ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 8:20 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 8:13 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Wed Sep 23, 2020 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Wed Sep 23, 2020 8:53 pm

Admins Online

மழலை இன்பம் .

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மழலை இன்பம் . - Page 2 Empty மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Mon Sep 07, 2015 7:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66)


பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக்
கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் .

நுட்ப உரை :
==========
குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை மழலை பேசினாலும் இன்பமாகத்தான் இருக்கும் ; ஆனாலும் நாம் பெற்ற குழந்தையின் மழலையைக் கேட்கின்ற சுகமே அலாதிதான் . எனவேதான் " தம்மக்கள் " என்றார்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down


மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Thu Sep 17, 2015 3:53 pm

வறட்சி
=======


[You must be registered and logged in to see this image.]


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. ( வான்சிறப்பு -13 )

பொருள் :
=======
மழை பெய்யாமல் பொய்க்குமானால் , கடல்நீரால் சூழ்ந்த இந்நில உலகத்தில் , பசியானது நிலைத்து நின்று உயிர்களைத் துன்புறுத்தும் .

சிறப்பு உரை:
==========
இந்த உலகம் , கடலால் சூழப்பட்டு இருந்தாலும் , அக்கடலால் எந்தப் பயனும் இல்லை . உப்பு நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாது . குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாது . அந்தக் கடல் கூட , மழையை நம்பித்தான் இருக்கிறது என்று மற்றொரு குறளில் கூறுவார் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by krishnaamma on Thu Sep 17, 2015 4:49 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:குறளும் கருத்தும்  அருமை........அந்த இறைவனின் பாதங்களின் அளவு................ஆஹா !..அற்புதம் அற்புதம்...........எந்த இடத்தில்  இருக்கும் சிலை ஐயா அது?.....விவரம் ஏதும் தெரியுமா? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

படம் இணையத்திலிருந்து எடுத்தது . சிலையைப் பற்றிய விவரம் அதில் குறிப்பிடவில்லை .

ம்ம்...சரி ஐயா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62717
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12645

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by சசி on Tue Sep 22, 2015 7:06 pm

இந்த அனைத்தும் அருமையாக உள்ளது ஐயா
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதிப்பீடுகள் : 742

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Tue Sep 22, 2015 8:08 pm

புலால் மறுத்தல்
=============


[You must be registered and logged in to see this image.]

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று . ( புலால் மறுத்தல் – 259 )

பொருள் : தீயிலே நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட , ஒரு விலங்கின் உயிரைப்போக்கி அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நல்லது .

சிறப்புரை : இந்த நீதி துறவிகளுக்குச் சொல்லப்பட்டது . துறவிகள் கண்டிப்பாகப் புலால் உண்ணக்கூடாது . இல்லறத்தான் உண்பதும் , உண்ணாமல் இருப்பதும் அவனுடைய விருப்பம் .அதுபற்றி வள்ளுவர் ஏதும் குறிப்பிடவில்லை .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Tue Sep 22, 2015 8:53 pm

இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by T.N.Balasubramanian on Wed Sep 23, 2015 7:12 am

[You must be registered and logged in to see this link.] wrote:இரவச்சம்
========


[You must be registered and logged in to see this image.]

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவு அச்சம் – 1065 )

பொருள் : தண்ணீர் போன்ற கூழாக இருந்தாலும் , தன்னுடைய சொந்த உழைப்பில் வந்தது என்றால் , அதைவிட இனிய உணவு எதுவுமில்லை .

சிறப்புரை : அடுத்தவன் உழைப்பிலே வந்த அறுசுவை உணவை உண்பதைவிட , தன் சொந்த உழைப்பிலே வந்த உணவு , கூழாக இருந்தாலும் , அது மேலானது ஆகும் .
[You must be registered and logged in to see this link.]
சிறப்புரை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
முற்றிலும் உண்மை .

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27286
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by ayyasamy ram on Wed Sep 23, 2015 7:29 am

மழலை இன்பம் . - Page 2 3838410834 மழலை இன்பம் . - Page 2 3838410834 மழலை இன்பம் . - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61139
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Wed Sep 23, 2015 12:57 pm

சுற்றம் தழால்
===========


[You must be registered and logged in to see this image.]

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள. ( 527)

பொருள் : காக்கைகள் இரையைக் கண்டபோது ,மறைக்காது , தன் இனத்தை அழைத்து அவைகளோடு சேர்ந்து உண்ணும் . அதுபோல , சுற்றத்தாரோடு இன்ப துன்பங்களைப்  பகிர்ந்துகொள்ளும் ஒருவனுக்கே செல்வமும் உண்டாகும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Wed Sep 23, 2015 7:28 pm

குற்றங்கடிதல்
============

[You must be registered and logged in to see this image.]

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( 435 )

பொருள் : குற்றம் வருவதற்கு முன்பாகக் காத்துக் கொள்ளாத அரசனுடைய வாழ்க்கை , எரிமுகத்து நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும் .

பொருட்பாலில் அரசனுக்குக் கூறப்பட்டக் கருத்துக்களில் பெரும்பாலான கருத்துக்கள் , தனிமனிதனுக்கும் பொருந்தும் . இக்குறளும் அத்தன்மைத்தே .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by shobana sahas on Thu Sep 24, 2015 2:01 am

அனைத்தும் அருமை அய்யா . படங்களுடன் குறள் அருமை .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Thu Sep 24, 2015 8:17 am

நன்றி ஷோபனா சஹஸ் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by shobana sahas on Fri Sep 25, 2015 4:23 am

[You must be registered and logged in to see this link.] wrote:நன்றி ஷோபனா சஹஸ் !
[You must be registered and logged in to see this link.]
நன்றி நான் அல்லவா சொல்ல வேண்டும் அய்யா ?!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 877

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Mon Sep 28, 2015 2:22 pm

[You must be registered and logged in to see this image.]

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின் . ( ஊக்கம் உடைமை - 599 )


பொருள் : யானை பெரிய உடம்பினை உடையது ; கூரிய தந்தங்களை உடையது . ஆனாலும் ஒரு புலியைக் கண்டு  அது அஞ்சும் . சிறிய புலியிடம் இருக்கும் ஊக்கம் யானையிடம் இல்லாததே இதற்குக்  காரணம் .

சிறப்புரை : உருவத்தில் சிறியராய் இருந்தாலும் , ஊக்கம் உடையவராய் இருப்பின் , மற்றவர்கள் அவரைக்  கண்டு அஞ்சுவர் .மாவீரன் நெப்போலியன் உருவத்தால் குள்ளமாய் இருந்தாலும் , அவனது ஊக்கம் கண்டு உலகமே அஞ்சியது .இக்குறள் பிறிது மொழிதல்  அணியைச் சார்ந்தது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by M.Jagadeesan on Wed Sep 30, 2015 1:59 pm

[You must be registered and logged in to see this image.]

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து .

பொருள் ; அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடும் .அதுபோல வீட்டிற்கு வந்த விருந்தினரை , அன்பில்லாமல் , முகம் மாறுபட்டு நோக்கினாலே வாடிவிடுவர் .

சிறப்புரை ; விருந்தோம்பலுக்கு உணவிடுதல் முக்கியமல்ல . அன்புடன் நோக்கி , அளவளாவுதல் மட்டுமே முக்கியமாகும் . அனிச்ச மலர் இதுவரையில் எதுவென்று உறுதிப்படுத்தப் படவில்லை . படத்தில் காட்டப்பட்டுள்ள மலர் அனிச்சம் என்பதில் மாறுபட்ட கருத்து உள்ளது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by T.N.Balasubramanian on Wed Sep 30, 2015 4:02 pm

அனிச்ச மலர் பற்றி ,முனைவர் சௌந்தரபாண்டியன் அய்யா அறிந்து இருக்கலாம் !

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27286
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

மழலை இன்பம் . - Page 2 Empty Re: மழலை இன்பம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum