ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by SK Today at 2:40 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:12 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Dr.S.Soundarapandian Today at 12:07 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by Muthumohamed Yesterday at 11:01 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 10:56 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா
by M.Jagadeesan Yesterday at 9:31 pm

» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்
by sivaraj1980 Yesterday at 9:27 pm

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by Guest Yesterday at 9:12 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ரயில் சேவை "ரத்து" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» லாக் டௌன் - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:34 pm

» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்
by krishnaamma Yesterday at 8:32 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:20 pm

» வேண்டுமா, வேண்டாமா?
by krishnaamma Yesterday at 8:03 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 8:01 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 7:59 pm

» நற்றமிழ் அறிவோம் -?மடப்பள்ளியா -மடைப்பள்ளியா
by krishnaamma Yesterday at 7:57 pm

» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by heezulia Yesterday at 6:40 pm

Admins Online

தெரிஞ்சதும் தெரியாததும்

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Go down

best தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down


best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Aug 03, 2018 1:38 pm

03.08.2018

தமிழ் சினிமா உலகத்ல ஓஹோன்னு இருந்தவங்கள்ல ஒரு சிலர், பின்னால ரொம்ப கஷ்டப்பட்டாங்க. கஷ்டப்பட்டாங்கன்னா, அவங்களுக்கு வந்த புகழ் மட்டும்தான் மிஞ்சி இருந்துச்சு. பணம் லேது, இல்ல, நோ பணம். இவ்ளோ புகழை கொடுத்த அதிர்ஷ்டம், மறுபடியும் எப்போ வரும்னு, வானத்தை எட்டி எட்டி பார்க்கும் விவசாயியை போல, எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு நம்பிக்கைதான்.

எல்லாரும் வாழ்றது அந்த ஒரு நம்பிக்கையை புடிச்சிட்டுதானே.

இதுல வேற, எப்ப நல்ல காலம் வரும்னு ஜோசியர்களை கேட்டுட்டு இருந்தாங்க. அப்டி ஜோசியத்தை நம்பி மோசம் போன சில சினிமாக்காரங்க.  

இப்டிபட்டவங்கள்ல ஒருத்தர்தான் BR பந்துலு. நடிகர் திலகத்தை வச்சு கப்பலோட்டிய தமிழன், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், மக்கள் திலகத்தை வச்சு ஆயிரத்தில் ஒருவன் மாதிரி படங்களை டைரக்ட் செஞ்சவர்.

கப்பலோட்டிய தமிழன் படம் ரொம்ப நல்ல படம்னு ஜனங்கள் சொன்னாங்க. ஆனா போட்ட பணம் வரலியாம்ல. திண்..........................டாடி போய்ட்டாராம் பந்துலு.  அனாவசியமான செலவுகளை குறைக்கிற அளவுக்கு வந்துட்டாராம்.

சரி, எப்படியாவது பழைய நிலைக்கு வரணுமேன்னு நெனச்சார். MGRஐ வச்சு ஒரு படம் எடுக்கலாமேன்னு யோசிச்சார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் எடுக்க முடிவு செஞ்சார். MGRஐ போய் பார்த்து, விஷயத்தை சொல்லி, அட்வான்ஸ் குடுத்துட்டார். திரைக்கதையும் எழுத ஆரம்பிச்சுட்டார்.

எல்லாம் சரி, படத்தை எடுக்க பணம்? அதுக்கு என்ன செய்றது? படத்தை தயாரிப்பதுக்கான பணத்தை திரட்ட முடியாம இருந்துச்சாம்.

Friend ஒருத்தர் ஒரு ஜோஸியர்ட்ட கூட்டிட்டு போனாராம். அந்த ஜோஸியர் பந்துலுவோட ஒலைசுவடியை பாத்துட்டு சொன்னார்,

“உங்க எதிர்காலம் ப்ரகா.......................சமா இருக்கும். நீங்க எடுக்கப் போற படத்தோ.........................டு, உங்க கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்”

ஜோஸியர் சொன்னத கேட்ட பந்துலுவுக்கு படு குஷி.

படத்துக்கான ட்ரெஸ் வாங்க பெங்களூருக்கு போயிருக்கார். அந்த பாத்ரூம்ல வழுக்கி விழுந்து இறந்து போய்ட்டார்.  

இவர் இப்டீன்னா, இன்னொருத்தர், வித்துவான் வே. லட்சுமணன், கவிஞர், எழுத்தாளர். இவர் ஜோசியரும் கூடவாம். இவரும், மணியனும் சேர்ந்து நல்ல நல்ல படங்களை குடுத்திருக்காங்களாம். அதுல ஒண்ணு இதயவீணை, MGR நடிச்சது. ஓஹோ.......................ன்னு ஓடின படம்.

அதோடு விட்டிருக்கலாம்ல. ரெண்டு பேரும் சேந்து, இதய வீணை படத்தை, ஹிந்தில எடுக்க நெனச்சாங்களாம்.

இவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேல?

எடுத்தாங்க. இதய வீணை படத்தை ஹிந்தியில எடுத்தாங்க. தர்மேந்திரா ஹீரோ. செலவு எவ்ளோங்க்றீங்க. ஒரு கோ...........................டி ருவா. என்ன ப்ரயோஜனம்? எல்லாமே போச்சு. படம் புஸ்வானம் ஆயிருச்சு.

திருநெல்வேலிக்கே அல்வாவான்னு சொல்வாங்க. ஒரு ஜோஸ்யருக்கே, வித்வான் வே லட்சுமனந்தான், இந்த நெலம. இதை பத்தி அவர்ட்ட கேட்டதுக்கு அவர் சொன்னார்,

“ஒருத்தருக்கு கெட்ட நேரம் வந்தா, எந்த கொம்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது”ன்னு ஒரு சமாளிஃபிகேஷன்.

இன்னொருத்தர், AK வேலன். இவர் எழுத்தாளர், புத்தகங்கள், சினிமாவுக்கு வசனங்கள் எழுதி பணம் சம்பாதிச்சார். புலவர். பணம் கையில் சேந்துச்சு. சும்மா இருக்க முடியாம, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கினார். இங்க பல சினிமா படங்கள் தயாராச்சு. விதி அவரை சும்மா விடலியே. கஷ்டம் வந்துச்சு. இவருக்கும் ஒரு ஜோஸியர் சொன்னார், தெனே.........................மும் புள்ளையார கும்டணுமாம். கஷ்டமெல்லாம் போயிருமாம்.

ஜோஸியர் சொன்ன மாதிரி, புள்ளையார கும்டுட்டு இருக்க வேண்டியதுதானே. ஒரு யானைய வாங்கி போட்டார். அதை தெனமும் கும்ட்டார். யானைக்கு தீனி போடணும்ல. போட்டார், பாப்பராயிட்டார். ஒரு கட்டத்தில அதுக்கு சாப்பாடு போட முடியாம போச்சு. யானைக்கு கோபம் வந்து, வர்றவங்க, போறவங்கள தொரத்த ஆரம்பிச்சுது.

என்னான்னு சொல்றது.

- ரமணி

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Aug 03, 2018 1:45 pm

என்னான்னு சொல்றது. 

ஒன்னும் சொல்ல முடியாது  பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8180
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1614

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Fri Aug 03, 2018 3:46 pm

03.08.2018

அட, செந்தில், நம்ம ரெண்டு பேருக்கும் எவ்ளோ.................. ஒற்றுமை பாருங்க.

நான் "என்னான்னு சொல்றது" ன்னு எழுதினதுக்கப்புறம், இப்டித்தான், நீங்க எழுதினதை "ஒண்........................ணும் சொல்றதுகில்ல" ன்னு எழுதணும்னுதான் நெனச்சேன். நான் எழுதாம விட்டத, நீங்க எழுதிட்டீங்க பாருங்க. நான் நெனச்சத, உங்களுக்கு தெரிஞ்சிருக்கே.

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by SK on Fri Aug 03, 2018 4:10 pm

அதான் டெலிபதி 

நம்ம பசுபதியோட தம்பி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8180
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1614

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by சிவனாசான் on Fri Aug 03, 2018 7:41 pm

படிக்க காலம் போதல பொருமையும் இல்லை
என்னங்க புத்தகம் படிப்பதுபோல ஆர்வம்குரையுது.
இணையத்தில் படிப்பதுபோல் இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by சிவனாசான் on Fri Aug 03, 2018 7:45 pm

ஈகரையில் உண்மை முகங்களை பதிந்தால் மிக
சிறப்பாய் அமையும் இருக்கும் எனலாம். பொய்
தோற்றம் நிலைப்தில்லை. உண்மையைச் சொல்.
உழைத்து உண். உத்தமனாவாய்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Jun 20, 2019 8:26 pm

20.06.2019
தெரிஞ்சதும் தெரியாததும் 

ஏ.வி எம்.  சாதனைகள் 
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 0?ui=2&ik=25ecfa0c99&attid=0   தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 0?ui=2&ik=25ecfa0c99&attid=0

ஏ.வி.எம்.  நிறுவனம்  இந்திய  சினிமாவில  70 வருஷத்துக்கு மேலா நெலச்சு நிக்குது. 300 படங்களுக்கு மேலா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,  ஹிந்தி, பெங்காலினு பல மொழிகள்ல  படங்களை தயாரிச்சுது. இதே ஒரு பெரிய சாதனை, இல்லியா?  
விருதுகள் :  தங்க மெடல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ், வெள்ளி பதக்கம், சிறந்த பாடகிக்கான தேசிய விருது, சிறந்த ஜாலியான படத்துக்கான மத்திய அரசின்  தங்க பதக்கம், ஒரே படத்துக்கு நான்கு தேசிய விருது.
பின்னணி குரல் குடுக்கிறது, பின்னணி பாட்டு பாடுறதுன்னு இந்த ரெண்டையும்  தமிழ்  சினிமாவுக்கு கொண்டு வந்தது ஏ.வி.எம்.நிறுவனம்தான். 
ஏகப்பட்ட நட்சத்திரங்கள், டைரடக்கர்கள்,  இந்திய திரைக்கு அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம். 
இப்டி பல வகையில சினிமாவில சாதனை செஞ்சுட்டு இருந்த ஏ.வி.எம். நிறுவனம் சின்னத்திரையையும் விட்டு வைக்கல. பல தொடர்களை தயாரிச்சுது. 
AVM நிறுவனம்   சினிமாவுக்கு செஞ்ச தொண்டை பாராட்டி, மத்திய அரசு 2006ல ஸ்டாம்ப்        வெளியிட்டுச்சு.  

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 0?ui=2&ik=25ecfa0c99&attid=0   

பேபி தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Emoji_u1f478தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Emoji_u1f478தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Emoji_u1f478  
 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Wed Jul 15, 2020 1:40 pm

15.07.2020

என்ன, எல்லாரும் எப்டீ இருக்கீ.........................ங்க? நா டெய்லி வந்து ஒரு சைட் அடிச்சுட்டு போறேன். ஆனா எதையும் அனுப்பதான் டைம் பத்தல. 

யார்னு யோசிக்கிறீர்களா? நாந்தாங்க,


மெஹருன்னிஸா பேகம்ங்கிற , ஹீராஜான்ங்கிற பேபி.
இன்னொண்ணும் இருக்கே. Heezulia.
 
  

இன்னுமா ஞாபகத்த்துக்கு வரல. சரிங்க, பரவாயில்ல. ஏதோ ரொம்ப நா................ளக்கி  அப்புறம் ஏதோ ஒண்ணு அனுப்புறேன். படிச்சுதான் பாருங்களேன். 

MGR கூட எந்தெந்த ஹீரோயின், எந்தெந்த படத்ல நடிச்சாங்கங்கிறத ஞாபகப்படுத்தவா? 

இதெல்லாம் படிக்க எங்களுக்கெல்லாம் நேரமில்ல. 

அப்படீல்லாம் சொல்லலாமா? 

நேரம் போவலேன்னா படீங்க. நேரம் இல்லாதவங்க, நேரம் கெடச்சப்போ படிங்க. இப்ப ஓக்கேவா? 
 


Baby Heerajan 

P. பானுமதி
01. ராஜமுக்தி 1948
02. ரத்னகுமார் 1949
03. மலைக்கள்ளன்  1954
04. அலிபாபாவும் 40 திருடர்களும் 1956
05. மதுரைவீரன் 1956
06. தாய்க்குப்பின் தாரம் 1956
07. நாடோடி மன்னன் 1958
08. ராஜா தேசிங்கு 1960
09. கலையரசி 1963
10. காஞ்சித் தலைவன் 1963


அஞ்சலிதேவி
01. மர்மயோகி 1951
02. சர்வாதிகாரி 1951
03. சக்கரவர்த்தி திருமகள் 1957
04. மன்னாதி மன்னன் 1960


சரோஜாதேவி
 01. திருடாதே 1961
02. தாய் சொல்லை தட்டாதே 1961
03. மாடப்புறா 1962
04. தாயைக் காத்த தனயன் 1962
05. குடும்பத் தலைவன் 1962
06. பாசம் 1962
07. பணத்தோட்டம் 1963
08. தர்மம் தலை காக்கும் 1963
09. பெரிய இடத்துப் பெண் 1963
10. நீதிக்குப்பின் பாசம் 1963
11. என் கடமை 1964
12. பணக்கார குடும்பம் 1964
13. தெய்வத்தாய் 1964
14. படகோட்டி 1964
15. தாயின் மடியில் 1964
16. எங்க வீட்டுப் பிள்ளை 1964
17. கலங்கரை விளக்கம் 1965
18. ஆசைமுகம் 1965
19. அன்பே வா 1966
20. நான் ஆணையிட்டால் 1966
21. நாடோடி 1966
22. தாலி பாக்கியம் 1966
23. பறக்கும் பாவை 1966
24. பெற்றால்தான் பிள்ளையா 1966
25. அரசகட்டளை 1967


- தொட்ட்டட்ரும் 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Jul 16, 2020 1:57 pm

16.07.2020 

MGR இன்னும் யார் யார் கூடலாம் நடிச்சிருக்கார்னு சொல்லணும்ல.

போன பதிவுல தொட்ட்டட்ரும்னு சொன்ன மாதிரி தொடரணும்ல.


ஜெயலலிதா

01. ஆயிரத்தில் ஒருவன் 1965
02. கன்னித்தாய் 1965
03. முகராசி 1966
04. சந்திரோதயம் 1966
05. தனிப்பிறவி 1966
06. தாய்க்குத் தலைமகன் 1967
07. அரசகட்டளை 1967
08. காவல்காரன் 1967
09. ரகசிய போலீஸ் 115 1968
10. தேர் திருவிழா 1968
11. குடியிருந்த கோயில் 1968
12. கண்ணன் என் காதலன் 1968
13. ஒளி விளக்கு 1968
14. கணவன் 1968
15. புதிய பூமி 1968
16. காதல் வாகனம் 1968
17. அடிமைப் பெண் 1969
18. நம் நாடு 1969
19. மாட்டுக்கார வேழம் 1970
20. என் அண்ணன் 1970
21. தேடி வந்த மாப்பிள்ளை 1970
22. எங்கள் தங்கம் 1970
23. குமரிக் கோட்டை 1971
24. நீரும் நெருப்பும் 1971
25. ஒரு தாய் மக்கள் 1971
26. ராமன் தேடிய சீதை 1972
27. அன்னமிட்ட கை 1972
28. பட்டிக்காட்டு பொன்னையா 1973


மஞ்சுளா

01. ரிக் ஷாகாரன் 1967
02. இதயவீணை 1972
03. உலகம் சுற்றும் வாலிபன் 1973
04. நேற்று இன்று நாளை 1974
05. நினைத்ததை முடிப்பவன் 1975


பத்மினி

01. மதுரை வீரன் 1956
02. ராஜராஜன் 1957
03. ராஜா தேசிங்கு 1960
04. மன்னாதி மன்னன் 1960
05. அரசிளங்குமரி 1961
06. ராணி சம்யுக்தா 1962
07. விக்ரமாதித்தன் 1962


இன்னும் ரெண்டு பேர் லிஸ்ட்டை அடுத்த பதிவுல தொடரும்னு தெரிவிச்சுக்கிறேன். 

Baby Heerajan
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram on Thu Jul 16, 2020 2:42 pm

எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி.

எல்லாரையும்போல் மக்கள் திலகத்தின் மனிதநேயம், அவரது உள்ளத்திலும்
உரிமையோடு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.
பத்மினியின் திருமணத்துக்கு முன்னே உருவான படம் ‘ராணி சம்யுக்தா’.

பிருதிவிராஜன், குதிரை மீதேறி விரைந்து வந்து சம்யுக்தாவைக் கவர்ந்து
செல்ல வேண்டும். அந்தக் காட்சி எடுக்கப்படாமல் இருந்தது. பத்மினி அதை
முடித்துத் தர வந்தபோது நிறை மாதக் கர்ப்பிணி.

திரையில் அது தெரியாதபடி மறைத்துப் படமாக்குவது முக்கியம். எம்.ஜி.ஆர்.
அப்போது எப்படி நடந்துகொண்டார் என்பதை பத்மினியின் வார்த்தைகளில்
வாசிக்கலாம்.

‘எம்.ஜி.ஆர். என்னை எப்போதும் ‘என்னம்மா தங்கச்சி, நல்லா இருக்கியா’ என்பார்.
நான் துணிச்சலாக குதிரை சவாரிக்குத் தயாரானேன். பிறகுதான் எம்.ஜி.ஆருக்கு
விஷயம் தெரிந்திருக்கிறது. என்னைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.
‘உன் வயித்துல உள்ள பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னம்மா நீ...?’
என்றார்.

கர்ப்பிணியை குதிரையில் எப்படி அழைத்துச் செல்வது, ஏதாவது பிசகாகிவிடுமோ
என்று எம்.ஜி.ஆருக்கு ஒரே கவலை. தலையணையெல்லாம் வைத்து, பயப்படாதீங்க
என்று எனக்கு தைரியம் சொல்லி, என்னை அந்த நிலையில் நடிக்கவைத்ததற்காக
பட அதிபரைத் திட்டினார்.

புரொடியூசருக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘பாவம்! வயிற்றில் குழந்தையோடு
இருக்கிறார். கஷ்டப்படுத்தாமல் காட்சியை எடுங்கள்’ என எச்சரிக்கை செய்தவாறே
உடன் நடித்தார்’.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59462
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram on Thu Jul 16, 2020 2:44 pm

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 27149867
-
எந்த பாடலுக்கு இந்த புகைப்படம்?
படத்தில் பெயர் என்ன?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59462
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ranhasan on Thu Jul 16, 2020 4:00 pm

@ayyasamy ram wrote:தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 27149867
-
எந்த பாடலுக்கு இந்த புகைப்படம்?
படத்தில் பெயர் என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1324869

உத்தம புத்திரன் - யாரடி நீ மோகினி பாடல்
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by heezulia on Thu Jul 16, 2020 5:00 pm

16.07.2020
@ayyasamy ram wrote:எம்.ஜி.ஆருடன் குறைவாக நடித்தவர் பத்மினி.
தகவல்களுக்கு நன்றி சார். MGR கருணை உள்ளம்  கொண்டவர்தானே. அவர் இதே மாதிரி நிறைய இடங்கள்ல இரக்கம் காட்டியிருக்கார்னு படிச்சிருக்கேன்.

சரி என் பதிவுக்கு வர்றேன்.
  

KR விஜயா 
01. தொழிலாளி 1964
02. பணம் படைத்தவன் 1965
03. தாழம்பூ 1965
04. நான் ஆணையிட்டால் 1966
05. விவசாயி 1967
06. நல்ல நேரம் 1967
07. நான் ஏன் பிறந்தேன் 1972
 

லதா 
01. உலகம் சுற்றும் வாலிபன் 1973
02. உரிமைக்குரல் 1974
03. சிரித்து வாழ வேண்டும் 1974
04. நாளை நமதே 1975
05. பல்லாண்டு வாழ்க 1975
06. நீதிக்கு தலை வணங்கு 1976
07. உழைக்கும் கரங்கள் 1976
08. நவரத்தினம் 1977
09. மீனவ நண்பன் 1977
10. மதுரையை மீட்டிய சுந்தரபாண்டியன் 1978
11. அவசர போலீஸ் 1978         
 

இவங்கள தவிர MGR உடன் சில படங்களில் [1936லே இருந்து] நடிச்சவங்க : 

MS ஞானாம்பாள், SN விஜயலட்சுமி, TA மதுரம், சாரதா, MR சந்தானலட்சுமி, தவமணி தேவி, TV குமுதினி,
R பாலசரஸ்வதி தேவி, P கண்ணாம்பா, TR ராஜகுமாரி, K மாலதி,
VN ஜானகி, மாதுரிதேவி, G சகுந்தலா, PK சரஸ்வதி, ஸ்ரீரஞ்சினி,
EV சரோஜா, BS சரோஜா, G வரலட்சுமி, ராஜசுலோச்சனா,
S வரலட்சுமி, லலிதா, சாவித்திரி, MN ராஜம், ஜமுனா, வைஜயந்திமாலா, மாலினி, வசந்தி, L விஜயலட்சுமி, தேவிகா, ரத்னா, சௌகார்ஜானகி, பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ, லட்சுமி, காஞ்சனா, சந்திரகலா, ராதா சலூஜா, ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ஜெயா, Zaரீனா வஹாப், பத்மப்ரியா நடிச்சிருக்காங்க போல.  

நான் தேடியதுல கெடச்சுது. ஏதாவது தப்பா இருந்தா சொல்லுங்க.
 

Baby Heerajan
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 725
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 198

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram on Fri Jul 17, 2020 8:34 am

பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
கண்ணாண கண்ணே பயம் வேண்டாம்

-
இந்த திரைப்பட பாடலை பாடியவர் யார்?
இடம் பெற்ற திரைப்படம் எது?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59462
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by ayyasamy ram on Fri Jul 17, 2020 9:12 am

வீடியோ கான்ஃபரென்சிங் சந்திப்புகளுக்கு முதன்முதலில் வித்திட்டவர் ஜெமினி கணேசன்
-
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 17 Neethana-Ennai
-

ஆன்லைன் மூலம் நடைபெறும் வீடியோ கான்ஃபரென்சிங்
சந்திப்புகளுக்கு முதன்முதலில் வித்திட்டவர் தமிழ் சினிமா
ரசிகர்களால் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் நடிகர்
ஜெமினி கனேசன்தான் என்று அவர் நடித்த திரைப்படத்தில்
வரும் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் கிண்டலாக
பதிவிடப்பட்டு வருகிறது.

அந்த பதிவில், “நடிகை சாவித்திரி பெட்டி போன்ற ஏதோ
ஒன்றை எடுத்து வருகிறார். அதனை மேசை மீது வைத்து
திறந்ததும் அதில் வில், அம்புடன் தோன்றும் நடிகர்
ஜெமினி கனேசன், நீ தானா என்னை அழைத்தது என்று
காதல் ரசம் சொட்டசொட்ட பாடிக் கொண்டே வருவது”
போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
-
காட்சி இடம் பெற்ற திரைப்படம் எது?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59462
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

heezulia likes this post

Back to top Go down

best Re: தெரிஞ்சதும் தெரியாததும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 19 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum