புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_m10மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 27, 2009 3:27 pm

உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும்
மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான்
அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை
நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி
வந்தனர்.

காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக
மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும்
காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நிலங்களாக
மாற்றி பண்ணைகளாகவும் வசிக்கத் தகுந்த பூமியாகவும் மாற்றி வந்தனர்.
இந்நிலையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அரேபியர்களின்
குடியேற்றம் பெரு வாரியாக நிகழ்ந்தது. மக்களில் பலர் இஸ்லாமியர்களாக
மாறினர். இதனிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டில் நாடு பிடிக்கும் ஆசையில்
கப்பல்களில் திசைக்கொரு பக்கமாக அலைந்த ஸ்பானியர்கள் மொராக்கோ வழியாக
அல்ஜீரியாவுக்குள் நுழைந்தனர்.

அல்ஜீரியாவை ஆக்ரமித்தனர். அதன் பிறகு துருக்கியைச் சேர்ந்த ஏட்டோமான்
வம்சத்தினர் அல்ஜீரியாவை ஸ்பெயினர்களிடமிருந்து கைப்பற்றினர். இறுதியாக,
1830ல் பிரெஞ்சுப் படை அல்ஜீரியாவை முழுமையாகத் தன் வசப்படுத்தியது.
அப்போது பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய எல்லைகளின் மூலமாக
உருவாக்கப்பட்டதுதான் இன்றைய அல்ஜீரிய அரசு. அது அல்ஜீரியாவை முழுமையாகக்
கைப்பற்றியதோடு மட்மில்லாமல் அல்ஜீரிய மக்களின் சொத்துகளையும்
கையகப்படுத்தியது. அல்ஜீரியாவில் முஸ்லிம்களைப் போலவே, யூதர்களும்
பெரும்பான்மையினராக இருந்தனர். ஆனால், பிரெஞ்சு அரசாங்கம், தனது குடியேற்ற
பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமே குடியுரிமை கொடுத்தது.

இதனால் பிரெஞ்சு குடியுரிமை அதிகாரத்தில் முக்கிய பதவிகளில் பிரெஞ்சு
மக்களே பங்கேற்றனர். உடன் ஏகபோக சுகத்தையும் அனுபவித்தனர். இதனால் மண்ணின்
மைந்தர்களாக இருந்த அல்ஜீரிய முஸ்லிம்களும் யூத இனத்தவர்களும் பிரான்சு
அரசாங்கத்தின் மேல் கடும் கோபம் கொண்டிருந்தனர். கூட்டாக இணைந்து
அரசாங்கத்தை எதிர்த்தனர். இதனால் 1865ல் பிரான்சை ஆண்ட மன்னன் நெப்போலியன்
அல்ஜீரிய மக்களின் இந்த எதிர்ப்பை பலவீனப்படுத்த ஒரு திட்டம் வகுத்தான்.
அதன்படி யூத மக்களுக்கு மட்டும் வாக்குரிமை அதிகாரத்தை வழங்கினான். இது
மண்ணின் பூர்வ குடிகளான அல்ஜீரிய மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
காலங்காலமாக இந்த மண்ணில் வாழும் தங்களுக்குக் குடியுரிமை இல்லாமல்
குடியேற்றமாக வந்த வேறு இனத்தார் நம்மை அடக்கி ஆள்வதா?

மக்களிடம் இந்த கேள்வி குமுறலாக வெடித்தது. அல்ஜீரிய தேசிய அடையாள மீட்பு
பணியில் அல்ஜீரிய மக்கள் ஒன்று திரள ஆரம்பித்தனர். படிப்பறிவு மிக்க
அல்ஜீரிய மக்கள், இன உணர்வையும் தேசிய இனத்திற்கான தேவையையும் மக்களிடம்
வலியுறுத்தி போராட்ட விதையை அல்ஜீரிய மக்களின் மனதிலே ஊன்றினர். 1930ல்
இத்தகைய உணர்வெழுச்சிகள் ஒரு வடிவம் கொண்டன. தேசிய விடுதலை முன்னணி எனும்
இயக்கம் அல்ஜீரிய முஸ்லிம்களிடையே உதயமானது. இச்சூழலில்தான் இரண்டாம்
உலகப் போர் வந்தது. தொடக்கத்தில் முதல் உலகப் போரைப் போல இரண்டாம்
உலகப்போரிலும் பிரெஞ்சு அரசை ஆதரித்தனர். போரின் இடையில் வெற்றி சட்டென
ஜெர்மன் நாஜிக்களின் பக்கமாகத் திரும்ப அதுவரை அல்ஜீரிய மக்களிடையே
இருந்து வந்த பிரெஞ்சு மக்களின் ஆதரவு குறையத் தொடங்கியது.

அல்ஜீரிய விடுதலைக்கான சுதந்திரக் குரல்கள் பகிரங்கமாக எழ ஆரம்பித்தன.
1943இல் பெர்ஹாத் அப்பாஸ் எனும் முஸ்லிம் தலைவர் 56 அல்ஜீரியத் தேசிய
உலகத் தலைவர்களின் கையெழுத்துடன் கூடிய அல்ஜீரிய மக்கள் அறிக்கை ஒன்றைத்
தயாரித்து பிரெஞ்சு அரசாங்கத் திடம் சமர்ப்பித்தார். அதில், அல்ஜீரிய
முஸ்லிம் மக்களுக்கு அல்ஜீரிய ஆட்சியில், சட்ட வசதிகளில் சம உரிமை அளிக்க
கோரி அந்த அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பிரெஞ்சு அரசாங்கம்
இந்த கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டுள்ள
சிலருக்கு மட்டும் பிரெஞ்சு குடியுரிமை தருவதாக கூறியது. இது
அல்ஜீரியாவில் கொந் தளிப்பை உருவாக்கவே மக்கள் ஒன்றுகூடி தங்களது
எதிர்ப்பை காண்பிக்கத் திரண்டனர்.

மே 8, 1945.அல்ஜீரிய வீதிகளில், வீட்டுச் சுவர்களில், முதல் முறையாக
ரத்தக்கறைகள் படிந்த நாள். அன்று மக்கள் பிரெஞ்சு அரசுக்கு எதிராக
கோஷமிட்டபடி வீதியில் சென்றனர். பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாப்புக்காக
வீதிகள்தோறும் எண்ணற்ற ராணுவத்தினரை வரிசையாக துப்பாக்கி மற்றும்
லத்தியுடன் நிற்க வைத்தது. ஊர்வலத்தில் ஏற்பட்ட சிறிய சலசலப்பு சடுதியில்
பெரிய கலவரமாக வெடித்தெழுந்தது. அதற்காகவே காத்திருந்த ராணுவத்தினர்
வெறித் தாக்குதலை மக்கள் மீது நடத்தினர். தப்பித்து ஓடிய மக்கள்
எல்லாரையும் விரட்டி விரட்டி போலீஸ் அடித்து நொறுக்கியது. பிரெஞ்சு அரசின்
அதிகாரபூர்வ கணக்குப்படி மொத்தம் 1500 முஸ்லிம் மக்கள் இந்த கலவரத்தினால்
இறந்ததாக கணக்குக் காட்டப்பட்டது. ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கை
உண்மையில் 6000 முதற்கொண்டு 45000 வரை இருக்கும் என பத்திரிகைச் செய்திகள்
கூறின.

இந்த சம்பவம்தான் அல்ஜீரியா மக்களிடையே பிரெஞ்ச் அரசாங்கத்தின் மீது
நிரந்தர வெறுப்பை உருவாக்கியது. பல மறைமுக இயக்கங்கள் தோன்றின. ஒவ்வொரு
அல்ஜீரிய இளைஞனும் பிரெஞ்ச் அரசாங்கத்தை நாட்டிலிருந்து விரட்டியடிப்பது
என உறுதியெடுத்துக் கொண்டனர். அவ்வப்போது பல எதிர்ப்புகள் ஊர்வலமாக
நிகழ்த்தப்பட்டன. அதனை பிரெஞ்ச் அரசாங்கம் தனது வன்முறை நடவடிக்கைகளால்
அடக்கி ஒடுக்கியது. இதனிடையே இரண்டாம் உலகப் போர் முழுவதுமாக முடிவடைந்து
ஜெர்மனி பிரான்சிடம் முழுமையாக சரணடையவே அதுவரை பயந்திருந்த பிரெஞ்சு அரசு
முழு பலத்துடன் அல்ஜீரிய போராளிகளை ஒடுக்க முடிவு செய்தது.

ராணுவத்தினர் இரவு பகலாக மறைமுகப் போராட்டங்களிலிருந்த முஸ்லிம் இளைஞர்களை
வேட்டையாடிக் கொன்றது. கிராமங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. கிட்டத்தட்ட
50,000 பேர் பிரெஞ்சு அரசாங்கத்தால் கொல்லப்பட்டதாக யூவ்ஸ் பெனாட் எனும்
வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். இதன் பிறகும் நாம் அமைதியாகப் போராடுவது
வெற்றியைத் தராது என முடிவெடுத்த அல்ஜீரியா விடுதலை முன்னணியைச் சேர்ந்த
மக்கள் இனி முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் என முடிவு செய்தனர்.
அனைவரும் கைகளில் ஆயுதங்களுடன் சபதம் மேற் கொண்டனர். போராட்டத்தில்
களமிறங்கினர். அதன் ஆரம்ப வேலையாக போராளிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆயுதப்
பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்கான தகுந்த சமயத்திற்காக
காத்திருந்தனர்.

நேரமும் வந்தது. அல்ஜீரிய சுதந்திரப் போர் நவம்பர் 1, 1954தேசிய விடுதலை
முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதலைத்
தொடங்கி, தனது போரைத் தொடங்கியது. பிரெஞ்ச் அரசாங்கத்தின் ராணுவக்
கிடங்குகள், காவல் நிலையங்கள், பாதுகாப்பு முகாம்கள் தகவல் தொழில்நுட்ப
மையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காக
தேர்ந்தெடுக்கப்பட்டன. சற்றும் எதிர்பாராத இந்த திட்டமிட்ட தாக்குதலால்
பிரெஞ்ச் அரசு அதிர்ந்தது. முன்பே, தேசிய விடுதலை முன்னணியினர் தங்களது
படைகள் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர் சங்கங்கள், மருத்துவர்கள்,
அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் மக்களிடம் தன்னை வலுப்படுத்திக்
கொண்டிருந்தது. போராட்டக் குழுவின் தலைவர் அகமத் பென் பெலா எகிப்தின்
கெய்ரோவிலிருந்து தனது திட்டங்களை துல்லியமாக தீட்டி உடனுக்குடன் தனது
கொரில்லா வீரர்களை செயல்பட வைத்துக் கொண்டிருந்தார்.

அதேபோல் தேசிய விடுதலைப் படையின் மற்றொரு தலைவரான பிரான்ஸ்வா பனான், தேசிய
விடுதலைப் படையின் இந்த அதிரடி கொரில்லா தாக்குதல் எந்த வகையில்
நியாயமானது என்பதை அறிவார்ந்த ரீதியாக தெளிவாக உணர்ந்து அதற்கான
சித்தாந்தங்களை உருவாக்கி உலக அரங்கில் போராட்டத்திற்கு ஒரு மதிப்பீட்டை
உருவாக்கித் தந்திருந்தார். போராட்டத்தின் முதல் வேலையாக அல்ஜீரியாவின்
கிராமங்களில் பண்ணைகள் மூலமாக ஏகப்பட்ட சொத்துக்களை வளைத்துப் போட்டிருந்த
ஐரோப்பியர்களை அவரவர் நாட்டுக்கு விரட்டி அடித்துப் போராளிக் குழுவினர்
சொத்துக்களை கைப்பற்றினர். பதிலுக்கு பிரெஞ்ச் அரசாங்கம் போராளிகளை நசுக்க
கடும் நடவடிக்கை எடுத்தது.

போராளிகள், கைகளில் கிடைத்தால் அவர்களை பலவிதமாக சித்ரவதைக்குட்படுத்தி
பொது மக்களிடம் தங்களது நடவடிக்கைகளின் கொடூரத்தை உணர்த்தி பயமுறுத்தி
வந்தனர். போராளியின் வீடுகள் சூறையாடப்பட்டன. போராளிகளின் வீட்டுப்
பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால், போர் இரண்டு பக்கங்களிலும் அதிக
அளவிலான வெறியை மென்மேலும் மூட்டியது. பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்முறை
நடவடிக்கைகள் காரணமாக போராளியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி தேசிய
விடுதலை முன்னணிப் படை மேலும் வலுப்பெற்றதே ஒழிய, பயமேற்படவில்லை.
விடுதலைப் போரையும் போராளிகளையும் எகிப்து உள்ளிட்ட இதர முஸ்லிம்
நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்க தொடங்கியது.

எழுத்தாளர்கள் மற்றும் உலகப் புகழ் பெற்ற தத்துவவாதிகளான ஆல்பர்ட் காம்யூ,
சார்த்தர் ஆகியோர். பிரான்சிலிருந்து கொண்டு போராளிகளுக்கு ஆதரவாக தத்துவ
நிலைப்பாட்டை உலகறிய தங்களது எழுத்துகள் மூலமாக பகிர்ந்துகொண்டனர். ழான்
போல் சார்த்தர் ஒரு படி மேலாக சென்று இலக்கியத்திற்காக தனக்களித்த நோபல்
பரிசையே போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிராகரித்து போராட்டத்தை
உலகறியச் செய்தார். இதன் காரணமாக தேசிய விடுதலைப் படையின் இந்த அல்ஜீரியச்
சுதந்திரப் போரானது உலகெங்கும் பெரிய ஆதரவைப் பெற்றது. அல்ஜீரியாவை
அல்ஜீரியாவுக்கே விட்டுக் கொடுங்கள் என உலகம் முழுக்க அரசியல்
தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதில் ஆல்பர்ட் காம்யூ போராளிகளின் கொடூர சித்திரவதை குறித்து அறிந்து
பிரெஞ்ச் அரசாங்கத்திடம் நீங்கள் சுதந்திரம் தராவிட்டாலும் பரவா யில்லை,
மக்களை சுதந்திரமாகவாவது வாழவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், தேசிய விடுதலை முன்னணியினர் இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு
மட்டுமல்லாமல் "ஆல்பர்ட் காம்யூவை'' முட்டாள் எனக் கூறினர். எங்களுக்கு
நடுநிலையாளர்கள் தேவையில்லை. எங்களுக்கு விடுதலை வாங்கித் தர
ஒத்துழைக்கும் ஆதரவாளர்கள் மட்டுமே தேவையென உறுதியாகக் கூறினர். அவர்கள்
அப்படிக் கூறியதற்குக் காரணம் ஆல்பர்ட் காம்யூ அல்ஜீரியர் என்றாலும் அவர்
ஒரு ஐரோப்பிய வம்சாவளி யைச் சேர்ந்தவர் என்பதுதான். போர் துவங்கிய சில
நாட்களிலேயே UDMA., PCA., கம்யூனிஸ்டுகள் என பல்வேறு குழுக்களாக
பிரிந்திருந்த அல்ஜீரிய விடுதலைப் போராளிகள் ஒவ்வொருவராக தேசிய விடுதலை
முன்னணியுடன் இணையத் தொடங்கினர்.

UDMAவின் தலைவரான அப்பாஸ் திலிழின் தலைமையிடமான கெய்ரோவிற்கு விமானத்தில்
பறந்து சென்று தங்களது குழுவை இணைத்துக் கொள்ளும் தகவலைக் கூறினார்.
இவர்களுள் மெஸ்ஸாலி ஹெட்ஜ் என்பவரைத் தலைவராகக் கொண்ட MNA மட்டும் FLNன்
வன்முறைப் பாதையைக் கடுமையாக எதிர்த்து வந்தது. பிரான்சிலிருந்த அல்ஜிரிய
தொழிலாளர்கள் மத்தியில் MNA அமைப்புக்கு பெரும் ஆதரவு இருந்தது.
அல்ஜீரியாவில் விழிகி தனது இந்த ஆதரவாளர்களுடன் போராடி வந்தது. FLNன்
ராணுவப் பிரிவான ALN எனப்படும் கொரில்லாப் படை MNAன் இந்தச் சிறிய ஆதரவுச்
குழுவை முழுமையாக பிரான்சிலேயே அழித்தொழித்தது. இதன் மூலம் அல்ஜீரியா
முழுவதும் ஒரே போராளிக் குழுவாகத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது.

மேலும், பிரான்ஸ் நகர வீதிகளிலும், காபி கடைகளிலும் இரண்டு குழுக்களைச்
சேர்ந்த போராளிகளும் திடீர் திடீரென மோதிக்கொண்டனர். இந்த மோதலில் மட்டும்
ஏறக்குறைய 5000 போராளிகள் இறந்திருந்தனர். இதனிடையே பிரெஞ்ச் அரசாங்கம்
1955 ஜனவரியில் ஜாக்குஸ் ஸான்ஸ்டுலே (Jacues Sanstalle)வை கவர்னர் ஜெனரலாக
அல்ஜீரியாவின் போராளிகளைச் சமாளிக்க அனுப்பிவைத்தது. அவர் முஸ்லிம்
மக்களிடையே தன் மதிப்பைப் பெற்று அல்ஜீரியாவுக்கு ஆதரவாக சில திட்டங்களைத்
தீட்டி பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு நன்மதிப்பை ஈட்ட பார்த்தார். ஆனால், அது
அவ்வளவு சுலபமானது அல்ல என்பதையும் சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டார்.
பிரச்சினையின் தீவிரத்தை அதுவரை பிரான்ஸ் அரசு உணராமல் அசட்டையாகத்தான்
இருந்தது.

ஆகஸ்ட் 1955ல் பிலிப் வில்லி (Philio Villee) நகரத்தில் FLN நடத்திய
பெரும் தாக்குதல்கள் பிரெஞ்ச் அரசாங்கத்திற்கு FLN ன் பலத்தையும் தீவிரத்
தன்மையையும் உணர்த்தியது. அதுவரை கிராமங்களில் மட்டுமே போரிட்டு வந்த
போராளிகள் முதன்முறையாக இச்சமயத்தில்தான் நகரத்தைக் குறிவைத்தனர். மேலும்
அதற்கு முன்வரை பொதுச் சொத்துக்களுக்கு மட்டுமே சேதம் விளைவித்து வந்த
போராளிகள் முதல் முறையாக கடுமையாக தாக்கியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் 79 பேர் பிரெஞ்ச் நாட்டவர். இறந்தவர்களில் வயதான பெண்களும்
குழந்தைகளும் இருந்தனர்.1956 ஆகஸ்டில் FLNல் சில மாற்றங்கள்
ஏற்படுத்தப்பட்டன. 34 பேர் அடங்கிய அதன் உயர்மட்டக் குழு ஒன்றாகக் கூடி
FLNஐ இரண்டாகப் பிரித்தது. போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வென ஒரு குழுவும்
வெளியுறவு நடவடிக்கைகளில் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள மற்றொரு
குழுவுமாக பிரிக்கப்பட்டது.

இதனிடையே 1956 அக்டோ பரில் FLN ன் படைக்குழுத் தலைவர்களான அகமத் பென்
பெல்லா, முகமது போதியர்ஃப், முகமத் சிதர் மற்றும் அஜித் அசயத், ஹோசின்
ஆகியோர் மொராக்கன் DC-3 மைதானத்தில் சென்றபோது பிரெஞ்ச் விமானப்படை
அதிகாரிகள் அத்துமீறி விமானத்தினுள் நுழைந்து போராட்ட தலைவர்களை கைது
செய்தனர். அந்த கைது சம்பவத்திற்கு ஐ.நா.வின் அரபு நாடுகள்
கூட்டணியினரிடமிருந்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடமிருந்து பிரெஞ்சு
அரசாங்கத்திற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்த சூழ்நிலையில்தான் FLN தனது
உச்சகட்டப் போரை நிகழ்த்த முடிவெடுத்தது. செப்டம்பர் 30, 1956 அன்று
மூன்று பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி
குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

இதில், பிரெஞ்சு விமானப் படையின் டவுன் அலுவலகமும் ஒன்று. 1957ல்
இலையுதிர் காலம் வரை ஏறக்குறைய 800 துப்பாக்கி சூடுகளையும் குண்டு
வெடிப்பு களையும் நிகழ்த்தி, FLN பிரெஞ்ச் அரசாங்கத்தை அலற வைத்தது. இதே
காலகட்டங்களில் திலிழி மறைந்து தாக்கும் கொரில்லா யுத்த நடவடிக்கைகளில்
மிகுந்த திறமையுடன் பயன்படுத்தியது. உடன் போராளிகளை காட்டிக் கொடுத்த சக
அல்ஜீரியர்களையும் திலிழி போராளிகள் கொடூர முறையில் சித்திரவதை செய்தனர்.
இதில் கிராமத்தினர்கள், அரசாங்க ஊழியர்கள், அப்பாவி விவசாயிகள் சிலரும்
திலிழின் இந்தக் களையெடுக்கும் நடவடிக்கைகளில் பலி வாங்கப்பட்டனர்.
காதுகளை அறுத்தல், மூக்குகளை அறுத்தல் போன்றவை அவர்களது நடவடிக்கைகளில்
உட்சபட்ச கொடூரமாக பின்பற்றப்பட்டது.

FLN ன் உட்பிரிவுக்குழு ஒருபுறம் இதுபோன்ற பேரழிவு நடவடிக்கைகளில் இறங்க
பிறக் குழுக்களானது ராஜதந்திர காரியங்களில் இறங்கி உலக நாடுகளின் கவனத்தை
அல்ஜீரியாவின் பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு
முக்கிய நிகழ்வாக 1957ல் அது அல்ஜீரியா முழுதும் மிகப் பெரிய
வேலைநிறுத்தத்தை உருவாக்க திட்டமிட்டது. இப்படி ஒரு வேலை நிறுத்தம்
மட்டும் நடந்து முழுவெற்றி பெற்றால் அது உலக நாடுகளுக்கு FLN மீது பொது
மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும். அதனால், ஐ.நா.சபை பிரான்சிடம்
அல்ஜீரியாவுக்கு திரும்பத் தரும்படி கட்டளை இடும். இதனால் தவிர்க்க
முடியாமல் அல்ஜீரியாவை விடுதலை செய்ய நேர்ந்துவிடும் என முடிவெடுத்த
பிரான்ஸ் அந்த பொது வேலை நிறுத்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட
முடிவு செய்தது.

இதன் முதல் கட்டமாக தங்களது அல்ஜீரிய பிரதிநிதியான ஜெனரல் மாசுவுக்கு
உடனடியாக கட்டளையிட்டது. எப்பாடுபட்டேனும் எந்த நடவடிக்கை எடுத்தாவது
இவ்வேலை நிறுத்தத்தை தகர்க்க வேண்டும். ஜெனரல் மாசு உடனடியாக தன் வேட்டையை
முதலில் கிராமங்களில் தொடங்கினார். ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாக புகுந்து
திலிழி போராளிகளை கைது செய்தனர். அப்பாவி முஸ்லிம்கள் இரண்டு தரப்பிலும்
சித்தரவதைக்கு உள்ளானார்கள். பல இடற்பாடுகளுக்கு இடையில் வேலை நிறுத்தம்
நடந்தது. அல்ஜீரிய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கைகோர்த்தது போல்
வேலை நிறுத்தத்தை முழுமையாக வெற்றியடையச் செய்தனர். தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தன. ஜெனரல் மாசுவின் ராணுவ வீரர்கள் செய்த தந்திரங்கள்
எதுவும் பலிக்கவில்லை.

ஐ.நா.சபையில் இந்த வேலை நிறுத்தம் குறித்து பெரும் விவாதங்கள் எழுந்தன.
ஆனாலும், பிரெஞ்சு அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பலனாக சில
மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்தன. டிக்காலே மீண்டும் பிரான்சின் அதிபராக பதவி
யேற்றார். அல்ஜீரிய மக்களின் மன வேதனையை தான் முழுமையாக அறிந்துகொள்வதாக
கூறினார். அல்ஜீரியாவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதன்மூலம்
இதற்கு ஒரு நல்ல தீர்வு காண விரும்புவதாக அறைகூவல் விடுத்தார். போரினால்,
தொய்வுற்றிருந்த முஸ்லிம் மக்களுக்கு டிக்காலேவின் பேச்சு ஆதரவும்
நம்பிக்கையும் தருவதாக இருந்தது. ஆனாலும், FLN இதற்கு உடன்படவில்லை.
இதனூடே மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது. Force-K எனும் தலைப்பில் FLN
போராளிகள் சிலர் பிரெஞ்ச் ராணுவத்தில் ஊடுருவல் நிகழ்த்தினர். ஆனால்,
ராணுவத்திற்கு எப்படியோ மூக்கு வியர்த்துவிட்டது.

வீரர்கள் மத்தியில் அடையாள பரிசோதனைகள் நடத்தப்பட்டு திடீர் திடீரென பல
வீரர்கள் காணாமல் போயினர். திலிழின் இந்த Force-K நடவடிக்கையும்
தோல்வியடைந்தது. இதனிடையே FLN ன் கூடுதலான வன்முறை நடவடிக்கைகளுக்கு
மக்களிடையே அதிருப்தி தோன்ற ஆரம்பித்தது. அமைதிப் பேச்சுவார்த்தைகள்
மூலமாக மட்டுமே பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும் என அல்ஜீரிய
மக்கள் நம்பத் தொடங்கினர். இதனால் FLN ஒரு முடிவுக்கு வந்தது.GPRA
(Provisional Government of the Algerian Republic) எனும் அமைப்பு
உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு அரபு நாடுகளும் கம்யூனிஸ நாடுகளும்
ஆதரவு அளித்தன. FLN ன் தலைவரான அப்பாஸ் தான் இதற்கும் தலைவராக
அறிவிக்கப்பட்டு துனிஷியாவில் இருந்து இந்த அமைப்பை இயக்கி வந்தார்.

இந்த அமைப்பு அதிபர் டிக்காலேயுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதன்படி
அல்ஜீரிய மக்களிடம் பொது வாக்கெடுப்பு நிகழ்த்துவது என்றும், மக்கள்
விருப்பப்பட்டால் அல்ஜீரியாவை சுதந்திர நாடாக அறிவிப்போம் என்றும்
டிக்காலே உறுதி கூறினார். இதற்கு சம்மதம் கூறி 1962 ஜூனில் பிரெஞ்சு
மக்களவையில் வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 90 சதவீதம் பேர் இதற்கு
ஒப்புதல் அளித்திருந்தனர்.அதன்படி 1962 ஜூலை 1 ல் அல்ஜீரியா மக்களிடையே
பிரெஞ்ச் அரசாங்கம் பொதுவாக்கெடுப்பு நிகழ்த்தியது. 6.5 மில்லியன்
மக்கள்தொகையில் மொத்தம் 6 மில்லியன் மக்கள் அல்ஜீரிய விடுதலைக்காக தங்கள்
வாக்குகளை அளித்திருந்தனர். ஜூலை 3 அன்று அதிபர் டிக்காலே அல்ஜீரியாவுக்கு
விடுதலை அளிக்கும் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ஜூலை 5 மிகச்சரியாக பிரெஞ்ச் நாட்டினர் அல்ஜிரியாவுக்குள் நுழைந்து
132ஆவது ஆண்டில் அல்ஜீரியா முழு தேசிய விடுதலை நாடாக அறிவிக்கப்பட்டது.
எண்ணற்ற பிரெஞ்ச் ஆதரவு முஸ்லிம்களும், யூதர்களும், இதர ஐரோப்பிய
சமூகத்தினரும் அல்ஜீரியாவை விட்டு வெளியேறினர். அதனையும் மீறி அவர்கள்
அங்கு இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான்
உண்மை. இந்த நீண்ட எட்டாண்டு விடுதலைப் போரில் ஏறக்குறைய ஒரு மில்லியன்
மக்கள் போரிலும் அதன் தொடர்பான நடவடிக்கைகளிலும் இறந்திருந்தனர். பிரெஞ்ச்
தரப்பிலிருந்து 18000 பேர் பலியாகி இருந்ததாகவும் 65000 பேர்
காயமுற்றதாகவும் அறிவிக்கப் பட்டனர்.

ஐரோப்பிய சமூகத்தில் 10,000 பேரும், பொது முஸ்லிம்கள் 70,000 பேரும்
இப்போராட்டத்தில் கொல்லப்பட்டதாக இன்னொரு பட்டியல் கூறியது. விடுதலைப்
பெற்ற நாளிலிருந்து FLN தலைவரான அகமது பென் பெலா மக்களிடையே செல்வாக்கு
மிக்க தலைவராக உருவெடுத்தார்.இன்னொரு FLN தலைவரான பென் கத்தா தலைமையில்
மற்றொரு குழு ஆட்சிப் பதவிக்குப் போட்டியிட உடனடியாக பென் பெலாவால்
அக்குழு அடக்கி ஒடுக்கப்பட்டது. செப்டம்பர் 20ல் முழுமையான தேர்தல் நடந்து
அகமது பென் பெலா ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். தொடர்ந்து 109வது நாடாக
அல்ஜீரியா அக்டோபர் 8, 1962ல் ஐக்கிய நாடுகள் சபையில் இணைக்கப்பட்டது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக