புதிய பதிவுகள்
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Today at 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 4:12 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by சிவா Today at 3:41 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by சிவா Today at 3:37 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Today at 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Today at 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Today at 11:26 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 4:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:01 am

» மந்திரங்கள்
by சிவா Today at 3:49 am

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by சிவா Today at 2:41 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Today at 2:33 am

» ஸ்ரீராம தரிசனம்
by சிவா Today at 1:29 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 21/03/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Yesterday at 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Yesterday at 2:17 am

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 9:08 pm

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (14)
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:04 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» தமிழக அரசியல் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:54 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

» தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார்
by T.N.Balasubramanian Sat Mar 18, 2023 5:44 pm

» சிறப்பு குழந்தைகள்! கவிஞர் இரா.இரவி
by eraeravi Fri Mar 17, 2023 8:41 pm

» பற்களை பராமரிப்பதில் நாம் செய்யும் தவறுகள்
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 7:34 pm

» உலக தூக்க தினம் - மார்ச் 17
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:21 pm

» 18 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய அனுமதி
by T.N.Balasubramanian Fri Mar 17, 2023 6:10 pm

» அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முன்னணியில் இந்தியா
by mohamed nizamudeen Fri Mar 17, 2023 9:56 am

» கடன் வாங்கி ஆடம்பரத் திருமணம் செய்ய வேண்டாமே...
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:03 pm

» வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் பயிற்சி செய்யலாம், ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 10:00 pm

» 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:54 pm

» முதுமலையில் படமாக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது
by Dr.S.Soundarapandian Thu Mar 16, 2023 9:46 pm

» கண் அழுத்த நோய் - Glaucoma
by சிவா Thu Mar 16, 2023 8:17 pm

» ஆன்லைன் சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும்
by சிவா Thu Mar 16, 2023 5:28 pm

» போதை வலையில் சிறுவர்கள்... என்னவாகும் தமிழ்நாடு?
by T.N.Balasubramanian Thu Mar 16, 2023 5:19 pm

» 5,000 கலை அம்சங்கள் உடன் 5,000 ஆண்டுகால இந்திய நாகரிகத்தை சிறப்பிக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்
by சிவா Thu Mar 16, 2023 5:00 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Thu Mar 16, 2023 4:09 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சிவா Thu Mar 16, 2023 3:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
23 Posts - 70%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
5 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
1 Post - 3%
venkat532
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
1 Post - 3%
கோபால்ஜி
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
435 Posts - 67%
T.N.Balasubramanian
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
95 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
65 Posts - 10%
mohamed nizamudeen
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
23 Posts - 4%
Dhivya Jegan
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
eraeravi
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_m10தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

தமிழக அரசியல் செய்திகள்


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 19, 2015 11:16 pm

First topic message reminder :

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி மனு

தமிழக அரசியல் செய்திகள் - Page 9 201505192025138979_traffic-ramaswamy-challenge-jayalalitha-acquittal_SECVPF
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்தும், அவரை விடுதலை செய்தும் கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 11-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி  ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா பெற்ற கடன் தொகை பற்றி தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த தவறால் சொத்துக்குவிப்பு குறித்த விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது; இந்த தவறான கணக்கு மற்றும் விகிதாச்சாரத்தினால் அவர் விடுதலை பெறுவதற்கு தகுதியற்றவர்.

அவர் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடான பணப்பரிமாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு எதிரான மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.தமிழக அரசியல் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 26, 2023 9:59 am

தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு? டிரெண்டிங் ஹேஷ்டேக்


மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொழித்திணிப்பு தீவிரமாகி வரும் நிலையில், மொழிப் பற்று குறித்த வாசகங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரவணக்க நாள் தினத்தையொட்டி மொழிக் காவலர்களின் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் நடைபெறும் மொழிப்போர் மற்றும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்நிலையில், மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் வகையிலும், மொழித்திணிப்பை எதிர்க்கும் வகையிலும் தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8291
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 27, 2023 12:05 pm

சூப்பருங்கமுனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 11:36 am

கொள்ளை அடிப்பதற்காக கோவில்களை இடித்தாரா? டி.ஆர்.பாலு மீது போலீசில் பெண் வழக்கறிஞர் புகார்!


'மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, நுாறு ஆண்டுகள் பழமையான கோவில்களை இடித்திருக்கிறேன்' என, மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய தி.மு.க., -- எம்.பி., டி.ஆர்.பாலு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், சைதாப்பேட்டை வழக்கறிஞர் ராஜாத்தி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பழைய தஞ்சாவூர் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு சொந்தமாக, திருமங்கலக்குடி சிவன் கோவில் உள்ளது. 1968ல் தி.மு.க., முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததும், இந்த கோவில் நிலங்கள் மீது கவனம் செலுத்தினர். கோவிலுக்குச் சொந்தமான, 20 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, அதை வீட்டு மனைகளாக மாற்றி, பலருக்கும் விற்பனை செய்தனர். இதை எதிர்த்து, அதீன மடத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.

குற்றச்சாட்டுஆனாலும், அதிகாரத்தை பயன்படுத்தி, கோர்ட் உத்தரவை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். இன்றளவிலும், குறிப்பிட்ட நிலத்தில் வீடு கட்டி பலரும் இருந்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஹிந்து கோவில் நிலத்துக்குச் சொந்தமான அந்த கிராம நிலங்களையும் கையகப்படுத்தினார்.

கடந்த 1980ல், திருச்செந்துார் முருகன் கோவிலில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கொல்லப்பட்டார். அதற்கு காரணம், தி.மு.க.,தான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தணிக்கை ஆய்வாளராக இருந்த வெங்கடாசலம் என்பவர், 1983ல் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது மர்ம மரணத்துக்கு பின்னணியிலும், தி.மு.க.,வினர் இருப்பதாக கூறப்பட்டது.

பெரும் அதிருப்திஇப்படி பல விஷயங்களை ஆதாரங்களுடன் கூறலாம். அதாவது, ஹிந்து கோவில் நிலங்களை அபகரிப்பது, கோவில் சொத்துக்கள் மீது ஆசைப்படுவது, கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது என தி.மு.க.,வினர் மீது தமிழகம் முழுக்க புகார்கள் உள்ளன. இதனால், ஹிந்து மக்கள் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்நிலையில்தான், 'நுாறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, வெளிப்படையாகவும், ஆணவத்தோடும், டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.

வணங்குவதற்குரிய இடங்களான கோவில்களை பாதுகாக்கும் சட்டம் 1991ல், நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி, நாட்டு சுதந்திரத்துக்கு முன்னதாக கட்டப்பட்ட எந்த கோவிலையும் இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியாது.

நடவடிக்கை'நுாறு ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, டி.ஆர்.பாலு பேசியிருப்பது, குறிப்பிட்ட சட்டத்துக்கு எதிரானது. எனவேதான், டி.ஆர்.பாலு மீது வழக்கு போட்டு, அவரை கைது செய்ய வேண்டும் என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளேன். ஹிந்து கோவில்களை இடித்துள்ளதாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், அக்கோவில்களில் இருந்த நகை மற்றும் பொருட்கள் எங்கே? அவற்றை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே கோவில்களை இடித்துள்ளார் என சந்தேகப்படுகிறேன்.

பார்லிமென்ட் உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளது. அந்த குழுவிலும், டி.ஆர். பாலு மீது புகார் அளிக்க உள்ளேன். டி.ஆர்.பாலு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போலீசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராஜாத்தி கூறினார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 12:01 pm

“எனக்கு நீங்கள் ஓட்டுப் போடும் நாள் வரும். இல்லையென்றால்...” - சீமான் எச்சரிக்கை


“எனக்கு நீங்கள் ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மறைந்த புலவர் தமிழ் கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், ”உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. அவரின் பேரன் நான் வந்தால் அவருக்கு மிகப்பெரிய கோயிலை கட்டி தமிழில் ஓதுவார்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்துவேன்.

ஒரேநாள் இரவில் மொத்த சிலைகளையும் சாக்கில் கட்டி நடுக்கடலில் வீசுவேன். அப்போது இங்கிருந்த சிலையை காணவில்லை சமாதியை காணவில்லை என போராட்டம் நடைபெறும்.

நீங்கள் எனக்கு ஓட்டுப் போடுவீர்கள். அந்த நாள் வரும். இல்லையென்றால், வட இந்தியர்கள் உங்களைத் தாக்குவார்கள். வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள். அப்போது சீமானை தேடுவீர்கள். இது நடக்கும்.

சாதிவாரி கணக்கெடுக்க வேண்டும். முக்குலத்தோருக்கு மூன்று அமைச்சரை கொடுத்தீர்கள். அப்படி கொடுக்காமல் கள்ளர் எத்தனை பேர், மறவர் எத்தனை பேர், அகமுடையார் எத்தனை பேர் என எண்ணி வலிமைக்கேற்ப அமைச்சரவை கொடுக்க வேண்டும். கோனார் சமுதாயத்திற்கு இரண்டு அமைச்சர் கொடுத்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலேயே இரண்டு அமைச்சர்களை வைத்துள்ளீர்கள். இது என்ன இட ஒதுக்கீடு, சமூக நீதி? எடுத்துக் கொடுக்காமல் எண்ணி கொடுக்க வேண்டும்" என்று சீமான் பேசினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2023 7:40 pm

நீ பேனா சிலையை வெச்சினா நான் வந்து உடைப்பேன்! – சீமான் எச்சரிக்கை!மெரினா கடற்கரையில் கடல் பகுதியில் பேனா சிலை அமைப்பத்தால் உடைப்பேன் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை பெரிய அளவில் மெரினா கடற்கரை பகுதியை ஒட்டிய கடல்பகுதியில் அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பேனா சிலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ அமைப்புகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். கழிமுக பகுதியில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்கள் வாழ்வாதாரமும், மீன் வளமும் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரிய ஆமைகளான பங்குனி ஆமைகள் எனப்படும் ஆலிவர் ரிட்லி ஆமைகள் வாழிடமாகவும், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடமாகவும் மெரினா கடற்கரை உள்ளது.

இந்நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தில் பேனா சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “நினைவு சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை கடலுக்குள் வைப்பதைதான் எதிர்க்கிறோம். அண்ணா அறிவாலயத்திலோ, கலைஞர் நினைவிடத்திலோ பேனாவை வைத்துக் கொள்ளலாமே! கடலுக்குள்தான் வைக்க வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவ்வாறு கடலுக்குள் வைப்பதால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என அவர் பேசியபோது கீழிருந்து சிலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டலிட்டதால் சலசலப்பு எழுந்தது. அப்போது சிலையை வைத்தே தீருவோம் என்று கீழிருந்து ஒருவர் கூட்டலிடவே, “நீ சிலையை வைத்தால் நான் பேனா சிலையை உடைப்பேன்” என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2023 12:27 am

சீமானுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா? - கொதிக்கும் திமுக தொண்டர்சென்னை மெரினா கடற்கரையில் வங்கக்கடலில் கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரை ஓரம் அமைக்கப்படுவதால் இந்திய ஒன்றிய அரசின் கடற்கரை ஓர பாதுகாப்பு அமைப்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பலதரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, பேனா சின்னத்தை வைத்தால் நானே உடைப்பேன் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் இந்த பேச்சு திமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் திமுகவினர், திமுக ஆதரவாளர்கள் சீமானின் பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சீமானுக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு காலத்தில் சர்வாதிகாரம் நடத்திய எம்.ஜி.ஆர் ஆட்சியில் அவரையே எதிர்த்தவர்கள் நாங்கள் என்கின்றனர் திமுகவினர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். திருச்செந்தூர் முருகர் கோவிலில் இருந்த வைரவேல் காணாமல் போனது. இதனை கண்டுபிடித்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் மரணமடைகிறார். இந்த மர்ம மரணத்துக்கு பின்னால் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்க்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள் என கலைஞர் குற்றம்சாட்டினார். இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பால் நியமிக்கப்பட்டார். அவரின் அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார். அந்த அறிக்கையை அரசு வெளியிடவில்லை. 1984 நவம்பர் 24 ஆம் தேதி பால் கமிஷன் அறிக்கையை எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் வெளியிட்டார்.

அரசின் அறிக்கையை வெளியிட்டதற்காக எம்.ஜி.ஆர் காவல்துறையை ஏவினார். கலைஞரை கைது செய்ய கோபாலபுரத்துக்கு சென்னை காவல் ஆணையர் தலைமையில் போலீஸ் படை வந்தது. என் தலைவனை கைது செய்வீர்களா என கோபமான திமுகவினர் காவல் ஆணையர் காரை தீ வைத்து எரித்தனர். போலீஸ் தடியடி நடத்தி திமுகவினரை கலைத்து கலைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

பிரதமராக இருந்த இந்திராகாந்தி படுகொலையால் பிரதமரான ராஜிவ்காந்தி நாடாளுமன்றத்தை கலைக்கச் செய்தார். மக்கள் இந்திராகாந்தி படுகொலையால் அனுதாபத்தில் இருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. உடல்நலக்குறைவால் அமெரிக்கா ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காங்கிரசுடன் அதிமுக கூட்டணியில் இருந்தது. மக்களின் அனுதாபத்தை ஓட்டாக்க நினைத்து சட்டமன்றத்தை கலைக்கச் செய்தது அதிமுக. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அதிமுக நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்துக்கும் தேர்தலைச் சந்தித்தது. நோவுக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு என மக்களிடம் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றது. பெரிய மெஜாரிட்டி இருக்கிறது என தலை கால் புரியாத நிலையில் எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தார்.

அப்போது, அரசினர் தோட்டத்தில் கட்சிகளுக்கு அரசே அலுவலகம் ஒதுக்கி தந்து இருந்தது. எதிர்க்கட்சி என்பதால் பெரிய அலுவலகக் கட்டிடம் திமுகவுக்கு தரப்பட்டிருந்தது. தேர்தலில் திமுக தோற்று திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்ததால் அரசினர் தோட்டத்தில் திமுகவுக்கு தந்திருந்த அலுவலகத்தை காலி செய்யச் சொல்லியதோடு ஒற்றை அறை கொண்ட ஒரு கட்டடத்தை ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். காலி செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் அறிவித்தார். இரவோடு இரவாக திமுக அலுவலகத்தில் இருந்த கலைஞரை போலீஸை வைத்து தூக்கி வெளியே எரிந்தார் எம்.ஜி.ஆர். இந்த சம்பவமே அண்ணா அறிவாலயம் கட்டக் காரணமானது. இதில் கோபமான திமுக மாணவர் அணியினர் தன்னிச்சையாக களத்தில் இறங்கி திமுக தலைவரை வெளியேற்றிய அந்த அலுவலகம் யாருக்கும் பயன்படக்கூடாது என தீவைத்து எரித்தார்கள்.

இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. வி.பி.சிங் பிரதமராக இருந்தார். ஜனதா தளத்தோடு கூட்டணியில் திமுக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சராக தலைவர் கலைஞர் இருந்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இனியன் சம்பத் இருந்தார். ஜனதா ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் பாரத் பந்த் நடத்தியது. இனியன் சம்பத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையின் கீழே கலைஞரின் உருவபொம்மையை கொண்டு போய் எரிக்க முயன்றார்கள். அன்று பந்த் என்பதால் சென்னையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பச்சையப்பன் கல்லூரி விடுதி மாணவர்கள் சாப்பிடுவதற்காக ரெகுலராக வரும் ஹோட்டலுக்கு வந்தனர். அப்போது மாணவர் பட்டாளம் கலைஞரின் உருவபொம்மை எரிப்பதை பார்த்துவிட்டு இனியன் சம்பத் குழு மீது தன்னிச்சையாக தாக்குதல் நடத்தினர். போலீஸார் மாணவர்களிடமிருந்து இனியன் சம்பத்தை மீட்டனர். தனது மனைவி டெய்சி ராணியோடு திருவல்லிக்கேணி இ1 காவல்நிலையத்தில் போய் புகார் தந்தார் இனியன். காவல்நிலையத்துக்குள்ளும் புகுந்து அவரை மாணவர் பட்டாளம் தாக்கியது.

இதுவெல்லாம் திமுக தொண்டர்களின் கடந்த கால வரலாறு. தலைமையை வரைமுறையில்லாமல் நாக்கில் நரம்பில்லாமல் பேசும்போதும், கட்சியை அவமானப்படுத்தினாலும் திமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தனர். இப்போது திமுக தொண்டர்கள் அமைதியான முறையில் சாத்வீக முறையில் நடந்து கொள்வதால்தான் இப்படி சீமானெல்லாம் மறைந்த எங்கள் தலைவரை அவமானப்படுத்தி பேசுகிறார் என வேதனையுடன் கொதிக்கிறார்கள் மூத்த கழக முன்னோடியினர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8291
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Feb 02, 2023 1:35 pm

அதெல்லாம் சரி! #பேனா வைக்க இடமா இல்லை? அருமையான , அரிதினும் அரிதான, இனிமையான , இயற்கை அன்னையின் மடியான கடல்தானா கிடைத்தது? ஏற்கனவே அழகு கொஞ்சும் கடற்கரையைச் சுடுகாடாக்கியது போதாதா? ‘தேர்தலில் வெற்றிபெற்றால் கடல் எல்லாம் அவர்களுக்கே சொந்தம்’ என்றாகுமா?முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 02, 2023 7:16 pm

இரட்டை இலை சின்னம்! உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!!இரட்டை இலை சின்னத்தை அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி தரப்போ, ஓ. பன்னீர்செல்வம் தரப்போ அணுகவில்லை என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமது கையெழுத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தொடர்ந்த இந்த இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த பதில்களாவன, இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி தேர்தல் ஆணையத்தை யாரும் அணுகவில்லை. கையெழுத்திட அதிகாரமுள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவர் கையெழுத்துள்ள வேட்புமனுவையே ஏற்க முடியும்.

ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ தேர்தல் ஆணையத்தின் பணிகள் கிடையாது. வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதும், தேர்தல் பணிகளை கண்காணிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் பணி.

ஒரு கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.

இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையிலுள்ளதால், கடந்த ஜூலை பொதுக்குழு விதிமாற்றங்களை கருத்தில் கொள்வதில்லை. பொதுக்குழு முடிவுகளையும் அங்கீகரிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 02, 2023 3:41 pm

ஜனநாயகத்தை பற்றி தி.மு.க., பேசலாமா? அண்ணாமலை கேள்வி


'அரசையோ, முதல்வரையோ விமர்சித்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தி.மு.க.,வுக்கு, ஜனநாயகத்தை பற்றி பேச தகுதி இருக்கிறதா' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கைடில்லியில் ஆம்ஆத்மி அரசு, 2021 நவம்பரில் அறிவித்த, புதிய மதுபான கொள்கை முறைகேடு காரணமாக, அம்மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை அடிப்படையில், 800க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.

டில்லி அரசின் தலைமை செயலர், மதுபான கொள்கை குறித்து, அம்மாநில முதல்வர், மேயர், துணை நிலை கவர்னருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். அதை விசாரிக்க, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, கவர்னர் உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையில், 'மதுபான உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது' என்பது உட்பட, பல சாராம்சங்கள் இருந்தன.

மனிஷ் சிசோடியா விதிகளை மீறி, பல நிறுவனங்களுக்கு உரிமங்களை கொடுத்ததாகவும், அதற்காக கோவா, பஞ்சாப் மாநில தேர்தல் செலவுக்கு, பல நுாறு கோடி ரூபாயை ஆம்ஆத்மி கட்சி பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்தது.

அதை அடிப்படையாக வைத்து, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்து விசாரணையை துவக்கியது. அதில் கிடைத்த பல்வேறு ஆதாரம் அடிப்படையில், மனிஷ் சிசோடியா உட்பட, 15 பேர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

டில்லி அரசில் இத்தனை முறைகேடுகள் நடந்திருக்க, மனிஷ் சிசோடியா கைதை, 'ஜனநாயக விரோதம், சட்ட விரோதம்' என்று விமர்சனம் செய்திருக்கிறார், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு.

எப்போது எல்லாம் நாட்டில் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ, உடனே தி.மு.க.,வினருக்கு, அக்கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள், வாரிசுகள் மேல் இருக்கும் ஊழல் வழக்குகளும், அமலாக்க துறை வழக்குகளும் ஞாபகத்துக்கு வரும். தி.மு.க, அமைச்சர்களும், எம்.பி.,க்களும் அமலாக்கத் துறை விசாரணைக்கு சென்று வருவது, மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். டி.ஆர்.பாலுவுக்கு தெரியாமல் இருக்குமா?

நாளை, அவரது கட்சியிலும் யாராவது கைதாகும் நிலை வந்தால், மற்ற கட்சிகளின் ஆதரவு வேண்டுமே என்று, பெயருக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.தி.மு.க., அரசையோ, முதல்வரையோ, சமூக வலைதளங்களில் விமர்சித்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தி.மு.க.,வுக்கு, ஜனநாயகத்தை பற்றி எல்லாம் பேச தகுதி இருக்கிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 88781
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 03, 2023 2:51 pm

அதிமுகவில் பிரிந்திருப்போரை சேர்ப்பது எங்கள் வேலை அல்ல: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டிதிருச்சி: அதிமுகவில் பிரிந்திருப்போரை சேர்ப்பது எங்கள் வேலை அல்ல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிற கட்சியின் பிரச்சனைகளில் தலையிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக