ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 32 ஆயிரம் ஊழியர்களுக்கு 'கட்டாய விடுப்பு:' அமெரிக்க விமான நிறுவனங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» தனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Guest Yesterday at 8:28 pm

» திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தடையை மீறிச் சென்றதால் லத்தியால் தாக்கப்பட்டு, கைதான ராகுல்காந்தி !
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காலை நடைபயிற்சிக்குச் சென்ற பாஜக தலைவர் சுட்டுக் கொலை
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்.
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தேவைகளைக் குறைத்துக் கொண்டால் அமைதியாக வாழலாம்.
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by Yokesmohan Yesterday at 6:03 pm

» சோதனை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» தமிழ்நாடு அரசு போக்குவரத்து மீதான புகார்
by Guest Yesterday at 5:55 pm

» புழுக்கம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» வதனப் புத்தக நகைச்சுவை ஒன்று!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:43 pm

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by சக்தி18 Yesterday at 2:55 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 2:07 pm

» நரசிம்மருக்கு நிகர் எவர் ?
by krishnaamma Yesterday at 12:51 pm

» 'சுந்தரகாண்டம்' பெயர்காரணம் அறிவோம் !
by krishnaamma Yesterday at 12:48 pm

» எழுத்தாளர் அகஸ்தியன்
by krishnaamma Yesterday at 12:44 pm

» சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை............
by krishnaamma Yesterday at 12:37 pm

» இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன்களைப் பேணுவோம்: முதல்வா் பழனிசாமி
by krishnaamma Yesterday at 11:53 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:10 am

» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
by ayyasamy ram Yesterday at 8:09 am

» ஹா...ஹா....ஹா...
by ayyasamy ram Yesterday at 8:06 am

» இடம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கனகலதா பருவா’ ரோந்து கப்பல் கடலோர காவல் படையில் இணைப்பு
by ayyasamy ram Yesterday at 7:08 am

» தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 9,520 போ் பலி!
by ayyasamy ram Yesterday at 7:04 am

» இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.40.78 லட்சம் கோடி:ரிசா்வ் வங்கி
by ayyasamy ram Yesterday at 7:01 am

» சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 6:59 am

» 5-ஆம் கட்ட பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பு: திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்.15 முதல் திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தெய்வ அருளைப் பெற...
by krishnaamma Wed Sep 30, 2020 11:01 pm

» அமர்ந்திருக்கும் கருடன்!
by krishnaamma Wed Sep 30, 2020 10:54 pm

» சென்னையில் மீண்டும் வேகமாக பரவுது தொற்று?
by krishnaamma Wed Sep 30, 2020 10:45 pm

» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by krishnaamma Wed Sep 30, 2020 10:15 pm

» நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் தாலி உள்ளிட்ட நகைகளை அகற்ற வற்புறுத்தகூடாது...
by krishnaamma Wed Sep 30, 2020 10:09 pm

» விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்
by krishnaamma Wed Sep 30, 2020 10:07 pm

» தேன் காய் என்ன என்பது எது?
by krishnaamma Wed Sep 30, 2020 10:04 pm

» ஹிந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்
by krishnaamma Wed Sep 30, 2020 10:02 pm

» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:
by ayyasamy ram Wed Sep 30, 2020 9:56 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சிவனாசான் Wed Sep 30, 2020 9:03 pm

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by சிவனாசான் Wed Sep 30, 2020 8:58 pm

» அக். 2 முதல் சென்னை - ராமேஸ்வரம் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:07 pm

» பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை
by ayyasamy ram Wed Sep 30, 2020 5:02 pm

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by M.Jagadeesan Wed Sep 30, 2020 10:39 am

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Tue Sep 29, 2020 9:37 pm

Admins Online

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 8:20 am

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 8:24 am

ஐயா இந்த பாடலுக்கு என்னுடைய நடையில் கவிதை எழுதலாமா?பிழை ஏதாவது ஏற்படுமா என்று சிறிது தயக்கமாக இருக்கிறது
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Sat Aug 22, 2015 9:48 am

ஈகரையில் நிறைய ஐயாக்கள் உள்ளனர் . நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர் என்று தெரியவில்லை . நானும் ஒரு ஐயாதான் . எனக்குத் தெரிந்த வரையில் கூறுகிறேன் .

சங்கப் பாடல்கள் சற்றுக் கடினமானதாக இருந்தாலும் , உரையின் துணைகொண்டு படித்தால் எளிதாக இருக்கும் . சங்கப் பாடல்களுக்கு நிறைய உரைநூல்கள் வந்துள்ளன . முதலில் பொருளைப் புரிந்துகொண்டால் , பிறகு அதை நாம் கவிதையாக்கிவிடலாம் . எதற்கும் உங்களுக்கு நேரம் கிடைத்தால் , கலைஞரின் , "சங்கத்தமிழ் " என்ற நூலைப் படித்துப் பாருங்கள் . பொறுக்கி எடுத்த சில சங்கப் பாடல்களுக்குச் செய்யுள் வடிவத்தில் விளக்கம் கொடுத்திருப்பார் .

காமத்துப்பாலில் ஒரு குறளுக்கு செய்யுள் வடிவத்தில் விளக்கம் தந்துள்ளேன் .

பிழை ஏற்படுமே என்ற தயக்கம் வேண்டாம் . உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளன . வெற்றி நிச்சயம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5377
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Sat Aug 22, 2015 9:54 am

பன்மாயக் கள்வன்.
==============
கைப்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்கி நிற்கின்றேன்.
மாலையிட்ட கணவனுக்கு
மங்கை மனம் தெரியவில்லை.
வருகின்ற வருமானம்
வாடகைக்கும் உணவுக்கும்
சரியாகப் போகின்ற
சராசரி குடும்பத்தில்
குடிப்பழக்கம் வந்திட்டால்
குடிமுழுகிப் போமென்று
எடுத்துரைத்துச் சொன்னால்
எரிந்து விழுகின்றான்.
கண்டபடி ஏசுகிறான்
கைநீட்டி அடிக்கின்றான்.
பொய்கள் பேசுகிறான்
புன்மை செய்கின்றான்.
சிறுவாட்டுப் பணத்தைத்
திருடிக் குடிக்கின்றான்.
தட்டிக் கேட்டாலோ
எட்டி உதைக்கின்றான்.

ஆனால்
மாலைப் பொழுதினிலே
மறுஜென்மம் எடுக்கின்றான்
இரவு நேரத்தில்
இனிக்கப் பேசுகிறான்.
தலைவலி என்றாலோ
தைலம் தேய்க்கின்றான்.
பாலைக் காய்ச்சியே
பருகத் தருகின்றான்.
செல்லமே! என்றழைத்து
மெல்லத் தொடுகின்றான்.
கரும்பே! என்றழைத்து
கட்டி அணைக்கின்றான்.
அந்த அணைப்பினிலே
ஆசை வந்ததடீ!
பெண்மை தோற்றதடீ!
ஆண்மை வென்றதடீ !

குறள்:
=====
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. ( கற்பியல்-1258 )

பொருள்:
========
பல பொய்களையும் பேசவல்ல கள்வனது பணிவான இனிய சொற்கள் என்னுடைய பெண்மைக் கோட்டையை உடைக்கும் படையாகும்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5377
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 10:47 am

நன்றி ஐயா, இந்த பாடலுக்கு என்னுடைய கவிதையை தந்து விடுகிறேன்
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by ayyasamy ram on Sat Aug 22, 2015 10:56 am

குறுந்தொகை.....தொடர் பதிவு ! 103459460 குறுந்தொகை.....தொடர் பதிவு ! 3838410834
-
தொடருங்கள்...
-
கோப்பெருஞ்சோழன்

-
உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர்
கோப்பெருஞ்சோழன்.
-
அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த
சோழ மன்னன் ஆவான்.
-
இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு,
பிசிர் ஆந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின்
நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.
-
-----
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61283
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 1:23 pm

அன்பையும்  அருளையும்
பொழியும் கணவர் நீர்!!

உம் மொழி கேட்காமல்
உம் கண் நோக்காமல்
என்னால் வாழ இயலாது!!

எனை பிரிந்து சென்று
பொருள்ஈட்டி வரும்
அணிகலன்களால்
எனக்கு எந்த அழகும்
சேர்ந்து விடாது!!

நீர் என்னுடன் இருந்தாலே
அத்தனை அழகையும்
ஒரு சேர பெறுவேன்!!!

உமது அன்பை பிரிந்து
வாழ
திராணியற்றவள்!!

நீர் அறிவில் சிறந்தவராக  
இருந்தாலும்
பொன்னும் பொருளும்
ஈட்டுவதற்காக
எனை பிரிந்து
செல்வது அறிவீனம்!!!

உம்மை பொறுத்தவரை
நான் மடந்தையே!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian on Sat Aug 22, 2015 2:30 pm

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா இந்த பாடலுக்கு என்னுடைய நடையில் கவிதை எழுதலாமா?பிழை ஏதாவது ஏற்படுமா என்று சிறிது தயக்கமாக இருக்கிறது
[You must be registered and logged in to see this link.]

வாழ்த்துகள் சசிகலாதேவி !
நல்லதோர் ஆரம்பம் .
புதிதாக அரும்பும் கதாசிரியர் , கவிஞர் , சொல்லப் போனால் , புதிதாக செய்யும் எவருமே ,
பிழைகளை , தெரிந்தோ தெரியாமலோ உலாவிடுபவர்களே . மிகவும் இயற்கை .
படிக்கும் வாசகர்கள் , அந்த தவறை சுட்டிக் காட்டும் போது , அதை சரியான  கோணத்தில், எடுத்துக்கொண்டு ,நம்மை செம்மை படுத்திக் கொள்ளவேண்டும் .
தயக்கத்தை ஒழியுங்கள் .
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ? பிரபல கதாசிரியர்கள் / கவிஞர்கள் படைப்பில் ஏற்படும்
அறியாத்  தவறுகளை,  proof readers சரி செய்துள்ளனர் .  

வாழ்த்துகள் ,தொடருங்கள் .
ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 2:44 pm

ஐயா இந்த பாடலுக்கு என்னுடைய நடையில் விளக்கம் தந்து உள்ளேன்.தங்களது கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by T.N.Balasubramanian on Sat Aug 22, 2015 2:52 pm

மிகவும் அருமையாக உள்ளது ,சசிகலாதேவி !
தெளிந்த நடை ,
ஒளிவு மறைவு இல்லா கருத்துக்கள்
எளிய முறையில் கூறப்பட்ட ,வரிகள் .
ரசித்தேன் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Sat Aug 22, 2015 2:54 pm

நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது உங்கள் கவிதை !

சங்கப் பாடலின் கருத்தை உள்வாங்கிக்கொண்டு , நம்முடைய கற்பனையில் சில காட்சிகளை அமைத்துக் கொண்டு , கவிதை எழுத ஆரம்பிக்கவேண்டும் . புதுக் கவிதையில் எழுதினாலும் , எதுகை ,மோனை அமையப் பெற்றால் , கவிதை பொலிவு பெறும் .

இதே சங்கப்பாடலை , வேறு கோணத்தில் , செய்யுள் வடிவத்தில் நாளை பார்ப்போம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5377
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 3:10 pm

ஐயா மிகவும் நன்றி. உங்கள் ஊக்கத்தால் நான் உற்சாகம் அடைகிறேன்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by M.Jagadeesan on Sat Aug 22, 2015 7:30 pm

இப்பாடல் பாலைத்திணையில் உள்ளது . பாலை , பிரிவை உணர்த்துவது . கோப்பெரும் சோழனால் பாடப்பட்ட இப்பாடல் , தலைவி , தோழிக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது .

எனவே நாடகப் பாங்கிலே , இருவரும் உரையாடுவதுபோல , ஒரு கவிதை செய்வோம் .

தோழி : அம்மா ! என்னுடைய அன்புத் தோழி !
...........  அரியதோர் செய்தியை உனக்குக் கூறுவேன் !
.............உன்னைக் கரம்பிடித்த உன்னுடைய கணவன்
.............என்னிடம் சொன்ன செய்தி இதுவாகும் .
.............அருளொடு  அன்பும் நின்பால் வைத்தவன்
.............பொருளொடு பொன்னும் சேர்க்க எண்ணியே
.............உறவொடு உன்னையும் பிரிய நினைக்கின்றான் !  
.............மறத்தமிழ்ப்  பெண்ணே !மனதைத் தேற்றுவாய் !

தலைவி  : அன்புடைத் தோழி ! நீயிது கேட்பாய் !
............."முத்தே ! மணியே ! முழுமதி முகமே !
.............வித்தே என்குலம் விளங்க வந்தாய் !
.............அத்தான் ! என நீ  அழைக்கும் அழகில்
.............பித்தன் ஆனேன் ! "எனச்  சொன்னவர்தாம்
.............பொன்னும் பொருளும் ஈட்டல் வேண்டி
.............என்னைப் பிரிதல் தகுமோ தோழி ?
.............பொன்னும் பொருளும் என்னிலும் பெரிதோ ?
..............மன்னவர் என்னை மறத்தல் தகுமோ !

தோழி : இம்மையும் , மறுமையும் இன்பம் தருகின்ற
.............செம்பொருள் தேடுதல் ஆடவர்  கடனே !
.............இல்லாத ஆண்மகனை இல்லாளும் வேண்டாள்
.............ஈன்றெடுத்த தாய் வேண்டாள் இவ்வுலகில்
.............செல்லாது அவன்வாய்ச் சொல்லென்ற மூதுரையை
.............நல்லாய் ! இதை நீ என்றும் கேட்டிலையோ ?

தலைவி : எம்மைப் பிரிதல் அறிவுடைய செயலென்றால்
..............அவரே அறிவுடையார் ஆகட்டும் ! ஆகட்டும் !
..............நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டோம் !
..............நாமே அறிவிலியாய் போகட்டும் ! போகட்டும் !


குறிப்பு : அவரவர் கற்பனைக்கும் , திறமைக்கும் ஏற்ப இப்பாடலை பல்வேறு வடிவங்களில் அமைக்கலாம் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5377
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by சசி on Sat Aug 22, 2015 9:13 pm

ஐயா மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty குறுந்தொகை தொடர்ச்சி

Post by சசி on Sun Aug 23, 2015 9:42 pm

எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே.
                        ஒதலாந்தையார்

உச்சி வெயில் சுட்டெரிக்க
பாதம் ரெண்டும் பட்டு போக!!

காலோடு கருநாகம்
கடந்து செல்ல!!

புலி கொல்லும்
காட்டெருது கூட வர!!

எறும்பு ஊரிச் செல்லும்
வழியே தேர் செல்ல!!

வேண்டியதை பெற
வேடன் விஷம் தோய்த்த
அம்பு எய்யும், கொடியவர்கள்

வசிக்கும் ஊரோடு
செல்லும் வழியாம்!

எம் தலைவன்
செல்லும் வழியாம்!!

இத்துன்பத்துடன் கடந்து செல்லும் தலைவனை பற்றி
கவலை கொள்ளாது!

எனை பழிக்கும் ஊர் இதுவாகும்!!
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

குறுந்தொகை.....தொடர் பதிவு ! Empty Re: குறுந்தொகை.....தொடர் பதிவு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum