புதிய பதிவுகள்
» உலக விலங்குகள் தினம் - அக்டோபர் 4
by T.N.Balasubramanian Today at 7:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 5:36 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 3:59 pm

» விண்வெளித் தமிழர்களை வாழ்த்துவோம்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 3:33 pm

» பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 3:26 pm

» சீனத் தொடர்பு - நியூஸ் கிளிக் தொடர்புடைய இடங்களில் டெல்லி போலீஸ் சோதனை
by சிவா Today at 2:55 pm

» நா.முத்துக்குமார் கவிதைகள்
by சிவா Today at 2:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:05 pm

» மந்திரங்கள்
by சிவா Today at 1:20 pm

» சுப்ரமணிய சிவா பிறந்ததினம் இன்று
by சிவா Today at 1:18 pm

» ரமணிசந்திரனின் புதினங்கள்
by TI Buhari Today at 1:00 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:35 pm

» கருத்துப்படம் 04/10/2023
by mohamed nizamudeen Today at 8:03 am

» முத்துலட்சுமி ராகவன் படைப்புகள்
by TI Buhari Today at 1:14 am

» ஹிஜாப்பை கைவிடும் இஸ்லாமிய பெண்கள்: சிபிஎம் தலைவர் அனில் குமார்
by சிவா Yesterday at 11:19 pm

» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி
by சிவா Yesterday at 11:15 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 10:59 pm

» பிறரை மனதாரப் பாராட்டுங்கள்!
by krishnaamma Yesterday at 10:52 pm

» நவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் எந்த தேதிகளில் என்ன பூஜை?
by krishnaamma Yesterday at 10:48 pm

» சிவாஜி - அஃப்சல் கானை புலி நகத்தால் கொன்றது எப்படி? என்ன நடந்தது?
by krishnaamma Yesterday at 10:37 pm

» இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் எவ்வளவு?
by krishnaamma Yesterday at 10:09 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Yesterday at 9:45 pm

» இரட்டை சொற்களுக்கான விளக்கம்
by ayyasamy ram Yesterday at 9:28 pm

» தாம்பத்தியம்_என்பது ...
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» அமெரிக்க மாப்பிள்ளைக்கு அப்படி ஒரு சர்ப்ரைஸ்
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» டிமென்சியா - முதுமையில் ஏற்படும் ஞாபகமறதி
by T.N.Balasubramanian Yesterday at 8:34 pm

» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
by சிவா Yesterday at 4:30 pm

» பருவகாலக் காய்ச்சல்
by சிவா Yesterday at 4:27 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Yesterday at 3:58 pm

» நாவல்கள் வேண்டும்
by nive123 Yesterday at 3:52 pm

» நீண்ட கால ரத்த அழுத்தம் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
by சிவா Yesterday at 2:47 pm

» தமிழ் இலக்கியங்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 12:57 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 11:55 am

» இலக்கியத் தேன் சொட்டு
by சிவா Yesterday at 1:24 am

» குடல்வால் புற்றுநோய் - Appendix Cancer
by சிவா Yesterday at 1:02 am

» கம்பர் வழிபட்ட சின்னசெவலை காளி கோவில்
by சிவா Yesterday at 12:00 am

» பெரியபுராணம் பிறந்த கதை
by சிவா Mon Oct 02, 2023 11:50 pm

» நூறு நாள் வேலை திட்டம்: தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 11:36 pm

» இந்திய பெருங்கடலில் சீனாவை எதிர்கொள்ளும் வலிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா?
by சிவா Mon Oct 02, 2023 11:32 pm

» ஒரு லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.,விடம் முகமது இத்ரீஸ் வாக்குமூலம-
by சிவா Mon Oct 02, 2023 6:55 pm

» பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’:
by சிவா Mon Oct 02, 2023 6:17 pm

» 2023ம் ஆண்டிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கேட்டலின் கரிகோ, ட்ரோ விய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிப்பு
by சிவா Mon Oct 02, 2023 5:51 pm

» ரூபாய் நோட்டுகளில் காந்தி உருவப்படம் எப்படி வந்தது?
by சிவா Mon Oct 02, 2023 5:47 pm

» விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை நிறுத்த விரும்புவது ஏன்?
by சிவா Mon Oct 02, 2023 5:43 pm

» காந்தி ஜெயந்தி
by T.N.Balasubramanian Mon Oct 02, 2023 2:20 pm

» எம்ஜிஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!
by ayyasamy ram Mon Oct 02, 2023 1:06 pm

» நகைச்சுவை
by ayyasamy ram Mon Oct 02, 2023 4:52 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Mon Oct 02, 2023 2:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
116 Posts - 52%
சிவா
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
53 Posts - 24%
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
20 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
11 Posts - 5%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
8 Posts - 4%
krishnaamma
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
3 Posts - 1%
eraeravi
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 0%
nive123
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 0%
Anthony raj
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
131 Posts - 47%
சிவா
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
76 Posts - 27%
ayyasamy ram
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
23 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
19 Posts - 7%
krishnaamma
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
13 Posts - 5%
heezulia
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 0%
Anthony raj
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 0%
nive123
தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அரசியல் செய்திகள்


   
   

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 11 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



தமிழக அரசியல் செய்திகள் - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 07, 2023 3:42 am

வாக்களித்த எங்களை ஏமாற்றுகிறது தி.மு.க! - கொதிக்கும் மீனவர் அமைப்புகள்


ஒருபுறம் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கம், மறுபுறம் தனியார் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பே செய்யாமல் திறந்துவிடும் ரசாயனக்கழிவுகள் கடலில் கலந்து மீன் இனங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, மீனவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாகக் கொடுத்திருந்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலிலும், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கொதிக்கின்றன மீனவர் அமைப்புகள்.

இது குறித்து நம்மிடம் பேசிய அனைத்து மீனவர்கள் சங்கத்தின் தலைவர் நாஞ்சில் ரவி, “மீன்பிடித் தடைக்காலத்தை 45 நாள்களாகக் குறைப்பது, தடைக்காலத்தில் நிவாரணத் தொகையாக ரூ.8,000, மீன்பிடிப் படகுகளுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் மானிய விலை டீசல் அளவை 1,800 லிட்டரிலிருந்து 2,000 லிட்டராக உயர்த்துவது, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது... என தி.மு.க கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதி எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மாண்டஸ் புயலில் 500 விசைப்படகுகளும், 1,000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளும் சேதமடைந்தன. இவற்றில் 133 விசைப்படகுகளுக்கும், 82 ஃபைபர் படகுகளுக்கும் மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.6,500 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தருகிறோம். ஆனால், பட்ஜெட்டில் ரூ.1,358.26 கோடிதான் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பல மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் அழிவுநிலையில் இருக்கின்றன. அங்கு தூண்டில் வளைவு அமைக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், அரசு செவி சாய்க்கவில்லை. 35 சட்டமன்றத் தொகுதிகளிலும், 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் எங்களின் வாக்குதான் வெற்றியை முடிவுசெய்யும். ஆனால், வாக்களித்த மீனவர்களான எங்களை ஏமாற்றுகிறது தி.மு.க அரசு” என்றார் சூடாக.

தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் போஸ், “தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150 படகுகளை இலங்கை ராணுவம் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டுக் கொடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒருபுறம் அதானியின் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கம், மறுபுறம் தனியார் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பே செய்யாமல் திறந்துவிடும் ரசாயனக்கழிவுகள் கடலில் கலந்து மீன் இனங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. சென்னை கடற்கரையை நம்பியிருக்கும் 13 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும்படி, 81 கோடியில் பேனாவுக்கு சிலைவைக்கத் திட்டம்போட்டு, அதற்கு மத்திய அரசு அனுமதியையும் வாங்கிவிட்டார்கள். பட்டினப்பாக்கத்தில் மீனவர்களுக்காகக் கட்டப்பட்ட குடியிருப்பில் மீனவர்கள் அல்லாதவர்களைக் குடியமர்த்தும் வேலை ஜரூராக நடைபெறுகிறது. காலம் காலமாக `கச்சத்தீவை மீட்போம்’ என்கிறார்கள். இதுவரை என்ன முன்னெடுப்பு நடந்திருக்கிறது... தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார்கள்; ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றையெல்லாம் மறந்துவிடுகிறார்கள்” என்றார் ஆவேசத்துடன்.

அ.தி.மு.க மாநில மீனவர் அணிச் செயலாளர் கோசுமணியோ, “நீலக்கொடி திட்டம் மூலமாக கடற்கரைகளைச் சர்வதேசத் தரத்துக்கு மாற்றுகிறோம் என்று சொல்கிறார்கள். பன்னாட்டுப் பெரு முதலாளிகளுக்கு கடலைத் தாரை வார்க்கும் இந்த நடவடிக்கை, மீனவ கிராம மக்களைப் பெரிதும் பாதிக்கும்” என்றார்.

தென்னிந்திய மீனவர் அணியின் தலைவர் பாரதி நம்மிடம், “கடலில் காற்றாலைகள் அமைப்பதாகக் கூறுவது மீன்பிடித் தொழிலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். சேது சமுத்திர திட்டத்தால், ஆறு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாராளுமன்றத்தில் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கிறார்கள். அதேபோல, தென்மாவட்ட கடற்கரையோரங்களில் புதைந்துகிடக்கும் அரியவகை கனிமங்களை, வணிக நோக்கில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த மத்திய அரசின் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இவையெல்லாம் மீனவர்களின் நலனுக்கு எதிரானவையில்லையா..?” என்று கொதித்தார்.

இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, “மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ.5,500-லிருந்து ரூ.6,500-ஆக உயர்த்தினோம். உடனே ரூ.8,000-ஆக அதிகரிக்க நிதி நிலை ஒத்துழைக்காது. மீனவர்கள் இறந்தால் உதவித்தொகையை ரூ.15,000-லிருந்து ரூ.25,000-ஆக அதிகரித்திருக்கிறோம். சிங்காரவேலர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியிருக்கிறோம். மீனவர்களுக்கு, அ.தி.மு.க ஆட்சியைவிடக் கூடுதலாகத்தான் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருக்கிறோம். பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார்” என்றார்.

இது குறித்து மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டோம். “மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறோம். மீன்பிடித் தடைக்கால நிவாரணம், மானிய விலையில் வழங்கப்படும் டீசலை அதிகரிப்பது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். கடலுக்கு நடுவே காற்றாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம். இலங்கையில் மீட்கப்படாமல் இருக்கும் 120 படகுகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறோம். மீதமிருக்கும் படகுகளை மீட்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறோம். இது தவிர படகுகளுக்கான லைசென்ஸைப் புதுப்பிப்பதை ஓராண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறோம். காணாமல்போகும் மீனவர்களின் குடும்பத்துக்கு நாள்தோறும் வழங்கப்படும் நிவாரணத்தை ரூ.250-லிருந்து ரூ.350-ஆக அதிகரித்திருக்கிறோம். இவையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சொல்லாதவை. தூத்துக்குடியில் துறைமுகம் வரும்போது முதலில் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதேபோல் சேது சமுத்திர திட்டம் வந்தால் ஹப் போர்ட்டாக தூத்துக்குடி மாறிவிடும். மேலும், எங்கெல்லாம் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனப் பட்டியல் தயாரித்திருக்கிறோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8793
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 07, 2023 1:07 pm

புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 5:38 pm

எதிர்க்கட்சி தலைவராக இரண்டு ஆண்டுகள்... என்ன செய்தார் எடப்பாடி?


நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை எனப் பேசியவர் அண்ணாதுரை. அப்பேற்பட்டவரின் பெயரையும் திராவிடத்தையும் தாங்கி நிற்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி, ஆளுநரைக் கண்டித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்?

‘முதல்வராக இருந்தபோது, ஆட்சி அதிகாரத்தின் மூலம் தன்னை ஆளுமையாகக் காட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக பரிதாபமாகத் தோற்றிருக்கிறார். கடந்த இரண்டாண்டுகளில் தி.மு.க அரசு செய்த தவறுகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் கோட்டை விட்டுவிட்டார்’ என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

எடப்பாடியும், 62 எம்.எல்.ஏ-க்களும்!


“கடந்த 50 ஆண்டுக்காலமாக இரு திராவிடக் கட்சிகளையே மையப்படுத்தியிருந்த தமிழக அரசியல் வரலாறு, தி.மு.க Vs பா.ஜ.க என்றும், இன்னும் சொல்லப் போனால் தி.மு.க Vs ஆளுநர் என்றும் மாறிப்போனது எடப்பாடி பழனிசாமி காலத்தில்தான். தி.மு.க-வுக்கு எதிராக அவர் ஆளுமையுடன் அரசியல் செய்யாததால்தான், அவர் இடத்தை பா.ஜ.க அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் எடுத்துக்கொண்டு விட்டார்கள்” என்று காட்டமாக ஆரம்பித்தார் திராவிட இயக்க ஆதரவாளர் ஒருவர்.

மேலும் அவர் கூறுகையில், “1996 தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடைந்தது. பர்கூரில் ஜெயலலிதாவே தோற்றுப்போனார். வெறும் நான்கு இடங்களில் மட்டுமே அ.தி.மு.க வென்றிருந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற முடியாமல் போனாலும் கருணாநிதி அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் தொடுத்தபடியிருந்தார் ஜெயலலிதா. ஆனால், இப்போது எடப்பாடியுடன் சேர்த்து அ.தி.மு.க-வுக்கு 62 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதில் காட்டிய ஆர்வத்தில் 10-ல் ஒரு பங்குகூட எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதில் காட்டவில்லை அவர்” என்றார்.

செத்துப்போனதா திராவிடம்?


“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆளுநர் புரோஹித், `ஆய்வு’ என்ற பெயரில் அத்துமீறியபோது, எதிர்க்கட்சியான தி.மு.க தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து அவரை முடக்கியது. தி.மு.க ஆட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பல சட்ட மசோதாக்களை முடக்கியதுடன், தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிராகத் தொடர்ந்து பேசுகிறார். ஆனால், அது குறித்து எடப்பாடி பேசவேயில்லை. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பதால், ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாதா என்ன?” என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், “மற்றதை விடுங்கள். ‘திராவிடம் செத்துப்போன ஒன்று’ என ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் அண்ணாதுரை... நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை எனப் பேசியவர் அண்ணாதுரை. அப்பேற்பட்டவரின் பெயரையும் திராவிடத்தையும் தாங்கி நிற்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி, ஆளுநரைக் கண்டித்து இதுவரை என்ன பேசியிருக்கிறார்?

ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கான சந்தர்ப்பங்கள் வந்தபோதுகூட திறம்படச் செயல்படாதவர் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரத்தில்கூட, அரசாங்கம்தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தாமாக முன்வந்து சரிசெய்ததே தவிர, அ.தி.மு.க எதிர்க்கட்சியாக என்ன செய்தது... மாறாக, அம்பாசமுத்திரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, பல்வீர் சிங்கை பாராட்டியல்லவா பேசினார்... எடப்பாடிக்குச் சொந்த புத்தி இல்லாவிட்டாலும், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சாத்தான்குளம் சம்பவத்தையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும் அப்போதைய எதிர்க்கட்சி எப்படிக் கையாண்டது என்பதை கவனத்தில்கொண்டாவது செயல்பட்டிருக்க வேண்டாமா... ஒரு மனுஷன்... அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் இது போன்ற உச்சகட்ட மனித உரிமை மீறல் நிகழும்போதும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார் கனகராஜ்.

மடியில் கனம்... பேசுவதற்கு பயம்..!


“தி.மு.க-வை எதிர்க்க எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க சீனியர்கள் பயப்படுவதற்குக் காரணம் மடியில் இருக்கும் கனம்தான்” என்கிறார் அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன். “எப்போதெல்லாம் அ.தி.மு.க-வினர் அரசை விமர்சிக்க வாயெடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் ரெய்டு, ஊழல் வழக்கு போன்ற ஆயுதங்களைக் கையில் எடுக்கிறது தி.மு.க அரசு. அடுத்த கணமே வாயில்லாப் பூச்சியாகிவிடுகிறார்கள் அ.தி.மு.க-வினர். சட்டசபையில்கூட, ‘கொடநாடு வழக்கு’ என்று ஸ்டாலின் பேசியதும் விறுவிறுவென வெளிநடப்பு செய்துவிட்டார் எடப்பாடி. சொல்லாமல் கொள்ளாமல் அவர் வெளியேறியதால், அவர் எதற்காக வெளிநடப்பு செய்கிறார் என்பதே தெரியாமல் மற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் ஒருவர் பின் ஒருவராக அவையைவிட்டு வெளியேறினார்கள். இதேபோல எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை பிரச்னைக்காக மட்டும் எட்டு முறைக்கு மேல் வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் 16 பேர் இன்று எதிர்க்கட்சி வரிசையில் எம்.எல்.ஏ-க்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால், பல துறைகளிலும் தி.மு.க அரசு செய்யும் தவறுகளையும், முறைகேடுகளையும் புட்டுப் புட்டு வைக்க முடியும். ஆனால், தலைமை எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பதுபோல, இவர்கள் எதையுமே பேசுவதில்லை. உதாரணமாக, அமைச்சர் உதயநிதியின் விளையாட்டுத்துறையில் ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன. அவை குறித்தெல்லாம் பேசாமல், முன்னாள் அமைச்சர் வேலுமணி இலவச ஐபிஎல் டிக்கெட் கேட்கிறார். ‘நினைத்தால் ஸ்டேடியத்தையே விலைக்கு வாங்குமளவுக்குப் பணம் வைத்திருப்பவர், ஓசி டிக்கெட் கேட்கிறாரே?’ என்று மக்கள் கேலி செய்கிறார்கள்” என்கிறார் ஜெகதீஸ்வரன்.

எல்லாவற்றுக்கும் காரணம் ஓ.பி.எஸ்-தான்!


“எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி திறம்படச் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதற்கு ஓ.பி.எஸ் கொடுத்த குடைச்சலும், டெல்லியிலிருந்து பா.ஜ.க அவருக்குக் கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது” என்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர். இது குறித்து நம்மிடம் பேசிய அவர், “2021-ம் ஆண்டு, மே 7-ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நேரத்தில், ‘எதிர்க்கட்சித் தலைவர் யார்?’ என்று எம்.ஜி.ஆர் மாளிகையில் கூடியிருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் கடும் விவாதமே நடைபெற்றது. சுமார் ஒரு வார கால போருக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். பதவிக்காக எவ்வளவு துடியாக வேலை பார்ப்பார் எடப்பாடி என்று ஒட்டுமொத்த தமிழகமும் அப்போது பார்த்தது. ஆரம்பத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக் குளறுபடி, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, அம்மா உணவகம், அம்மா கிளினிக் முடக்கம் தொடர்பாக தி.மு.க அரசுக்கு எதிராகப் போராடிய அ.தி.மு.க., தொடர்ந்து அதை முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது வெறுமனே தேசியக்கொடியுடன் கூடிய காரும், பசுமைவழிச் சாலையில் பங்களாவுக்குமானதுதான் என நினைத்துக்கொண்டார்போல எடப்பாடி. அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயத்திலும் ஓ.பி.எஸ் தொல்லை கொடுத்ததால், அவரை ஓரங்கட்டிவிட்டு அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாகத் துடித்தார். இப்படிப் பதவியைப் பெறுவதிலும், அதைத் தக்க வைப்பதிலுமே அவரது காலம் முடிந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை” என்றார்.

“ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்க்கும் கருணாநிதியின் பேனா சிலைக்கு, அ.தி.மு.க ஆதரவு கொடுத்ததே... அப்போதே அ.தி.மு.க-வின் தி.மு.க எதிர்ப்பு மழுங்கிவிட்டது” என்று பேசத் தொடங்கினார் அ.தி.மு.க சீனியர் எம்.எல்.ஏ ஒருவர். “12 மணி நேர வேலை மசோதா, நில ஒருங்கிணைப்பு மசோதா, திருமண மண்டபத்தில் மது விருந்து, பி.டி.ஆர் ஆடியோ என்று அரசியல் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சரியாகப் பயன்படுத்தாமல் கோட்டைவிட்டுவிட்டார் பழனிசாமி. இரண்டு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வாக்குகளாக அறுவடை செய்வதற்கு, களத்தில் இறங்க வேண்டும். அம்மா கடைசி ஆறு மாதங்களில் மட்டும் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து ஆட்சியையே மாற்றவில்லையா... என்று எடப்பாடியும் வேலை எதுவும் செய்யாமல் ஏ.சி ரூமில் இருப்பது அரசியல் தற்கொலைக்குச் சமம்” என்றார் ஆற்றாமையுடன்.

தேர்தலில் எதிரொலிக்கும்!


இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டபோது, “தி.மு.க அரசு மிருக பலத்தோடு இருந்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிர்க்கட்சி என்ற முறையில் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எங்கள் போராட்டத்தால்தான் கட்டண உயர்வு ஓரளவுக்காவது குறைக்கப்பட்டது. அதேபோல, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்குவதற்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டதால்தான், ஆளும் தரப்பின் பண மழையைத் தாண்டி, ஈரோடு கிழக்கில் 43,000 வாக்குகளைப் பெற்றோம்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நம்மிடம் பேசுகையில், “கடந்தகாலங்களில், `உங்களுக்கு யார் எதிரி?’ என்று அ.தி.மு.க-வினரிடம் கேட்டால், சற்றும் யோசிக்காமல், `தி.மு.க-தான்’ என்பார்கள். ஆனால், இப்போது எடப்பாடி தரப்புக்கு பன்னீரும், பன்னீர் தரப்புக்கு எடப்பாடியும்தான் எதிரி என்று சொல்கிறார்கள். ஒரு நல்ல எதிர்க்கட்சி மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றாற்போலச் செயல்பட வேண்டும். அவர்களின் நலனுக்காகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தால், தேவையில்லாத ரெய்டுகள் வருமென்று அ.தி.மு.க மூத்த தலைவர்கள் பலர் உதட்டளவில் மட்டுமே ஆளுங்கட்சிகளை எதிர்க்கிறார்கள். இது அ.தி.மு.க-வை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

‘ஆளும் தி.மு.க அரசுமீது எவ்வளவு விமர்சனங்கள் இருக்கின்றனவோ... அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க-மீதும் விமர்சனங்கள் இருக்கின்றன. இப்படியே போனால், எதிர்க்கட்சி அந்தஸ்தை அ.தி.மு.க வேறு கட்சிகளிடம் இழக்க நேரிடும்’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 5:41 pm

பச்சைக்கொடி காட்டும் துரைமுருகன்... சிவப்புக்கொடி ஏந்தும் சிவசேனாதிபதி...


ஈரோடு, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதில், ‘ஆதரவு - எதிர்ப்பு’ என தி.மு.க-வுக்குள்ளேயே எதிரெதிர் நிலைப்பாடு நிலவுவதால், விவகாரம் வில்லங்கமாகிவருகிறது!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் 200 கி.மீ நீளம் கொண்டது. இந்த வாய்க்காலின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைத்தால் நீர்க்கசிவைத் தடுத்து, கடைமடை விவசாயிகளும் முழு அளவில் பயன்பெற முடியும் எனக் கூறி சீரமைப்புப் பணிகளுக்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என விவசாயிகளே இரண்டுபட்டு நிற்கின்றனர்.

இந்தத் திட்டத்தைத் தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகிறார் தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி. அதேநேரம் திட்டத்தைச் செயல்படுத்துவதில், அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டிவருகிறார். ஆளுங்கட்சி நிர்வாகிகளே இப்படி எதிரும் புதிருமான நிலைப்பாடு எடுத்திருப்பதால், திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகக் குமுறுகின்றனர் விவசாயிகள்.

இது குறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் கி.வெ.பொன்னையன் நம்மிடம் பேசுகையில், ‘‘கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை மே 1 அன்று தொடங்கக் கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது. ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி திட்டம் நிறைவேற்றப்படவில்லை. திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளே எதிரெதிர் அணிகளாக முரண்பட்டு நிற்பதுதான் இந்த நிலைமைக்கான காரணம்.

அரசாணை 276-ன்படி, 200 கி.மீ வாய்க்காலில் 160 இடங்களில் பழுதடைந்திருக்கும் மதகுகள், கீழ்நிலை நீர்வழித்தடங்களைப் பராமரிக்கவும், மண் அரிப்பால் நீர்க்கசிவு ஏற்படும் இடங்களின் பக்கவாட்டில் கான்கிரீட் தளம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட விருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதுடன், குடிநீர்த் தட்டுப்பாடு, வாழ்வாதார பாதிப்பு ஏற்படும் எனவும் கார்த்திகேய சிவசேனாதிபதி விவசாயிகளிடம் தவறாகப் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். மேலும் கார்த்திகேய சிவசேனாதிபதியின் அழுத்தத்தால், மாவட்ட அமைச்சர் முத்துசாமியும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றுக்கொள்ளாமல், வழக்கில் தோற்றவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். அதிகாரிகளும் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு பயந்துகொண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மறுக்கின்றனர்.

சரியான பராமரிப்பு இல்லாததால், இந்தப் பாசன ஆண்டில் மட்டும் நான்கு முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் நிறுத்தப்பட்டது, இதனால், கடைமடைப் பகுதியில் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறோம். இந்த நிலையில், ஆளுங்கட்சி கொண்டுவந்த திட்டத்துக்கு அதே கட்சியைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாதிபதியே தடையாக இருந்துவருகிறார். எனவே, அவரது செயல்பாட்டைக் கண்டித்தும், அரசாணை 276-ஐ நிறைவேற்றக் கோரியும் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம்” என்றார்.

இதற்கிடையே திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவரும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் உறுதிப்பாடு குறித்துப் பேசும் விவரப்புள்ளிகள், ‘‘கடந்த ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலேயே, ‘கீழ்பவானிக் கால்வாய் சீரமைப்பு வேலைகள் செய்யப்படும்’ என்று துரைமுருகன் அறிவித்துவிட்டார். மேலும் இது தொடர்பாக கீழ்பவானி ஆயக்கட்டுதாரர்கள் கலந்துகொண்ட கூட்டத்தையும் தலைமை ஏற்று நடத்தி முடித்தார். அமைச்சர் இப்படி ஆர்வம் காட்டிவருவதன் பின்னணியில், ‘பசை’யான காரணம் இருக்கிறது’’ என்று கண்சிமிட்டுகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் பேசியபோது, “கீழ்பவானி வாய்க்காலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், வாய்க்கால் குறித்து எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. கீழ்பவானி வாய்க்காலின் இருபுறமும், கீழேயும் கான்கிரீட் தளம் போடுவதை 98 சதவிகித விவசாயிகள் எதிர்க்கின்றனர். ஏனெனில், இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும்; விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்; சுமார் 4 லட்சம் மரங்களும் வெட்டப்படும். அதேநேரம் வாய்க்காலிலுள்ள பழைய கான்கிரீட் தளங்களை மீண்டும் அமைப்பதற்கும், எங்கெல்லாம் உடைகிறதோ, அரிப்பு ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகிறதோ, அந்த இடங்களில் கான்கிரீட் போடுவதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இந்தத் திட்டத்தை ஆதரிக்கும் சிலர் போலி விவசாய சங்கத்தை நடத்திக்கொண்டு ஆதாயத்துக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2016 தேர்தலின்போது, கீழ்பவானி கான்கிரீட் திட்டத்தை அமல்படுத்துவோம் என தி.மு.க தெரிவித்ததன் விளைவாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 15 தொகுதிகளை இழந்தது. அரசியல்ரீதியாக வும் இந்த அரசாணை 276-ஐ அமல்படுத்தினால், தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று முடித்துக்கொண்டார்.

இதையடுத்து அரசாணை 276-ஐ எதிர்த்துவரும் கார்த்திகேய சிவசேனாதிபதியின் நிலைப்பாடு குறித்து கருத்து கேட்பதற்காக அமைச்சர் துரைமுருகனை செல்பேசியில் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து நமது கேள்வியை குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் அமைச்சருக்கு அனுப்பியிருக்கிறோம். அமைச்சர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில், பரிசீலனை செய்து பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 5:43 pm


முதலமைச்சர் கோப்பை போட்டிகள்... கடமைக்கு நடத்துகிறதா தமிழ்நாடு அரசு?


முதல்வர் கோப்பைக்கான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெறவில்லை என்ற புகார் மனு ஏற்கெனவே எங்களுக்கு வந்திருக்கிறது. அது தொடர்பான விசாரணையை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் தொடங்கிவிட்டனர்

போட்டிகளில் பங்கேற்காத மாணவர்களை வெற்றியாளராக அறிவிப்பது, போட்டி முடிவுகளை அறிவிக்காமல் தாமதிப்பது, நடுவர்கள் பற்றாக்குறை, விதிகளில் குழப்பம், `தகுதிநீக்கம் செய்துவிடுவேன்’ என்ற மிரட்டல்... நவீன உபகரணங்கள் இல்லாதது, வீரர்களுக்கான கழிவறை வசதியின்மை என அடுக்கடுக்கான புகார் மழையில் நனைந்துகொண்டிருக்கிறது ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை!’ ஏனிந்த சர்ச்சை... விசாரித்தோம்.

எப்படிக் கையாள முடியும்?


தமிழகத்தின் ஆற்றல்மிகு விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திவருகிறது. அதில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு ரொக்கப் பரிசும், முதலமைச்சர் கோப்பை மற்றும் சான்றிதழை வெல்வார்கள். இந்த வெற்றியாளர்களுக்கு மேற்படிப்பில் மட்டுமன்றி, அரசுப் பணியிலும் 3% இட ஒதுக்கீடு உள்ளிட்ட வாய்ப்புகளும் இருப்பதால், ஒவ்வொரு கிராமப்புற விளையாட்டு வீரருக்கும் முதலமைச்சர் கோப்பை என்பது ஒரு கனவாகவே இருந்துவருகிறது. ஆனால், இந்த விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடத்தப்படுவதில்லை என்று புகார்கள் குவிகின்றன.

இது குறித்து தமிழ்நாடு தடகளச் சங்கத்தின் செயலாளர் லதாசேகர் நம்மிடம் பேசியபோது, “தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களில் எல்லைக்கோட்டை முதலில் தொடுபவர்கள் யார் என்பதைத் துல்லியமாக கணிக்க, ‘போட்டோ ஃபினிஷ்’ உள்ளிட்ட பல நவீன உபகரணங்கள் பல ஆண்டுகளாக விளையாட்டுத்துறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. ஆனால், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் இவை போன்ற எந்த நவீன உபகரணமும் இல்லை. 3,000 போட்டியாளர்கள் பங்கேற்கும் மைதானத்தில், போட்டியை நடத்துபவர்களாக 20 அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். 3,000 பங்கேற்பாளர்களை எந்த நவீன உபகரணமும் இல்லாமல் இந்த 20 பேரால் எப்படிக் கையாள முடியும்..?” என்று கேட்கிறார்.

பங்கேற்காமலேயே வெற்றி!


பயிற்சியாளர்கள் சிலரிடம் பேசியபோது, “சென்னையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில், போட்டியிலேயே கலந்துகொள்ளாத மாணவி ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அது குறித்து அதிகாரிகளிடம் நாங்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வானவர்களின் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. இதேபோல திருவள்ளூர் சிலம்பப் போட்டியில் மான் கொம்பு பிரிவில், இரண்டு கல்லூரி மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கே முதல் இரண்டு இடங்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைனில் வெளிவந்த முடிவில் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது நபர் எங்கிருந்து வந்தார்... உண்மையில், மாவட்டப் போட்டிகளில் வென்றவர்கள்தான் மாநில அளவிலான போட்டிகளுக்குத் தேர்வாகிறார்களா என்றே தெரியவில்லை” என்றனர்.

விளையாட்டு வீரர்களிடம் பேசினோம். “திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கபடிப் போட்டிகளில் நடுவர்கள் முறையாகச் செயல்படவில்லை. கடமைக்குப் போட்டிகளை நடத்தினர். பாயின்ட்ஸ் வழங்குவதில் பல குளறுபடிகள் ஏற்பட்டன. நடுவர்கள் பற்றாக்குறையால் 18 வயதுகூட நிரம்பாதவர்களையெல்லாம் நடுவராகப் பயன்படுத்திச் சமாளித்தார்கள். அவர்களில் பலருக்கு விதிகள் தெரிந்திருக்கவில்லை. நியாயமான முறையில் எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தபோது, `தகுதிநீக்கம் செய்துவிடுவோம்’ என்று அதிகாரிகள் மிரட்டினார்கள். பல போட்டிகளில் விளையாட்டு வீரர்களையே பார்வையாளர்களாக அனுமதிக்கவில்லை. தங்களுக்கு வேண்டியவர்களை வெற்றியாளர்களாக அறிவிப்பதற்காகவே இப்படியெல்லாம் நடந்துகொண்டார்களோ என்றுகூடத் தோன்றுகிறது” எனப் புகார் வாசித்தவர்களிடம், அடிப்படை வசதிகள் குறித்துக் கேட்டபோது, “பெரும்பாலான மைதானங்களில், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை” என்றனர்.

நம்முடன் பேசிய சிலம்பப் பயிற்றுநர்கள் விஜயன், அருண் கேசவன் ஆகியோர், “அரசு அங்கீகாரத்தை இழந்த தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்திலிருந்து நடுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள், தங்களிடம் பயிற்சிபெறும் மாணவர்களையே வெற்றியாளர்களாக அறிவித்துக்கொண்டனர். திருவள்ளூர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்த போட்டியில் 2,000-க்கும் மேற்பட்டோர் வந்திருந்ததால் அவசர அவசரமாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு சங்கத்தினரும் ஒவ்வொரு மாதிரியான விதிகளைப் பின்பற்றியதால் மதிப்பீடுகள் சரியாக வழங்கப்படவில்லை. வயது அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடத்தப்படவேண்டிய போட்டிகளை எந்த வித்தியாசமும் இன்றி ஏனோ தானோவென்று நடத்தி முடிவுகளை அறிவித்தார்கள்” என்றனர் வேதனையாக.

சிலம்ப ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.முருக கனி நம்மிடம், “முதல்வர் கோப்பையில் சிலம்பம் இந்த ஆண்டுதான் முதன்முறையாக சேர்க்கப்பட்டிருக்கிறது. சிலம்பப் போட்டிகளில் பல தவறுகள் நடந்திருப்பதாகப் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து புகார் வந்திருக்கிறது. இது போன்ற பிரச்னைகள் எழாமலிருக்க, மாநில சிலம்ப விளையாட்டு வளர்ச்சி வாரியத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்” என்றார்.

புகார்கள் குறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் மேகநாத ரெட்டியிடம் விளக்கம் கேட்டோம். “முதல்வர் கோப்பைக்கான சிலம்ப விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெறவில்லை என்ற புகார் மனு ஏற்கெனவே எங்களுக்கு வந்திருக்கிறது. அது தொடர்பான விசாரணையை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். மற்றபடி, மாவட்ட அளவில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தின் விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருக் கின்றனவா என்பது ஆய்வு செய்யப்படும். முறைகேடு, விதிமீறல் புகார்கள் உறுதியானால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

முதல்வர் கோப்பையை, ‘நாச்சியப்பன் பாத்திரக்கடை’யில் வாங்கும் கோப்பையாக நினைத்துவிட்டார்களோ?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 5:57 pm

பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி: திமுக பொதுக்கூட்டத்தை புறக்கணித்த நாசர்


அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் நாசர் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டு புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இரண்டு முறை அமைச்சர் மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக அமைச்சர் பதவியிலிருந்து நாசர் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் சாதனைப் விளக்கப் பொதுக்கூட்டம் திருவேற்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. திருவேற்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாசர் பங்கேற்று உரையாற்றினார். சென்னீர் குப்பம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அவர் பேச சென்றபோது, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியானது. இதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் அப்படியே சென்றுவிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 11, 2023 4:19 pm

இருவருடமாக திமுக அரசின் பல நடவடிக்கைகள் தமிழக மக்களை பெரும் கடுப்பில் வருத்தத்தில் தள்ளிய போதும் தன் அதிரடி காமெடியால் சிரிக்க வைத்துகொண்டிருந்த அமைச்சர் தியாகராஜன் பதவி இழந்திருக்கின்றார்

தமிழர்களின் கோடைகாலத்தில் அடிக்கடி வீசிய அந்த குளிர்காற்றும் இனி இல்லை

ஆக அவர் பேசியதாக சொல்லபட்ட "காணா ஒலி" அல்லது ஒலி பதிவு உண்மை என்றே இனி கருதபடும்

காரணம் அவர்மேல் ஊழல் குற்றசாட்டு இல்லை, துறை ரீதியாகவும் தன்னால் முடிந்த எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ளத்தான் செய்தார் அதனால் அவர் பதவி இழக்க ஒரே காரணம் இந்த ஒலிபதிவு மட்டுமாகத்தான் இருக்கமுடியும்

நிதிதுறையினை இழந்தாலும் தகவல் தொடர்பு அமைச்சராக அவர் நீடிப்பார்,

அவர் அங்கே நிறைய தொலைபேசி பேசலாம் இதரவகையில் எல்லோருடனும் தொடர்பில் இருக்கலாம், அப்படி அவர் சந்தோஷமாக இருக்கட்டும்
என கொடுத்துவிட்டார்களோ என்னமோ?

அன்னார் முன்பு தன் பொருளாதார அறிவையும் தான் பார்த்த உலகளாவிய பொருளாதார வேலைகளையும் அனுபவங்களையும் சொல்வார், நிதியமைச்சருக்கே ஆலோசனை வழங்குவார்

இனி தகவல் தொடர்பு துறையில் என்ன சொல்வாரோ என்றுதான் தெரியவில்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 11, 2023 6:22 pm

எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முக ஸ்டாலின் எதிர்த்த அரசாணை



எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முக ஸ்டாலின் எதிர்த்த அரசாணை குறித்து ஞாபகப்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தங்களை பணி நியமனம் செய்ய வேண்டுமானால் மேலும் ஒரு தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தும் அரசாணை கடந்த 2019ஆம் ஆண்டு பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் இந்த அரசாணையை எதிர்த்ததை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பணி நியமன போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 முறை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போதும் கடந்த 3 நாட்களாக தொடர் உண்ணாவிரதமிருக்கும் ஆசிரியர்களை தமிழக அரசின் சார்பில் இதுவரை அழைத்து பேசாததைக் கண்டிப்பதுடன், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:15 pm

கோவை தி.மு.க இளம் பெண் கவுன்சிலர் நிவேதா பதவிக்கு ஆபத்து: மாநகராட்சி முடிவு என்ன?



கோவை மாநகராட்சி 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிவேதா தொடர்ந்து மூன்று மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததை அடுத்து தகுதி இழக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடைபெறும். இதில் தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி உள்ளாட்சி பதவி பறிபோகும். பிறகு அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4) இன் படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து காரணம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார்.

அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் தகுதி இழக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார்.

அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். நிவேதா கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் மாமன்ற உறுப்பினர் என்பதும் முன்னாள் திமுக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91416
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 16, 2023 8:15 pm

செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு: ‘தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’



தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், கடந்த 2011-2015-ம் ஆண்டு அ.தி.மு.க காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்பட 4 மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்து விட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது, இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யாத மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு மனு தாக்கல் செய்தது.

அதேபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை இன்று (மே 16) விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அமர்வு, வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பண மோசடி வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், புகார்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 11 of 13 Previous  1, 2, 3 ... 10, 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக