புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
31 Posts - 50%
heezulia
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
29 Posts - 47%
mohamed nizamudeen
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
73 Posts - 57%
heezulia
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_m10அந்த மரங்களுக்கு என்ன மாற்று? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மரங்களுக்கு என்ன மாற்று?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2016 6:11 pm

அந்த மரங்களுக்கு என்ன மாற்று? IigDSNirT8OeNo6XmbBG+32
-
வதைத்துக் கடந்திருக்கிறது ‘வர்தா’ புயல்.
முறிந்து கிடக்கும் மரங்களுக்கும் நசுங்கிக் கிடக்கும்
கார்களுக்கும் அருகில் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ளும்
முதிர்ச்சியற்ற மனிதர்கள், கூரையாக இருந்த கீற்றுகளையும்
ஓடுகளையும் இழந்து வீதியில் தவித்த எளிய மனிதர்கள்,
சீறும் கடலை ஆபத்து அறியாமல் சுற்றுலா போல பார்க்கச்
சென்ற இளைஞர்கள், மரங்கள் பேயாட்டம் போட்டதால்
ஒதுங்க இடம் தேடித் தவித்த பறவைகள் என எல்லாவற்றையும்
கடந்து சென்றிருக்கிறது புயல்.

‘இந்தப் புயலால் 7000 கோடி ரூபாய் பாதிப்பு’ என இந்திய
தொழிற்கூட்டமைப்பு மதிப்பிட்டிருக்கிறது. தனிநபர்களின்
இழப்புகள் எப்போதும் போல எந்தக் கணக்கிலும் வராது!

‘ஒரு புயல் என்பது எப்படி கரையைக் கடக்கும், அதன் முன்
பகுதி என்ன, கண் பகுதி கடக்கும்போது ஏற்படும் அமைதி,
அதன்பின் வரும் பின்பகுதி’ என புயலின் அறிவியல் கற்றோம்.
வேறு என்ன கற்றோம்?

தமிழகத்தில் கடலூருக்கும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கும்
இடைப்பட்ட கடற்கரையை கடந்த 50 ஆண்டுகளில் 17 புயல்கள்
கடந்துள்ளன. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில்
தான் இந்த எல்லா நிகழ்வுகளும். கடந்த 94ம் ஆண்டு சென்னையைப்
புரட்டிய புயலின் வேகம், மணிக்கு 65 கிலோமீட்டர்.

அதைவிட பல மடங்கு வீரியமானது வர்தா. மணிக்கு 110 முதல்
120 கிலோமீட்டர் வேகக் காற்று சென்னையை சூறையாடியது.

இயல்பாகவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அதிகம் உருவாகி
புயலாக மாறும் பகுதி நம் கடற்கரை. புவி வெப்பமயமாதலால்
மாறும் பருவநிலைகள், இதன் தீவிரத்தை இன்னும் அதிகமாக்கி
இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், இயற்கைச் சீற்றங்களுக்கு
ஏற்றது போல நமது வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள
வேண்டியது அவசியம்.

அழகுக்காக வெளிப்புறச் சுவரில் கண்ணாடி பதித்த வானுயர்
கட்டிடங்களிலிருந்து அவை பெயர்த்துக்கொண்டு விழுந்தன;

பல நிறுவனங்களில் நவீனமாக வைத்திருந்த வினைல் பெயர்ப்
பலகைகள் அத்தனையும், அடித்த காற்றில் குப்பைகளாயின.
ஒருவேளை விடுமுறை விடப்படாமல் இருந்து மக்கள் நடமாட்டம்
இருந்திருந்தால், இவை எத்தகைய ஆபத்துகளை
விளைவித்திருக்கும் என்ற யூகமே திகிலூட்டுகிறது.

ஒரு கடற்கரை நகரில் எப்படிப்பட்ட வசதிகள், ஆடம்பரங்கள்
தேவை என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது வர்தா.

சமீப நாட்களில் சென்னை நகரில் கார்களின் எண்ணிக்கை
தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. பார்க்கிங் வசதி இல்லா
விட்டாலும், காரை சாலையோரங்களில் நிறுத்தி விடுகிறார்கள்.
இரவு நேரங்களில் சென்னையின் எல்லா சாலைகளின் ஓரத்திலும்
வரிசையாக கார்களைப் பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் அதிகம் சிக்கியவை இப்படிப்பட்ட
கார்கள்தான். ஆனாலும் கார்களின் பெருக்கம் குறையவில்லை.

வர்தாவால் விழுந்த மரங்கள், இந்த சாலையோரக் கார்களையே
பதம் பார்த்தன. கடந்த மழையும் இந்தப் புயலும் இவர்களின்
கண்களைத் திறந்து, சாலைகளை எல்லோரும் பயன்படுத்த
வழிகாட்டினால் சரி! கடந்த 94ம் ஆண்டு சென்னையை உலுக்கிய
புயலில் சுமார் 1500 மரங்கள் விழுந்தன. இம்முறை அதைவிட பல
மடங்கு இழப்பு.

நூறாண்டுகளைத் தாண்டி வளர்ந்த மரங்களும் வேரோடு
சாய்ந்திருக்கின்றன. அடையாறு, மயிலாப்பூர், அசோக் நகர்,
அண்ணா நகர் என பல பகுதிகளில் நிழற்சாலைகளாகக் காட்சி
தந்த இடங்கள் இப்போது வெட்டவெளிகளாகி விட்டன. கடந்த
94ம் ஆண்டு புயலில் இழந்த மரங்களுக்கே நாம் திரும்பவும் மரம்
நடவில்லை.

இம்முறையும் அதைச் செய்யாதுவிட்டால் ஆபத்துதான்.
வழக்கமாகவே தகிக்கும் நகரத்துக் கோடை இனிவரும்
ஆண்டுகளில் இன்னும் மோசமாக அனல் வீசக்கூடும்.

பொதுவாகவே சென்னையில் புதிதாக நட்டு வளர்க்கும் மரங்கள்
வளரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது. பழைய மரங்களின்
பராமரிப்பும் மோசம். மரங்களின் வேர் அருகேகூட மண்
இல்லாதபடி சிறைப்படுத்தி சிமென்ட் பிளாட்பாரங்களை
அமைக்கிறது மாநகராட்சி. ‘தங்கள் கடை வாடிக்கையாளர்
பார்வையில் தெரியாதபடி மறைக்கிறது’ என மரங்களை
வேரறுக்கும் கடைக்காரர்களும் இங்கு அதிகம்.

‘மரங்களில் இருக்கும் பறவைகள் வாகனங்களின்மீது
எச்சமிடுகின்றன’ என வெறுக்கும் நகரத்துவாசிகளும்
இங்கு உண்டு என்பதை எளிய கிராமத்து விவசாயிகள்
நம்பித்தான் ஆக வேண்டும்.

இந்த நகரம் இழக்கும் மரங்களை ஈடு செய்ய பசுமை
ஆர்வலர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை இவர்கள்தான்
கெடுக்கிறார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82382
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 19, 2016 6:11 pm


மரங்கள் நிழலுக்கு மட்டுமில்லை, காற்றை சுத்தம் செய்யவும்
அவசியம்’ என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
டெல்லி மக்கள் காற்று மாசு காரணமாக அடிக்கடி
வீடுகளுக்குள் அடைந்துகொள்வதை செய்திகளில்
படிக்கிறோம். அப்படி ஒரு நிலைமை சென்னையில் வராமல்
இருக்க மரங்களே பிரதான காரணம்.

‘நாம் நன்றாக இருக்க மரங்கள் நன்றாக இருக்க வேண்டும்’
என்ற சுயநலத்துடனாவது மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க
வேண்டும்.

இதில் முக்கியமான விஷயம், என்ன மரங்களை நடுவது என்கிற
தேர்வு. பொதுவாக இந்த வர்தா புயலில் அதிகம் விழுந்தவை,
காட்டுவாகை, குல்மொஹர், மஞ்சள் கொன்றை மரங்கள்தான்.
இவை நம் நாட்டு மரங்கள் அல்ல. மடகாஸ்கர், அமெரிக்கா,
மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்த வந்தேறிகள். சீக்கிரம்
வளர்ந்து கிளை பரப்பி நிழல் தரும் என்பதைத் தவிர இவற்றால்
பலனில்லை. இங்கே வீசும் காற்றைத் தாங்குகிற அளவுக்கு
மண்ணில் ஆழமாக வேர் பரப்பும் திறன் இவற்றுக்கு இல்லை.

அதனால்தான் லேசாகக் காற்று அடித்தாலே மரம் விழுந்து
போக்குவரத்து தடைபடுகிற செய்திகளை சென்னையில்
அடிக்கடி படிக்கிறோம். வேம்பு, மகிழம், பூவரசு, புங்க மரம்,
ஆல மரம், அரச மரம், புன்னை, இலுப்பை, மருது, நாவல், ஆச்சா,
காஞ்சி போன்ற மரங்களே நம் மண்ணுக்கு ஏற்றவை. பருவ
மழைக் காலத்தில் கிழக்குக் கரையிலிருந்து வரும் காற்றைத்
தாங்கும்விதமாக கடற்கரைப் பகுதி நகரங்களிலும்
கிராமங்களிலும் இவை வளர்கின்றன.

ஆழ வேர் பரப்பி தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்கின்றன.
இப்படிப்பட்ட மரங்களை நட்டு, முறையாக வளர்த்துப்
பராமரிப்பதே, வர்தா புயலுக்கு தொலைநோக்கில் செய்ய வேண்டிய
நிவாரணப் பணி!

———————————–

– அகஸ்டஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 19, 2016 6:26 pm

ayyasamy ram wrote:
மரங்கள் நிழலுக்கு மட்டுமில்லை, காற்றை சுத்தம் செய்யவும்
அவசியம்’ என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
டெல்லி மக்கள் காற்று மாசு காரணமாக அடிக்கடி
வீடுகளுக்குள் அடைந்துகொள்வதை செய்திகளில்
படிக்கிறோம். அப்படி ஒரு நிலைமை சென்னையில் வராமல்
இருக்க மரங்களே பிரதான காரணம்.

‘நாம் நன்றாக இருக்க மரங்கள் நன்றாக இருக்க வேண்டும்’
என்ற சுயநலத்துடனாவது மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க
வேண்டும்.

இதில் முக்கியமான விஷயம், என்ன மரங்களை நடுவது என்கிற
தேர்வு. பொதுவாக இந்த வர்தா புயலில் அதிகம் விழுந்தவை,
காட்டுவாகை, குல்மொஹர், மஞ்சள் கொன்றை மரங்கள்தான்.
இவை நம் நாட்டு மரங்கள் அல்ல. மடகாஸ்கர், அமெரிக்கா,
மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்த வந்தேறிகள். சீக்கிரம்
வளர்ந்து கிளை பரப்பி நிழல் தரும் என்பதைத் தவிர இவற்றால்
பலனில்லை. இங்கே வீசும் காற்றைத் தாங்குகிற அளவுக்கு
மண்ணில் ஆழமாக வேர் பரப்பும் திறன் இவற்றுக்கு இல்லை.

அதனால்தான் லேசாகக் காற்று அடித்தாலே மரம் விழுந்து
போக்குவரத்து தடைபடுகிற செய்திகளை சென்னையில்
அடிக்கடி படிக்கிறோம். வேம்பு, மகிழம், பூவரசு, புங்க மரம்,
ஆல மரம், அரச மரம், புன்னை, இலுப்பை, மருது, நாவல், ஆச்சா,
காஞ்சி போன்ற மரங்களே நம் மண்ணுக்கு ஏற்றவை. பருவ
மழைக் காலத்தில் கிழக்குக் கரையிலிருந்து வரும் காற்றைத்
தாங்கும்விதமாக கடற்கரைப் பகுதி நகரங்களிலும்
கிராமங்களிலும் இவை வளர்கின்றன.

ஆழ வேர் பரப்பி தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்கின்றன.
இப்படிப்பட்ட மரங்களை நட்டு, முறையாக வளர்த்துப்
பராமரிப்பதே, வர்தா புயலுக்கு தொலைநோக்கில் செய்ய வேண்டிய
நிவாரணப் பணி!

———————————–

– அகஸ்டஸ்

ஆமாம் ராம் அண்ணா, நானும் பேப்பரில் படித்தேன்..........வேளச்சேரி இல் நிறைய காற்றடித்தும் மரங்கள் விழவில்லையாம், அவை எல்லாம் நம் நாட்டு மரங்களாம்.............நம் நாட்டு மரங்களில் மட்டுமே பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றனவாம்... செய்தி போட்டிருந்தார்கள்.......ஆச்சரியமாய் இருந்தது...........குருவிகள் மற்றும் அணில்களுக்கு கூட தன்னுடைய மண்ணை சார்ந்து இருக்கும் பழக்கம் இருக்கிறதே, மனிதனுக்கு ஏன் இல்லாமல் போனது என்று தோன்றியது ...............

நாட்டுமரங்கள் நடும்போது, மரக்கன்றுகளுடன், 'குத்து செடிகள்' மற்றும் 'குறுமரங்கள்' ஆகியனவும் நடலாம் ........இவை சீக்கிரம் வளரும்.....நமக்கும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். அதாவது வீட்டில் 16 துளசி கன்றுகள் நட்டால் நலம் என்று ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது....அதுபோல வேறு பல செடிகள் பெயரும் சொன்னார்கள்..........அதுபோல சிலவற்றை நட்டால், அவைகள் சீக்கிரம் வளரும்...........மேலும் மரம் நட இடம் இல்லாதவர்கள் கூட இது போல செடிகள் வைக்கலாம் ............பலன் கிடைக்குமே புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக