ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:34 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

Admins Online

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Go down

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Empty கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Post by ரிபாஸ் on Mon Dec 14, 2009 1:11 pm

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி
ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி
ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக்
கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக்
கணிப்பதுதான் இந்த ஜோதிடம்.

கீழே
பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும்
கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன, பலன் பொருந்துகிறதா
என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!!

மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான
ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள
மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ, உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதோ
மிகவும் கடினமான விஷயம். உங்களுக்கென்று மாற்றமுடியாத நிலையான எண்ணங்கள்
இருக்கும். எந்தச் சூழ்நிலையையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க
விரும்புவீர்களே தவிர, சூழ்நிலைக்கேற்றவாறு நீங்கள் வளையமாட்டீர்கள்.
மூளைக்குச் சவால் விடும் பணிகளை அதிகம் விரும்புவீர்கள். கொஞ்சம்...
கொஞ்சமென்ன நிறையவே பிடிவாதக்காரர் நீங்கள். ஆயினும் அன்பான துணையிடம்
கன்றுக்குட்டி போல் பாசமாக இருப்பீர்கள். அன்பை வீட்டுக்குள்ளும் உங்கள்
வலிமையையெல்லாம் வெளியிலும் காட்டுவது உங்கள் தன்மை.

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Fruit_lemon_lemonsஉங்கள்
விருப்பம் வாழைப்பழமானால்.... நீங்கள் அந்த வாழைப்பழம் போலவே
மென்மையானவர். மிகவும் அன்பானவர். பிறருக்கு இரங்கும் மனமும் இதமாகப்
பழகும் குணமும் நிறைந்தவர். ஆனால், உங்களுக்குக் கூச்சம் அதிகம். பிறருடன்
கலந்து பழக மாட்டீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கையும் கொஞ்சம் குறைவுதான்.
உங்கள் மென்மையான குணத்தினை சிலர் அவர்களுடைய லாபத்திற்குப்
பயன்படுத்திக்கொண்டு விடுவர். கவனம் தேவை.
உங்கள் துணையை நீங்கள்
மிகவும் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வீர்கள். உங்கள் இனிய
குணத்தினால் உங்கள் குடும்ப வாழ்வில் எப்பொழுதும் அமைதியும் அன்பும்
நிலவும்.

ஆரஞ்சுப் பழத்தை விரும்புபர்களுக்கு: அதிக அளவு
பொறுமையும், அதே அளவு திடமான மன உறுதியும் உள்ளவர்கள் நீங்கள். மெதுவாக
நிதானமாக அதேசமயம் கடின உழைப்பின் மூலம் உங்கள் இலக்கை அடைவது உங்கள்
நோக்கமாக இருக்கும். நீங்களும் கூச்ச சுபாவம் உடையவர்தான் என்றாலும்,
நம்பிக்கைக்குரிய நண்பராக இருப்பீர்கள். பொதுவாக சண்டை சச்சரவை
விரும்பாதவர்களாகிய நீங்கள், மிகுந்த அழகுணர்ச்சியை உடையவர். உங்கள்
வாழ்க்கைத்துணையை அதிகக் கவனத்துடன் தேர்ந்தெடுப்பீர்கள்; முழு மனதுடன்
நேசிப்பீர்கள்.

ஆப்பிளை விரும்பும் அன்பர்களே! நீங்கள் உடனடியாக
முடிவெடுத்துத் தடாலடியாகச் செயல் படக்கூடியவர். அதிகமாகச் செலவு
செய்பவர். மிகவும் வெளிப்படையாகப் பேசும் போக்கை உடையவர். ஆனால் எளிதில்
உணர்ச்சிவசப் படுபவர். உற்சாகத்துடன் நடைபோடக்கூடியவராகிய நீங்கள், ஒரு
குழுவிற்குச் சிறந்த தலைவராக விளங்கக் கூடியவர். எப்பொழுதும், முன்னேறிச்
செல்வீர்களே தவிர சுணங்கிவிட மாட்டீர்கள். வாழ்வில் உங்களுக்கு இருக்கும்
ஈடுபாட்டிலும், செயல்பாட்டில் காட்டும் ஆர்வத்திலும் உங்களுக்கு நிகர்
நீங்களேதான். உங்கள் துணையின் உள்ளம் கவர்ந்தவர் நீங்கள்.

அன்னாசியை
ரசித்து ருசிப்பவரா? நீங்கள் எந்த விசயத்தையும் சட்டென ஆலோசித்து
முடிவெடுத்து அதைவிட வேகமாகச் செயல்படுத்துவீர்கள். உங்களுக்கு அதனால்
லாபம் ஏற்படும் எனில் எத்தனை முறை வேண்டுமானாலும் துணிவுடன் தொழிலை
மாற்றிக்கொண்டிருக்கும் பழக்கமுடையவர் நீங்கள். எவ்வளவு பெரிய வேலையாக
இருப்பினும் அதை அருமையாக ஒருங்கிணைத்து நிர்வாகம் செய்யும் திறமையில்
உங்களுக்கு இணையே இல்லை என்று சொல்லலாம். தன்னிறைவுடனும், நேர்மையாகவும்
இருப்பது உங்கள் தன்மை. எளிதில் யாரிடமும் நட்புக் கொள்ள மாட்டீர்கள்
ஆனால் அப்படி நட்புக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் அந்நட்பைத்
தொடர்வீர்கள். உங்கள் துணைவர் / துணைவி உங்கள் ஒளிவு மறைவில்லாத குணத்தால்
ஈர்க்கப் பட்டாலும், அன்பை வெளிக்காட்டத்தெரியாத உங்கள் தன்மை அவரை
சலிப்படையச் செய்துவிட வாய்ப்புண்டு.

பேரிக்காய்ப்பிரியர்களே!
உங்கள் மனத்தினை ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபடுத்தினால், அதை வெற்றிகரமாக
முடித்துவிடுவீர்கள். ஆனால் மனம் வைப்பது என்பது நிரம்பவும் கடினம்
உங்களுக்கு. எதையும் ஏகப்பட்ட உற்சாகத்துடன் தொடங்கிவிட்டு இடையிலே
கைவிடுவது உங்கள் பழக்கம். எதைச் செய்தாலும் உடனடியாகப் பலன் தெரிந்தாக
வேண்டும் என்று துடிப்பீர்கள். அதிக ஆற்றலும் தெம்பும் உடையவர். யாருடனும்
எளிதில் பழகுவதில் வல்லவராக உள்ள நீங்கள் அதை நீண்ட நாள் தொடர்வதில்
அன்னாசிப் பழக்காரருக்கு அப்படியே எதிரிடையானவர்.

திராட்சை
விரும்பிகளே! உங்களைப்பற்றிப் பார்ப்போமா? நீங்கள் பொதுவாக மென்மையாக,
அமைதியாகப் பழகக் கூடியவர். ஆனால் 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற
பழமொழி உங்களைப் பற்றித்தான் எழுந்ததோ என்னவோ! கோபம் பொங்கி வரும் அதே
வேகத்தில் அடங்கியும் விடுவது உங்கள் சிறப்பியல்பு. அழகினை ஆராதிப்பவர்
நீங்கள். மலரோ, ஓவியமோ, குழந்தைகளோ மற்ற மனிதர்களோ எதுவானாலும் அழகாக
இருந்தால் இரசிப்பதும் பாராட்டுவதும் உங்களுக்கு இயல்பானது. உங்கள்
தோழமையான அணுகுமுறையாலும், வெளிப்படையாகப் பாராட்டும் குணத்தினாலும்,
உங்களுடைய நட்பு பலராலும் விரும்பப் படும். உங்கள் வட்டத்தில் நீங்கள்
பிரபலமானவராக இருப்பீர்கள். நீங்கள் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும்
அதை ஏனோதானோ என்று செய்யாமல் இரசித்துச் செய்வீர்கள். வாழ்வை
உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும் எதிகொள்வீர்கள். என்ன? உங்கள்
வாழ்க்கைத்துணையும் அதே போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
அப்படியில்லை என்றால் கொஞ்சம் மனத்தை வருத்திக்கொள்வீர்கள்... கொஞ்ச
நேரத்திற்கு. பின் உங்கள் பழைய துள்ளல் உங்களைத் தொத்திக்கொண்டுவிடும்.
அவ்வளவுதான்.

செர்ரிப்பழமா உங்கள் தேர்வு? உங்களுக்குப் பிடித்த
இடம் உங்கள் வீடுதான். குடும்பமும் நெருங்கிய உறவுகளும் சூழ இருப்பதையே
நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்கள் தொழிலில் உங்களுக்கென்று
ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க இயலாது. எப்பொழுதும் ஏற்றமும் இறக்கமுமாகவே
இருக்கும். சிறுகச் சிறுகத்தான் உங்களால் சேமிக்கக் கூட முடியும்.
உங்களுக்குக் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் அதிகம் உண்டு. ஒரே மாதிரியான
சலிப்பு தரும் வேலைகளை விரும்பமாட்டீர்கள். சொல்லப்போனால், விளம்பரத்துறை,
ஓவியம், கலைத்துறைகளில்தான் உங்கள் நாட்டம். உங்கள் துணைக்கு உண்மையானவராக
இருப்பீர்கள். ஆனால் அன்பை வெளிக்காட்ட நீங்கள் இன்னும் கொஞ்சம்
கற்றுக்கொள்ளவேண்டும்.

சீதாப்பழத்திற்கா உங்கள் வாக்கு?
அப்படியென்றால், நீங்கள் கொஞ்சம் கட்டுப்பெட்டி. அடக்கமானவர். எதையும்
ஆழ்ந்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். ஒரு
இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதைக் கண்டிப்பாக அடைந்து விடுவீர்கள்.
ஆனால், அவசரமோ பதற்றமோ உங்கள் பக்கத்தில் கூட வராது. நிதானமும் பொறுமையும்
மிக்கவர். விரிவாக விளக்கப் படவேண்டிய பணி அல்லது புள்ளிவிவரங்கள்
தொடர்பான பணிதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமான, உங்களுக்குப் பொருத்தமான
பணியாக இருக்கும். புற அழகு அல்லது மற்ற குணங்களை விட அறிவுத்திறன்
வாய்ந்தவரே துணையாக இருக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் எந்தச்
செயலைச் செய்தாலும் கச்சிதமாக நேர்த்தியாக இருப்பது போல் பிறரும்
இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதால் அடுத்தவர்களிடம் நிறையக் குற்றம்
கண்டுபிடித்தபடியே இருப்பது உங்கள் குறைபாடு. கொஞ்சம் வெட்கமும் கூச்சமும்
நிறைந்தவராக இருப்பதால், உங்கள் பிரியத்தை யாரிடமும் காட்டிக்கொள்வது
உங்களுக்கு மிகவும் சிரமமான காரியம்.

இனி என்ன? உங்கள் நண்பர்
அல்லது வாழ்க்கைத்துணைக்குப் பிடித்த பழம் என்ன என்று தெரிந்துகொண்டு,
அவருடைய தன்மையைப் பற்றிச் சொல்லி வியக்க வையுங்களேன்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Empty Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Post by செரின் on Mon Dec 14, 2009 1:14 pm

அருமையான கணிப்புதான்..

சூப்பர் ரிபாஸ்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Empty Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Post by kirupairajah on Mon Dec 14, 2009 1:25 pm

ஆச்சரியமாய் இருக்கிறது, அத்துடன் கணிப்பும் சரியாக இருக்கிறது, நன்றி ரிபாஸ்!
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மதிப்பீடுகள் : 120

Back to top Go down

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Empty Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Post by mdkhan on Mon Dec 14, 2009 1:29 pm

வாழ்த்துக்கள் ரிபாஸ்........... கனியின் கணிப்பு பிரமிக்க வைக்கிறது........ கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? 677196 கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? 677196 கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? 677196
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
மதிப்பீடுகள் : 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Empty Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Post by சாந்தன் on Mon Dec 14, 2009 2:09 pm

100 பெர்சென்ட் சரியாய் உள்ளது ரிபாஸ்.
சூப்பர் சூப்பர் சூப்பர் கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? 677196 கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? 677196 கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? Empty Re: கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum