ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:09 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by ayyasamy ram Today at 6:26 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

Admins Online

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

@krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 3838410834 படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 3838410834 படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 3838410834

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Mon Dec 19, 2016 11:26 pm

@M.Jagadeesan wrote:சென்னையில் வசிப்பவர்கள் பூச்செடியை எங்கு நடுவது?
மேற்கோள் செய்த பதிவு: 1229315

நலமா ஐயா?...........உங்கள் பதிவுகளுக்கான என் பதில்கள் பார்த்தீர்களா ஐயா? புன்னகை
.
.
.
பிளாட் என்றாலும், பால்கனி இல் வைக்கலாமே ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by M.Jagadeesan on Tue Dec 20, 2016 10:35 am

நான் நலமாக இருக்கின்றேன் !

நீங்கள் நலமா ? உங்கள் கண் நலமா ?

இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு இணைய இணைப்புக் கிடைத்தது .இன்னும் உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை . பார்த்தவுடன் பதில் போடுகிறேன் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5340
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2472

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Dec 20, 2016 11:03 am

@M.Jagadeesan wrote:நான் நலமாக இருக்கின்றேன் !

நீங்கள் நலமா ? உங்கள் கண் நலமா ?

இரண்டு நாட்களுக்கு முன்புதான் எனக்கு இணைய இணைப்புக் கிடைத்தது .இன்னும் உங்கள் பதிவுகளை பார்க்கவில்லை . பார்த்தவுடன் பதில் போடுகிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1229331

நலம் ஐயா, கண் இப்போது நன்றாக தேவலாம் ...........பொறுமையாக படியுங்கள் ஐயா ! புன்னகை ......இந்த முறையும் மழை புயல் ரொம்பவும்தான் புரட்டிப் போட்டுவிட்டது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Dec 20, 2016 11:45 am

பெற்றோரே... பிள்ளைகளை நம்புங்கள்!

சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை குடும்பத்துடன் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, என் மகளைத் தேடி வந்தனர், ஒரு தம்பதி. என் மகளை அழைத்த அப்பெண், 'எங்கடி என் பொண்ணு?' என்று கோபமாக கேட்டாள். 'அவ இங்க வரலையே ஆன்டி...' என்று என் மகள் சொன்னதும், 'என்னடி விளையாடுறியா... என் பொண்ணை, எவனோடு அனுப்பி வச்ச... காலையில போனவ இன்னும் வீட்டுக்கு வரல; உங்கூடத்தான் சினிமாவுக்கு போறதா சொன்னா... அவ, எங்க இருக்கான்னு சொல்லு...' என்று கத்தினாள்.

இதனால், கோபமான நான், 'காலையிலிருந்து என் பொண்ணு வீட்ல தான் இருக்கா; அவ எங்கேயும் வெளியே போகல. உங்க பொண்ணு எங்க போனாளோ அங்கே போய் தேடுங்க...' என்று சத்தம் போட்டதும், கண்ணீரோடு கிளம்பிப் போனவள், எங்கள் தெருவிலுள்ள அவள் மகளின் வகுப்பு தோழியரின் வீட்டிலும் தேடிய பின், அவள் வீட்டுக்கு திரும்பியுள்ளாள்.
வீட்டில் மகள் இருக்கவே, 'எங்கே போனாய்.
..' என்று கேட்டுள்ளாள். என் மகளின் பெயருடைய வேறொரு தோழியுடன் சினிமாவுக்கு போனதாக கூறியுள்ளாள். இதை புரிந்து கொள்ளாமல், மகளை சந்தேகப்பட்டதுடன் அல்லாமல், அவள் யாருடனோ சென்று விட்டாள் எனக் கூறி, தன் மகளையே அசிங்கப்படுத்தி விட்டாள், அப்பெண்.

பெற்றோரே... முதலில் உங்கள் பிள்ளைகளை நம்புங்கள். பெண் பிள்ளைகள் விஷயத்தில், அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்காதீர்கள்!

எஸ்.தட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Dec 20, 2016 11:47 am

பிரசவத்திற்கு கால் டாக்சி இலவசம்!

எங்கள் பகுதியில் ஓடும் கால்டாக்சி ஒன்றில், 'பிரசவத்திற்கு இலவசம்' என்று, எழுதியிருந்தது. முன்பு, ஆட்டோக்களில் தான் இப்படி எழுதி இருப்பர். அதனால், கால் டாக்சி உரிமையாளரிடம் கேட்ட போது, 'பெரும்பாலான ஏழை கர்ப்பிணி பெண்கள் ஆட்டோவில் தான் பயணம் செய்கின்றனர்; ஆட்டோக்களோ சாலையில் குலுங்கி குலுங்கி செல்கிறது. டாக்சி என்றால் குலுங்காமல் செல்லும். கர்ப்பிணி பெண்களுக்கு, இது, சவுகரியமாக இருக்கும்.

'தினமும், ஒரு கர்ப்பிணி பெண்ணையாவது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். ஏதோ என்னால் ஆன உதவி...' என்றார்.

அவரின் நல்ல உள்ளத்தை வாழ்த்தினேன். இதுபோல, மற்ற கால் டாக்சி உரிமையாளர்களும், உதவ முன் வரலாமே!

யோ.ஜெயந்தி, குனியமுத்தூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Tue Dec 20, 2016 11:48 am

தேவை அலாரம்; கேமரா அல்ல!

சமீபத்தில், என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, வீட்டின் பின்புற கதவை, யாரோ திறந்து மூடியதும், 'கிணு கிணு...' என்ற அலார ஒலி கேட்டது. இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, 'இதன் பெயர், 'பர்க்ளர்' அலாரம். அமெரிக்காவில் உள்ள என் மகன் வீட்டிற்கு சென்றிருந்த போது, அங்கு எல்லா வீடுகளிலும் இந்த அலாரத்தை பொருத்தி இருந்தனர். இக்காலகட்டத்திற்கு இது ரொம்ப அவசியம்.

'இப்போது எங்கு பார்த்தாலும் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கேமரா பொருத்தி என்ன பயன்? புகைப்படத்தை வைத்து, போலீசார் திருடர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் வேறு மாநிலத்துக்கு ஓடி விடுவர் அல்லது நகைகளை விற்றோ, அடகு வைத்தோ விடுவர்.

'வீட்டைச் சுற்றி, மின்சார வேலியும் அமைக்க முடியாது; காரணம், யாராவது அதில் சிக்கி, ஏதேனும் ஆகிவிட்டால், நம் கதி அதோகதி தான்.

'இதை தவிர்க்க, 'பர்க்ளர்' அலாரத்தில் இரு விதமான, 'மெனு'க்கள் இருக்கின்றன. தீ விபத்து ஏற்படும் போதும், திருடர்கள் கதவை திறந்தோ, ஜன்னலை உடைத்தோ, உள்ளே வரும் போதும், அலாரம் உச்ச ஸ்தாயியில் ஒலித்து, திருடர்களை விரட்டி விடுகிறது.

'கம்பெனியின் அலுவலகத்திலும் அலார சத்தம் உடனடியாக பதிவாகும். இதன் மூலம் அவர்கள், போலீசுக்கு தகவல் தருவர். அலாரம் இருப்பது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவதாலும், அடிக்கடி சோதனை செய்வதாலும், திருடர்கள் நம் வீட்டுக்கு வர யோசிப்பர். மேலும், திருடர்கள் வெளியில் தெரியும், 'ஸ்பீக்கரை' அல்லது 'ஒயர்'களை சிதைத்தாலும், உடனே, கம்பெனிக்காரர்களுக்கு எச்சரிக்கை சென்று விடும்...' என்று விளக்கினார்.

திருட்டை தவிர்க்க, அலாரம் பொருத்துதல் நல்லது தானே!

ஏ.ஸ்ரீவாஸ், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Fri Dec 30, 2016 9:52 pm

இப்படியும் ஒரு விழா!

சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர்.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில நிமிடங்களில், 'மப்டி'யில் மூன்று காவலர்கள் வந்தனர்.

இரு சக்கர வாகனத்தில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய சாகசம், அனைவரையும் அசர வைத்தது. 'இவர்கள் மட்டுமல்ல, பெண் காவலர்களுக்கும் இது போன்ற சாகசங்கள் அத்துப்படி...' என்றபடி, இரு பெண்களை அழைத்தார், காவல்துறை அதிகாரி.

அவர்கள், பெண்களிடம், எவ்வாறு திருடர்கள் சங்கிலி பறிப்பர் என்பதை, பல்வேறு விதமாக நிகழ்த்திக் காட்டி, அதிலிருந்து எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது, எவ்வாறு மற்றவரை உதவிக்கு அழைப்பது மற்றும் எப்படி எதிரியை தாக்குவது என்பதைப் பற்றியும் விளக்கினர்.

இறுதியில், அபார்ட்மென்ட்களில் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றியும், அது சம்பந்தமான தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

இவை அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. மற்ற அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாமே!

டி.தவமணி, பெங்களூரு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Fri Dec 30, 2016 9:58 pm

அர்த்தமுள்ள புத்தாண்டு கொண்டாட்டம்!

கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று, என் நண்பன் போன் செய்து, 'உடனே புறப்பட்டு வா... ஆஸ்பத்திரிக்கு போகணும்...' என்று சொல்ல, என்னமோ ஏதோவென நினைத்து, அவசர அவசரமாக, அவன் வீட்டுக்கு சென்றேன்.

ஆனால், அவனோ, பிஸ்கட் பாக்கெட், பிரட், வாட்டர் பாட்டில்களை அட்டை பெட்டிகளில், அடுக்கியவாறு இருந்தான்.

'எதுக்கு என்னை அவசரமா கூப்பிட்டே... இதையெல்லாம் எங்கே கொண்டு போகப் போற...' என்றேன்.
'புத்தாண்டுக்கு செலவுக்கு, எங்க அப்பா, 2,000 ரூபாயும், அம்மா, 1,000 ரூபாயும் தந்தாங்க; என்கிட்ட கொஞ்சம் பணம் இருந்துச்சு. எல்லா பணத்தையும் போட்டு இதெல்லாம் வாங்கினேன். அரசு ஆஸ்பத்திரிக்கு போயி, ஏழை நோயாளிகளுக்கு இதை கொடுத்துட்டு வருவோம், வா...' என்றான்.
புத்தாடை, மது, வெடி என்று காசை வீணடிக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், என் நண்பன் விடிவெள்ளியாக தெரிந்தான்.

புத்தாண்டு கொண்டாடுவோர், இதுபோன்ற சேவையில் ஈடுபடலாமே!

எம்.வடுகநாதன், வேதாரண்யம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Fri Dec 30, 2016 9:59 pm

அன்பளிப்பு கொடுக்க போகிறீர்களா?

சமீபத்தில், என் சகோதரி மகளுக்கு, குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, பலரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். வழக்கமாக, குழந்தைக்கு வேண்டிய, பேபி ஆயில், சோப் மற்றும் டிரஸ் உள்ளிட்ட பொருட்கள், பரிசாக வந்தன. அப்போது, ஆசிரிய நண்பர் ஒருவர் அளித்த பரிசுப் பொருள், மிகவும் பயனுள்ளதாகவும், மறக்க முடியாத பொருளாகவும் இருந்தது.

அது, வசம்பு, தேன், குழந்தையின் கழுத்தில் அணிவிக்கும் சிறிய பாசி மணி மற்றும் கையில் அணிவிக்கும் திருஷ்டி கறுப்பு வளையல்கள் போன்றவைகள்!

சமய சஞ்சீவி போன்று தேடிப் பிடித்து, அவற்றை வாங்கிக் கொடுத்த நண்பரை, பாராட்டாதவர்கள் இல்லை. பரிசு என்றால் இதுவல்லவோ!

ஜி.நிர்மலா கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Thu Jan 12, 2017 10:31 am

வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!

என் தோழிக்கு, திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகியும், குழந்தை இல்லை; மருத்துவரிடம் பரிசோதனை செய்ததில், 'பிரச்னை எதுவும் இல்லை; விரைவில், குழந்தை பிறக்கும்...' என்று, கூறியுள்ளார். ஆனால், புகுந்த வீட்டினரோ, அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவளை, ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரோ, 'இதற்கு முன், இவள் ஒரு கருவை கலைத்து இருக்கிறாள்; அந்த பாவம் தான், இப்போது, இவளுக்கு சாபமாக உள்ளது...' என்று, வாய்க்கு வந்ததை உளறி, பரிகாரம் என்ற பெயரில், பணத்தையும் பிடுங்கியுள்ளார்.

அவர் சொன்னதை நம்பிய தோழியின் புகுந்த வீட்டினர், 'நீ, திருமணத்துக்கு முன் தவறு செய்துள்ளாய்...' என்று சந்தேகப்பட்டு கூறி, சண்டை போட்டு, விவாகரத்து வரை சென்றுள்ளனர். பின், உறவினர்கள் பேசி, சமாதானப்படுத்தி, சேர்த்து வைத்துள்ளனர்.

ஜோதிடர்களே... வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இம்மாதிரி கண்டதைச் சொல்லி, அடுத்தவர் வாழ்க்கையை கெடுத்து, பரிகாரமே இல்லாத பாவத்தை சம்பாதிக்காதீர்!

பிரேமா கார்த்திகேயன், சென்னை.

@krishnaamma wrote:வருமானத்துக்காக பொய் சொல்லாதீர்!

மேற்கோள் செய்த பதிவு: 1231072

பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Thu Jan 12, 2017 10:32 am

அதிசய பிறவி!

சமீபத்தில், இரவு பேருந்தில் சொந்த ஊருக்கு பயணித்த போது, என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, தண்ணீர் குடித்த போது, என்னிடம் திரும்பி, 'வேண்டுமா...' என்று கேட்டார். தாகமாயிருந்ததால், 'கொடுங்கள்...' என்றேன். அவரோ, புதிய பாட்டிலை நீட்ட, 'வேணாம்; ஓப்பன் செய்த பாட்டிலையே கொடுங்க...' என்றேன்.
'இல்ல; இது, எச்சில் செய்தது. உங்களை போன்றவர்களுக்கு கொடுப்பதற்கென்றே, இன்னொன்றை வாங்கி வைத்திருக்கேன்...' என்று கூறி கொடுத்தார். நான், ஆச்சரியமாக அவரைப் பார்க்க, 'எப்போதும், ரெண்டு, மூணு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி வைத்து,

தேவைப்படுவோருக்கு கொடுப்பேன். அதே போன்று, கைப்பையில், 'ஆஸ்ப்ரின்' மாத்திரைகள், மிட்டாய்கள் வைத்திருப்பேன். யாருக்காவது, திடீரென்று மாரடைப்பு வந்தாலோ, சர்க்கரை நோயாளிகளுக்கு, மயக்கம் ஏற்பட்டாலோ கொடுக்க பயன்படும்...' என்றார்.

எவ்வகையிலாவது, பிறருக்கு உதவ வேண்டுமென, முன்னேற்பாட்டோடு இருக்கும் அப்பெண்ணைப் பார்த்த போது, பிரமிப்பாக இருந்தது. இவரைப் போன்றோர், அதிசய பிறவிகள் தானே! நாமும், ஏதாவது ஒரு வகையில், தினமும் ஒருவருக்காவது உதவ வேண்டுமென்பதை, புத்தாண்டு சபதமாக கொண்டுள்ளேன்.

மல்லிகா அன்பழகன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Thu Jan 12, 2017 10:34 am

@krishnaamma wrote:அதிசய பிறவி!

மேற்கோள் செய்த பதிவு: 1231074

எல்லாம் சரிதான் , ஆனால் பிஸ்கட் திருடர்கள் உள்ள ஊர் ஆயிற்றே இது? சோகம் .......'உங்களுக்கு என்று தனியாக வாங்கி வைத்திருக்கிறேன்' என்று யாராவது சொன்னால் முதலில் பயம் தானே வருகிறது...காலம் கெட்டு கிடக்கிறதே?...............நல்லது செய்பவர்களையும் சந்தேகிக்கத் தோன்றுகிறதே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Thu Jan 12, 2017 10:35 am

சபாஷ் கிராமம்!

சமீபத்தில், என் நண்பனை சந்திக்க, அவனது கிராமத்திற்கு சென்றிருந்தேன். ஊருக்குள் நுழைந்ததும், முக்கிய இடத்தில் அனைவரது பார்வையிலும் படும்படி, கொட்டை எழுத்துக்களில், 'மாட்டின் கொம்புகளில், கட்சி கொடியின் வண்ணத்தை பூசுபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அத்துடன், மாட்டின் கொம்பில், உள்ள அவ்வண்ணத்தை அழிக்கா விட்டால், அவர்கள் வீட்டு விசேஷத்தில், ஊர்க்காரர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்...' என்ற பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதுபற்றி, என் நண்பனிடம் கேட்ட போது, 'தங்களது மாடுகளின் கொம்புகளில், தாங்கள் சார்ந்த கட்சிக் கொடியின் வண்ணத்தை பூசுவதால், அவர்கள் போடும் அரசியல் சண்டையில், அப்பாவி மாடுகளை வெறித்தனமாக தாக்குகின்றனர். இதை தடுக்கவே, எங்கள் கிராமத்தில், இப்படி, ஊர் கட்டுப்பாடு விதித்திருக்கிறோம்...' என்றான்.

விவசாயம் மற்றும் வண்டி இழுக்க என, நமக்காக உதவும் மாடுகளை, அரசியல் காரணம் காட்டி, வதை செய்வது, தடுக்கப்பட வேண்டிய செயல் தான்; அதை தடை செய்த அக்கிராமத்தினரை, மனமாரப் பாராட்டினேன்.

எஸ்.தங்கமுடிராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by krishnaamma on Thu Jan 12, 2017 10:37 am

@krishnaamma wrote:சபாஷ் கிராமம்!

மேற்கோள் செய்த பதிவு: 1231076

தலையெழுத்து............இவங்க போடும் சண்டை போறது என்று மாட்டை வைத்து வேறு சண்டையா?.........இதுக்கு ஒரு போர்டு, பஞ்சாயத்து.....அதுக்கு ஒரு சபாஷ் வேறு...........கடவுளே !..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்! - Page 6 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 21 Previous  1 ... 5, 6, 7 ... 13 ... 21  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum