புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
4 Posts - 3%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
4 Posts - 3%
Jenila
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%
kargan86
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%
jairam
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
8 Posts - 5%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
6 Posts - 3%
Jenila
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
2 Posts - 1%
viyasan
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன குடும்ப விளக்கு _சசி


   
   

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 11:32 am

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!


ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 


அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 11:54 am

அலுவலக வேலைகள் ஆரம்பமாயின 
முதலாளிக்கு கோவம் வந்தால் 
மாட்டுபவர்கள் பெண்கள் தான்!

ஏனெனில் எதிர் பதில் பேசாதவள் 
பெண் தான்! 
இருக்கட்டும் "இதுவும் கடந்து போகும் "
என்று பெண் நினைப்பதாலோ 
என்னவோ எல்லா துன்பங்களும் 
பெண்ணின் தலையில் தான்!! 

கொஞ்சம் சிரித்து பேசினாலும் 
முதலாளியை கண்களால் பேசியும் 
வசியம் செய்கிறாள் என்பதை கூறுபவர் 
ஆண் அல்ல! 
பெண் தான்! இன்றும் சில பெண்கள் 
இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்! 

அவர்கள் போகட்டும் தேவையில்லை என 
விட்டு விடுகிற பெண்களால் தான் 
சாதிக்க முடிகிறது! 

அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகவும் அழகாகவும் ஒரு வேலையை செய்ய முடிகிறது என்றால் அது பெண்கள் தான்!! 

இந்த வீட்டுப் பெண்ணும் இதுக்கு 
விலக்கு அல்ல!! அவள் காரியத்தை சுறுசுறுப்பாகவும் நேர்த்தியாகவும் 
செய்து நன்றாக வேலை செய்பவள் 
படைப்பு திறன் மிக்கவள் என்று பெயர் எடுத்தவள்!! 
அனைவராலும் மதிக்க படுபவள்! 
இதில் சற்று பொறாமை கணவனுக்கு 
தன்னைக் காட்டிலும் திறமைசாலியாக 
இருக்கிறாளே என்று!! 

தன் மனைவியாச்சே! 
விட்டு கொடுக்க முடியாது 
வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் 
அமைதியாக இருந்து விடுவான்!! 

அன்றைய அலுவலக வேலைகள் சற்றே அமைதியாக நிறைவுற்றது! 
அதில் கொஞ்சம் ஆறுதல் அவளுக்கு! 

தொடரும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2016 12:17 pm

நவீன குடும்ப விளக்கு _சசி  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 12:33 pm

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வருவதற்கு முன்பு தேவையானவற்றை 
வாங்கியாக வேண்டுமே! 

வழியில் சில கடைகள் உண்டு 
அதில் சில நல்லவர்களும் உண்டு 
அவர்களுடன் பேசிக்கொண்டே 
காய்கறிகள் பழங்களை 
வாங்கி வைத்துக் கொண்டு 
மாநகர பேரூந்தில் மாட்டிக் கொண்டு 
விழி பிதுங்கி வீடு வந்து சேர்வதற்குள்
அப்பாடா என்றாகிவிடும்! 

வரும் போதே மாமி வந்தாச்சா மா 
வா! வா! எனக்கு தலை வலிக்கிறதே 
என்னவோ போல் இருக்கிறது 
உன் கையால் கொஞ்சம் காபி கொடும்மா! 
உனக்கு புண்ணியமா போகும்! 

இதோ வருகிறேன் மாமி! 

தான் பேரூந்தில் இடிபட்டது 
தன் உடல் வலி தலைவலி 
தனக்கான நேரம் எதுவும் இல்லாமலேயே 
அடுத்த யுத்ததிற்கு தயாராக வேண்டியவள் பெண் தான்! 

இவளும் முகம் சுளிக்காமல் 
வந்தாள் காபியுடன்! 
காபி குடித்து விட்டு 
நல்ல இருடி மகாராசி! 
நல்ல மாமியார்! அதனால் வேறு பிரச்சினை இல்லை! 
இல்லையேல் குடிக்கிற காபி கூட பிரச்சினை ஆகிவிடும்! 
நல்ல வேளை புண்ணியம் செய்திருக்கிறாள்! 

குழந்தைகள் வீடு வரும்போதே 
அம்மா! என்று கட்டி அணைத்து கொள்ளும் 
குழந்தைகள் என்றால் குதூகலம் தானே! 

வாரி அணைத்து கொண்டு என் 
செல்லமே வைரமே கட்டிக் கரும்பே 
என கொஞ்சி சிறிது நேரம் மகிழ்ச்சியை 
வெளிப்படுத்துவாள்!! 

ஆனாலும் குழந்தைகளுக்கான 
சத்தான மாலை உணவு பரிமாற வேண்டுமே!

தொடரும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 2:40 pm

சிறிதும் சங்கடம் இல்லாமல் 
செய்து முடித்து ஊட்டி 
மாமா மாமிக்கும் பரிமாறி முடிப்பதற்குள் 
கணவனும் வந்து விடவும் 
கணவனுக்கும் சேர்த்து பரிமாறினாள்! 

மிச்சம் சொச்சம் இருக்கிற 
வேலையையும் செய்து முடித்தால் தான் 
இரவு உணவுக்கு தயார் செய்ய ஏதுவாக இருக்கும்! 

அப்பாடா என்று ஆசாசுவாசப்படுத்தி
அமர்ந்தாள். குழந்தைகளுக்கு 
கல்வி செல்வத்தையும் தாய் தான் வழங்க வேண்டும்!
தந்தைக்கு இதில் பொறுமை இருக்காது! 

ஆசையாய் அமர்ந்து அழகு குழந்தைகளுக்கு 
பாடம் சொல்லி கொடுத்தாள்! 
மணிகள் ஆயிற்று! 

மீதம் இருக்கும் வேலைகள் 
துணிமடிப்பது பள்ளி செல்லும் 
குழந்தைகளுக்கு சீருடை துவைப்பது 
வீட்டை சுத்தம் செய்வது 
என பலப்பல வேலைகள் 
செய்து முடித்து, 
குழந்தைகள் ஆசையாய் விரும்பும் 
சப்பாத்தியும் மசாலாவும் 
செய்து தன் கையால் ஊட்டி 
மகிழ்ந்து தன் கணவனுக்கும் 
மாமி மாமாவுக்கும் பரிமாறி
தானும் உணவருந்தினாள்!

குழந்தைகளை உறங்க வைத்து 
அமைதியாய் குழந்தைகள் சலனம் இல்லாமல் 
உறங்குவதை பார்த்து ரசிப்பாள்! 

அதற்குள் கணவனும் படுக்கையறைக்கு வந்து விடவே தன் கணவனிடம் 
தனக்கான நேரத்தை செலவிடுவாள்! 

பேசுகையில் சில சமயம் 
ஊடல்கள் வருவதும் உண்டு! 
ஊடல்களை அதிகம் விரும்பாத 
கணவன், மனைவி ஆதலால் 
ஊடலும் சிறிது நேரம் தான்! 

விடிந்தால் சரியாகிவிடும் 
மனமொத்த தம்பதிகள் 
கருத்து வேறுபாடுகள் இருப்பினும் 
சரியான காரணம் இருப்பின் 
இருவரும் விட்டு கொடுக்க தயங்குவதில்லை! 

இப்படி இருப்பதால் அனைவருக்கும் 
இவர்களை பிடிக்கும்! 

மீண்டும் பொழுது விடியும் நேரம் 
கனவுகள் கலைந்து 
காலை சூரியன் மீண்டும் ஓர் 
நாளை படைக்க தொடங்கி விட்டான்! 

சிலருக்கு கனவுகள் நிறைவேறும் நாள் 
சிலருக்கு கஷ்டங்கள் தீரும் நாள் 
சிலருக்கு துன்பத்தை தானே 
தேடி வருவித்துக் கொள்ளும் நாள்! 

இப்படியாக பல பேருக்கு ஒவ்வொரு 
நாளும் விடிந்து கொண்டு தான் 
இருக்கிறது! 

விடியலைத்தேடி நாமும் 
ஓடிக் கொண்டு தான் 
இருக்கிறோம்!!

ஓடும் பயணத்தில் 
பெண்களின் பயணம் 
கற்களும் முட்களும்
பாதைகள் கரடுமுரடாகவும் 
இருக்கத்தான் செய்கிறது!! 

தொடரும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 3:27 pm

இவையெல்லாவற்றையும் மீறி தினமும் பெண்கள் வெற்றி கனியை சுவைத்து கொண்டே தான் இருக்கிறார்கள்! 

ஒவ்வொரு குடும்ப பெண்களும் ணும் 
லட்சிய வாதி தான்! 

தன் குடும்பத்தை முன்னேற்றும் 
பொ று ப்புகள் ஆணுக்கு இருப்பதை 
விட ஒரு படி மேலே தான் பெண்களுக்கு இருக்கிறது! 

ஒவ்வொரு குடும்ப பெண்ணும் 
தன் வாழ்க்கையில் வெற்றியை ருசிக்க 
துன்பத்திற்கு ஒப்புக் கொடுத்து தான் 
வெற்றிக் கனியை பறிக்க வேண்டிய காலம் இது! 

நூற்றாண்டுகள் மாறினாலும் 
பெண்ணுக்கான வேலையையும் 
பண்பும் குணமும் மாறாமல் இருக்கிறது!! 

தன் துணை சரியாக அமைந்து விட்டால் 
தப்பித்தாள்! 

கணவனும் கால் வயிற்றுக்கு கூட 
வழியில்லாத வாழ்க்கை வாழ்ந்தால் 
பெண்களின் பாடு சொல்லி மாளாது!! 

குடி குடித்தனத்தை குட்டிச்சுவராக்கும் 
சமூதாயம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது! 

இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது 
பெண்கள் தான்! 

ஒரு சமூகம் என்றைக்கு பெண்ணை பெண்ணாகவும் அவளை மனுஷியாகவும் 
மதிக்க தொடங்குகிறதோ அன்றைக்கு அந்த சமூதாயம் வெற்றி பெற்ற சமூதாயம்!! 


இப்படி பல எண்ணங்கள் கருத்து பரிமாற்றங்கள் இருந்தாலும் 
தன் உள்ள கிளர்ச்சியை 
வெளிப்படுத்த முடியாத நிலைதான் 
குடும்ப பெண்களுக்கு!! 

இதற்கு இவளும் விலக்கு அல்ல!! 

தானும் ஆண் செய்யும் அதே வேலைகள் 
செய்து குடும்பத்தில் உள்ள 
அனைத்து வேலைகளையும் செய்து குடும்ப 
முன்னேற்றத்திற்கு வழி வகுத்து 
வெற்றி பெற தானும் முழு காரணமாக 
இருந்தாலும், 

ஆண்களும் குடும்பத்தாரும் 
இதை ஏற்பதில்லை!! 

"என் புள்ள எவ்வளவு கஷ்டப்பட்டு 
சம்பாதித்து குடும்பத்தை 
காப்பாத்தறான் பாரு ""

என தாய் தந்தையர் புலம்பல் காதில் ஒலித்து கொண்டு இருக்கும்!! 

கோவம் தலைக்கேறினாலும் 
இது தான் சமூக கட்டமைப்பு 
இதை மாற்றுவதற்கான 
யோசனையும் வழிமுறையும் யாருக்கும் இல்லை!! 

பெண்களுக்கான அடிப்படை பிரச்சனைகளை களைய 
யாரும் முன்வரவில்லை! 

பெண்கள் பாலியல் இச்சைக்கு மட்டும் பயன்படுத்தும் கணவன்மார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! 

பாலியல் கொடுமைகளுக்கு 
பச்சை கொடி காட்டும் விதமாக 
ஊடகங்களும் புத்தகங்களும் 
ஓர் அசிங்கமான வாயிலை திறந்து வைத்துக் கொண்டு ""
""
""காதலையும் காமத்தையும் கற்று மற ""

என்று வியாக்கியானம் பேசிக்கொண்டு திரிகிறது! 
இந்த இளைய சமுதாயம்! 

இதில் இருந்து எல்லாம் ஒரு பெண் 
தன்னை விடுவித்துக் கொண்டு 
வாழ்க்கையில் ""
""வெற்றிக் கனியை 
பறிப்பதில் தான் பெண் நிற்கிறாள் ""
அது தான் பெண்களின் தனித்துவம் ""

ஒவ்வொரு பெண்ணும் தனித்துவமானவள் தான்! 

தான் நினைத்த காரியம் 
நிறைவேறாமல் உறக்கம் 
கொள்ள மாட்டாள்!! 

இப்படியாக பல எண்ணங்கள் 
உதித்தாலும் ஓர் நாள் பிறந்தால்
ஓர் யுத்ததிற்கு தயாராக வேண்டியவள் 
பெண்!! 

இந்த வீட்டு பெண்ணும் அதற்கு தயாரானாள்!! 

அன்று ஞாயிறு! 

தொடரும்...



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 24, 2016 3:56 pm

ம்ம் .....ம்ம்......வர்ணனை நன்றாகத்தான் இருக்கிறது தோழியே...அது இருக்கட்டும் முதலில் உங்கள் கணவரின் மின் அஞ்சல் முகவரியை கொடுங்கள் இந்த பதிவின் லிங்கை அவருக்கு அனுப்பிவிடுகிறேன் அதில் இந்த தகவலையும் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்

இந்த பதிவை நன்றாக படியுங்கள் அண்ணா..
பிறகு சசி வந்ததும் இறுக்கமாக
தலைமுடியை நன்றாக பிடியுங்கள் அண்ணா..
என்று  அனுப்பிவிடுகிறேன் ...ஹா..ஹா..ஹா.. சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி  சிரி சிரி

இவன்
ஆண்கள் பாதுகாப்பு சங்க நிரந்தர பொதுசெயலாளராக விரும்பும்
கே.செந்தில்குமார்
(குட்டு ஏதும் வைக்க வேண்டாம் நகைச்சுவைக்காக மட்டுமே ..)



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 5:03 pm

இந்த காலத்தில் எல்லாப் பெண்களும்
இது மாதிரி இல்லாவிடினும்
சராசரி பெண்களின் வாழ்க்கை
சரியாகவே கணித்துள்ளாய்
தினசரி வாழ்வின் நெருடல்களை
திகட்டாவண்ணம் தீட்டியுள்ளாய்.

நல்ல மாமியார் அமைந்தது போல்
நல்ல கணவன்மார்களும் நானிலத்தில் உண்டே .
தற்கால கணவன்மார்கள்
தாமாகவே தரமாகவே
தாரத்திற்கு உதவும்கரமாகவே  
தம்மை வெளிக்காட்டாதுள்ளனரே .

போட்டீக்கென கூறவில்லை ,
பொன்னான கணவன்மார்களை கண்டுளேன்
இரு சக்கிர வண்டியென
இருவரும் அறிந்து போற்றுகிற உலகம்மா இது
உன்னத உலகமென்பதை உணர்வாய் பெண்ணே .
உந்தன் கவிதையிலும் குறையொன்றும் இல்லைப் பெண்ணே .

வாழ்த்துகள் ,சசி .
ரசித்தேன் . அருமை .
ரமணியன்

(ஓரிரு எழுத்துப் பிழைகள் )
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 6:08 pm

காலை 

ஞாயிறு அன்று ஞாயிறு 
துள்ளி குதித்து முன்னமே 
தங்க நிற கதிர்களை 
ஒளி வீசி கண்களை 
மிளிரச் செய்யும் அழகோடு 
புதியதாய் பிறக்கும் குழந்தையைப்போல் 
ஓர் காலை பிறந்தது!! 

ஞாயிறு என்ன திங்கள் என்ன 
எல்லா நாளும் பெண்களுக்கே 
உரித்தானதாயிற்றே!! 

தூக்கத்தோடு தூக்கம் 
கலைகிறதே என்று 
துக்கம் தலை தூக்கினாலும் 
விரட்டி அடித்து 
விடியலில் 
எழுந்து விழிக்கு வியப்பு தரும் 
விடியலை ரசிக்க எழுந்து விட்டாள்!! 

இளம் காலை செங்கதிர்கள் 
இவள் மீது வீச இவளும் 
ஜொலிப்புடன் புத்துணர்வு 
பெற்று புதுப்பொலிவுடன் 
காலையை வரவேற்றாள்!! 

வாசலில் மங்கை 
வண்ணக்கோலமிட்டாள் 
வருவோர் போவோர் 
விழி திறந்து வியப்பினில் 
ஆழ்ந்தனர் மங்கை அவள் 
கைவண்ணத்தை கண்டு! 

சிட்டென்று பறக்கும் 
சிட்டுக்குருவி போல் 
பட்டென்று பறக்கும் 
பச்சைக்கிளிப்போல் 
பம்பரமாய் சுற்றினாள்!! 

வீடு வீடாக இல்லை 
வீட்டை பெருக்கி ஒட்டடை 
அடித்து சுத்தம் செய்தனள்

தரையை
துடைத்து வீட்டிற்கு மீண்டும் 
அழகு சேர்ப்பதில்
இவளுக்கு நிகர் இவளே தான்!! 

அடுக்களைக்குள் வந்தாள் 
இன்று ஒன்றும் பெரிய 
அவசரமில்லை அவளுக்கு 
நிதானமாய் அழகு குழந்தைகளுக்கு 
அன்பொழுக ஆசை ஆசையாய் சூடாக 
சமைத்தனள்! 

வழிந்தோடும் நெய்யில் 
தினைப் பொங்கல் 
வடை சகிதம் சுடச்சுட 
தயார் செய்தனள்!! 

குழந்தைகள் குதூகலமாய் 
மகிழ்ச்சியுடன் மங்கை இவளை 
கட்டிக் கொள்ள கட்டிக் கரும்பாய் 
கட்டி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தாள்!! 

மகனும் மகளும் 
பிறந்திட மாதவம் 
செய்தேனோ மங்கை நான் 
என மகிழ்ச்சியால் 
உறைந்தனள்!! 

கணவன் முன் கண் 
கண்விழித்து 
இவள் நாணமாய் 
கொண்டவனை கண்டாள்! 
கட்டுண்டாள் காதலால் 

அழைத்தாள் அழகு 
தமிழில் பெயர் சொல்லி 
அவன் அருகே வந்தான் 
தலைக்கோதி நெற்றியில் முத்தம் 
தந்து நெடிதுயில் களைய 
எழுந்திருங்கள் என்று 
கொஞ்சி கெஞ்சினாள்!! 

கணவன் கட்டி 
அணைத்து மனைவியை 
மகிழ்ச்சியில் ஆழ்த்த 
இதழ் பதித்து இன்பம் 
சேர்த்து துள்ளிக் குதித்து 
மகிழ்ச்சியாய் பொழுதை 
வரவேற்றான்!! 

காபியுடன் கை நீட்டினாள்! 
கைக்கொரு முத்தம் தந்து 
காபியை பெற்றுக் கொண்டு 
காலாட்டி தினசரியை வாசித்து கொண்டே 
இன்ப உலகில் இன்னும் என்னென்ன 
இருக்கிறது என்று 
விலாவாரியாக படித்துக் கொண்டிருந்தான்!! 

எழுந்து வாருங்கள் 
குழந்தைகள் பசியுடன் இருக்கின்றனர் 
என்ற சத்தம் வந்தவுடன்
வந்து குழந்தைகளுடன் 
காலை உணவு குடும்பமாய் 
உணவு அருந்தினர்!!

தொடரும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 8:52 pm

நேரம் போவது தெரியாதிருக்கையில் 
குழந்தைகள் ஓடி விளையாடி 
ஒளிந்து விளையாடி இருக்கையில் 
அழைத்தனள்! 
பாடம் சொல்லித்தர 
குழந்தைகள் வந்தனர் 
பாடம் படித்தனர் 
பாடத்தோடு பண்பையும் புகட்டினள் 
வாழ்க்கைப்பாடமும் 
பணிவும் பண்பும் 
ஒவ்வொரு நாளும் 
குழந்தைகளுக்கு 
கற்பிக்க தவறுவதில்லை! 


பண்போடு வாழ்ந்தால் 
பாரதம் செழிக்கும் என்பதில் மாற்றுக் 
கருத்து இல்லை!! 


அதிகமாக குழந்தைகள் 
படிக்க வேண்டிய கட்டாயம் 
கல்வி காசாகி விட்டதே!! 


படிக்க வைத்து விட வேண்டும் 
என்ற பெயரில் குழந்தைகளை 
படுகுழியில் தள்ளும் பெற்றவர்களின் 
நடுவில் இவர்கள் கொஞ்சம் 
வித்தியாசமானவர்கள்!! 

ஏட்டுச்சுரைக்காய் 
கறிக்கு உதவாது 

என்பதால் கல்வி மட்டுமே 
வாழ்க்கையை செழுமை படுத்தி விடாது 
என்று உணருபவள்!! 

குழந்தைகளுடன் கொஞ்சம் 
மணித்துளிகள் கரைந்தன! 

ஆறு நாட்களும் ஆறியதை 
சாப்பிடுபவர்களுக்கு 
இன்று சுடச்சுட உணவு 
தட்டில் வைத்தாக வேண்டும்! 

மதிய உணவுக்கு விருந்தினர் 
வருவதாக அலைபேசியில் அழைப்பு 
வந்தது!! ம்ம் 
என்று சொல்லிவிட்டு 
அவசரமாக அடுக்களைக்குள் நுழைந்தாள்
அதற்குள் கணவன் 
ஓடுவது பறப்பது நடப்பது 
நீந்துவது எல்லாவற்றையும் 
வாங்கி வந்தாகி விட்டது!! 

வரப்போவது தனது தம்பி தங்கை 
அல்லவா?! 

பார்த்ததும் பிரமிப்பு 
ஆனால் வருகின்றவர்களை 
உபசரிப்பது தனது கடமையல்லவா!

அனைத்தும் சமைத்து முடித்தாள் 
ஒத்தாசைக்கு வீட்டில் ஒருவர் 
கூட இல்லை! மாமிக்கு உடம்பு முடியாது! 

ம்ம் நாம் தான் செய்ய வேண்டும் 
என்ற எண்ணம் எப்பொழுதும் 
இருப்பதால் சலிப்பில்லாமல் 
செய்பவள்! 

வந்தனர் விருந்தினர்கள் 
சிறிது நேரம் பேச்சில் கரைந்து 
மணித்துளிகள்! 

தலைவாழை இலை வைத்து 
தங்க கைகளால் 
அறுவை உணவு படைத்தனள்!! 

ஆனந்தமோ ஆனந்தம் 
அவர்களுக்கு! 
அண்ணியை மிஞ்ச 
பெண்களே கிடையாது! 
இது கொழுந்தன்! 
அண்ணிக்கு நிகர் அண்ணி தான் 
இது நாத்தி!! 
குழந்தைகளும் மகிழ்ச்சியாய் 
உணவு அருந்தினர்! 

மணியோ நான்கு! 
வேலைகளால் அலுத்து
சலுத்தாலும் 
பசி லேசாக எட்டிப் பார்க்க 
ஆரம்பித்தது!! 

அவசரகதியில் சுத்தம் 
செய்து தானும் 
உணவு அருந்துகையில்
மணி:4:30
உடல் சற்று தரையில் 
தலை வைத்து சாயலாம் 
என்று மனம் நினைத்தது!! 

ம்ம் அதற்கு நேரமில்லை 
கொழுந்தனும் நாத்தியும் 
இருக்கிறார்கள்! 
சிறிது நேரத்தில் கிளம்பி விடுவார்கள் 
அவர்களுக்கான பிரச்சினைக்கு 
தீர்வு காணவே தன்னை தேடி 
வந்துள்ளனர்!! 
அதனால் மீண்டும் புத்துணர்வு 
பெற்று அவர்களிடம் பேசிக் கொண்டே 
சிறு சிறு வேலைகள் செய்து கொண்டிருந்தாள்!! 

பிரச்சினைகளின் தீவிரம் 
புரிந்து பிரச்சனைகளை கையாளும் 
விதம் அனைவருக்கும் வாய்த்து விடாது!! 

இவள் சற்று வித்தியாசமானவள் 
பிரச்சினையின் விளிம்பில் 
நின்று கொண்டு 
எப்படி சமாளிப்பது என்று 
தீர்க்கமாய் யோசிப்பவள்!! 

பிரச்சினையை அதன் போக்கில் விட்டு 
விட வேண்டும் என்று நினைப்பவள்!! 

அவர்களுக்கான பிரச்சினைக்கு 
தீர்வு சொல்லி அவர்களை 
சங்கடத்தில் இருந்து விடுவித்த
மகிழ்ச்சி இவளுக்கும் 
தொற்றிகொண்டது!! 

மாலைக்கு காபி தயார் 
செய்து கொடுத்து விருந்தினர்கள் 
செல்வதாக கூறியதும் 
அவர்களை வழியனுப்ப 
தயாரானாள்!! 
இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் 
தான்!! 
அவர்களாலும் தங்க இயலாது! 
மகிழ்ச்சியாய் சென்றார்கள்!!! 

மாடியில் 
காய்கின்ற துணிகளை 
எடுக்க சென்றவள் மகிழ்ச்சியாய் 
மாலையை வரவேற்றாள்!! 

ஞாயிறு மெல்ல திங்களை 
வரவேற்க தயாராகி கொண்டிருந்தது!! 

தொடரும்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக