புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_m10ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

First topic message reminder :

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 09, 2018 9:50 am

T.N.Balasubramanian wrote:
சிலருடைய முகபாவம், இயல்புத்தன்மை,நடத்தை பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் .
ஆனால் ஹர்டிக் முகத்தை பார்த்தாலே, ஏதோ போல் இருக்கிறது.!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1265567

அவரது செயல்களும் தான் ஐயா வெறுக்க வைக்கிறது ...

ராஜா wrote:
ஆனால் ஹர்திக் பார்க்கும் போதே வெறுப்பு தான் வருகிறது (இந்தியாவுக்காக ஆடினாலும் )
மேற்கோள் செய்த பதிவு: 1265570

அதே தான் அண்ணா ... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 09, 2018 10:12 am

!! ஐ.பி.எல் -2018 !!

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 1

தொடங்கி விட்டது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இல்லை இல்லை ஏன் உலக கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாக்களில் ஒன்றான ஐ பி ல் போட்டிகள் 2018..
இரண்டு வருட தடைக்கு பின் வெற்றியுடன் பயணத்தை தொடங்கி உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
அது போல் சென்னை மண்ணின் மைந்தர்களின் தலைமையில் விளையாடும் கொல்கத்தா அணியும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியும் வெற்றியுடன் ஆரம்பித்து உள்ளது ...

ஐ.பி.எல் 2018 தொடர்பான செய்திகளை இந்த ஒரு திரியில் தொடர் பதிவாக தொடரலாம் என இந்த திரி தொடங்கப்படுகிறது...  சிரி




அணிகளும் வீரர்களும் :

சென்னை சூப்பர் கிங்ஸ்:

தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கனிஷ்க் சேத், ஷேன் வாட்சன், மோனுகுமார், சைதன்ய பிஷ்னாய், ஷிதிஷ் சர்மா, துருவ் ஷோரி, லுங்கி இங்கிடி, டிவைன் பிராவோ, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாக்குர், டுபிளெசிஸ், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஜகதீசன் நாராயண் (வி.கீ/பேட்ஸ்மென்), மார்க் உட், அம்பாத்தி ராய்டு, கரண் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், முரளி விஜய், கே.எம்.ஆசிப்- மொத்தம் செலவிட்ட தொகை ரூ.73.5 கோடி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

ரவிச்சந்திரன் அஸ்வின், மயங்க் அகர்வால், முஜீப் ஸத்ரான், மன்சூர் தார், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரதீப் சாஹு, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங், கருண் நாயர், கே.எல்.ராகுல், ஆண்ட்ரூ டை, அக்‌ஷதீப் நாத், கிறிஸ் கெய்ல், ஏரோன் பிஞ்ச், மோஹித் சர்மா, பாரிந்தர் ஸ்ரண், அன்கிட் ராஜ்புத், பென் த்வார்ஷுயிஸ், மயங்க் தாகர், அக்சர் படேல். செலவிட்ட தொகை ரூ.79.9 கோடி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஷுப்மன் கில், கம்லேஷ் நாகர்கோடி, ஷிவம் மாவி, ஜாவன் சியர்லெஸ், இஷாங்க் ஜக்கி, தினேஷ் கார்த்திக், மிட்செல் ஸ்டார்க், கேமரூன் டெல்போர்ட், கிறிஸ் லின், பியூஷ் சாவ்லா, ராபின் உத்தப்பா, வினய் குமார், அபூர்வ் வான்கடே, குல்தீப் யாதவ், மிட்செல் ஜான்சன், நிதிஷ் ரானா, ரிங்க்கு சிங், சுனில் நரைன், ஆந்த்ரே ரசல். செலவிட்ட தொகை ரூ.80 கோடி (அனைத்தையும் செலவிட்டது)

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்பராஸ் கான், மொகமது சிராஜ், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கொலின் டி கிராண்ட் ஹோம், மனன் வோரா, பவன் நேகி, முருகன் அஸ்வின், அனிகெட் சவுத்ரி, சாஹல், பவன் தேஷ்பாண்டே, அனிருத்தா ஜோஷி, மந்தீப் சிங், குவிண்டன் டி காக், பிரெண்டன் மெக்கல்லம், உமேஷ் யாதவ், பார்த்திவ் படேல், நேதன் கூல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டிம் சவுதி, குல்வந்த் கேஜ்ரோலியா. செலவிட்ட தொகை ரூ.79.85 கோடி.

டெல்லி டேர் டெவில்ஸ்:

ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லாமிசான், சயன் கோஷ், அவேஷ் கான், கேகிசோ ரபாடா, குர்கீரத் சிங், டேனியல் கிறிஸ்டியன், மொகமது ஷமி, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் டிவேட்டியா, ஹர்ஷல் படேல், கிளென் மேக்ஸ்வெல், நமன் ஓஜா, ஷாபாஸ் நதீம், அமித் மிஸ்ரா, ஜேசன் ராய், கவுதம் கம்பீர், டிரெண்ட் போல்ட், கொலின் மன்ரோ, மஞ்சோத் கல்ரா, அபிஷேக் சர்மா, பிரிதிவி ஷா. செலவிட்ட தொகை: ரூ.78.4 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித், மஹிபால் லொம்ரோர், ஜகீர் கான், ஜொப்ரா ஆர்ச்சர், துஷ்மந்த சமீரா, பிரசாந்த் சோப்ரா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், கவுதம் கிருஷ்ணப்பா, அன்கிட் ஷர்மா, ஜெயதேவ் உனட்கட், அனுரீத் சிங், ஷ்ரேயஸ் கோபால், ஜதின் சக்சேனா, பென் லாஃப்லின், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டார்சி ஷார்ட், தவல் குல்கர்னி, அஜிங்கிய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, எஸ்.மிதுன், ஆர்யமான் பிர்லா. செலவிட்ட தொகை ரூ78.35 கோடி.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, நிதீஷ், ஷரத் லும்பா, இஷான் கிஷன், அகிலா தனஞ்ஜயா, பாட் கமின்ஸ், குருணால் பாண்டியா, டுமினி, சூர்யகுமார் யாதவ், எவின் லூயிஸ், சித்தார்த் லாத், சவுரவ் திவாரி, ஆதித்யா தாரே, முஸ்தபிசுர் ரஹ்மான், பிரதீப் சங்வான், ஜேசன் பெஹண்ட்ராப், கெய்ரன் பொலார்ட், பென் கட்டிங், மோசின் கான், மயங்க் மார்கண்டே, தஜீந்தர் சிங், அனுகுல் ராய், ராகுல் சாஹர். செலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார், சையத் கலீல் அகமட், டி.நடராஜன், ரஷீத் கான், தன்மய் அகர்வால், பேசில் தம்பி, ரிக்கி புய், ஷாகிப் அல் ஹசன், பில்லி ஸ்டான்லேக், தீபக் ஹூடா, மெஹதி ஹசன் (இந்திய வீரர்), கார்லோஸ் பிராத்வெய்ட், சந்தீப் சர்மா, சச்சின் பேபி, பிபுல் ஷர்மா, சித்தார்த் கவுல், யூசுப் பத்தான், ஸ்ரீவத்சவ் கோஸ்வாமி, மணீஷ் பாண்டே, கிறிஸ் ஜோர்டான், ஷிகர் தவண், சஹா, கேன் வில்லியம்சன், மொகமது நபி. செலவிட்ட தொகை: ரூ.79.35 கோடி.

அணிகள் விவரம் - தமிழ் இந்து நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 09, 2018 12:02 pm

09 Apr 2018

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 02VBGSTADIUM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை திட்டமிட்டபடி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான போட்டியை நடத்தக்கூடாது என்றும், இது போராட்டத்தின் கவனத்தை திசை திருப்பும் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

போட்டிக்கு அனுமதி வழங்கக் கூடாது என சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். முதல் கட்டமாக மைதானத்தைச் சுற்றி தினமும் 50 போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மைதானத்துக்குள் செல்ல வீரர்கள், ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். வேறு யாரும் மைதானத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. மைதானம் இருக்கும் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரியும் நபர்களைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

போட்டி நடக்கும் நேரத்தில், சுமார் 3 ஆயிரம் போலீஸார் மைதானம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளனர். போட்டியை காண வரும் ரசிகர்களும் முழு சோதனைக்கு பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

- தமிழ் இந்து நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 09, 2018 1:17 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 1523257080-3221
-
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை
தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட
பல கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒருவேளை நாளை தடையை மீறி சென்னையில்
போட்டி நடைபெற்றால், மைதானத்திற்கோ கிரிக்கெட் வீரர்களுக்கோ
ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல
என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
வெப்துனியா
-------------------------------

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 09, 2018 3:53 pm

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Rrrrr



11-வது சீசன் ஐபிஎல் போட்டியில் மொஹாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணியின் தொடக்க வீர்ரர கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி அதிவேகமான அரை சதம் அடித்தது அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக வீரர் அஸ்வினின் தலைமைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகவும் அமைந்தது.

மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது.

டாஸ்வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் அணியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 17வயதான முஜிபுர் ரஹ்மான் களமிறக்கப்பட்டார்.

ஐபிஎல் போட்டியில் மிகக்குறைந்த வயதில் களமிறங்கிய வீரர் எனும் பெருமையை ரஹ்மான் (17 வயது111 நாட்கள்) பெற்றார். இதற்கு முன் சர்பிராஸ் கான் (17 வயது177 நாட்கள்) அந்த பெருமையை வைத்திருந்தார்.

முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது.

முன்ரோ, கம்பீர் ஆட்டத்தை தொடங்கினார்கள். அஸ்வின், முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சுக்கு இருவரும் ரன் சேர்க்க திணறினார்கள். ரஹ்மான் பந்துவீச்சில் முன்ரோ(6 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர், கம்பீருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து பேட் செய்தார். கம்பீர் தனது வழக்கமான அதிரடிக்கு மாறி பவுண்டரிகளாக விளாசியதால், ரன்ரேட் திடீரென வேகமெடுத்தது.

ஒரு சிக்சர் மட்டுமே அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்கள் சேர்த்திருந்த படேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த தமிழக வீரர் விஜய் சங்கரும் சோபிக்கவில்லை 13 ரன்கள் சேர்த்த நிலையில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.

36-வது அரைசதம்

இதனால் 10 ஓவர்களுக்கு 77 ரன்கள் 3 விக்கெட் என்ற நிலையில் டெல்லி அணி இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு வந்த ரிஸ்பா பந்த், கம்பீருடன் இணைந்து அதிரடியாக சில பவுண்டரிகளையும், ஒரு சிக்சரும் அடித்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய கம்பீர் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஐபிஎல் லீக் போட்டியில் அவருக்கு இது 36-வது அரை சதமாக அமைந்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்பா நீண்டநேரம் நிலைக்கவில்லை 28 ரன்கள் சேர்த்த நிலையில் ரஹ்மான் பந்துவீச்சில் ரிஸ்பா ஆட்டமிழந்தார்.

14-வது ஓவரில் அவசரப்பட்டு ஒரு ரன் ஓடிய கம்பீர் டைரக்ட் ஹிட் மூலம் ரஹ்மான் மூலம் ரன் அவுட் செய்யப்பட்டார். கம்பீர் 55 ரன்கள்(5 பவுண்டரி,ஒருசிக்சர்) சேர்த்து வெளியேறினார்.

அடுத்து வந்த டிவேடியா 9 ரன்களிலும், கிறிஸ்டியன் 13 ரன்களிலும் விரைவாக வெளியேறினார். கிறிஸ்மோரிஸ் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கிங்ஸ்லெவன் அணித் தரப்பில் ரஹ்மான், சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

167 இலக்கு

167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் அணிக்கு கேஎல் ராகுல், அகர்வால் நல்ல தொடக்கத்தை அளித்தனர். அதிலும் கே.எல் ராகுல் முதல் ஓவரில் இருந்தே பந்துகளை நாலாபுறமும் தெறிக்கவிட்டார். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒருசிக்சர் உள்ளிட் 16 ரன்கள் சேர்த்தார்.

முகமது ஷமி வீசிய 2-வது ஓவரிலும் ஒருசிக்சர், ஒருபவுண்டரி என 10ரன்களை ராகுல் சேர்த்தார். இதனால், கிங்ஸ் லெவன் அணி ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

14 பந்துகளில் அரைசதம்

மிஸ்ரா வீசிய 3-வது ஓவரில் ஒருபவுண்டரியைத் தொடர்ந்து 2 சிக்சர்கள், அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் என 24 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் ராகுல் அரை சதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் போட்டியில் மிகவிரைவாக அரைசதம் அடித்த பெருமையை ராகுல் பெற்றார்.

மோரிஸ் வீசிய 4-வது ஓவரில் அகர்வால் (7) ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளை மட்டும் சந்தித்த ராகுல் 51 ரன்களில்(16 பந்துகள், 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

யுவராஜ் ஏமாற்றம்

யுவராஜ்சிங், கருண் நாயர் ஜோடி நிதானமாக பேட் செய்தது. யுவராஜ் சிங் அவ்வப்போது சில பவுண்டரிகளை அடித்தபோதிலும் பொறுமையாகவே பேட் செய்தார்.

முகமது ஷமி வீசிய 9-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்த கருண் நாயர் ரன் ரேட்டை உயர்த்தினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 12 ரன்களில் டிவேடியா பந்துவீச்சில் வெளியேறினார்.

கருண் நாயரும், டேவிட் மில்லரும் நிதானமா பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். அவ்வப்போது சில அதிரடி ஷாட்களை அடித்து கருண்நாயர் ரன்களை குவித்தார். கருண் நாயர் 33 பந்துகளில் அரைசதம் அடித்து கிறிஸ்டியன் பந்துவீச்சில் வெளியேனார். இவர் கணக்கில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடக்கம்.

அடுத்து வந்த ஸ்டோய்னிஸ், மில்லருடன் இணைந்தார். கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஓவரை போல்ட் வீசி 18-வது ஓவரில் 10 ரன்கள் சேர்த்து மில்லரும், ஸ்டோய்னிஸும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

18.5 ஓவர்கள் ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் அணி வென்றது. மில்லர் 24 ரன்களுடனும், ஸ்டோய்னிஸ் 22 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் போல்ட், மோரிஸ், கிறிஸ்டியன், டிவேசியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

- தமிழ் இந்து  நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2018 8:13 pm

ayyasamy ram wrote:இந்நிலையில் ஒருவேளை நாளை தடையை மீறி சென்னையில்
போட்டி நடைபெற்றால், மைதானத்திற்கோ கிரிக்கெட் வீரர்களுக்கோ
ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல
என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஓ .... அப்ப நாளை போட்டி சுவராஷ்யமா இருக்கும் போல புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 9:27 am

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 Sun%20risers

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2018 4வது போட்டியில் நேற்று கேன் வில்லியம்சன் தலைனை சன் ரைசர்ஸ் அணியிடம் ரஹானே தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியடைந்தது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் (49) தவிர யாரும் சோபிக்கவில்லை, இதனையடுத்து 20 ஒவர்களில் 125/9 என்று மடிந்தது. தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி ஷிகர் தவண் (77), கேன் வில்லியம்சன் (36) ஆகியோர் பேட்டிங்கில் 15.5 ஓவர்களில் 127/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸை பேட் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக் உயரமானவர் என்பதால் இந்தப் பிட்சில் பந்துகளை அவரால் நன்றாக எழும்பச் செய்ய முடிந்தது. அபாய அதிரடி வீரர் பென் ஸ்டோக்ஸ் (5) விக்கெட்டையும் ஸ்டான்லேக் கைப்பற்றினார். வில்லியம்சனின் அபாரமான கேட்ச் அது.

ஆப்கான் அதிசய ஸ்பின்னர் ரஷீத் கான் (1/23) மற்றும் ஷாகிப் அல் ஹசன் (2/23) ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியை பாடாய் படுத்தி நடு ஓவர்களில் ஏற்கெனவே நிலையை விட்டு நகராத ராஜஸ்தான் தேரின் சக்கரங்களுக்கு மேலும் முட்டுக்கட்டைப் போட்டனர். சித்தார்த் கவுல் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ராயல்ஸ் செய்த தவறென்ன?

தொடக்கத்தில் ரஹானேயும் டி ஆர்க்கி ஷார்ட் என்ற ஆஸி.வீரரும் இறங்கினர். டி ஆர்க்கி ஷார்ட் ஒரு அபாரமான அதிரடி வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இங்குதான் சிக்கல் தொடங்கியது. ராகுல் திரிபாதி தொடக்க வீர்ராக 2017 ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரமாதமாக ஆடியவர், ஆனால் அவரைப் போய் 5-ம் நிலையில் களமிறக்கினார் அப்போதே சன் ரைசர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ராகுல் திரிபாதி 32 டி20 போட்டிகளில் 654 ரன்களை 131.06 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 654 ரன்களில் 62 பவுண்டரிகள் 26 சிக்சர்கள் என்று 404 ரன்களை பவுண்டரி சிக்சர்களிலேயே அடித்துள்ளார். அவரை வேறு டவுனில் மாற்றியது ராஜஸ்தான் செய்த பெரும்தவறானது.

டியார்க்கி ஷார்ட் பிபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்தவர்தான் ஆனால் நேற்று 4 ரன்களில் அவர் மிட் ஆஃபில் தட்டி விட்டு இல்லாத சிங்கிளுக்கு ஓடி வில்லியம்சனின் பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆனார். சஞ்சு சாம்சன் இறங்கி புவனேஷ்வர் குமார் பவுலிங்கில் இரண்டு பவுண்டரிகளை அடித்துத் தொடங்கினார். பவர் பிளேயில் 48 ரன்கள் என்ற நிலைக்குப் பிறகு தடுமாற்றம் ஏற்பட்டது.

ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் வர ராஜஸ்தான் ‘ஆட்டம்’ தொடங்கியது பென்ஸ்டோக்சையே கட்டிப்போட்ட அவர் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டுமே கொடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களில் லாங் ஆனில் ஸ்டான்லேக் பந்து வீச்சில் வெளியேற ராகுல் திரிபாதி 5-ம் நிலையில் இறங்கி 15 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தை இழுக்க நினைத்தார், மட்டையில் சரியாகச் சிக்காமல் லாங் ஆனில் பாண்டேயிடம் கேட்ச் ஆனார். இதே ஓவரில் 42 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். மேலேறி வந்து ஆடுவார் என்பதை எதிர்பார்த்த ஷாகிப் பந்தை ஆஃப் திசையில் தள்ளி வீச சாம்சன் ஷாட் சரியாகச் சிக்காமல் கவரில் எழும்பியது, ரஷீத் கான் ஓடி வந்து சறுக்கிக்கொண்டு கேட்ச் பிடித்தார், அபாரமான கேட்ச் அது. ஷாகிப் ஒரே ஓவரில் திரிபாதி, சாம்சனை வெளியேற்ற 14வது ஓவர் முடிவில் 94/5 என்று சரிந்தது ராஜஸ்தான்.

அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் (6) ரஷீத் கான் பந்தை புல் ஷாட் ஆட வாய்ப்பு வந்ததையடுத்து ஆடினார், ஆனால் பந்து தாமதமாக வந்து மட்டையில் பட்டு பவுல்டு ஆனது. ஷ்ரேய்ஸ் கோபால் 18 ரன்களை எடுக்க ராயல்ஸ் 125 ரன்களை பாடுபட்டு எடுத்தது.

ரஹானே கேட்ச் விட்ட பிறகு ஷிகர் தவண் அபாரம்:

வார்னர் இல்லாததால் விருத்திமான் சஹாவை சன் ரைசர்ஸ் தொடக்கத்தில் தவணுடன் இறக்கியது. அவர் 5 ரன்களில் உனாட்கட் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆனார். முன்னதாக ஷிகர் தவண் 0-வில் இருந்த போது தவல் குல்கர்னி பந்தை குறிப்பார்த்து ஸ்லிப்பில் கொடுக்க அங்கு ரஹானே கேட்சை விட்டார். குல்கர்னி முதல் 6 ஓவர்களில் 51% விக்கெட்டுகளை வீழ்த்தியவர் நேற்று ரஹானேவினால் அது கைகூடவில்லை.

ஆனால் அடுத்த ஓவரிலேயே தவல் குல்கர்னியை ஒரு பவுண்டரி மற்றும் ஒரு அப்பர் கட் சிக்ஸ் விளாசினார் தவன். 33 பந்துகளில் அவர் அரைசதம் எடுக்க கேன் வில்லியம்சன் ஒரு முனையில் அழகாக ஆடி 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். தவண் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 77 நாட் அவுட். 127/1 என்று சன் ரைசர்ஸ் வெற்றி. ஆட்ட நாயகன் ஷிகர் தவண். இது மிகவும் தவறு 2 கேட்ச், ஒரு விக்கெட் அற்புதமான பந்து வீச்சுக்கு ரஷீத் கானுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும் அல்லது ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ஷாகிப் அல் ஹசனுக்கு கொடுத்திருக்க வேண்டும், ஆனால் சூப்பர்ஸ்டார் கலாச்சரம்... ஷிகர் தவண் ஆட்ட நாயகன்!

- தமிழ் இந்து  நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 9:28 am

ஐ.பி.எல் -2018 !!  - Page 2 10CHPMUCSKTEAM

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 வருடங்கள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ 30 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பிரதானமான காரணமாக இருந்தார்.

51 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்களை இழந்து நம்பிக்கை தளர்ந்திருந்த நிலையில் பிராவோ சரிவில் இருந்து அணியை மீட்டிருந்தார். கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் தனது அசாத்தியமான பேட்டிங்கால் வெற்றியை சாத்தியமாக்கினார். அதிலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற திறமையான பந்து வீச்சாளருக்கு எதிராக பிராவோ மட்டையை சுழற்றியது பிரம்மிக்க வைத்தது.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவையாக இருந்த சூழ்நிலையில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தன்னால் ஒரு அடி கூட ரன் சேர்ப்பதற்காக ஓட முடியாது என்ற சூழ்நிலையில் முதல் 3 பந்துகளை வீணடித்த கேதார் ஜாதவ் அடுத்த இரு பந்துகளையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டி வெற்றியை பதிவு செய்த விதம் சென்னை அணியின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு பெருக்கி உள்ளது.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு ஆகியோரும் அவர்களை தொடர்ந்து களம் புகுந்த சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனி ஆகியோரும் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை வழங்கத் தவறினர். பிராவோவின் அதிரடி, கேதார் ஜாதவின் சாமர்த்தியம் ஆகியவை எடுபடாமல் இருந்திருந்தால் அந்த ஆட்டத்தில் சென்னை அணி மிகப்பெரிய அளவிலான தோல்வியை சந்தித்திருக்கும்.

இதேபோல் பந்து வீச்சில் மார்க் வுட், வாட்சன், தீபக் ஷாகர் ஆகியோர் சற்று நெருக்கடி கொடுத்த போதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்கள் கைப்பற்றத் தவறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். முரளி விஜய், ஷர்துல் தாக்குர் ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 2 வருடங்களுக்குப் பிறகு சொந்த மைதானத்தில் களமிறங்கும் சென்னை அணி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்ளக்கூடும்

அதேவேளையில் புதிய கேப்டனான தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த சீசனை விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் ஆட்டத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று முன்தினம் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் சிங்கத்தை (சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை) அதன் குகையிலேயே இன்று சந்திக்கிறது கொல்கத்தா.

பெங்களூரு அணிக்கு எதிராக நித்திஷ் ரானா, சுனில் நரேன் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாக சிறப்பான பங்களிப்பை வழங்கினர். 177 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் சுனில் நரேன் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசி மிரட்டினார். பந்து வீச்சிலும் சுனில் நரேன் சோடை போகவில்லை. 4 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார். அதேவேளையில் நித்திஷ் ரானா பந்து வீச்சில் டிவில்லியர்ஸ், விராட் கோலி ஆகியோரது விக்கெட்களை ஒரே ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தி அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் பேட்டிங்கில் 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்த கூட்டணியிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்களைத் தவிர தினேஷ் கார்த்திக்கும் பேட்டிங்கில் 35 ரன்கள் சேர்த்து தனது பங்களிப்பையும் நேர்த்தியாக வழங்கியிருந்தார். ஆட்டம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையிலும் தினேஷ் கார்த்திக் அவசரம் காட்டாமல் இறுதி வரை நிதானமாக பேட் செய்த விதம் பாராட்டுக்குரிய வகையில் அமைந்தது.

கொல்கத்தா அணி கடைசி கட்ட பந்து வீச்சில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. அனுபவ வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் தனது முதல் ஓவரில் 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் கடைசி ஓவரில் 16 ரன்களை தாரைவார்த்தார். எனினும் மற்ற பந்து வீச்சாளர்களான பியூஸ் சாவ்லா, மிட்செல் ஜான்சன், சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாகவே செயல்பட்டனர். இவர்களில் ஜான்சன், சென்னை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடித் தரக்கூடும். பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் சோபிக்க தவறிய கிறிஸ் லின், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

சுனில் நரேனுக்கு எதிராக பெங்களூரு அணியினர், சரியான கள வியூகம் அமைக்கத் தவறினர். அதாவது வாஷிங்டன் சுந்தரும், கிறிஸ் வோக்ஸூம் ஒரே நீளத்தில் பந்து வீசினர். இவை, சுனில் நரேன் பெரிய அளவில் ஷாட் மேற்கொள்வதற்கு உதவிகரமாக அமைந்தது. மேலும் லாங்-ஆப், டீப் மிட்விக்கெட் திசையிலும் பீல்டர் நிறுத்தப்படாததை சுனில் நரேன் நன்கு பயன்படுத்திக் கொண்டார். இதனால் இந்த விஷயத்தில் சென்னை அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். சுனில் நரேன் விக்கெட்டை விரைவாக கைப்பற்றும் பட்சத்தில் அந்த அணியின் ரன்குவிப்பை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

அணி விவரம்

சென்னை: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, ஷர்துல் தாக்குர், டு பிளெஸ்ஸிஸ், மார்க் வுட், சேம் பில்லிங்ஸ், இம்ரன் தகிர், தீபக் ஷாகர், லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், கனிஷ்க் சேத், மோனு சிங், துருவ் ஷோரே, கிஷித்ஸ் சர்மா, சைதன்யா பிஷ்னோய், ஹர்பஜன் சிங்.

கொல்கத்தா: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸல், ராபின் உத்தப்பா, குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா, நிதிஷ் ரானா, நாகர்கோட்டி, ஷிவம் மாவி, ஜான்சன், சுப்மான் கில், வினய் குமார், ரிங்கு சிங், டெல்போர்ட், ஜவோன் சீயர்லெஸ், அபூர்வ் வான்கடே, இஷாங் ஜக்கி, டாம் குர்ரன்.

வேறு இடத்துக்கு மாற்றமா?

ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையால் சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்படும் என்ற கருத்து நிலவுகிறது.அது உண்மையல்ல. சென்னை ஆட்டங்களை மாற்றும் திட்டம் ஐபிஎல் நிர்வாகத்திடம் இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் தினங்களில் கூடுதல் பாதுகாப்பு தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே திட்டமிட்டப்படி போட்டிகள் சென்னையில் நடைபெறும். நாளை (ஏப்ரல் 10) ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று நான் உறுதி அளிக்கிறேன். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

கேதார் ஜாதவ் விலகல்


சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி கூறும்போது, “தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கேதார் ஜாதவ் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது எங்களுக்கு துரதிருஷ்டவசமானதுதான். அவருக்கான மாற்று வீரரைத் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை.இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்புதான், அவர் ஒரு சிறந்த வீரர், நடுகள வரிசையில் முக்கிய வீரராகவும் திகழ்ந்தார்” என்றார்.

கேதார் ஜாதவ் விலகி உள்ளதால் நடுகள வரிசையை பலப்படுத்தும் விதமாக தொடக்க வீரரான அம்பாட்டி ராயு நடுகள வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் துருவ் ஷோரே வாட்சனுடன் தொடக்க வீரராக களமிறக்குவது குறித்தும் சென்னை அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

நன்றி தமிழ் இந்து

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 10, 2018 10:54 am

Code:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தயவு செய்து அரசியலாக்காதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்


ஆமாம் , விளையாட்டில் அரசியல் கூடாது - அரசியலில் விளையாட்டு கூடாது

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Apr 10, 2018 11:04 am

இன்றைய போட்டி ஏதாவது ஒரு வகையில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நினைக்கிறேன் அண்ணா .. சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக