ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 14:19

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 13:55

» ஆலோசனை
by Guest Today at 13:50

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
by Dr.S.Soundarapandian Today at 13:48

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 8:41

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 23:14

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 23:03

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 23:02

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 22:58

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 22:42

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 22:32

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 22:20

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 22:11

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 22:02

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 21:50

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 21:48

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 21:44

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 21:41

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 21:40

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 21:39

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 21:31

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 21:24

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 20:57

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 19:57

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 19:51

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 16:59

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 16:50

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 16:50

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:17

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:26

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:24

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 9:21

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 9:11

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 3:06

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 0:12

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue 24 Nov 2020 - 23:57

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue 24 Nov 2020 - 20:56

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 20:43

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue 24 Nov 2020 - 20:21

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue 24 Nov 2020 - 20:06

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 19:25

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 19:17

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 18:41

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue 24 Nov 2020 - 17:19

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue 24 Nov 2020 - 16:47

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 16:33

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 16:13

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue 24 Nov 2020 - 16:02

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue 24 Nov 2020 - 15:58

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue 24 Nov 2020 - 15:13

Admins Online

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by சிவா on Tue 12 Aug 2014 - 17:47


உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், 'எபோலா' வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய், கடந்த ஆண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் வசித்த, 2 வயது சிறுவனிடம் இருந்து தான், மற்றவர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1976ல், மேற்கு ஆப்ரிக்க நாடான, காங்கோவில், எபோலா நதிக்கரையில் தோன்றி யதால், இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வைக்கப்பட்டது.இதன்பின், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த நோயின் தாக்கம் தெரியும். இதில், ஏராளமானோர் செத்து மடிவர். இந்த நோயை குணமாக்குவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முன் எப்போதையும் விட, தற்போது, மிக தீவிரமாக இந்த நோய் தாக்கத் துவங்கியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எல்லையை கடந்துள்ளதாக கூறப்படும், இந்த வைரஸ் எமன், மற்ற நாடுகளின் பக்கமும், தன் கொலை வெறியை திருப்பக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கான விஷ வித்து, கடந்தாண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான, கினியாவில் உள்ள, குயிக்கேடோய் என்ற சிறிய நகரத்தில் ஊன்றப்பட்டது.இரண்டு லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரம், மற்ற ஆப்ரிக்க நாடுகளான, சியாரா லியோன், லைபீரியா ஆகியவற்றின் எல்லையில்அமைந்து உள்ளது. இங்கு கூடும் வாரச்சந்தை, மிகவும் பிரபலம். இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக, அண்டை நாடுகளில் இருந்து, ஏராளமானோர் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில், குயிக் கேடோய் நகரில் வசித்த, 2 வயது ஆண் குழந்தைக்கு, 'எபோலா வைரஸ்' பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில், அந்த குழந்தைக்கு, கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்பட்டன. டிசம்பர், 6ம் தேதி, நோய் பாதிப்பு அதிகமாகி அந்த குழந்தை இறந்தது. ஒரு வாரத்துக்கு பின், அந்த குழந்தை யின் தாயும், அதன்பின், குழந்தையின் பாட்டி யும், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.ஆனாலும், அந்த நகரத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், எபோலா வைரஸ் தாக்கப்பட்டதால் தான், இவர்கள் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.குழந்தையின் பாட்டியின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த, மேலும் இரண்டு பேருக்கு, சில வாரங்களுக்கு பின், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு, அடுத்த சில நாட்களில் இறந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியரும், டாக்டரும், அடுத்தடுத்து, இந்த வைரஸ் தாக்கப்பட்டு இறந்தனர்.

இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள நகரங்களில் வசித்த, இவர்களின் உறவினர்களுக்கும் இந்த நோய் பரவியது. மார்ச் மாத மத்தியில், ஒட்டு மொத்த கினியாவிலும், நோய் பாதிப்பு தெரிந்தபின் தான், 'எபோலா' வைரஸ் வேகமாக பரவி வருவதை சுகாதார அதிகாரிகள் உணர்ந்தனர். அதற்குள், அருகில் உள்ள, சியாரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகளில் வசித்த பலருக்கு இந்த நோய் பரவி விட்டது. இந்த மூன்று நாடுகளுமே, மிகவும் ஏழ்மையான நாடுகள் என்பதாலும், மூன்று நாடுகளுக்கும் இடையே அதிகப் படியான மக்கள் போக்குவரத்து உள்ளதாலும், நோய் வேகமாக பரவியது.லைபீரியாவில், மார்ச், ஏப்ரல் மாதத்துக்கு பின், இந்த நோய் குறித்த அறிகுறி தெரியவில்லை. இதனால், 'எபோலா வைரஸ், இனி பரவ வாய்ப்பில்லை' என, பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், சில மாத இடைவெளிக்கு பின், முன்பை விட, மிக வேகமாக இந்த நோய், தற்போது பரவத் துவங்கியுள்ளது. லைபீரியாவில் மட்டும், இதுவரை, 156 பேரின் உயிரை, இந்த நோய் காவு வாங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாடுகளான, கானா, நைஜீரியா, கேமரூன், காங்கோ ஆகியவற்றிலும், இந்த நோயின் தாக்கம் தென்படத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,779 பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில், 961 பேர் இறந்துள்ளனர்.நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நோயின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த நோயின் மையமாக, சியாரா லியோன் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த நோய், வேகமாக பரவி வருவது, சர்வதேச நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், கினியாவிலிருந்து சென்னைக்கு வந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, இந்த நோயின் தாக்கம் இருப்பதாக வெளியான செய்தியாலும், டில்லி, மும்பை ஆகிய நகரங்களில், இந்த நோய் தாக்கத்துடன் சிலர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தியாலும், இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ளது.இதன்மூலம், மேற்கு ஆப்ரிக்க நாடுகளை தாண்டி, மற்ற நாடுகளிலும், இந்த வைரஸ் எமன் கால் பதித்துள்ளது தெரியவந்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty Re: 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by சிவா on Tue 12 Aug 2014 - 17:49தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்?

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி, தர்மாபுரி, வெங்கடாசலபுரம், கோவிந்த நகரம், கடமலைக்குண்டு, கண்டமனூர் மற்றும் ஆண்டி பட்டி பகுதிகளை சேர்ந்த, 2,000க்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்ரிக்க நாடுகளில் பணிபுரிகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில்எந்தெந்த நாட்டில் 'எபோலா' வைரஸ் தொற்று உருவாகி உள்ளது என்ற விவரம் இங்குள்ள கிராம மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் வெளிநாட்டில் உள்ள தங்கள் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என, கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் தங்களது மகன்களை, 'உடனடியாக விடுப்பு எடுத்து ஊர் திரும்பி வா,' எனக்கூறி வருகின்றனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும், எத்தனை பேர் உள்ளனர் என்ற துல்லியமான தகவல், அரசிடம் இல்லை.

தனிமைப்படுத்துதல்...:

'எபோலா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானவர்களை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த நோய், மேலும் பலருக்கு பரவாமல் கட்டுப்படுத்த முடியும்' என, சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரும்பாலான, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை.

பிணங்களை தொடுவதால்...:

'எபோலா' வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் மூலமாகவே, இந்த நோய் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்கள், இறந்தவர்களின் உடல்களை தொடுவது தான், இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. எனவே, 'மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும்' என, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

[thanks]தினமலர்[/thanks]

#எபோலா #வைரஸ் #கானா #நைஜீரியா #கேமரூன் #காங்கோ #ஆப்பிரிக்கா


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty Re: 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by ஈகரையன் on Tue 12 Aug 2014 - 18:03

வேகமாகப் பரவும் இந்த உயிர்கொல்லி பற்றி எச்சரிக்கைக்கு நன்றி சிவாண்ணே.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
மதிப்பீடுகள் : 127

Back to top Go down

'எபோலா' வைரஸ் பரவியது எப்படி? Empty Re: 'எபோலா' வைரஸ் பரவியது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum