ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Sun Nov 22, 2020 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Sun Nov 22, 2020 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Sun Nov 22, 2020 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Sun Nov 22, 2020 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Sun Nov 22, 2020 8:25 pm

Admins Online

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!---

Go down

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!--- Empty உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!---

Post by அப்துல் on Tue May 05, 2015 3:30 pm

வெயில் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது! வியர்வை, தாகம், அசதி என எதிர்வரும் நாட்களில் வெயில் விளையாட்டு 'சூடு பிடிக்க’த் துவங்கிவிடும். வெயிலின் உக்கிரத்தில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


     ''நிறைவாக நீர் அருந்தினாலே போதும்!'' என்கிறார்கள் அனைத்துத் தரப்பு மருத்துவர்களும். பாரம்பரிய சித்த மருத்துவரான கே.பி.சுப்ரமணியன் இயற்கையான முறையில் தண்ணீரை உடலுக்குள் இயக்கும் 'ஏ.சி’-யாக மாற்றும் பக்குவத்தைச் சொல்லித் தருகிறார். ''வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்கையிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது.

தண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், விளாமிச்சை வேரைப் போட்டுவைத்தால், நல்ல குளிர்ச்சியும் வாசமும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம்அடையும். 'நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனி’ன்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர்போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டுவைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டுவைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது.

வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்¬னகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் அஞ்சு ரூபாயாக இருக்கும். உள்ளங்கையில் ஊட்டியும் கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம்!'' என்கிறார் உற்சாகமாக!

டயட்டீஷியன் ஷைனி சந்திரன் உடலின் புறத் தோற்றப் பராமரிப்பு குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

''வேலை செய்யும் சூழல், வெளியேறும் வியர்வையின் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டு தண்ணீர் அருந்தினால், வெயில் காலத் தொந்தரவுகளைத் தவிர்க்க முடியும். ரசாயனக் குளிர்பானங்களைத் தவிர்த்து, மோர், தர்பூசணி, இளநீர், ரசம் ஆகியவற்றை அருந்துங்கள். இது எதுவும் கிடைக்கப் பெறாதவர்கள், ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தினாலே போதும். ஒரே மூச்சில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல், கொஞ்சங் கொஞ்சமாக அதிக முறை தண்ணீர் குடிப்பது நல்லது. விளையாட்டு வீரர்கள், அதிக வேலைப் பளுகொண்டவர்கள் தங்கள் சிறுநீரின் நிறத்தைப் பார்த்து, அதற்குத் தக்கபடி தண்ணீர் பருகலாம். சிறுநீர் இளமஞ்சள் நிறத்தில் இருந்தால், வழக்கமான அளவில் தண்ணீர் பருகலாம். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், உடனடியாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகப்படுத்துவதாகச் சொல்லி, சிலர் காபி, டீ ஆகியவற்றை அதிகமாகப் பருகுவார்கள். அது தவறு. தண்ணீர் மட்டுமே நமக்கான நீர் சமநிலையையும் சக்தியையும் கொடுக்கும். காபி, டீ, ஆல்கஹால் போன்ற மற்ற திரவங்கள் வேறு பல பிரச்னைகளை உருவாக்கவே செய்யும்.

வெயிலால் ஏற்படும் வியர்வை, வியர்க்குரு, அரிப்பு போன்றவற்றைத் தடுக்க குளியல்தான் ஆயுதம். வாரம் இரு முறை விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை வெகுவாகக் குறைக்கும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவாத காலம் என்பதால், தண்ணீர் உபயோகத்தை அதிகப் படுத்தி, உடலை எப்போதும் குளிர்ச்சி யாக வைத்திருங்கள். கை, கால், முகத்தை அடிக்கடி நல்ல தண்ணீரில் கழுவினாலே, தோல் பாதிப்புகளை வருமுன் காக்க முடியும். வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறி, சிறுநீர் வெளியேறுவது குறைந்தால், நீர்க்குத்தல் ஏற்படும். அதிக அளவு தண்ணீர் பருகுவதுதான் அதைத் தவிர்க்க ஒரே தீர்வு!'' என்கிறார் எளிய மருத்துவமாக!

தகவல் : இரா.சரவணன்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!--- Empty Re: உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!---

Post by சிவா on Tue May 05, 2015 3:36 pm

வெயிலில் செல்ல வேண்டியது இருந்தால் வேப்பிலையை மென்று தின்றுவிட்டுச் சென்றால் வெப்பம் உடலைத் தாக்காது! இது என் அனுபவ உண்மை! (நான் எப்பொழுதும் வேப்பிலை, கொய்யா இலை என பெரும்பாலான இலைகளை தின்று கொண்டிருப்பேன்!)

இந்தக் கட்டுரையை மருத்துவக் கட்டுரைகள் பகுதிக்கு மாற்றுகிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!--- Empty Re: உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!---

Post by அப்துல் on Tue May 05, 2015 3:38 pm

@சிவா wrote:

இந்தக் கட்டுரையை மருத்துவக் கட்டுரைகள் பகுதிக்கு மாற்றுகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1135041

நன்றி அண்ணா
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!--- Empty Re: உங்கள் உடலுக்குள் ஒரு ஏ.சி!---

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum