ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by மாணிக்கம் நடேசன் Today at 9:20 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 21, 2020 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

Admins Online

குழந்தைகளை சாப்பிடவைக்க 10 வழிகள்!

Reply to topic

Go down

குழந்தைகளை சாப்பிடவைக்க 10 வழிகள்! Empty குழந்தைகளை சாப்பிடவைக்க 10 வழிகள்!

Post by ksikkuh on Sat Dec 02, 2017 7:22 pm

அடம்பிடிக்கும் குழந்தைகள் இல்லாத வீடு இருக்கிறதா? அதுவும் அம்மாக்கள் சமைத்து ஊட்டிவிடுவதை, சாந்தமாக, சீராகச் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சரியான உணவுதான் ஆரோக்கியம் தரும்; நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும். ஆனால், அடிப்படையான உணவு உண்பதிலேயே பிரச்னை என்றால், என்ன செய்யலாம்?

*வீட்டில் தயாரித்த உணவை ஊட்டிவிடுவதே குழந்தைக்காகப் பெற்றோர் செய்யும் முதல் ஆரோக்கிய வழி. முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால். ஆறு மாதத்திலிருந்து தாய்ப்பாலுடன் கேழ்வரகுக் கஞ்சி, அரிசிக் கஞ்சி செய்து தரலாம்.

*ஒவ்வொரு வேளைக்கும் ஓர் உணவை அறிமுகப்படுத்த வேண்டும். காலையில் இட்லி, பொங்கல், கேசரி, கிச்சடி போன்றவை. மதியம் சாதம், பருப்பு, காய்கறிகள், மசித்த கேரட், உருளைக்கிழங்கு, சாம்பார், ரசம், தயிர் சாதம், மோர் சாதம். மாலையில் ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம் கொடுக்கலாம். ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன், முட்டையின் மஞ்சள்கரு கொடுக்கலாம். இந்த உணவுகளை மசித்துக் கொடுக்க வேண்டும்.

*ஒரு வயதுக்குப் பின் முட்டையின் வெள்ளைப் பகுதி, பசும்பால் கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு பாலில் உள்ள புரதம் அலர்ஜியை ஏற்படுத்தி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இவர்கள் பசும்பாலைத் தவிர்க்க வேண்டும்.

*ஒரு வயதுக்குப் பிறகு, அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். பற்கள் முளைக்க ஆரம்பித்ததுமே, அவர்களாக எடுத்துச் சாப்பிட வைக்கலாம்.*பெற்றோர் என்ன செய்கின்றனரோ அதையேதான் பிள்ளைகளும் பின்பற்றுவர். நாம் எந்த மாதிரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சமைக்கிறோம், எதைச் சாப்பிடுகிறோம் என்பதை குழந்தை கவனித்துக்கொண்டு இருக்கும். குழந்தை முன் ‘பீட்ரூட் பிடிக்காது’ என்றால், குழந்தையும் பீட்ரூட்டைத் தவிர்க்க தொடங்கும். எனவே, பெற்றோர் கவனமுடன் செயல்படுவது நல்லது.

* உணவு உற்பத்தியாவது எப்படி என சொல்லித் தந்து, அதன் மேல் மதிப்பை ஏற்படுத்தி, அவற்றை வீணாக்காமல் சாப்பிடவைப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது.

*சாப்பிடும்போது டி.வி-யைத் தவிர்த்து மெல்லிய இசையைக் கேட்டபடி சாப்பிட வைக்கலாம் அல்லது ஊட்டலாம். உணவு பற்றிய கதைகளைச் சொல்லலாம்.

*குழந்தைகளுக்கான உணவைத் தயாரிக்கும்போது கவனம் தேவை. அவர்களைக் கவரும் விதத்தில் உணவைத் தயாரிக்க வேண்டும். வெவ்வேறு வடிவங்களில் தோசை சுடலாம். வழக்கமான இட்லிக்குப் பதில், சிவப்பு அரிசி, கேழ்வரகு இட்லி என வெவ்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள் சேர்த்து வித்தியாசமாகக் கொடுக்கலாம்.

*பள்ளி செல்லும் குழந்தைகள் சரியாக உண்ணாமல், உணவை வீணாக்குவது வாடிக்கை. அவர்களை ஈர்க்கும் விதத்தில் சுவையான உணவாக இருந்தால், வீணாக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு, சதுர இட்லி, பொடி இட்லி, ஸ்டார் தோசை என மாற்றிக்கொடுக்கலாம். லன்ச் பாக்ஸில், சூப்பர் ஃபுட், டேஸ்ட்டி தோசை என ஜாமினால் எழுதி வைக்கலாம். அதைப் படித்ததும் ஆசையோடு சாப்பிடுவார்கள். கடலை உருண்டை, எள் உருண்டை, வீட்டில் செய்த பண்டங்கள், பழங்களை ஸ்நாக்ஸாக சாப்பிடத் தரலாம். தாளித்த மோர், நாட்டுச் சர்க்கரை சேர்த்த தயிர், லஸ்ஸி போன்றவற்றைத் தருவது நல்லது.

*வெளி உணவுகளைச் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அளவுடன் எடுத்துக்கொள்வது நல்லது. வெளியில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, `ஒரு நாளைக்குத்தானே…’ என ஜங்க் ஃபுட் வாங்கித்தராமல், நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கித் தர வேண்டும். குடும்பத்துடன் சிறுதானியத் திருவிழா, பாரம்பர்யத் திருவிழாக்களுக்குச் சென்றுவரலாம். தினை முறுக்கு, கம்பு தட்டை என சுவைக்கக் கொடுக்கலாம். பருத்திப்பால், கேழ்வரகுப் பால் போன்ற ஊட்டச்சத்து பானங்களைக் கொடுத்து பழக்கப்படுத்துவது நல்லது.

நல்லுணவும் ஆரோக்கியமும் உங்கள் கையிலே!உண்ணும் பழக்கம் கற்றுக்கொடுப்போம்!

சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கை கழுவுதல், டைனிங் டேபிள் அல்லது தரையில் உட்கார்ந்து சாப்பிடுதல் ஆகியவற்றைச் சொல்லித் தர வேண்டும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

அவசர அவசரமாக, டி.வி பார்த்தபடி, புத்தகங்களைப் படித்தபடி இல்லாமல், உணவை நன்கு கவனித்து, சுவைத்து மென்று விழுங்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum