ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:46 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 7:47 am

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:40 pm

Admins Online

தமிழக அரசியல் செய்திகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon May 25, 2015 10:15 pm

நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866

http://sundararajthayalan.com/

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Jun 13, 2015 12:40 pm

நீதிபதி குமாரசாமி கணக்கு பற்றி ஸ்டாலின் சொன்ன திருடன் கணக்கு!

திருச்சி: திருடன் கதையை கூறி, நீதிபதி குமாரசாமியின் கணக்கு பற்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தொழிலதிபர் வி.கே.என். திருமணவிழாவில் கலந்துகொள்ள தி.மு.க. ஸ்டாலின் நேற்றிரவு திருச்சி வந்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்க கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இப்போதுவரை மேட்டூர் அணை திறக்கப்படவில்லையே, அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து?

"இந்த கேள்வியை பெங்களூரு நீதிமன்றத்தால் விடுதலையாகியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டிய கேள்வி; அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்".

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிறைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதே, இப்படி நிராகரிப்பிற்கு உள் நோக்கம் இருக்கும் என நினைக்கிறீர்களா?.

'இதுபோன்று நடக்கும் என தெரிந்துதான் தலைவர் கலைஞர் முன்கூட்டியே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்" என்றார்.

இதைத் தொடர்ந்து திருச்சி தொழிலதிபர் விகேஎன் மற்றும் திமுக மாநகர செயலாளர் அன்பழகன் மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின், திருச்சி உறையூர் அருகே திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளை முன்னின்னு மரக்கன்றுகள் நட்டுவைத்தார்.

திருமணவிழாவில் பேசிய ஸ்டாலின், "வாழ்க்கையில் கணக்கு போட்டு பார்க்கணும், கணக்கு தவறானால் எல்லாம் தவறாகிவிடும். இப்போதெல்லாம் நீதிபதியே கணக்கு தவறாக போடுவது நடக்கிறது. நீதிபதி போட்ட தவறான கணக்கில் சிறைக்குள்ளே இருக்கவேண்டியவரெல்லாம் இப்போது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ள கொடுமையை எல்லாம் நாம் பார்த்துகொண்டிருக்கிறோம்.

முன்பெல்லாம் காந்திகணக்கு, நேருக்கணக்கு என சொல்வார்கள். ஆனால் குமாரசாமி கணக்கு ஒன்று வந்துள்ளது. வாட்ஸ் அப்பில் ஒரு கதை உலா வருகிறது.

ஒருவீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் போலீஸில் புகார் கொடுக்காமல் இருக்கிறார். அவரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை என நண்பர்கள் கேட்கும்போது, அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர், "திருடன் ஒருகடிதம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறான். அதில் நீ போலீஸில் புகார் கொடுத்தாலும் பரவாயில்லை. 10 சதவீதம் பொருட்களைதான் திருடியுள்ளேன். எனவே இது குற்றமில்லை!" என எழுதியுள்ளான். அதனால்தான் போலீஸிடம் புகார் கொடுக்கவில்லை. இது நான் புதிதாக சொல்லவில்லை. வாட்ஸ் அப்பில் வலம் வரும் தகவல். குமாரசாமி தீர்ப்பு இப்படிதான் உலா வருகிறது.

தமிழகத்தில் பதவியை பதவியாய் நினைக்காமல், பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்கள். நான் எந்த விசயங்களை செய்தாலும் தலைவர் கலைஞருக்கு தெரியாமல் எதையும் செய்யமாட்டேன். அந்த வகையில் நான் பதவியில் இருந்தாலும், பொறுப்பாய் பணியாற்றுவதையே தலைவர் விரும்புவார். தமிழைப்போல், வாழ்க!" என வாழ்த்திவிட்டு அமர்ந்தார்.

மேடையில் இருந்து கீழே இறங்கிய ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் மேலும் சில கேள்விகளை கேட்டனர்.

ஆர்கேநகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இந்நிலையில் அந்த தொகுதியில் போட்டிபோடும் இடதுசாரி கம்யூனிஸ்ட் வேட்பாளரான மகேந்திரனை, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆதரிப்பீர்களா? என்று கேட்டபோது, இதுபற்றி தலைவர் கருணாநிதிதான் முடிவு செய்வார் என்றார்.

முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்ககூடாது என நீதிபதியே கேட்டுள்ளாரே? என்ற கேள்விக்கு, ராமஜெயம் கொலை செய்யப்பட்டதில் இருந்து நாங்கள் சிபிஐ விசாரணை மட்டுமே கேட்டு வருகிறோம். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றார்.

இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக, தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளதா? என்ற கேள்விக்கு, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயாராகவே உள்ளது என்றார் ஸ்டாலின்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 1:06 am

முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவு குறைவு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னையை சேர்ந்த மக்கள் ஆய்வு என்ற அமைப்பின் சார்பில் தமிழகம் 2016– ஒரு முன்னோட்டம் என்ற தலைப்பில் தேர்தல் குறித்த முன்னோட்ட கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையை வெளிப்படுத்துவதற்கு மாறாக நகைப்பை வரவழைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கருத்துக்கணிப்பில் பா.ம.க. முதல்–அமைச்சர் பதவிக்கான வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3 ஆயிரத்து 500 பேரிடம் மட்டுமே, அதாவது, ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயத்தை, அதில் 10 ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும்.

எவருக்கேனும் ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் அதை வெளிப்படையாக செய்யலாம். அதைவிடுத்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு தரப்பான கருத்தை திணிப்பது அழகல்ல. இது மிக மோசமான அரசியல் கருத்து வணிகமாகவே மக்களால் பார்க்கப்படும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sun Aug 30, 2015 1:08 am

அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது புதிய கருத்து கணிப்பில் தகவல்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக மக்கள் ஆய்வக இயக்குனர் தலைமையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தபட்டது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,370 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்து கணிப்பில் பேராசிரியர்கள் மாணவர்கள் என 400 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க.வுக்கு 34.1% பேர் வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு 32.6% பேர் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
தே.மு.தி.கவுக்கு 4% பேர் ஆதரவளித்துள்ளனர். பா.ம.கவுக்கு 3% பேர் ஆதரவைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி 2.9% பேர் ஆதரவு பெற்று உள்ளது.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 37 சதவிகிதம் பேர் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். 23 சதவிகிதம் பேர் மறுக்க முடியாது என்றும், 9 சதவிகிதம் பேர் ஏதோ கொஞ்சம் நெருங்கி வருகிறது என்றும் 14 சதவிகிதம் பேர் வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க, தி.மு.க.விற்கு மாற்று கட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்று 53.4 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு

ஜெயலலிதாவுக்கு 31.56% பேரும் ஸ்டாலினுக்கு 27.98% பேரும் ஆதரவு அளித்துள்ளனர். கருணாநிதிக்கு ஆதரவு 21.33% பேரும், விஜயகாந்துக்கு 6.24% பேரும், அன்பு மணி ராமதாசுக்கு 2.27 % பேரும்,வைகோவுக்கு 1.85% பேரும், சீமானுக்கு 1.84% பேரும்,திருமாவளவனுக்கு 1.13% பேரும், ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by M.Jagadeesan on Sun Aug 30, 2015 9:25 am

மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒரு சோகமயமான எதிர்காலம் உள்ளது என்று இந்தக் கருத்துக் கணிப்பு சொல்கிறது .

ம் ம் .............என்ன செய்வது ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Thu Sep 03, 2015 9:56 pm

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.

இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Namasivayam Mu on Fri Sep 04, 2015 6:30 am

எல்லாமே வயித்துக்குத்தான் :வணக்கம்:
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
மதிப்பீடுகள் : 724

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by ayyasamy ram on Fri Sep 04, 2015 6:39 am

ஜி.கே வாசனுக்கு 1% பேரும் ஆதரவு அளித்து உள்ளனர்.
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62134
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Fri Sep 04, 2015 11:20 am

@சிவா wrote:திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்பது முற்றிலும் தவறான செய்தி: திமுக தலைமை மறுப்பு

திமுக 170 இடங்களில் போட்டியிடும் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிது முற்றிலும் தவறான செய்தி என்று திமுக தலைமை மறுத்துள்ளது.

இது குறித்து, திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 170 இடங்களில் போட்டியிடும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. இது முற்றிலும் தவறான செய்தி, திமுகவில் யாரும் தனித்து முடிவு எடுக்க முடியாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 170 இடங்களிலும், மற்ற தொகுதிகளில் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் போட்டியிடும் என திமுக வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 119 இடங்களை போட்டியிட்டதே திமுக படுதோல்வி அடைய காரணமாக அமைந்தது. எங்களின் தோல்விக்கு காரணம் திமுக வின் ஓட்டு வங்கி குறைந்து விட்டது என்பது காரணம் கிடையாது. தொகுதி பங்கீட்டின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம். இந்த தவறு மீண்டும் நடக்காது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு திமுக தலைமை கழகம் மறுப்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1160663

பலிகடா ஒன்று தெரிகிறதே !

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Sep 05, 2015 12:22 am

பாஜக கூட்டணிக்கு ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்: இல.கணேசன்

பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவர்களது நம்பிக்கையை நிச்சயம் பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.

இலங்கைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பு சார்பில் அனுபவமிக்க சம்பந்தம் எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார். அவர் தமது கடமையை சிறப்பாக ஆற்றி தமிழர் உரிமைக்குப் பாடுபடுவார்.

பாமக வேகமாகச் செயல்பட்டுவருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அவர்கள் விவேகமாக முடிவெடுப்பார்கள் என காத்திருக்கிறோம். நிச்சயம் அவர்கள் பாஜக கூட்டணியிலே இடம் பெறுவார்கள்.

தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்சியின் தலைமை சம்மதிக்கும். ஆகவே தற்போது தொண்டர் கருத்தை கேட்டறிந்துவருகிறோம். திமுக, அதிமுக அல்லாத மாற்று அணியை பாஜக அமைக்கும்.

எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து தேர்தலைச் சந்திப்பது பலத்தை கூடுதலாக்கும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நற்குணமிக்கவர். பக்குவமானவர். தேசியத்தை வலுப்படுத்த அவர் பாஜக கூட்டணியில் சேரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

பாஜகவினருக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு தாய்வீடு போன்றது. குழந்தை நன்றாக இருக்கவேண்டும் என தாய் கவலைப்படுவதில் தவறில்லை. திமுகவில் குடும்பப் பிரச்னை எதிரொலிப்பது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Sep 05, 2015 12:24 am

ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழ்நாட்டில் இப்போது 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவலநிலை ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மது குடித்துவிட்டு பெண்களும், மாணவ, மாணவிகளும் தகராறு செய்யும் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார்? என்பது உங்களுக்கு தெரியும். மதுக்கடைகளை திறந்து மதுவை அறிமுகம் செய்தவர் கருணாநிதி, டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் திறந்தவர் ஜெயலலிதா.

காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். ஆனால், கடந்த 44 ஆண்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் 7 ஆயிரம் மதுக்கடைகளை திறந்துள்ளன. தமிழகத்தில் உள்ள பெண்களின் எதிர்பார்ப்பு மதுவிலக்காகத்தான் இருக்கிறது. மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான்.

தமிழகத்தின் மொத்த வருவாயான 1 லட்சத்து 5 ஆயிரம் கோடியில், 36 ஆயிரம் கோடி ரூபாய் மது விற்பனை மூலம் கிடைக்கிறது. மதுப்பழக்கம் சமூகத்தை அழிக்கக்கூடியது. பா.ம.க. தான் மதுவுக்காக தொடக்கம் முதலே போராடிவருகிறது. மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.

அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். ஆனால், அதிக மது ஆலைகளை நடத்துபவர்களே தி.மு.க.வினர் தான். தமிழகத்தில் மொத்தம் 10 மது ஆலைகளை அரசியல் கட்சியினர் நடத்துகின்றனர். அவற்றில் 5 ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துகின்றனர். 3 ஆலைகளை அ.தி.மு.க.வினர் நடத்துகின்றனர். இரு ஆலைகளை காங்கிரஸ் கட்சியினர் நடத்துகிறார்கள். தி.மு.க.வினரின் மது ஆலைகளை மூடினாலே 50 சதவீத மது விலக்கு நடைமுறைக்கு வந்து விடும்.

ஆனால், மதுவிலக்கு வந்தால் தான் இவர்கள் மது ஆலைகளை மூடுவார்களாம். மதுவிலக்கு வருவதற்கு 10 மாதங்கள் ஆகும் என்றால், அதற்குள் தி.மு.க. சார்பு மது ஆலைகள் தயாரிக்கும் மதுவை குடித்து 80 ஆயிரம் பேர் இறப்பார்கள் என்பதால் மது ஆலைகளை மூடுங்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மன்றாடினேன். இதுவரை அவரிடமிருந்து பதில் வரவில்லை.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் முடியும். 2016-ம் ஆண்டில் ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும். இது பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாத்தியம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தேர்தல் பிரசாரக்குழுத் தலைவர் எதிரொலி மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Sep 05, 2015 12:24 am

சட்டப்பேரவையில் கருணாநிதி மீது உரிமை மீறல் புகார்

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மீது வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் கொடுத்துள்ளார்.

அமைச்சர் வைத்திலிங்கம் இன்று சபாநாயகரிடம் ஒரு உரிமை மீறல் புகார் மனு கொடுத்தார். அதில், விவசாய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது தான் சொல்லாததை திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி நாளிதழில் எழுதி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், சட்டப்பேரவையின் உரிமைக் குழுவிற்கு புகாரை அனுப்பி வைத்தார்.

உரிமை மீறல் குழு அளிக்கும் பரிந்துரைக்கு பிறகு கருணாநிதி மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by T.N.Balasubramanian on Sat Sep 05, 2015 1:07 pm

ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு

நிச்சயமாக முடியும் .

ஏன் நானோ neengalo முதலமைச்சராக வந்தால் கூட இதை செய்யமுடியும் .
ஆனால் ,
மின்சாரம் விலை மூன்று மடங்கு ஆகும் .இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கிடையாது .
பஸ் கட்டணங்கள் இரு மடங்கு ஆகும் .
சொத்து வரி /நீர் -கழிவு நீர் வரி 4 /5 மடங்கு ஆகும் .
எல்லாமே அதிகமாகிறதே , எதுவுமே குறையாதா என்றால்
ஒ குறையுமே .
1. அரசு நிர்வாகங்களில் சம்பளம் 1/2 குறைக்கப்படும் .
2. -------------'' "-------------------- ஒழுங்காக வேலை செய்யாவிட்டால், உடனே பணி நீக்கம்.
எங்குமே அப்பீல் பண்ணமுடியாது
இப்பிடி செய்தால்தான் அன்புமணியின் கனவு பலிக்கும் .

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by ayyasamy ram on Sat Sep 05, 2015 1:48 pm

கனவு காணுங்கள் என்பதை தப்பா புரிஞ்சுகிட்டார் அன்புமணி ராமதாஸ்...!!
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62134
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by சிவா on Sat Sep 05, 2015 11:21 pm

சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும்: விஜயகாந்தை சந்தித்த பின் சுப்பிரமணியசாமி பேட்டி

பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. காலை 11 மணிக்கு அங்கு வந்த சுப்பிரமணியசாமியை விஜயகாந்த் வரவேற்று அழைத்து சென்றார்.

இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் வெளியே வந்த சுப்பிரமணியசாமியை நிருபர்கள் சந்தித்து பேட்டி கேட்டனர். அப்போது சுப்பிரமணியசாமி கூறியதாவது:–

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீதும் என் மீதும் பல்வேறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்து உள்ளது. இதை எதிர்த்து நாங்கள் இருவரும் தனித்தனியே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். வருகிற 7–ந்தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை எப்படி எதிர்கொள்வது. அதில் உள்ள கிரீமினல் வழக்குகளை நீக்குவது குறித்து பேசினோம்.

தமிழக அரசு எங்கள் மீது தொடர்ந்த வழக்குகளை கூட்டாக சேர்த்து எதிர் கொள்ளலாமா? என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தோம்.

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக முதல்வர்–பிரதமர் சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சோனியா காந்தியை அதுபோல பேசி இருந்தால் இவர் ஏற்றுக் கொள்வாரா? மோடி எனது 40 ஆண்டு கால நண்பர் அவரை பற்றி அவதூறாக பேசுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக மாற்று அணி உருவாகும். ஜெயலலிதா மேல் முறையிட்டு வழக்கில் அவருக்கு எதிரான தீர்ப்பு தான் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது சந்திரலேகா மற்றும் சுதிஷ் இருந்தனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அரசியல் செய்திகள் - Page 2 Empty Re: தமிழக அரசியல் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum