ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by kandansamy Today at 6:45 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Today at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Today at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Yesterday at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Yesterday at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Yesterday at 8:59 am

Admins Online

கல்லீரல் மாற்று சிகிச்சை

Go down

கல்லீரல் மாற்று சிகிச்சை  Empty கல்லீரல் மாற்று சிகிச்சை

Post by சிவா on Tue Aug 04, 2015 1:30 am


50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் முதல் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே கல்லீரல் மாற்றுச் சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சையின் வெற்றியில் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யும் நிபுணரின் அனுபவம் மற்றும் சிக்கலான நேரங்களில் செயலாற்றும் திறன் ஆகியவை முக்கியப் பங்கினை வகிக்கிறது.

எனினும், அறுவைச் சிகிச்சை அறை, தொழில்நுட்பம், அறுவைச் சிகிச்சை மற்றும் உணர்வகற்றியல் (மயக்க மருத்துவம்) தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், கல்லீரல் மாற்று சிகிச்சையின் வெற்றி நிலைகளை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தியுள்ளது.

நாட்டின் முன்னணி-சென்னை மியாட் இண்டர்நேஷனல் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.சுரேந்திரன் இது தொடர்பாகக் கூறியதாவது:-

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை குறித்து முன்பெல்லாம் பயம் ஏன்? கல்லீரல் செயலாற்றுவதை நிறுத்திக் கொண்டால், உங்கள் உடலால் செயலாற்ற முடியாது. துரதிருஷ்டவசமாக நோய் முற்றிய பிறகே கல்லீரல் பாதிப்புகள் தெரியவரும். உடலின் முக்கிய உறுப்பான கல்லீரலில் சேதம் அதிகரிப்பது எத்தகைய அறிகுறிகள் மூலமும் தெரிய வராது.

மேலும் அண்மைக்காலம் வரை, இந்த முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பில் (கல்லீரல்) மாற்று சிகிச்சை மேற்கொள்வது என்பது, அதன் திசுத்தன்மை மற்றும் அதைக் கையாள்வதற்கான வசதிகளின்மை போன்றவற்றின் காரணமாக மிகுந்த இடர்பாடு கொண்டதாகக் கருதப்பட்டது.

கல்லீரல் மாற்று சிகிச்சை-பயம் போனதற்குக் காரணம் என்ன? தற்காலத்தில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை பாதுகாப்பானதாக மாறியுள்ளது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையின் மிகப் பெரிய சிக்கல்களில் ஒன்று ரத்தப் போக்காகும். இது பாதிக்கப்பட்ட கல்லீரலை மருத்துவ நிபுணர் காணும் திறனையும் மற்றும் மாற்று சிகிச்சையின்போது இயக்க இடவசதியையும் வெகுவாகப் பாதிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பங்கள், அறுவைச் சிகிச்சை நவீனங்கள் மற்றும் மருந்துகள் இணைந்து இந்தப் பிரச்னையை வெகுவாகக் குறைத்துவிட்டன. எனவே, இந்த நுணுக்கமான உறுப்பில் இப்போது மிகுந்த தன்னம்பிக்கையோடு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிகிறது.

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதுள்ள சவால்கள் என்ன?

இந்தியாவில் கல்லீரல் மாற்று சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உள்ள அனுபவம், தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து பிரச்னையில்லை. மருத்துவ சமூகத்தின் மீதான நம்பிக்கையின்மை காரணமாக மக்கள் மனதில் தோன்றியுள்ள பயமே தற்காலத்தில் சந்திக்கும் மிக முக்கியமான சவாலாகும்.

தேவை விழிப்புணர்வு: கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகளின் வெற்றி விகிதங்கள் தெரிந்தாலோ மற்றும் மருத்துவ சமூகத்தினர் இதில் கொண்டுள்ள நிபுணத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கினாலோ, மக்கள் இதை ஒரு இறுதி வாய்ப்பாகக் கருதாமல், குணப்படுத்தல் தேர்வாகக் கருதுவர்.

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை எப்போது அவசியமாகிறது?

நச்சுப் பொருள்களை வெளியேற்றுதல், நோய்களை எதிர்க்கும் நோய் எதிர்ப்புக் காரணிகளை உற்பத்தி செய்தல், உடலுக்குத் தேவையான புரதங்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட முக்கியமான பணிகளைச் செய்ய முடியாத அளவுக்கு கல்லீரல் செயலிழக்கும்போது கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அவசியமாகிறது. கல்லீரல் சுருக்க நோய் பாதிப்பு ("சிரோஸிஸ் ஆஃப் தி லிவர்'), பரம்பரை-மரபணு சார்ந்த நோய்களால் கல்லீரல் செயலிழப்புக்குள்ளாகும் நோயாளிகள், ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை அறிந்து சிகிச்சை மேற்கொண்டால் மேம்பட்ட தரமான வாழ்க்கையைப் பெறலாம்.

கல்லீரல் தானம்: விபத்தில் மூளைச் சாவு அடைந்தோர் அல்லது உயிருடன் இருப்போரிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற்று பாதிக்கப்பட்டவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். உயிரோடு இருப்பவரின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து பாதிக்கப்பட்டவருக்குப் பொருத்த முடியும். கல்லீரலை தானமாக அளிப்பவரின் ரத்தப் பிரிவு, வயது, தானமாக அளிப்பவரின் கல்லீரலின் அளவு, அதில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு ஆகிவற்றின் அடிப்படையில் தானமாகக் கிடைக்கும் கல்லீரலை அகற்றி மாற்று அறுவைச் சிகிச்சை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

வெற்றிகரமான கல்லீரல் மாற்று சிகிச்சைக்குத் தேவை எவை?

மருத்துவ அறிவியலில் மிக சிக்கலான அறுவைச் சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையாகும். எம்.ஆர்.ஐ.-சி.டி. ஸ்கேன் வசதிகள், சிறப்பு ரத்தப் பரிசோதனை செய்யும் வசதிகள், நவீன அறுவைச் சிகிச்சை சாதனங்கள், நவீன வசதிகளைக் கொண்ட ரத்த வங்கி, சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்டவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவ நிபுணர், புற்றுநோயியல் நிபுணர், கள கதிரியக்க வல்லுனர்கள், நோய்த்தொற்று நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் உடலியங்கியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு மிகவும் அத்தியாவசியமாகும். இத்தகைய வசதிகள் மியாட் மருத்துவமனையில் உள்ளதால் கல்லீரல் மாற்று சிகிச்சை வெற்றிகரமானதாக அமைகிறது.

வெற்றி விகிதத்தைத் தீர்மானிப்பது எது? கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையின் வெற்றி விகிதம், தானமாகப் பெற்ற கல்லீரலின் தரத்தைப் பொருத்தும் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும் சூழ்நிலைகளைப் பொருத்தும் அமையும். சரியான வசதிகள் மற்றும் அனுபவம் கொண்ட மியாட் இண்டர்நேஷனல் போன்ற இடங்களில், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட 90 சதவிகித நோயாளிகள் தரமான வாழ்க்கையை மீண்டும் பெற்றுள்ளனர்.

கல்லீரல் மாற்று சிகிச்சைக்குப் பிறகு, ஒருவர் வழக்கமான பணிகளை எப்போது மீண்டும் மேற்கொள்ளலாம்?

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 6 முதல் 12 மாதங்களில் பெரும்பாலான மக்களால் அவர்களது வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். மருத்துவரின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் உடல் ரீதியிலான மற்றும் பாலுறவுச் செயல்பாடுகளை கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் மேற்கொள்ளலாம்.

கல்லீரல் மாற்று சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்ன?

நோயாளிகள் அவர்களது தனிநபர் சுகாதாரம் மற்றும் மது குடிக்காமல் இருப்பதைத் தொடர்ந்து உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களது வாழ்நாள் முழுவதும், மாற்று கல்லீரல் உடலால் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்புத் திறன் மருந்துகளை ("இம்முனோசப்ரஸிவ்') தொடர்ந்து சாப்பிடுவது அவசியம்.

கல்லீரலை தானமாக வழங்கிய கொடையாளி, எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பலாம்?

கல்லீரலை தானமாகப் பெறுவதற்கு உரிய அறுவைச் சிகிச்சை முடிந்து, 4 முதல் 6 வாரங்களுக்குள் 100 சதவீதம் இயல்பான நிலைக்குத் திரும்பலாம். கல்லீரல் தான அறுவைச் சிகிச்சை முடிந்து, ஒன்றரை மாத காலத்துக்குள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம்.

கல்லீரலை தானமாகப் பெறுவதற்கு உரிய அறுவைச் சிகிச்சை முடிந்து, 4 முதல் 6 வாரங்களுக்குள் 100 சதவீதம் இயல்பான நிலைக்குத் திரும்பலாம். கல்லீரல் தான அறுவைச் சிகிச்சை முடிந்து, ஒன்றரை மாத காலத்துக்குள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம்.


Last edited by சிவா on Tue Aug 04, 2015 1:37 am; edited 1 time in total


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

கல்லீரல் மாற்று சிகிச்சை  Empty Re: கல்லீரல் மாற்று சிகிச்சை

Post by shobana sahas on Tue Aug 04, 2015 1:32 am

நல்ல முன்னேற்றம் ... வாழ்க தொழில் நுட்பம் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum