ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Today at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Today at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Today at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Today at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Today at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Today at 4:06 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 3:59 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Today at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Today at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Today at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Today at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Today at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Today at 12:10 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by krishnaamma Today at 12:08 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by krishnaamma Today at 12:07 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Today at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Today at 8:25 am

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Today at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Today at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Today at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Today at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Yesterday at 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Yesterday at 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Yesterday at 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Yesterday at 3:52 pm

» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?
by ayyasamy ram Yesterday at 3:06 pm

» சட்டென்று மாறிய வானிலை.. சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. வெதர்மேனின் பிரத்யேக தகவல்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Yesterday at 12:36 pm

Admins Online

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!

Go down

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! Empty சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!

Post by தமிழ்நேசன்1981 on Sun Aug 31, 2014 8:19 pm

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! P54a

ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நோய்வாய்ப்படுகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்!

இது எந்த அளவுக்குத் தீவிரமான விஷயம் என்பது, அதன் பாதிப்புகளை பொது மருத்துவர் நா.எழிலன் விவரித்தபோது புரிந்தது.

'சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால், மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ என்கிறோம். 1980 - 90-களில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், புகை பிடிக்காத பலரும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கி இறந்தனர். பிறகுதான் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் வீட்டிலும் சிகரெட் புகைப்பவர் (Active smokerMain ) ஒருவர் இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, 2006-ல், 'பேஸிவ் ஸ்மோக்கிங்’ உண்டாக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் அறியப்பட்டன.

வீட்டில் அல்லது பொது இடங்களில் ஒருவர் சிகரெட் புகைத்தால், அதிலிருந்து வெளியாகும் 4000 ரசாயனப் பொருட்களை, சுற்றிலும் இருக்கும் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’ சுவாசிக்க நேர்கிறது. அவற்றுள் 69 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. ஒருவர் புகை பிடிக்கும்போது, அவர் உள்ளே இழுக்கும் புகையைவிட (stream smoke), வெளியே விடும் புகை (Side stream smoke) அதிகம். இரண்டு புகையிலுமே, நிகோட்டின், காட்டினின், தையோசயனைட்ஸ், பென்சீன் கூட்டுப்பொருட்கள் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் உள்ளன.

ஒரே வீட்டில் வசிக்கும், புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்காதவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரே அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையின் உச்சம்!

புகைப்பவரின் அருகே, புகை உண்டாகும்போது கூடவே இருப்பவர்களை 'இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்’ (2nd hand smoker) என்போம். அந்தப் புகை கலைந்துபோன பின்னும், அந்தச் சுற்றுச்சூழலில் புகையின் துகள்கள் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும். அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களை 'மூன்றாம் நிலை புகைபிடிப்பவர்’ (3rd hand smoker) என்று சொல்வோம். இந்த இரு வகையினருக்குமே (நேரடியாக சிகரெட்டைத் தொடாதவர்கள்) புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் உண்டு. அதேபோல், இதய அடைப்பு நோய்கள், ஆன்ஜைனா போன்றவை வரும் வாய்ப்பும் 30 சதவிகிதம் உண்டு.

இவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்களுக்கான அபாயம் அதிகம்.

இதைவிடக் கொடுமை... வீட்டில் கர்ப்பிணிப் பெண் இருந்தால், அவருக்குக் குறைப் பிரசவம் ஏற்படலாம். கரு கலையவும் வாய்ப்பு உண்டு. புகைக்கும் சூழலில் இருக்கும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், ஐ.க்யூ குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம். சொல்லப்போனால், கருவில் குழந்தையின் வளர்ச்சியே சுருங்கிவிடும். குழந்தையின் அப்பா, தொடர்ந்து புகைபிடிப்பவர் என்றால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா, நிமோனியா மற்றும் பிராங்காய்ட்டீஸ் (சுவாசக்குழாய் சுருக்க நோய்) வருவதற்கும், மற்ற குழந்தைகளைவிட 15 - 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம்.

வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும்கூட ஆபத்து நேர்வதைப் புகைபிடிக்கும் ஆண்கள் உணரவேண்டும். பொது இடம், கழிப்பறை, வீட்டின் வெளியே என எங்குமே புகைபிடிக்கக் கூடாது.

குடும்ப நலனில் அக்கறையும், சுற்றுசூழலில் ஆர்வமும் குறிப்பாக மனித நேயம் உள்ளவர்களாகவும் இருப்பவர்களால் மட்டுமே புகைப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியும்'' என்கிறார் டாக்டர் எழிலன்.

சிந்தியுங்கள் சகோதரர்களே... இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்!

பொது இடங்களில் புகைக்குத் தடை... நோய்க்கு விடை!

'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’-க்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேலைநாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புகை பிடிப்பவரது குடும்பத்தினரின் முடி, தோல், சுவாசக்குழாய், மூக்கு நுழைவுக்குழாய் போன்ற உறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில்தான், நச்சுக்களின் படிமானம் அந்த உறுப்புகளில் படிந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதன் பிறகு, புகையை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் கேடுகளை மனதில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை உத்தரவு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், மேலைநாடுகளில் தடை செய்த இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழலில் இருந்தவர்களிடம் மாதிரி எடுத்து ஆராய்ந்தபோது, அங்கெல்லாம் பிரசவ பாதிப்புகள், புற்றுநோய், நிமோனியா, இதய நோய் போன்றவற்றின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை! Empty Re: சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை!

Post by krishnaamma on Sun Aug 31, 2014 11:14 pm

//சிந்தியுங்கள் சகோதரர்களே... இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்!

பொது இடங்களில் புகைக்குத் தடை... நோய்க்கு விடை!//


ஆமாம் நேசன், புகை பிடிக்காதவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு நோய்வர சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum