ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Thu Aug 13, 2020 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:30 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Thu Aug 13, 2020 9:22 pm

Admins Online

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

@krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 3838410834 படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 3838410834 படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 3838410834

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jun 21, 2016 11:54 am

எங்கே போகிறோம் நாம்?

ஒரு காலத்தில், பத்தாம் வகுப்பில், 215 மற்றும் பிளஸ் 2வில், 550 மதிப்பெண் எடுத்தாலே மகிழ்ச்சியுடன், ஊரெல்லாம் சாக்லெட் கொடுத்து மகிழ்வர். ஆனால், இன்றோ, 480 - 1,170 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை முடிவை எடுக்கின்றனரே மாணவர்கள்...

மதிப்பெண் என்பது, மாணவர்களின் திறமைக்கு தரப்படுவது என்பதை தாண்டி, பெற்றோரின், கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.

இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு, தோல்வியையும் கற்றுத் தர வேண்டும்.

'வீடியோ கேம்' விளையாடும்போது, தோற்கிற நிலை வந்தால், அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தி, வேறு ஒரு புது, 'கேம்' விளையாட ஆரம்பித்து விடுகின்றனர், இன்றைய இளம் தலைமுறையினர். விளையாட்டிற்கு கூட, தோற்க கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் விபரீதமாய் ஆழப்பதிந்துள்ளது.
அக்கால பரமபத விளையாட்டில், பாம்பில் தோல்வியையும், ஏணியில் வெற்றியும் கற்றோம்.

பெற்றோர்களே... கொத்தமல்லி செடியில், தேக்கு மரத்தை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், நம் கண்மணிகள், நம் கருவேப்பிலை கொத்து என்பதை மறந்து விடாதீர். மனதிற்கு நல்ல மருந்து இடுங்கள்!

நா.கி.பிரசாத், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jun 21, 2016 11:57 am

//ஒரு காலத்தில், பத்தாம் வகுப்பில், 215 மற்றும் பிளஸ் 2வில், 550 மதிப்பெண் எடுத்தாலே மகிழ்ச்சியுடன், ஊரெல்லாம் சாக்லெட் கொடுத்து மகிழ்வர். ஆனால், இன்றோ, 480 - 1,170 மதிப்பெண் எடுத்தும் தற்கொலை முடிவை எடுக்கின்றனரே மாணவர்கள்...

மதிப்பெண் என்பது, மாணவர்களின் திறமைக்கு தரப்படுவது என்பதை தாண்டி, பெற்றோரின், கவுரவம் சார்ந்ததாக மாறிவிட்டதே இதற்கு காரணம்.

இதைத் தவிர்க்க, குழந்தைகளுக்கு, தோல்வியையும் கற்றுத் தர வேண்டும்.

'வீடியோ கேம்' விளையாடும்போது, தோற்கிற நிலை வந்தால், அந்த விளையாட்டை அத்துடன் நிறுத்தி, வேறு ஒரு புது, 'கேம்' விளையாட ஆரம்பித்து விடுகின்றனர், இன்றைய இளம் தலைமுறையினர். விளையாட்டிற்கு கூட, தோற்க கூடாது என்ற எண்ணம் அவர்கள் மனதில் விபரீதமாய் ஆழப்பதிந்துள்ளது.

அக்கால பரமபத விளையாட்டில், பாம்பில் தோல்வியையும், ஏணியில் வெற்றியும் கற்றோம். //

ம்ம்.. இந்த செய்யலை நான் கூட பார்த்திருக்கிறேன் சில பசங்களிடம் சோகம் .எப்பவுமே , எல்லாத்திலேயுமே ஜெயித்துக்கொண்டே இருக்க முடியாது என்று குழந்தைகளுக்கு புரிய வைக்கணும் நாம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jun 28, 2016 11:53 am

சின்ன வேலையோ, பெரிய வேலையோ...

கோடிகளில் ஒப்பந்தம் எடுத்து, வீடுகள் கட்டித்தரும் ஒப்பந்ததாரர் அவர். சமீபத்தில், ஒரு இடத்தில், துணைக்கு ஒரு ஆளை வைத்து, சிறிய வேலையை செய்தபடி இருந்ததை. ஆச்சரியமாக பார்த்தேன்.
'உடைஞ்சு போன, பழைய, 'ஸ்லாப்'பை எடுத்துட்டு, புதுசு போடணும்ன்னாங்க.

இம்மாதிரி சின்ன சின்ன வேலைகளுக்கு, 'பிட்' வேலைன்னு பேரு. 3,000 முதல், 10,000 ரூபாய் வரைக்குமான, 'பட்ஜெட்'ல நடக்கும். ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சம் அரை நாளில் முடிந்து விடும். 'மெட்டீரியல்' மற்றும் ஆள் கூலி போக, நமக்கு, 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.

'பெரிய வாய்ப்பு எப்போதாவதுதான் வரும்; சின்ன வேலைகள் எப்போதும் இருக்கும். வேலையில் சின்ன வேலை, பெரிய வேலைன்னு எதுவும் கிடையாது. வேலை செய்துக்கிட்டிருக்கணும்; பணம் சம்பாதிச்சிட்டிருக்கணும்; அதுதான் முக்கியம்...' என்று, உழைப்பின் மகத்துவத்தை கூறினார்.
எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய மனோபாவம்; கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையும் கூட!
செய்வோமா?

எஸ்.ஆனந்த், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jun 28, 2016 11:53 am

வாழ்க்கைக்கு உதவாத பொறியியல் பட்டம்!

என் உறவுக்கார பெண், மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்று, வேலைக்கு முயற்சி செய்து வருகிறாள். சமீபத்தில், அவளுக்கு பிரபல நிறுவனத்திடமிருந்து, பி.பி.ஓ., பணிக்கு, நேர்காணல் அழைப்பு வந்தது.

மென்பொருள் துறையில், வேலை கிடைக்காததால், பி.பி.ஓ., வேலைக்காவது முயற்சி செய்வோம் என்று, அப்பெண் நேர்காணலில் கலந்து கொண்டாள். அவளுக்கு துணையாக, நானும் சென்றிருந்தேன். அங்கு, எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

மென்பொருள் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற பலர், அந்த நேர்காணலுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது, தாங்கள் படித்த துறையில் வேலை எதுவும் கிடைக்காததால், இந்த நேர்காணலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.

'பி.பி.ஓ., வேலையும் கிடைக்காவிட்டால், என்ன செய்வீர்கள்...' என்ற என் கேள்விக்கு அவர்களிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.

மென்பொருள் துறையில், பொறியியல் பட்டம் பெற்றால், அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில், ஏதோ ஒரு சுமாரான கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெற்று, இன்று வேலைக்காக அல்லாடும் இவர்களின் நிலையை கண்டு, மிகவும் வருந்தினேன்.

சில நாடுகளில் குடும்பத்துக்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்றுவர். இன்று, நம் நாட்டிலோ, குடும்பத்திற்கு ஒருவர், பொறியியல் பட்டதாரி!

மாணவர்களே... பொறியியல் மோகத்திலிருந்து வெளியே வாருங்கள்!

ஜெ.கண்ணன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jun 28, 2016 11:54 am

ஓட்டுப் போட கை நீட்டினால்...

தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஜூன் மாதம் சம்பளம் வாங்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், தேர்தல் அன்று விடுமுறை அளித்ததற்கு, சம்பளத்தை, 'கட்' செய்திருந்தனர்.
எங்கள் நிறுவன மேனேஜரிடம், 'அரசு, சம்பளத்தோடு தானே விடுமுறை அளித்தனர்; ஏன் சம்பளம் தரவில்லை?' என்று எல்லாரும் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா...

'நானும் முதலாளியிடம் கேட்டேன். அவர், எல்லாரும் இலவசமாகவா ஓட்டு போட்டாங்க... ஆயிரம் ஆயிரமா பணத்தை வாங்கிட்டு தானே ஓட்டு போட்டாங்க. அரசியல்வாதிகள் தரும் பணம் எல்லாம், எங்களைப் போன்ற தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி தானே... தேர்தலில் லாபம் அடைஞ்சிட்டு, சம்பளம் வேறு கேட்கின்றனரா...' என்றாராம் முதலாளி.

அவர் கூறிய பதில், செருப்பால் அடித்தது போல இருந்தது. ஓட்டு போட கை நீட்டி காசு வாங்கினால், இப்படியெல்லாம் அசிங்கமும், அவமானமும் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கடைசி வரை போராடியும், சம்பளம் தரவில்லை எங்கள் முதலாளி.

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Wed Jul 06, 2016 10:43 pm

சிங்கர்!

சிறுவர்கள் பாடும், திரையிசை பாடல்கள் நிகழ்ச்சி, இப்போது, அனைத்து, 'டிவி' சேனல்களிலும் ஒளிப்பரப்படுகிறது.

மழலை குரலில் அவர்கள் பாடுவதைக் கேட்கும் போது, மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சில குழந்தைகளின் இசை ஞானமும், குரல்களின் வசீகரமும், உணர்ச்சி பாவனைகளும், நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. குரல் தேர்வுக்கு பிள்ளைகளுடன், பெற்றோரும் கடுமையான பயிற்சி மேற்கொள்கின்றனர்; இது, இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம்.

ஆனால், தற்போது உள்ள பாடல்களில் பெரும்பாலானவை தரமானவை இல்லை என்றாலும், சில விரல் விட்டு எண்ணக்கூடிய, நல்ல பாடல்களும் இருக்கின்றன. பெற்றோரும், போட்டி நடத்தும், 'டிவி' சேனல்களும், தலைமை தாங்குபவர்களும் (நீதிபதிகள்) இத்தகைய நல்ல பாடல்களை தேர்வு செய்து, குழந்தைகளுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தில், பெற்றோரை தவிர, வேறு யாருக்கும் அதிகமான அக்கறை இருக்க முடியாது. அதனால், தன் பிள்ளை இறுதி சுற்றுக்கே சென்றாலும், ஏன், முதல் பரிசை தவற விடும் வாய்ப்பு ஏற்பட்டாலும், தரமற்ற பாடல்களை பாடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும், பெற்றோர்.
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிட, நம் பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் மண்ணின் மகிமையை நிலைநிறுத்த, நம்மால் இயன்ற, சிறு உதவியாக இதைச் செய்யலாமே!

பரிசு பொருட்களுக்காக ஒரு தலைமுறையினரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதை நிறுத்தி, எதிர்கால சிற்பிகளை, அழகான, உயிரோட்டம் உள்ள சிலைகளை வடிக்க உதவி செய்வது, நம் சமுதாய பொறுப்பு! செய்வீரா!

மு.தமிழரசி, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Wed Jul 06, 2016 10:44 pm

இரவில் ரயில் பயணமா?

இரவில், ரயிலில் பயணிக்கும் போது, 'இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டு விடுவோமோ...' என்ற கவலையும், பயமும் ஏற்படுகிறதா? இனி, அந்தக் கவலை வேண்டாம்.

உங்கள் மொபைல் போனிலிருந்து, 139 என்ற எண்ணுக்கு, 'டயல்' செய்யுங்கள். அதில் வரும் வழிமுறைகளின்படி, பயண டிக்கெட்டில் இருக்கும் உங்கள் பி.என்.ஆர்., எண்ணை பதிவு செய்யுங்கள்.

நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும், உங்களுக்கு, எச்சரிக்கை அழைப்பு வரும். இதனால், நீங்கள் இறங்க வேண்டிய இடம் குறித்து கவலையில்லாமல், நிம்மதியாக பயணம் செய்யலாம்!

ஹெச்.டி.முனவர் ஜஹான், மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Wed Jul 06, 2016 10:45 pm

'மெமரி கார்டு' விபரீதம் உஷார்!

சமீபத்தில், பஸ்சில் பயணம் செய்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர், கலாட்டா செய்தபடி வந்தனர். அப்போது, ஒரு மாணவன், தன் மொபைல்போனில், யாரோ ஒரு மாணவியிடம், 'ஏய்... நான் உன்கிட்ட கொடுத்த, 'மெமரி கார்டை' மொபைலில் போட்டு பாத்திடாதே... அது, என் நண்பனோடது. அந்த ராஸ்கல், அதில, 'பலான பிட்' படத்தை வச்சிருக்கானாம். அந்த பன்னாடை, இப்பத் தான் அதை என்கிட்ட சொன்னான். ப்ளீஸ்... என்னை தப்பா நினைக்காதே... தயவுசெய்து அதைப் பாத்திடாதே... நாளைக்கு வந்து அதை வாங்கிக்கறேன்...' என்று பலமுறை மன்னிப்பு கேட்டு, பேச்சை முடித்தான்.

அவனது செயலை கண்ட நான், 'பரவாயில்லையே... இவன் ரொம்ப நல்ல பையன் போலிருக்கிறதே...' என்று நினைத்தேன்.

அப்போது, அவனது நண்பர்கள், 'என்ன மேட்டருடா?' என்று கேட்க, அந்த மாணவன், 'டேய் மாப்ளே... இதெல்லாம், 'பிகரை' கவிழ்க்கிற டெக்னிக்குடா... பொண்ணுங்ககிட்ட, மெமரி கார்டில், 'பலான' படத்தை, 'டவுன்லோடு' செய்து கொடுத்துட்டு, 'அதை பாக்காதே'ன்னு 'பீலா' விட்டா கண்டிப்பாக அதை பாப்பாங்க. அப்புறம், ஈசியா நாம அவங்களை கவிழ்த்திடலாம்...' என்றான்.

அப்போது தான் தெரிந்தது, அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று!
ஆண் நண்பர்களிடம் பழகும் பெண்களே... உஷாரா இருங்க; மெமரி கார்டில், 'பலான' வெடிகுண்டு இருக்கும்!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Wed Jul 06, 2016 10:46 pm

@krishnaamma wrote:'மெமரி கார்டு' விபரீதம் உஷார்!

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by ராஜா on Thu Jul 07, 2016 3:12 am

இதெல்லாம் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வந்த விஷயம் தானே , அப்ப வீடியோ கேசட் கொடுத்துட்டு பிறகு வந்து வாங்குவார்கள் , இப்ப மெமரி கார்டு .... பெண்கள் தான் உஷாரா இருக்கணும்....

இந்தக்காலத்தில் சில விஷயங்களை போன தலைமுறை போல மூடி மறைக்க முடியாது ஆண்கள் ஆனாலும் பெண்கள் ஆனாலும் இவற்றை பற்றி தெரிந்துகொள்ள நேரிட்டாலும் just like that ஒதுக்கி தள்ளிட்டு போயிடனும்..

இன்று நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி பார்த்தேன் ஒரு சிறு பெண் Btech படிக்கிறாளாம் நான் எது பண்ணிலாலும் எங்க அம்மா "அவ செய்தா சரியா தான் இருக்கும்னு நம்புவாங்க , அதனால் நான் சரியா தான் செய்வேன் " என்று சொல்லுவதை கேட்கும் போது உண்மையிலேயே ரொம்ப பிடித்திருந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31305
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by சிவனாசான் on Thu Jul 07, 2016 9:20 am

எல்லா மெம்மரி பதிவுகளும், அறிவார்தமான அவசியமான பதிவுங்க >>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4456
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by பாலாஜி on Thu Jul 07, 2016 12:43 pm

@krishnaamma wrote:ஓட்டுப் போட கை நீட்டினால்...

தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஜூன் மாதம் சம்பளம் வாங்கும் போது, அதிர்ச்சியாக இருந்தது. காரணம், தேர்தல் அன்று விடுமுறை அளித்ததற்கு, சம்பளத்தை, 'கட்' செய்திருந்தனர்.
எங்கள் நிறுவன மேனேஜரிடம், 'அரசு, சம்பளத்தோடு தானே விடுமுறை அளித்தனர்; ஏன் சம்பளம் தரவில்லை?' என்று எல்லாரும் கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா...

'நானும் முதலாளியிடம் கேட்டேன். அவர், எல்லாரும் இலவசமாகவா ஓட்டு போட்டாங்க... ஆயிரம் ஆயிரமா பணத்தை வாங்கிட்டு தானே ஓட்டு போட்டாங்க. அரசியல்வாதிகள் தரும் பணம் எல்லாம், எங்களைப் போன்ற தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி தானே... தேர்தலில் லாபம் அடைஞ்சிட்டு, சம்பளம் வேறு கேட்கின்றனரா...' என்றாராம் முதலாளி.

அவர் கூறிய பதில், செருப்பால் அடித்தது போல இருந்தது. ஓட்டு போட கை நீட்டி காசு வாங்கினால், இப்படியெல்லாம் அசிங்கமும், அவமானமும் தான் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
கடைசி வரை போராடியும், சம்பளம் தரவில்லை எங்கள் முதலாளி.

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
மேற்கோள் செய்த பதிவு: 1213003

முத(லை)லாளி அண்ணே சில கேள்வி  

அனைவருமே காசு வாங்கி ஒட்டு போட்டனர் என்பதை எப்படி முடிவு செய்தீர் .

தொழிலதிபர்களிடம் வாங்கிய நிதி  அப்படி என்றால் , ஆட்சி ஏற்றவுடன் அதன்முலம் என்ன  சலுகை உங்களுக்கு கிடைத்தது  .

இது அராஜகம் ....

ஆனால் நீங்க காசு வாங்கி ஒட்டு அளித்தீர் என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர் . எனவே உங்களுக்கும் அவரை குறை சொல்ல தகுதி இல்லை .
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jul 12, 2016 10:20 am

அடிக்கடி, 'சிம்' மாற்றினால் ஆபத்து!

மொபைல்போன் எண்ணை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவர், என் நண்பர். ஒவ்வொரு கம்பெனியும், 'மூன்றிலிருந்து, ஆறு மாதங்கள் இலவசமாக பேசலாம் அல்லது 'ரேட் கட்டர்' இல்லாமலேயே, குறைந்த கட்டணத்தில் பேசலாம்...' என, சலுகை தருவதை பயன்படுத்தி, மொபைல் எண்களை மாற்றுவார். குறிப்பிட்ட கால அளவு முடிந்ததும், அதை, எறிந்து விடுவர்.

சமீபத்தில், இவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, தகவல் தெரிவிக்க, நண்பரை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. காரணம், அதற்கு முதல் நாள் தான், புதிய எண்ணுக்கு மாறி இருந்தார். வீட்டில் யாருக்கும் புதிய எண் தெரியவில்லை. பின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன், அக்குழந்தை காப்பாற்றப்பட்டது.
நீண்ட நேரம் கழித்து, நடந்த விஷயம் எதுவும் தெரியாததால், யாருடனோ போனில் சிரித்து பேசியபடி, வீட்டுக்கு வந்த நண்பருக்கு, மனைவி மற்றும் உறவினர்கள் என, அனைவரும் அர்ச்சனை செய்ய, அப்போது தான் தன் தவறை உணர்ந்தார்.

இப்படி சலுகையை பயன்படுத்தும் நபர்கள், எப்போதும் நிலையான ஒரு எண்ணுடன் இருப்பது அவசியம்.
தற்போது, சாதாரண விலையில் கிடைக்கும் மொபைல்போனில் கூட, இரண்டு, 'சிம்' பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. ஒரு, 'சிம்' சலுகைக்கும், மற்றொரு, 'சிம்' நிரந்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவசரத்துக்கு பயன்படும்!

எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jul 12, 2016 10:22 am

பஸ் ஸ்டாப் அறிவிப்பு!

சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர்.

இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?

எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Jul 12, 2016 10:23 am

@krishnaamma wrote:பஸ் ஸ்டாப் அறிவிப்பு!

சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர்.

இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?

எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
மேற்கோள் செய்த பதிவு: 1215258

வரவேற்கத் தக்கது புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62360
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 4 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum