ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Today at 5:11 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Today at 5:10 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by heezulia Today at 4:33 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Today at 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 3:03 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by T.N.Balasubramanian Today at 2:57 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:56 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Today at 2:43 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Today at 2:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
by Dr.S.Soundarapandian Today at 2:35 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Today at 2:28 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by சக்தி18 Today at 2:03 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Today at 1:43 pm

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Today at 1:08 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Today at 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:31 pm

» சாலிய வாகன வம்சத்தை பற்றிய வரலாற்று பதிவுவிற்கான புத்தகம் கிடைக்குமா?
by Shivramki Today at 12:26 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Shivramki Today at 11:58 am

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Today at 11:44 am

» இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் பாலிவுட் படம்
by ayyasamy ram Today at 11:40 am

» இதயத்தை திருடாதே சீரியலில் இடம்பெற்றுள்ள 'தீரா கனா' பாடல்
by ayyasamy ram Today at 11:37 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

Admins Online

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

Go down

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! Empty ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

Post by ksikkuh on Mon Dec 25, 2017 12:17 pm



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை, தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவந்த நிலையில் இந்த வீடியோ மேலும் பரபரப்பைக் கிளப்பியது.

அந்த வீடியோவில் மருத்துவமனைப் படுக்கையில் சாய்ந்தவாறு பழச்சாறு அருந்திக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரின் கழுத்தில் கருவி ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது. அது ‘ட்ரக்கியோஸ்டமி’ (Tracheostomy) என்னும் கருவி. `ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்ட ஒருவர் எப்படி பழச்சாறு அருந்த முடியும்?’ என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர். சந்தேகத்துக்கு விடை தேடுவதற்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி ஏன் பொருத்தப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

கடந்த வருடம் செப்டம்பர் 22 – ம் தேதி தீவிரமான காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. நுரையீரல் தொற்றின் காரணமாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தது. சுவாசிக்கத் திணறிய நிலையில் இருந்த அவருக்கு ஆரம்பத்தில் செயற்கை சுவாசக் கருவியின் (Vendilators) மூலமாக சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், ‘ட்ரக்கியோஸ்டமி’ அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுரையீரலுக்கு ஆக்சிஜன் நேரடியாகச் செல்லும்படியான சிகிச்சை அளிக்கப்பட்டது.

‘ட்ரக்கியோஸ்டமி’ சிகிச்சை என்றால் என்ன ? அந்த அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களால் உணவருந்த முடியுமா என்பது பற்றி காது-மூக்கு- தொண்டை மருத்துவ நிபுணர் சங்கர் விரிவாக விளக்குகிறார்…

” `ட்ரக்கியோஸ்டமி’ என்பது செயற்கை சுவாச உபகரணங்களின் மூலமாக சுவாசமளிக்கும் ஒரு சிகிச்சை முறை. நுரையீரல் சளி அடைப்பு, குரல்வளைப் புற்றுநோய், குரல்வளையில் அடைப்பு காரணமாக மூச்சுத்திணறல், சுய நினைவிழத்தல் ஆகிய பாதிப்புள்ளவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும்.

இயற்கையாக சுவாசிக்க முடியாமல் திணறுபவர்களுக்கு, தொண்டையின் கீழ்ப் பகுதியில் துளையிடப்பட்டு, அதன் வழியே ஒரு ட்யூப் இணைக்கப்படும். அந்த ட்யூப் மூச்சுக்குழாயுடன் இணைக்கப்படும். உள்புறம் மட்டும் ட்யூப் இணைக்கப்படும் முறை, உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இருபுறமும் ட்யூப் இணைக்கப்படும் முறை என்று இதில் இரண்டு முறைகள் உள்ளன. உள்புற ட்யூப், நுரையீரல் பைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி நுரையீரலுக்கு சுவாசம் சீராகச் செல்ல உதவும். இது சுவாசப் பிரச்னை முழுவதுமாக குணமான பின்னர்தான் அகற்றப்படும். ஆனால், வெளிப்புற ட்யூப்பை தேவையானபோது அகற்றிக்கொள்ளலாம். காற்றின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் காற்றைச் சுத்திகரிக்கவும் இந்த ட்யூப் உதவி செய்யும்.’’

“ ‘ட்ரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டவர்களால் பேச முடியுமா? உணவருந்த முடியுமா?’’

“இரண்டு பக்கமும் ட்யூப் உள்ள கருவி பொருத்தப்பட்டவர்களால் பேச முடியும். பேசுவதற்கு உண்டான தனிக்கருவியைப் (Speaking volve) பொருத்தி, பேசிக்கொள்ளலாம். ஜெயலலிதாவுக்குப் பொருத்தப்பட்டிருந்தது இரண்டு பக்கமும் ட்யூப் உள்ள கருவிதான். எனவே, நிச்சயமாக அவரால் பேசியிருக்க முடியும். அதேசமயம், ஆஸ்துமா மற்றும் மூச்சுவிட சிரமப்படுவர்களால் பேச முடியாது.

இந்தக் கருவி, சுவாசக் குழாயுடன் இணைக்கப்படும். உணவு, உணவுக்குழாய் வழியாகச் செல்லும். எனவே, இந்தக் கருவி பொருத்தப்பட்டிருப்பதற்கும், சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. அறுவைசிகிச்சை முடிந்து ஒருநாள் மட்டும் எந்த உணவும் உட்கொள்ள முடியாது. அதற்கு பிறகு தாராளமாகச் சாப்பிடலாம், ஜூஸ் குடிக்கலாம்.

ஜூஸ் குடிக்கும் ஜெயலலிதா

கடந்த வருடம் அக்டோபர் 5-ம் தேதிதான் ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. எனவே, அந்த வீடியோ அக்டோபர் 7-ம் தேதிக்குப் பின்னால் எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன’’ என்கிறார் மருத்துவர் சங்கர்.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
மதிப்பீடுகள் : 34

Back to top Go down

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! Empty Re: ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

Post by T.N.Balasubramanian on Mon Dec 25, 2017 12:26 pm

கடந்த வருடம் அக்டோபர் 5-ம் தேதிதான் ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி கருவி பொருத்தப்பட்டது. எனவே, அந்த வீடியோ அக்டோபர் 7-ம் தேதிக்குப் பின்னால் எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன’’ என்கிறார் மருத்துவர் சங்கர்.

அந்த வீடியோ Doctored வீடியோவாக இல்லாதிருந்தால் நீங்கள் கூறுவது சரி.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27350
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9763

Back to top Go down

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! Empty Re: ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

Post by ayyasamy ram on Mon Dec 25, 2017 12:48 pm

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! 18-1513564198-drmnsankar-jayalalitha-health1
-
சிறையில் இருந்து வந்த ஜெயலலிதாவுக்கு சிகிச்சை
அளித்த அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் ...
-
நன்றி- தமிழ்,ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63034
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! Empty Re: ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

Post by SK on Mon Dec 25, 2017 1:52 pm

இந்த மர்மம் எப்போது விலகுமோ தெரியவில்லை


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8471
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?! Empty Re: ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum