ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உங்களுக்குத் தெரியுமா?
by T.N.Balasubramanian Today at 3:34 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by ayyasamy ram Today at 2:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» 9½ டன் லாரியை 90 மீட்டர் தூரம் இழுத்த இரும்பு மனிதன்
by ayyasamy ram Today at 2:01 pm

» செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு - மத்திய அரசு
by ayyasamy ram Today at 1:47 pm

» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
by ayyasamy ram Today at 1:23 pm

» ’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!
by ayyasamy ram Today at 1:19 pm

» மருத்துவக் கல்லூரிகளை டிச.1-க்குள் திறக்க வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
by ayyasamy ram Today at 1:11 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by T.N.Balasubramanian Today at 1:07 pm

» இந்தியா சார்பாக ஆஸ்கரில் போட்டியிட ’ஜல்லிக்கட்டு’ தேர்வு
by ayyasamy ram Today at 1:07 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by ayyasamy ram Today at 1:04 pm

» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
by ayyasamy ram Today at 1:01 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by ayyasamy ram Today at 12:58 pm

» கிராமி விருது பரிந்துரை: அதிருப்தியில் ஜஸ்டின் பீபர்
by ayyasamy ram Today at 12:53 pm

» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 12:49 pm

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 12:25 pm

» ஆலோசனை
by Guest Today at 12:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 7:11 am

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

Admins Online

மூளை உறைக் காய்ச்சல்

Go down

மூளை உறைக் காய்ச்சல் Empty மூளை உறைக் காய்ச்சல்

Post by ksikkuh on Wed Dec 06, 2017 1:20 pm
மனித உடலின் தலைமைச் செயலகம் மூளை. இதயம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே, மூளை இறந்துவிட்டால், உயிர் இருந்தும் பயன் இல்லை. அப்படிப்பட்ட மூளையைத் தாக்குவதற்கு என்றே பல நோய்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, மூளை உறைக் காய்ச்சல்.


மூளையை மூன்று உறைகள் போர்த்திப் பாதுகாக்கின்றன. அவற்றுக்கு ‘மெனிஞ்சஸ்’ என்று பெயர். இவற்றை பாக்டீரியா / வைரஸ் கிருமிகள் பாதிக்கும்போது, கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும். அதற்கு ‘மூளை உறைக் காய்ச்சல்’ (Meningitis) என்று பெயர். இது ஒரு கொடுமையான தொற்றுநோய். இதை ஏற்படுத்துகின்ற பாக்டீரியாக் கிருமிகளில் ஒன்று, ‘ஹீமோபிளஸ் இன்ஃபுளூயென்சா-பி’( Haemophilus Influenza –Type b). இந்தக் கிருமி மூளை உறையைப் பாதிக்கும்போது உண்டாகிற நோய்க்கு ‘ஹிப் மூளை உறைக் காய்ச்சல்’ என்று ஒரு தனிப் பெயரும் உண்டு. பொதுவாக, இந்த நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் உடலில் இந்த நோய்க்கு உரிய இயற்கையான எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால், உடனே நோய் தாக்குவதற்கு ஏதுவாகிறது.

நோய்ப் பரவல் மற்றும் அறிகுறிகள்:

இந்த வகை பாக்டீரியாக் கிருமிகள் மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் தங்கி, நோயை உண்டாக்கும்; இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், சளியைக் காறித் துப்புதல் ஆகியவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் வெளியாகி, காற்றின் வழியாக மற்றவர்களுக்குப் பரவும்.


இந்த நோய்க் கிருமிகள் மூளையை மட்டுமல்லாமல், தொண்டை, மூளை, இதயம், எலும்பு, ரத்தம் என்று பல பகுதிகளைப் பாதிக்கும். இவற்றில் மூளை உறைக் காய்ச்சல்தான் திடீரென்று கடுமையான காய்ச்சலாக வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலியை உண்டாக்கும். அடிக்கடி குமட்டலும், வாந்தியும் ஏற்படும். மூளை உறைகளை மட்டுமன்றி மூளைத் தண்டுவடத்தையும் இந்த நோய்க் கிருமிகள் பாதிக்கின்றன. இதனால், தண்டுவடச் சவ்வு வீங்கும். இதன் விளைவாக, கழுத்துத் தசைகள் கடுமையாக இறுகிக்கொள்ளும். கழுத்துப் பகுதி கடுமையாக வலிக்கும். கழுத்தை அசைக்கவோ, திருப்பவோ முடியாது. இதுவே இந்த நோயின் மிக முக்கிய அறிகுறி. இந்த நோயாளிகளுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு, மனநோயாளிபோல் நடந்துகொள்
வார்கள். இவர்கள் அரள்வதும், மிரள்வதும், உளறுவதுமாக இருப்பார்கள். பேச்சுக்கொடுத்தால், சம்பந்தமில்லாமல் பதில் கூறுவார்கள்.

நோய் பாதிப்பு:

இந்தக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்தால்கூட, நோயாளிக்குப் பேச்சு நின்றுபோவது, பார்வை பறிபோவது, காது கேட்காமல் போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும். எனவே, இதை வரவிடாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இரண்டு தடுப்பூசிகள் நமக்கு உதவுகின்றன.

தடுப்பூசி வகை:

தனியாகப் போடப்படும் ‘ஹிப்’ தடுப்பூசி (Hib vaccine) ஒரு வகை. பென்டாவேலன்ட் எனும் ‘கூட்டுத் தடுப்பூசி’ மற்றொரு வகை. இந்த நோய்க் கிருமியின் மேலுறையில் இருக்கின்ற பி.ஆர்.பி (Polyribosyl-ribitol phosphate - PRP) எனும் சர்க்கரைப் பொருளைப் பிரித்து எடுத்து, ஒரு புரதப் பொருளுடன் இணைத்து, இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார் கள். இதனால் ‘இணைக் கூட்டுச் சர்க்கரைப் பொருள் தடுப்பூசி’ (Conjugate polysaccharide vaccine) என்று இதனைக் கூறுகிறார்கள்.

போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி என்று பெயர். அதன் பிறகு, ஒன்றரை வயது முடிந்தவுடன், ஊக்குவிப்பு (Booster) ஊசியாக ஒரு தவணை போட வேண்டும். இந்த வயதில் போட்டுக்கொள்ளாதவர்கள் பிறகு எந்த வயதில், எப்படிப் போட்டுக் கொள்வது என்பதை அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்.


ஒருமுறை தரப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இதைக் குழந்தையின் வெளிப்பக்கத் தொடையின் முன் பகுதியில் தசை ஊசியாகப் போட வேண்டும். ஊசி போடப்பட்ட இடத்தில் சிறிது வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை எல்லாமே மூன்று நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலுக்கு ‘பாராசிட்டமால்’ திரவ மருந்து அல்லது மாத்திரை தரலாம்.செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்:

குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியை எப்போது போடுவது என்று பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. சிலர் வேலைப் பளுவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறந்துவிடுகின்றனர். இந்த மாதிரி பெற்றோர்களுக்கு உதவுவதற்காகவே, ‘இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (Indian Academy Of Paediatrics) நல்லதொரு ஏற்பாட்டை செய்துள்ளது.


பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.


இதற்கு என்ன செய்ய வேண்டும்?


Immunize<குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.
உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.


ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum