ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 10:11 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by kandansamy Today at 9:51 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 7:43 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

» பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
by krishnaamma Yesterday at 8:24 pm

» இப்போ போறேன், திரும்பி வருவேன்: குட்பை சொன்ன ட்ரம்ப்
by krishnaamma Yesterday at 8:16 pm

» பெற்றோரால் ஏற்க முடியாத உண்மை!
by krishnaamma Yesterday at 8:13 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by சக்தி18 Yesterday at 7:58 pm

» சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தவத்தின் ஆற்றலால் எமனையும் வெல்லலாம்!
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை புரட்டிப் போட்ட புரெவி புயல்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» இணையத்தில் பிரம்மாண்டமாக தமிழ் மொழி விழா கொண்டாடும் சிங்கப்பூர் தமிழர்கள்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» இஸ்லாமிய சிந்தனைகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

Admins Online

காசநோய்

Go down

காசநோய் Empty காசநோய்

Post by ksikkuh on Thu Nov 30, 2017 4:33 pm



1காசநோய் என்றால் என்ன?
‘டி.பி., ‘ எனப்படும் காசநோய், ஒரு தொற்றுநோய். அது, ‘மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ எனப்படும், பாக்டீரியாவால் உருவாகிறது. காசநோய் உள்ள நபரிடம் இருந்து, காற்றின் மூலம், இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது.
2இதில் வகைகள் உள்ளதா?
இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, நுரையீரல் சம்பந்தப்பட்ட, காசநோய். மற்றொன்று, நுரையீரலுக்கு தொடர்பில்லாத, காசநோய் (எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்). இது, நுரையீரல் அல்லாத, மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயைக் குறிக்கிறது.
3காசநோயின் பொதுவான அறிகுறிகள்?


மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இருமல், சில வேளைகளில் ரத்தம் கலந்த சளி வெளியேறுதல், காய்ச்சல், குறிப்பாக இரவு நேரங்களில், எடை குறைவு, பசியின்மை போன்றவை. எச்.ஐ.வி., (எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ்) தாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். அவர்களுக்கு துவக்கத்தில், காசநோய் தான் ஏற்படும். காரணம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். எச்.ஐ.வி., நோய் உள்ள நபருக்கு, ‘டி.பி.,’ கிருமி தொற்றும்போது, மற்ற நபர்களை விட, இவர்களில் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, ஆறு மடங்கு அதிகம்.

4 சிறுபிள்ளைகளுக்கு காசநோய் எளிதில் பரவும் அபாயம் உண்டாமே?
ஆம். காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும், மருத்துவ வசதிகள் குறைவாகவும், சுற்றுப்புறம் சுகாதாரமாக இல்லாத இடங்களில் வாழும் குழந்தைகளுக்கும் காசநோய் தொற்று, எளிதில் ஏற்பட்டுவிடும்.

5வீட்டு விலங்குகளாலும் காசநோய் பாதிப்பு ஏற்படுமா?
‘மைக்கோ பாக்டீரியம்’ கிருமி தாக்கியுள்ள விலங்கின் பால், இறைச்சியை உண்ணுவதாலும், நோயுற்ற விலங்கின் சுவாசம் நேரடியாக மனிதன் மீது படுவதாலும், அதன் நீர்த் திவலை மற்றும் சளித்திவலை மனித சுவாசத்திற்குள் செல்வதாலும், காசநோய் பரவும்.
6காசநோய் இருப்பதை எப்படி கண்டறிவது?
காசநோயை கண்டுபிடிக்க, சளியில் காசநோய்க்கான கிருமி உள்ளதா என, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிசோதிக்க வேண்டும். நன்றாக இருமிய பின் வரும் சளியை தான், பரிசோதனைக்கு தரவேண்டும். முக்கியமாக, சளிக்கு பதிலாக உமிழ்நீரை தரக்கூடாது. பரிசோதனைக்கு உமிழ்நீரை தந்தால் நோயை கண்டுபிடிக்க முடியாது.காசநோய்க்காக ‘டாட்ஸ்’ மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அளிக்கப்படும் சேவைகள் அனைத்தும், இலவசம்.
7 காசநோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?
காசநோய் எதிர்ப்பு மருந்துகளை, தொடர்ந்து முழு சிகிச்சை காலத்திற்கு எடுத்துக் கொண்டால், நோய் முழுமையாக குணமடையும். காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம், ௬ மாதங்களுக்கு, தொடர்ச்சியாக மருந்து எடுத்து கொள்ள வேண்டும். முழுமையான அல்லது தொடர்ச்சியாக, சிகிச்சை எடுத்து கொள்ளாத நோயாளிகளுக்கு, இந்த நோய் உயிருக்கு ஆபத்தானதாகவோ அல்லது குணப்படுத்த முடியாததாகவோ மாறிவிடும்.

8காசநோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பது எப்படி?
காச நோயாளி, வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ, எச்சில் துப்பினாலோ, அவர்களின் எச்சில் மூலம், காசநோய் பரவும். அதனால் நோயாளிகள் இருமும் போதும், தும்மும் போதும், முகத்தை மூடிக் கொள்ள வேண்டும். அங்கங்கே துப்பக்கூடாது. வீட்டில், மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும்.
9 காச நோயாளிகள், எந்தமாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?
காசநோயாளிகள் தங்களுக்கு பிடித்த எந்த வகை உணவையும் சாப்பிடலாம். குறிப்பிட்ட நபருக்கு பிரச்னை தரக்கூடிய எந்த உணவையும் தவிர்க்க வேண்டுமே தவிர, மற்றபடி ஊட்டச்சத்தான உணவுகளை உண்ண வேண்டும். காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.
10 மன அழுத்தம் கூட, காசநோய்க்கு காரணமாகிறதாமே?
மன அழுத்தம் இருந்தாலே, ஒழுங்காக சாப்பிடத் தோன்றாது. முக்கியமாக நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் ‘டி’ பற்றாக்குறை இவை எல்லாமே சேர்ந்து, வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, காசநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

காசநோய் Empty Re: காசநோய்

Post by Dr.S.Soundarapandian on Thu Nov 30, 2017 8:24 pm

காசநோய் 103459460 காசநோய் 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5443
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2910

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum