ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 8:20 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (277)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by krishnaamma Yesterday at 8:13 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by krishnaamma Wed Sep 23, 2020 9:41 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

» வேத வித்து ! - சிறுகதை !
by krishnaamma Wed Sep 23, 2020 8:59 pm

» சௌதி இல் நடந்த வினோத வழக்கு!
by krishnaamma Wed Sep 23, 2020 8:53 pm

Admins Online

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Empty விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Post by M.Jagadeesan on Sat Sep 17, 2016 10:50 pm

First topic message reminder :

கண் டாக்டரிடம் சென்றால் , ஒவ்வொரு லென்ஸாக மாற்றிப்போட்டு , " இப்போ நல்லா தெரியுதா ? " என்று நம்மிடம் கேட்பார். எந்த லென்ஸில் நம்முடைய பார்வை நன்றாகத் தெரிறதோ , அந்த லென்ஸை வைத்து நமக்குக் கண்ணாடி செய்து கொடுப்பார்கள் . எந்த லென்ஸ் போட்டாலும் , பொருந்துகிற கண் யாருக்கும் இருக்காது .

ஆனால் அய்யன் வள்ளுவர் , எந்த வார்த்தை போட்டாலும் , பொருந்தி வருவதுபோல சில குறட்பாக்களை எழுதியிருக்கார் . அவற்றைப் பார்க்கலாமா ?

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் . ( குற்றங்கடிதல் - 435 )

இது ஓர் எளிய குறட்பா. உரையின்றியே புரிந்துகொள்ள முடியும் .

பொருள் :
========
குற்றம் வருவதற்கு முன்னரே , அது வராமல் காக்க வேண்டும்; அவ்வாறு காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை , தீயின் முன்பாக வைக்கப்பட்ட வைக்கோற்போர் போல அழிந்துவிடும் .

இது அரசனுக்குச் சொல்லப்பட்ட நீதி என்றாலும் தனிமனித வாழ்க்கைக்கும் பொருந்தி வருகின்ற நீதியாகும் .
பொருட்பாலில் பெரும்பாலான குறட்பாக்கள் இவ்வாறே உள்ளன.

இப்போது இந்தக் குறட்பா , யார்யாருக்கெல்லாம் பொருந்தி வருகிறது என்று பார்க்கலாமா !

குடும்பஸ்தனுக்கு :
================
கடன்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை , எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

வியாபாரிக்கு :
=============
நட்டம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை , எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

தனி மனிதனுக்கு :
================
நோய்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

மாணவனுக்கு :
=============
தேர்வு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

அரசுக்கு :
========
வெள்ளம்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் .

சென்ற ஆண்டு மழைக்காலத்தில் அரசு , தகுந்த முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய காரணத்தால் , சென்னை மக்கள் பேரிழப்பை சந்திக்க நேரிட்டது .

வெள்ளம் வந்தாலும் இடர்தான் ; வராவிட்டாலும் இடர்தான் . காவிரியில் தமிழ்நாடு கேட்காமலேயே நீரைத் திறந்து விட்டிருந்தால் இன்றைய தினம்  கர்நாடகா பற்றி எரிந்திருக்காது .  வருமுன்னர்க் காத்திருந்தால் இந்த  அழிவு ஏற்பட்டிருக்காது .

மற்றவை பிறகு ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down


விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Empty Re: விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Post by M.Jagadeesan on Sun Sep 25, 2016 2:24 pm

இக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவு , நாம் எல்லோரும் கொண்டிருக்கின்ற அறிவல்ல . சாதனை படைக்கும் அறிவைப்பற்றி வள்ளுவர் பேசுகிறார் .

நாம் கொண்டிருக்கும் அறிவு வயிற்றுக்குச் சோறிடும் அறிவு . அது நாம் இறந்தவுடன் நம்மோடு இறந்துவிடும் . ஆனால் சாதனை படைக்கும் அறிவு , பூதவுடல் நீத்தபின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் . சாதனையாளர்கள் சாவதில்லை . முதலில் சாதனையாளனின் அறிவு குடும்பத்திற்குப் பயன்படவேண்டும் . அதில் மாற்றுக் கருத்தில்லை . ஆனால் அது கொஞ்ச காலம்தான் . நீடித்த பயன் தருவது உலக மக்களுக்கே !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Empty Re: விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Post by Ramalingam K on Sun Sep 25, 2016 9:06 pm

அறிவு என்னும் சொல்லிற்கு:

ஞானம், தெளிவு,  விவேகம், ஆன்மா,மனம்,உணர்ச்சி, அன்பு, அருள்,காட்சி, பார்வை, வலி, தர்க்கம், ஒளி, சுயபுத்தி, உடம்பு, தைரியம், நுண்மை, விருப்பம், பெருமை, சம்பாத்தியம், பரம்பொருளைப் பற்றிய சிந்தனை, கல்வி, பொருள், கொள்கை, நிறம், ஆராய்ச்சி, உண்மை, செய்தொழில், இயல்பு, அழகு,புகழ் – இப்படி  அநேக பொருட்கள் இருக்கும்போது

ஞானம் என்பதை மட்டுமே பொருளாகக் கொள்வது சரியாகுமா ஐயா!

1. உடம்பு என்னும் பொருளில் :  தான் அழகு குறைவாக இருப்பதாக தாழ்வு மனப்பான்மையில் இருப்பவனுக்கு  தன் அழகான குழந்தை இனிது.

2. தைரியம் என்னும் பொருளில் : தான் கோழையாக இருப்பானாகில், தன் பிள்ளையிடம் தைரியத்தைக் காண்பது அவனுக்கு  இனிது.

3. தர்க்கம்  என்னும் பொருளில் : பிறர் சொல்வதை அப்படியே ஏற்கும் குணவானுக்கு தர்க்கம் செய்து உண்மையைச் சொல்லும் தன் பிள்ளை இனிது.

4. செய்தொழில் என்னும் பொருளில் ; அன்றாடம் வெய்யிலில் வேலை செய்யும் தகப்பனுக்கு தன் பிள்ளை ஒரு அலுவலகத்தில்  பணிசெய்தல் இனிது.

5. அருள் என்னும் பொருளில்:  தான் உண்டு தன் வீடு உண்டு என்று உலகிற்கு வெளிப்படாத சுயநலமியான தந்தைக்குத் தன் மகனை அருளாளனாகக் காண்பது இனிது.

6. இறைபக்தி என்னும் பொருளில் : தனக்கு இறைபக்தியே கொஞ்சமும் இல்லையே என்பவனுக்குத் தன் மகன் பரம்பொருளைப் பற்றிய சிந்தனையில் தினமும் கோவிலுக்குச் சென்று வருதல் இனிது.

7. தெளிவு என்னும் பொருளில் : எதிலும் எப்போதும் குழப்பத்தையே இயல்பாகக் கொண்டவனுக்கு தெளிவான புத்தியுள்ள பிள்ளை இனிது.

8. கல்வி என்னும் பொருளில் : பள்ளிக் கூடம் பக்கமே போகாதவனுக்குத் தன் பிள்ளை கல்வி கற்றல் இனிது.

9. ஆராய்தல் என்னும் பொருளில் : சோம்பேறியாய்  இருப்பவனுக்கு  எதையும் ஆய்ந்து அறியும் தன் பிள்ளை இனிது.

10. ஆன்மா என்னும் பொருளில் : தன் பெற்றோர்களுக்குத் தான் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்னும் வருத்தம் தீர தனக்கு ஒரு பெண் குழந்தையின் பிறப்பு மட்டுமே இனிது .

11. நுண்மை என்னும் பொருளில் : சுவர் தாண்டித் திருடும் திருடனுக்குத் தன் மகன் Pick pocket திருடனாக சுலபாகத் திருடுவ்து இனிது.

இப்படிப் பார்த்தால்  . . . . .

தன்னுடைய பிள்ளை  தன்னைவிட மிகை ஞானம்( அறிவு) உள்ளவர்களாக இருத்தல் , இந்த உலகத்தில்  இருந்து வாழும் எல்லா  உயிர்  இனங்களுக்கும்  மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். அவ்வாறே இல்வாழ்வானுக்கும் அந்நிலை இனிமையைத்தரும்  என்பதும் ஏற்புடையதாகும் தானே !
அடியனின் கருத்தில் பிழை இருப்பின் பொறுத்தருளப் பிரார்த்திக்கின்றேன்.
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
மதிப்பீடுகள் : 271

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Empty Re: விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Post by M.Jagadeesan on Tue Sep 27, 2016 2:39 pm

அடுத்து நாம் காண இருக்கும் குறட்பாவின் விளக்கத்தை , ஒரு வகுப்பறையில் நடக்கும் காட்சியாகப் பார்க்கலாம் .

அது பத்தாம் வகுப்பு . தமிழாசிரியர் வகுப்பறையினுள் நுழைகிறார் .

மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று , " வணக்கம் ஐயா ! " என்று கூறுகின்றனர்.

" வணக்கம் ! அமருங்கள் ! இன்று என்ன பாடம் ? "

" செய்யுள் பாடம் ஐயா ! திருக்குறள் ! "

" நல்லது ; எல்லோரும் பாட புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ! இன்று நாம் காண இருக்கும் குறட்பா

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு . ( நிலையாமை - 338 )

என்னும் குறளாகும் . இந்தக்குறள் துறவறவியல் என்னும் தொகுப்பில் நிலையாமை என்னும் அதிகாரத்தில் வந்துள்ளது .

" ஐயா ! " துறவறவியல் " என்றால் என்ன ? "

" தம்பி ! நல்லகேள்வி ! " துறவறவியல் " என்றால் துறவிகளுக்காக சொல்லப்பட்ட , துறவிகள் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் அடங்கிய  தொகுப்பு என்று பொருள் . துறவறவியலில் அருளுடைமை , புலால் மறுத்தல் , தவம் , கூடாவொழுக்கம் , கள்ளாமை , வாய்மை , வெகுளாமை , இன்னா செய்யாமை , கொல்லாமை , நிலையாமை , துறவு , மெய்யுணர்தல் , அவாவறுத்தல் ஆகிய அதிகாரங்களுள்ளன . இவற்றையெல்லாம் துறவிகள் கண்டிப்பாகக் கடைபிடிக்கவேண்டும் . இந்த அறங்களையெல்லாம் இல்லறத்தானும் கடைபிடிக்கலாம் ;ஆனால் மிகவும் கடினம் . அது அவரவர் விருப்பம் .

சரி ! இப்போது குறளைப் பார்ப்போமா ?

குடம்பை தனித்தொழிய புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு

இந்தக் குறளிலே உடம்புக்கும் ,உயிருக்கும் உள்ள நட்பைப்பற்றிப் பேசுகிறார் . உடம்பு இல்லையேல் உயிரில்லை ; உயிரில்லையேல் உடம்பு இல்லை .

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்பது திருமூலரின் வாக்கல்லவா !

" ஐயா ! நிலையாமை என்றால் என்ன ? "

" இந்த உள்ளத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே தீரும்; பிறப்புண்டேல் இறப்புண்டு ; எதுவுமே நிலைத்து நிற்காது . இதுதான் நிலையாமை எனப்படும் .

இந்தக் குறளிலே நிலையாமையை வலியுறுத்துவதற்கு வள்ளுவர் ஓர் அழகான உவமையைக் கையாளுகிறார் . முட்டையை உடைத்துக்கொண்டு பறவை பறப்பதுபோல , ஒருநாள் இந்த உடம்பைவிட்டு உயிரானது பறந்துபோய்விடும் என்று சொல்கிறார் . " குடம்பை " என்றால் முட்டை என்று பொருள்.'

" ஐயா ! ஒரு சந்தேகம் கேட்கலாமா ? "

" கேள் "

" இந்த தமிழ் கைடில் ( Tamil Guide ) குடம்பை என்பதற்கு " பறவையின் கூடு " என்று போட்டுள்ளதய்யா !"

" தம்பி ! Guide எல்லாம் வகுப்பறைக்குள் கொண்டுவரக்கூடாது .அதை வாங்குவதும் தவறு ; ஆசிரியர்கள் கூறுவதைக் குறிப்பெடுத்துக்கொண்டு படித்தாலே போதுமானது . வியாபார நோக்கத்தில் அவசர அவசரமாக எழுதப்பட்ட Guide - ல் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு . அதைப் படிக்கவேண்டாம் "

" சரி ஐயா ! "

இந்தக் குறட்பாவில் வந்துள்ள " குடம்பை " என்னும் சொல் விரிக்க இடம் தருவது . சில உரையாசிரியர்கள் குடம்பை என்னும் சொல்லுக்கு " பறவையின் கூடு " என்று பொருள் கொண்டனர்.

உயிர் , பறவைக்கும்
பறவைக்கூடு , உடம்புக்கும்

உவமையாக கூறியிருந்தால் ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு .

பிரிந்த உயிர் மீண்டும் உடம்புக்குத் திரும்பாது ; ஆனால்
கூட்டைவிட்டு சென்ற பறவை, இரைதேடிவிட்டு , மாலையில் கூட்டிற்கு திரும்பிவிடும் . ஆனால் குடம்பை என்னும் சொல்லுக்கு முட்டை என்று பொருள் கொண்டால் , முட்டையைத் தனியே விட்டுவிட்டுப் பறந்துசென்ற  பறவை , மீண்டும் முட்டைக்குத் திரும்ப வாய்ப்பில்லை ; ஆகவே குடம்பை என்னும் சொல்லுக்கு " முட்டை ' என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும் . " என்று முடித்தார் ஆசிரியர்.

மாணவர்கள் அனைவரும் கைதட்டி மகிழ்ந்தனர் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5371
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்  - Page 2 Empty Re: விரிக்க இடம்தரும் குறட்பாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum