ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:50 pm

» முயற்சி
by kandansamy Today at 1:35 pm

» அன்பு
by kandansamy Today at 1:28 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Today at 1:11 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Today at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Today at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Today at 12:12 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by ayyasamy ram Today at 11:53 am

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Today at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Today at 11:48 am

» தொடத் தொடத் தொல்காப்பியம்(490)
by Dr.S.Soundarapandian Today at 11:46 am

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by ayyasamy ram Today at 11:27 am

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by ayyasamy ram Today at 11:25 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Today at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Today at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Today at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Today at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Today at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by ayyasamy ram Today at 7:16 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

Admins Online

சிறு நீரக கல்லடைப்பு ஏற்படாமல் இருக்க...

Go down

சிறு நீரக கல்லடைப்பு ஏற்படாமல் இருக்க... Empty சிறு நீரக கல்லடைப்பு ஏற்படாமல் இருக்க...

Post by தாமு on Wed Nov 18, 2009 5:35 pm

நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும்.

நோய் ஏற்பட காரணம்:-

1) சிறுநீரை அவ்வப்போது வெளியாக்காமல் தங்க செய்வது.
2) சிறுநீர் பாதையில் அடைப்பு அல்லது தொற்றுநோய் காரணமாக பாஸ்பேட் கற்கள் உண்டாகின்றன.
3) அதிகமாக கால்சியம் ஆக்ஸ்லேட் சத்து நிறைந்த உணவை உண்பதால் கால்சியம் ஆக்ஸ்லேட் கற்கள் உற்பத்தியாகிறது.
4) மருவத்துவர் ஆலோசனையில்லாமல் கால்சியம் மாத்திரைகள் தொடர்ந்து உண்பதும் ஒரு காரணம்.
5) அசைவில்லாமல் ஒரே இடத்தில் நீண்ட காலமாக இருத்தல் (படுக்கையில் இருக்கும் நோயாளி).
6) பேரா தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பது.
7) கவுட் நோயில் ïரிக் ஆசிட் கற்கள் உண்டாவது.
8) சுனை நீர், பல நாட்கள் தேங்கிய நீரை பருகுவது.
9) வாதத்தை மிகுதிப்படுத்தும் உணவு உண்பது.
10) விந்து கட்டுப்படுத்துவதாலும் உண்டாகிறது.

அறிகுறிகள்:-

கற்கள் சிறு அளவில் இருப்பதாலும், கூர்மையாய் இருந்தாலும் அவை புரளும் போது அப்பாகத்தை கீறி தாங்க முடியாத வலி, ரத்தப் பெருக்கு உண்டாகி சிறுநீருடன் வெளியாகும். கல்லுண்டான பக்கத்தின் இடுப்பு, தொடை அப்பக்கத்து விரை மேலுக்கு இழுத்துக் கொள்வது போல் நோதல், கை, கால் சில்லிடல், நாடி தளர்தல் முகம் வியர்த்தல், சிறுநீர் பாதையில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். கற்கள் சிறு அளவில் இருப்பின் சிறுநீர் பெருக்கும் மருந்துகளை உட் கொண்டால் சிறுநீருடன் வெளிப்படும். கற்கள் பெரியதாய் வளர்ந்து அங்கேயே தங்கி விடுமானால் அவ்விடத்தில் சீழ் உண்டாகி அச்சீழ் சிறுநீரில் கலந்து வெளியாகும். அடிக்கடி முதுகின் பக்கம் வலி உண்டாகும். அக்கல் இடம் விட்டு புரளுமானால் தாங்க முடியாத வலி ஏற்படும் கல் புரண்டு வெளிப்பட முயன்று ஆண்குறி முனையில் வந்து தடைப்பட்டு அங்கு மிகுந்த வலியையும் வீக்கத்தையும் உண்டுபண்ணும்.

முக்கிய அறிகுறிகள்:-

வலியானது முதுகிலிருந்து வயிறு அரையிடுக்கு வரை பரவும். இதனுடன் சிறுநீர் உபாதைகள் இருக்கும்.

தடுக்கும் வழி:-

1) ஒரு நாளைக்கு 6 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்
2) சிறுநீர் கழிப்பதை தள்ளிப்போடக்கூடாது.
3) நீரை தாராளமாக பருக வேண்டும்.
4) உணவில் வாழைத்தண்டு, முள்ளங்கி, சிறுகீரை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.
5) இரவு உணவு எளிதில் ஜீரணமாகக் கூடியதாக இருக்க வேண்டும். அசைவம் இரவில் உண்ணக்கூடாது.
6) இரவு உணவருந்தியதும் உடனே உறங்கக் கூடாது.

கல்லடைப்பு நோயாளிக்கு உணவு முறைகள்:-

1) தக்காளி, காளிப்ளவர், முட்டை கோசு உண்ணக் கூடாது.
2) செயற்கை பானங்கள் அருந்தக் கூடாது.
3) அசைவம் நீக்கவும்.
4) மதுபானம் அருந்தக்கூடாது. பால், பால்கட்டி சேர்க்க கூடாது.
5) பார்லி கஞ்சி சேர்க்கவும்.
6) மணக்கத்தை அரிசி வகை சோறு உண்ணலாம்.
7) கீரை: சிறுகீரை, முளைக்கீரை, முள்ளங்கிகீரை, பசலைகீரை, மூக்கிரட்டை, காசினி கீரை, தாலிக்கீரை உட்கொள்ளலாம்.
8) காய்: வாழைத்தண்டு, முள்ளங்கி, முருங்கை, கீரைத்தண்டு, அவரை, வெண்டைக்காய் சேர்க்கவும்.
9) தினமும் வைட்டமின் `டி' மாத்திரை உட்கொள்ளக் கூடாது.
தினமும் 4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். 3 லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும்.

மருத்துவம்:-

1) வலி ஏற்பட்டதும் சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுப்பது நல்லது.
2) வலி நிவாரணி மருந்தை உட்கொள்ளலாம்.

சித்தமருத்துவத்தில்:-

சிலாசத்து பற்பம், வெடிப்பு சுண்ணம் நெருஞ்சில் குடிநீர், கீலுடைகுடோரி போன்ற மருந்தைக் டாக்டர்கள் ஆலோசனைப்படி கொடுக்கலாம். இதன் மூலம் கல் கரைந்து சிறுநீருடன் வெளிப்படுகிறது.



நன்றி டாக்டர் உமா.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum