புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
83 Posts - 51%
heezulia
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
6 Posts - 4%
prajai
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
125 Posts - 54%
heezulia
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பாதை சீராகிறது! Poll_c10ஒரு பாதை சீராகிறது! Poll_m10ஒரு பாதை சீராகிறது! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பாதை சீராகிறது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 1:21 pm

குபேர், புவனா தம்பதியினரைப் பார்த்து, எல்லாருமே ஆச்சரியப்பட்டனர்.
'விழுந்து விழுந்து காதலிச்சு, போராடி ஜெயிச்சு, கல்யாணம் செய்தவங்க கூட, இவங்களப் போல, வாழுற மாதிரி தெரியலயே... பெத்தவங்க பாத்து, இணைச்சு வச்ச தம்பதிங்கன்னா, நம்பவா முடியுது...'
'புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரியில்ல, ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமாவே இருக்காங்க...' என, அந்த தெருவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லி, வியந்தனர்.

இப்படி ஊரார் மெச்சவும், பொறாமையினால் புழுங்கிக் தவிக்கும் வகையில் தான், குபேர், புவனா தம்பதியினர், வாழ்ந்து வந்தனர்.
அம்மன் தரிசனம் முடித்து, பிரகாரத்தை சுற்றி வந்த புவனா, அங்கிருந்த விஸ்தாரமான புன்னை மர நிழலில் வந்து அமர்ந்தாள்.
''அடடே ஆச்சரியமாயிருக்கே... என்ன புவனா கோவிலுக்கெல்லாம் வந்திருக்கே,'' என்று, நக்கல் குரலில் கேட்டுக் கொண்டே, அருகில் வந்து அமர்ந்தாள் பக்கத்து தெரு தேவி.

அவளைப் பார்த்து, புன்னகை செய்த புவனா, ''வெளில வந்து போறதுக்கு, எங்கக்கா நேரமிருக்கு... வீட்டு வேலைக்கே நேரம் போதல,'' என்றாள் சலிப்புடன்.
''பெண் ஜென்மங்கன்னாலே, ஜென்மத்துக்கும் வீட்டு வேலைங்க இருந்துட்டே தான் இருக்கும். அதுல கொஞ்சம் நேரம் ஒதுக்கித்தான், இது போல வந்து போகணும்,'' என்றாள் தேவி.
பிரகாரத்தை சுற்றுபவர்களை, ஒருமுறை வேடிக்கை பார்த்து விட்டு, தேவியை நோக்கி, மையமாக சிரித்தாள் புவனா.
''சரி புவனா, நான் கிளம்புறேன்; நாள மறுநாள் கல்யாணத்துக்கு வருவே இல்ல... அங்க பாப்போம்.''
''கல்யாணமா யாருக்கு?''

''என்ன கேள்விடி இது? உன் சின்ன மாமனார் மக கல்யாணம் நாள மறுநாள் திருப்பரங்குன்றத்துல நடக்க இருக்குது... நீ என்னமோ எதுவுமே தெரியாதது மாதிரி யாருக்கு கல்யாணங்குறே... ஏன் நீ பத்திரிகையையே பாக்கலயா?'' என்று கேட்டாள்.
''பாக்கலக்கா,'' என்றாள் சன்னமான குரலில் புவனா.
ஆச்சரியமாக பார்த்த தேவி, ''என்னடி இது ஆச்சரியமா இருக்கு. நாள மறுநா கல்யாணத்துக்கு இன்னமுமா பத்திரிகை தராம இருக்காங்க?''

''தந்திருப்பாங்க, நான் பாக்காம இருந்திட்டேன் போலிருக்கு,'' என்று, சமாளிக்க முயன்றாள் புவனா.
''அதெப்படி புவனா... கல்யாணத்தில முக்கியமான உறவே நீங்க தான்; பெண்ணோட பெரியப்பா, உன் மாமனார். நீ பத்திரிகையையே
பாக்கலன்னாக் கூட, கல்யாணப் பேச்சு வந்திருக்குமே... கல்யாணத்துக்கு போறத பத்தி பேசியிருப்பாங்களே!''
''என் காது பட ஒண்ணும் பேசிக்கலக்கா.''
''உன் புருஷன், கல்யாணப் பெண்ணுக்கு அண்ணன் முறை; அவன் கூடவா, இதுவரை ஒண்ணுஞ் சொல்லாம இருக்கான்?''என்று கேட்டாள் தேவி.
''சொல்லலக்கா.''

''நல்ல குடும்பமா இருக்கே,'' என்று சலிப்புடன் கூறியவள், புவனாவை ஆழ்ந்து பார்த்தாள்.
அவள் இப்படிக் கூறியது, 'சுருக்'கென்று, நெஞ்சில் குத்தியது போல் இருந்தது புவனாவிற்கு.
'இவ்வளவு முக்கியமான கல்யாணத்தப் பத்தி, இதுவர நம்மட்ட யாரும் எதுவுமே கூறலன்னா என்ன அர்த்தம்... எல்லாரும் என்ன அலட்சியம் செய்கிறாங்கன்னு தானே அர்த்தம்...'என்று நினைத்தவளுக்கு, தன் கணவன் மற்றும் புகுந்த வீட்டார் மீது கோபம் வந்தது.
''சரி புவனா, போன மாதம், கனகு மாமா பேத்தியோட, மஞ்சள் நீராட்டு விழாவுல, உங்க வீட்டு ஆளுக யாரையும் காணோமே,'' என்று கேட்டபடி, அவளையே ஊன்றிப் பார்த்தாள் தேவி.

'மஞ்சள் நீராட்டு விழாவுக்கென்று, வீட்லருந்து யாருமே போனதாக நினைவு இல்லயே...'என்று நினைத்தாள்.
''புவனா, நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே... நம்ப சொந்த பந்தங்களோட வீட்டு விசேஷங்களுக்கு, உங்க வீட்டுலருந்து யாரும் வந்து போனதாகவே தெரியலயே... ஏன், நீங்க யாரோட விசேஷங்களுக்கும் போறதே இல்லியா?''என்று கேட்டாள்.
''அப்படி ஒண்ணும் இல்லக்கா.''

''சரி பாக்கலாம்... திருப்பரங்குன்றம் கல்யாணத்துக்கு உங்க வீட்ல இருந்து யார் யார் வரீங்கன்னு.''
குரலில் தென்பட்ட கிண்டல், அம்பாய் வந்து புவனாவின் இதயத்தைக் குத்தியது.
யோசித்துப் பார்த்தாள் புவனா. அவள் திருமணம் நடந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலக்கட்டத்தில், ஏதோ ஒன்றிரண்டு விழாக்களில் கலந்து கொண்டதாய் தான் நினைவுக்கு வருகிறதே தவிர. மற்ற வீட்டினரைப் போன்று, அடிக்கடி உறவினர் வீடுகளுக்குப் போனதோ, உறவினர் வீட்டு விழாக்களில், குடும்பத்தோடு கலந்து கொண்டதோ இல்லை என்று தான் பட்டது.
இந்த உண்மையை, ஓர் அவமானமாக உணர்ந்தாள்.

அண்டை வீட்டு ஜனங்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக உறவினர், தெரிந்தவர் வீட்டு விசேஷங்கள் என, அமர்க்களமாகப் புறப்பட்டுப் போவர். அதை வேடிக்கை பார்த்ததுண்டு. ஆனால், தன் குடும்பத்தாரும் ஏன் இப்படியெல்லாம் போகவில்லை என்று நினைத்துப் பார்த்ததில்லை.

இப்போது, தேவி கேட்ட பிறகு, அது ஒரு கேள்வியாக மனதுக்குள் எழுந்தது.
''சரிக்கா கல்யாண வீட்ல பாக்கலாம்; நேரமாச்சு வர்றேன்,'' என்றபடி கிளம்பிய புவனாவின் அடிமனதில் புயல்!
''பாக்கலாம்... பாக்கலாம்...'' என்று, நக்கலாகக் கூறிய, தேவியும் கிளம்பினாள்.
''என்னங்க... உங்க சித்தப்பா மகளுக்குக் கல்யாணமாமே?'' என்று, கேட்டாள் புவனா.
''ஆமா, சொல்லிக்கிட்டாங்க,'' என்றான் குபேர் அலட்சியமாக.
''என்னது! சொல்லிக்கிட்டாங்களா... அப்ப உங்க சித்தப்பா வந்து பத்திரிகை தரலியா?'' என்று கேட்டாள்.
''இல்ல.''
''ஏன்?''

மவுனமாக இருந்தான் குபேர்.
''என்னங்க, இது அநியாயம்... நீங்க இல்லாம உங்க தங்கச்சிக்கு கல்யாணமா?''
''அழைச்சால்ல போக முடியும்!''
''அவங்க, ஏங்க அழைக்கலே?''
மவுனமாக இருந்தான் குபேர்.

''அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம், உறவினர் வீடு, தெரிஞ்சவங்க வீடுன்னு பங்ஷனுக்கு அடிக்கடி வெளியில போய்ட்டு வர்றாங்க. ஆனா, நம்ப வீட்ல மட்டும் ஏங்க எங்கயுமே போறதில்ல?'' என்று, எரிச்சலையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு கேட்டாள்.

''இத உன் மாமனார் கிட்டப் போய்க் கேளு; உறவையும், நட்பையும் அண்ட விடாம கத்திரிச்சு போடுறது, அவர் தான்.''
''என்னங்க, இப்படிச் சொல்றீங்க?''

''உண்மை தான் புவனா. அப்பாவுக்குக் காசு தான் கடவுள்; சொத்தும், பத்தும் தான், உறவும், நட்பும். உறவினரோடு ஒட்டிப் பழகிட்டா பணங்காசுக்கு வேட்டுன்னு நினைக்கிறவர். எங்க சித்தப்பா, அவங்க பையன் படிக்கிறதுக்கு கொஞ்சம் பண உதவி கேட்டாரு. உடனே, இது மாதிரி உதவி கேட்டு, அவரு வந்துறக் கூடாதுன்னு, வம்புச் சண்டை போட்டு, பேச்சு வார்த்தையே, இல்லாம செய்துட்டார். மீறி வந்தப்ப, அவமானப்படுத்தி விரட்டிட்டார். அப்புறம் எப்படி, அவங்க கல்யாண பத்திரிகை வெப்பாங்க... நம்ப கல்யாணத்துக்கும் சித்தப்பாவையோ, அத்தைமார்களையோ அழைக்கவே இல்ல. அதுபோல உறவுகளையும், நட்புகளையும் கூட வெட்டி விட்டுட்டார். அப்புறம் யார் வருவாங்க... சொத்தையும், பணத்தையும் தான் நமக்கு குவிச்சு வச்சிருக்கார்,'' என்றான் ஏக்கத்துடன் குபேர்.
''மாமாவோட இந்த நடவடிக்கைய நீங்க சரின்னு ஏத்துக்கிறீங்களா?'' என்று கேட்டாள்.

''இது தப்புன்னு எனக்கு தெரியுது புவனா; நானும் சொல்லிப் பாத்தேன். ஏன், சண்ட கூட போட்டுப் பாத்துட்டேன். கேட்க மாட்டேன்கிறார்.''
ஒரு நிமிடம் யோசனை பண்ணிய புவனா, ''சரி வாங்க. நாம்ப சேர்ந்து போய், இதப் பத்தி அவருகிட்ட பேசுவோம்,''என்றாள் அழுத்தமான குரலில்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமனார் அருகில் வந்த புவனா, ''மாமா, நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்,'' என்றாள்.
கணவன், மனைவி இருவரும் இணைந்து வந்து நின்ற தோரணயைப் பார்த்து, யோசனையுடன், ''சொல்லுமா என்ன விஷயம்,'' என்று கேட்டார்.

''மாமா... உங்களுக்கு வேணா, எந்த சொந்த பந்தமும் தேவையில்லாம இருக்கலாம்; ஆனா, எங்களுக்கு உறவுகளும், நட்புகளும் வேணும் மாமா. உங்களப் போல ஒண்டியா இருக்க எங்களுக்கு பிடிக்கல. அதனால, நாள மறுநாள் நடக்கப் போகிற உங்க தம்பி மக கல்யாணத்துக்கு, நாங்க ரெண்டு பேரும், பிள்ளைகளோட கலந்துக்க போறோம். அவங்க பத்திரிகை தரலேன்னாலும் பரவால்ல, நாங்க உறவுகளை இழக்கத் தயாராய் இல்லே,'' என்று கூறியவளை இடைமறித்த நமச்சிவாயம், ''ஓ... அவ்வளவு தூரம், வந்துட்டீங்களா... ரொம்பச் சந்தோஷம். ஆனா, அங்கே நீங்க போனா, அதுக்குப் பின்னாடி, இந்த வீட்ல கால் வைக்கக் கூடாது; சொத்துல, கால் காசுகூடத் தர மாட்டேன்,'' என்றார் கடுமையான குரலில்.

''ரொம்பச் சந்தோஷம் மாமா. கல்யாணத்துக்குப் போறதுக்கு முன்னாடி, வேற வீடு பாத்துட்டு போயிடுறோம். உங்க சொத்தும், பணமும் உங்ககிட்டயே இருக்கட்டும். காசு, பணத்த எப்ப வேணா, யாரு வேணும்ன்னாலும் சம்பாதிக்க முடியும். ஆனா, இழந்து போன உறவுகளையும், நட்புக்களையும் அவ்வளவு சுலபமா மறுபடியும் சம்பாதிச்சிட முடியாது. உறவுகளோட உறவாடவும், நட்புக்களோட நேசம் பாராட்டவும் தான், நாங்க விரும்புறோம். இப்படி ஒத்தைப் பனைமரம் போல, அத்துவானக்காட்டுக்குள்ளே நின்னு தவிக்கிற தவிப்பை நாங்க விரும்பலே. உங்க மகன் சொல்லியே கேட்காத நீங்க, நான் சொல்லியா கேட்டுறப் போறீங்க?'' என்றாள்.
மருமகள் பேசுவதை கதவோரம் நின்னு கேட்டுக் கொண்டிருந்த நமச்சிவாயத்தின் மனைவி, ''குபேர்... என் கொழுந்தன் மக கல்யாணத்துக்கு நானும் வர்றேம்ப்பா. உங்களோட என்னையும் கூட்டிட்டு போங்க,'' என்றாள்.

''சரிம்மா, நாம எல்லாரும் சந்தோஷமா கல்யாணத்துக்கு போய்ட்டு வரலாம். நம்மள பாத்தா, அவங்க சந்தோஷத்தோட வரவேற்பாங்க,'' என்றான், உற்சாகக் குரலில் குபேர்.
மனைவி, மகன், மருமகள் மூவரும் ஒன்றாக இணைந்து விட்டதை உணர்ந்த நமச்சிவாயம், முதன் முதலாக தான் தணித்து நிற்பதை போல், உணர்ந்தார்.

'இவங்க எல்லாரும் போன பிறகு, இவ்வளவு பெரிய வீட்டில் நான் மட்டும் எப்படி இருப்பது...இளமை முறுக்கில எவருமே தேவையில்ல, பணம் மட்டும் இருந்தா போதும்ன்னு நெனச்சது தவறாகிப் போச்சே...' என்று, மனதிற்குள் வருந்தத் தொடங்கினார்.
'யாருக்காக உறவ மறுத்து, நட்பை வெறுத்து, பணமாய் குவிச்சாரோ, அவங்களே இப்போ பணம் வேணாம்; உறவு தான் வேணும்ன்னு சொல்லி, புறப்படும் போது, அந்திம காலத்தில், நான் மட்டும் பணத்த மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்றது...' என்று நினைத்தவர், ''குபேர்... நானும் வர்றேன்ப்பா; எல்லாரும் சேந்தே கல்யாணத்துக்குப் போகலாம்,'' என்றார் சற்றே கூச்சத்துடன்.
அனைவரும் திரும்பி, அவரை வியப்புடன் பார்த்து, மகிழ்ந்தனர்.

ஒரு தப்பை, எதிர்ப்பினால் மட்டுமே சரிசெய்ய முடியும்; இங்கே, இப்போது, சரி செய்யப்பட்டதைப் போல.

உமாகல்யாணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 22, 2014 3:27 pm

ஒரு பாதை சீராகிறது! 3838410834 ஒரு பாதை சீராகிறது! 103459460 ஒரு பாதை சீராகிறது! 1571444738 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 22, 2014 3:45 pm

ஒரு தப்பை, எதிர்ப்பினால் மட்டுமே சரிசெய்ய முடியும்; இங்கே, இப்போது, சரி செய்யப்பட்டதைப் போல. wrote:

சூப்பர்

நல்ல கதை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Priyamudan_Priyan
Priyamudan_Priyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 14/04/2014

PostPriyamudan_Priyan Tue Jul 22, 2014 7:46 pm

அருமையான கதை....பகிர்வுக்கு மிக்க நன்றி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக