறப் பழங்களில் 'அந்தோசைனின்’ (Anthocyanin) என்ற நிறமிச் சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்.

பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், சீதாப் பழத்தின் ஒரு வகையான ராம் சீதா போன்ற பழங்கள், புற்றுநோயைத் தடுக்கவல்ல பழங்கள் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சிட்ரஸ் பழங்களில் நார்ச் சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.

கருப்புத் திராட்சை, மாதுளை, செர்ரி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்கறிகள்

சிவப்புத் தக்காளி, கேரட், கரும்பச்சை இலைகளைக்கொண்ட காய்கறிகள், சில கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்வதுடன், புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும்.

நம் உடலில் உள்ள வைட்டமின் குறைபாட்டுக்கும், புற்றுநோய் செல்களின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வைட்டமின் ஏ சத்தில் உள்ள அதிகமான 'ரெட்டினாயிக் அமிலம்’ புற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருகிறது.

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி, புற்றுநோயைத் தடுக்கும் 'லைகோபைன்’ (Lycopene) என்ற ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.

காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் இன்டோல் 3 கார்பினால் அதிகம் இருப்பதால், இந்தக் காய்கறிகள் சில வகை புற்றுநோய்களை உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன.

காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எலும்புகள் வலுவடையும்.

மணமூட்டிகள்

இதில், மஞ்சள் தூளுக்குத்தான் முதல் இடம். இதில் உள்ள மூலக்கூறுகள் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல், புற்றுநோய் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப்பூ, கருஞ்சீரகம், பூண்டு, கொத்துமல்லி விதை, வெந்தயம், இஞ்சி, மிளகு போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பூண்டில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட், டியூமர் செல்களை அழிப்பதுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கும்.

உணவுகள்

க்ரீன் டீயில் மிக அதிகமாக ஆன்டிஆக்சிடென்ட் கொழுப்பைக் கரைக்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். தினமும் க்ரீன் டீயைக் குடிக்கலாம்.

நட்ஸ் வகைகளில் வால்நட், ஃப்ளாக்ஸ் சீட்ஸில் ஒமேகா -3 இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.

சித்த மருத்துவத்தில் ஆடாதொடை இலை, தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. ரத்தத்தட்டுக்களை உயர்த்தக்கூடியவை. வீரியமிக்கது என்பதால், மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும் வேதிப்பொருளான, 'டாக்சால்’ தாளித்தபத்ரி மூலிகை மரத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது.

புற்றுநோயைக் கண்டு பதட்டமடையத் தேவை இல்லை. இன்று நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ சிகிச்சைபெற்று முழுமையாகக் குணம் அடைய முடியும். அதிலும், இயற்கையான உணவு, காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலுக்குள் புற்றீசல்போல் பரவிவரும் புற்று நோயையே வேரறுத்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் சிவராமன்.

எந்த நோயும் நம்மை நெருங்காமல் இருக்க, உணவில் கூடுதல் கவனம் அவசியம் தேவை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம் Empty Re: புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்

Post by சிவா on Wed Jul 09, 2014 6:41 pmநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.


''மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்த புற்றுநோய்கள் இப்போது இந்தியாவில் பெருகிவருகின்றன. வெளிநாட்டினர் காய்கறி, கீரைகள், தானியங்கள் கொண்ட சாலட் வகை சத்தான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கோ பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச் சத்து இல்லாத கடின உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும், பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.

நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச் சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், 'இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம்.

உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

பிங்க் கலர் முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.

காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.

[thanks]விகடன்[/thanks]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம் Empty Re: புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்

Post by krishnaamma on Wed Jul 09, 2014 6:59 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம் Empty Re: புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum