ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கிச்சன் டிப்ஸ்...
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Today at 5:51 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by T.N.Balasubramanian Today at 5:41 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:00 pm

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by Guest Today at 3:41 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by Dr.S.Soundarapandian Today at 1:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Yesterday at 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Yesterday at 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Yesterday at 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Yesterday at 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Yesterday at 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Yesterday at 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Yesterday at 8:23 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Yesterday at 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Yesterday at 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 4:40 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 4:09 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Yesterday at 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Yesterday at 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Yesterday at 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Yesterday at 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Yesterday at 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

» ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அசிலியா மலர்கள் பூத்து குலுங்குது !
by krishnaamma Wed Sep 23, 2020 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Wed Sep 23, 2020 10:07 pm

» காய்கறிகள் கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நீலகிரியில் அறிமுகம் !
by krishnaamma Wed Sep 23, 2020 9:47 pm

» இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை !
by krishnaamma Wed Sep 23, 2020 9:36 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Wed Sep 23, 2020 9:31 pm

» ஆனந்த வாழ்வுக்கு.....
by krishnaamma Wed Sep 23, 2020 9:15 pm

» குரு சிஷ்யன் உறவு !
by krishnaamma Wed Sep 23, 2020 9:13 pm

» விநாயகர் சதுர்த்தி பாடல் (பயணத் தடைகள் நீங்க கேட்க வேண்டிய பாடல்)
by krishnaamma Wed Sep 23, 2020 9:05 pm

Admins Online

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Page 1 of 2 1, 2  Next

Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 10:56 pm

தமிழர் என்ற பெருமை மட்டும் போதுமா... மொழியை அறிய வேண்டாமா?


சொல்லறிவு என்னும் திறப்பு


பேச்சுத் தமிழைக் கொடுந்தமிழ் என்று சொல்வார்கள். ஒரு மொழியின் பேச்சு வழக்கில் கருத்துகளைச் சொல்வதுதான் முதன்மையாக இருக்குமேயன்றி பிற எவையும் முன் நில்லா. ஒரு சொல் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டுமோ அவ்வாறே பேச்சு வழக்கில் ஒலிக்கும் என்று கூறுவதற்கில்லை. ஒலிப்பின் அழுத்தங்கள் குறைந்து, நுண்மைகள் குன்றி வழுக்கலாய் ஒலிக்கும். பேச்சு மொழியின் பயன் அந்தந்த நேரத்து உரையாடலும் செய்தி தெரிவிப்பதுமே. தேவைக்கேற்ப விரைவுக் குறிப்போடு இருப்பதும் இயல்புதான். எழுத்துத் தமிழானது பேச்சுத் தமிழின் வழுக்கள் அனைத்தையும் நீக்கியதாகத்தான் இருக்கும். எழுத்துத் தமிழைத்தான் 'செந்தமிழ்' என்பார்கள்.

மொழி, இலக்கணம் கூறுகின்ற அனைத்து இயல்புகளுக்கும் உட்பட்டவாறுதான் எழுத்து இருக்க வேண்டும். பேச்சில் தவறாகச் சொல்லப்படுவது குற்றமாகாது. ஆனால், எழுத்தில் எந்தத் தவற்றுக்கும் இடமில்லை. அதனால்தான் இம்மொழியானது எழுத்துத் தமிழில் உறைகிறது. பேச்சுத் தமிழில் உலவுகிறது. எழுத்துத் தமிழில் சங்க காலத்து வழக்குக்கும் அண்மைக் காலத்து வழக்குக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளும் எளிதில் விளங்குகின்றன. அண்மைக் காலத்து எழுத்துகள் விளங்குகின்றவாறு சங்கச் செய்யுள்கள் விளங்குவதில்லை. அது ஏன் என்றால், அண்மைக் காலத்து உரைநடை எழுத்துகள் தனித்தனிச் சொற்களாகப் பிரித்து எழுதப்படுகின்றன. சங்கச் செய்யுள்கள் புலமைத் தமிழில் சேர்த்து எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காகவே செய்யுள்களைப் பிரித்துப் பதிப்பார்கள். அவ்வாறு பிரித்துப் பதிக்கப்பட்ட செய்யுள்கள் மிக எளிமையாக விளங்கும்.


எடுத்துக்காட்டாக, திருக்குறள்களை எடுத்துக்கொள்வோம். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட செந்தமிழில் குறட்பாக்கள் எழுதப்பட்டுள்ளன. எல்லாக் குறள்களும் நமக்கு விளங்காமல் போயினவா…? இல்லையே. 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று'. இந்தக் குறள் படிக்கின்ற எல்லார்க்கும் தெளிவாக விளங்குகிறது. இதை விளக்கிச் சொல்ல வேண்டுவதில்லை. விளங்காமைக்கு இடமேயில்லை. ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதில்லை, ஒருவர் நமக்குச் செய்த நன்மையல்லாதவற்றை அன்றே மறந்துவிடுவதுதான் நல்லது என்பது அக்குறளின் பொருள். நம் மொழியின் பழைய எழுத்து முறைமையும் இன்றைய எழுத்து வழக்கும் மிகவும் நெருக்கமான தன்மைகளைப் பெற்றிருக்கின்றன என்பது கண்கூடு.

சரி, எல்லாக் குறள்களும் இதே தன்மையோடு இருக்கின்றனவா? 'ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு'. மேற்காண்பதும் குறள்தான். ஆனால், முதலில் சொன்ன நன்றி மறப்பது குறளைப்போல இக்குறள் எளிமையாய் விளங்கவில்லை. அதற்குக் காரணம் என்ன ? இக்குறளில் உள்ள சில சொற்களுக்குப் பொருள் தெரியும், சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை. கை, கயவர், உடைக்கும், அல்லாதவர்க்கு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியும். ஈர்ங்கை, கூன்கை, விதிரார், கொடிறு ஆகிய சொற்களின் பொருள்கள் நமக்குத் தெரியவில்லை. ஆக, நமக்குச் சொற்பொருள் தெரியவில்லை. அதனால் விளங்கவில்லை. அதாவது தமிழில் உள்ள சொற்கள் பலவற்றின் பொருளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதால் அச்சொற்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள செய்யுள்கள் விளங்கவில்லை.

அச்சொற்களின் பொருள்களைக் கூறுகிறேன். இப்போது விளங்குகிறதா என்று பார்ப்போம். ஈர்ங்கை என்றால் “உணவு உண்டபின் கழுவிய கை” என்பது பொருள். அதாவது எச்சிற்கை. விதிர்தல் என்றால் நடுங்குதல் என்பது பொருள். உதறும் செயலானது கையை நடுங்கச் செய்வதுதானே ? இங்கே விதிரார் என்பதற்கு “உதறார்” என்ற பொருளைக் கொள்ளலாம். அடுத்து கூன்கை. கூன் என்றால் தெரியும், வளைந்துவிடுவது. கூன்முதுகு என்றால் வளைந்த முதுகு. கூன்கை என்பதற்கு வளையும்கை என்று பொருள். ஒருவரை அடிப்பதற்கோ, ஒன்றை உடைப்பதற்கோ கையை வளைத்து வீசவேண்டும். கொடிறு என்றால் கன்னக்கதுப்பு. இப்போது குறளுக்குச் செல்வோம் வாருங்கள். ஈர்ங்கை விதிரார் கயவர் – உணவு உண்டபின் கழுவிய கையைக்கூட கயவர்கள் நடுங்கவிடமாட்டார்கள் / உதறமாட்டார்கள். கொடிறுடைக்கும் – கன்னத்தை உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு – வளைந்து வருகின்ற கைகள் இல்லாதவர்கட்கு. “தம் தாடையைப் பெயர்க்க வளைந்து வந்து அடிக்கும் கைகளை உடையவர்களுக்கு அல்லாது மற்றவர்க்காகத் தாம் உண்ட எச்சிற்கையைக்கூட உதறமாட்டார்கள் கயவர்கள்” என்பது குறளின் பொருள். இப்போது குறட்பொருள் நன்கு விளங்குகிறது.

நம் மொழியிலுள்ள எண்ணற்ற சொற்களின் பொருள்கள் தெரியவில்லை என்பதால்தான் சங்கச் செய்யுள்கள் விளங்கவில்லை. பழகிய ஆயிரம் சொற்களுக்குள்ளாகவே நாம் புழங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் ஏன் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ளக்கூடாது?அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 10:58 pm

தமிழ் மொழியைக் காப்பாற்றுவது என்பது என்ன தெரியுமா?


நம் எல்லார் வீட்டிலும் பெரும்பாலும் மொழி அகராதிகளை வைத்திருப்போம். தமிழ் அகராதி இருக்கிறதோ இல்லையோ ஆங்கில மொழியகராதி கட்டாயம் இருக்கும். தமிழர் வீடுகளில் தமிழ் அகராதியே இராது. ஏனென்றால் தமிழ்ச்சொற்களுக்கு நன்றாகவே பொருள் தெரியும் என்ற நினைப்பு. முதல் வேலையாக ஒரு தமிழகராதி நூலை வாங்கி வைத்துக்கொள்க.

உண்மையில் ஆங்கிலத்தில் நாம் தெரிந்து வைத்துள்ள அளவுக்குக்கூட தமிழ்ச்சொற்களை அறிந்திருக்கவில்லை. நம் பேச்சுக்குப் பயன்படுகின்ற சில நூறு சொற்களுக்கு அப்பாலுள்ள தமிழ்ச் சொற்கள் அறியப்படாமல் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றை அறிவதும் இயன்ற இடங்களில் பயன்படுத்துவதுமே நம்மால் இயல்கின்ற மொழி வளர்ப்பு ஆகும். மொழியைக் காப்பாற்றுவது என்பது அதன் ஒவ்வொரு சொல்லையும் காப்பாற்றுவதுதான்.

என்னிடம் கட்டடப் பணிக்கு வருகின்ற தலைக்கொத்தனார் (மேஸ்திரி) “சப்போஸ்” (Suppose) என்ற ஆங்கிலச் சொல்லைத் தம் பேச்சில் பயன்படுத்துகிறார். அவரோ தொடக்கக்கல்வியளவே படித்தவர். “சப்போஸ் நாளைக்கே செங்கல் விலை ஏறிப்போச்சுன்னா… சப்போஸ் இந்த இடத்துல இன்னொரு ரூம் போட்டா…” என்கிறார். “ஒருவேளை” என்கின்ற சொல் தெரியாமலில்லை. நான் அவ்விடத்தில் “ஒருவேளை அப்படியாச்சுன்னா பார்த்துக்கலாம்…” என்று பயன்படுத்திப் பேசினால் அவர் விளங்கிக்கொள்கிறார். ஆனால், அவருடைய பழக்கத்தில் எங்கோ ஓரிடத்தில் ‘சப்போஸ்’ என்ற சொல்லைக் கற்றுக்கொண்டார். அதைத் தம் பேச்சுமொழியில் ஆள்கிறார்.

சப்போஸ் என்று பயன்படுத்தத் தெரிந்தவர்க்கு ஒருவேளை, ஒருக்கால் என்று வாய்வரவில்லை. இப்படித்தான் சிறிது சிறிதாக தாய்மொழியின் இடத்தை வேற்று மொழி கைப்பற்றிக்கொள்கிறது. தமிழ்ச்சொற்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. ஓர் எளிய சொல்தான், யாரும் பயன்படுத்தக்கூடியவாறுள்ள பேச்சுத் தமிழ்ச்சொல்தான், அதற்கே இந்நிலை என்றால் தமிழின் அருஞ்சொற்கள் எப்படியெல்லாம் துருவேறிக்கிடக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

எடுத்துக் கூறிய இந்நிகழ்வானது பேச்சுத்தமிழ் மட்டத்தில் கைவிடப்பட்டு வரும் தமிழ்ச்சொற்களைப் பற்றியது. எழுத்துத்தமிழ் என்று இன்னொரு பெரும்பரப்பு இருக்கிறது. அங்கேயாவது தமிழ்மொழி தழைத்தோங்கி நிற்கிறதா? தேடியெடுத்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துகிறார்களா? அரிதினும் அரிதாக ஒரு சொல்லையேனும் புதிதாகக் கற்றுப் பயன்படுத்துவோம் என்று யாரேனும் முயல்கிறார்களா? இந்தப் பொருளில் புதிதாக ஒரு சொல் இருக்க வேண்டுமே, அதைத் தேடியெடுத்து ஆள்வோம் என்ற முனைப்பு யார்க்கேனும் இருக்கிறதா? இதற்குத் தமிழ்ச்சொல் என்ன, அன்றேல் நான் ஆக்குவேன் என்ற ஆக்கச் சிந்தனை உண்டா? இல்லை இல்லை.

எழுத்துத் தமிழின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருக்கிறது. தலைக்கொத்தன் பெரிதாய்ப் படித்தறியாதவன். தன் பேச்சு வழியாய் அறிந்த ஓரிரு சொற்களோடு நிற்கின்றவன். ஆனால், எழுத்தில் ஈடுபடுபவர்கள் யார்? தம் வாழ்வின் பெரும்பகுதியை மொழியோடும் மொழிச்சொற்களோடும் கழிப்பவர்கள். அவர்கள் ஊட்டும் சொல்லும் கருத்தும் தூண்டும் எண்ணமும் வேட்கையுமே குமுகாயத்தை ஆள்கின்றன. அவர்களேனும் புதுப்புதுச் சொற்களை நாடிச் சொல்ல வேண்டாவா ?

புதிய சொற்களை நாடாவிட்டாலும் பழுதில்லை, முடிந்தவரை ஆங்கிலச்சொல் கலவாமல் எழுத வேண்டும்தானே ? அதைக்கூட அவர்கள் செய்வதில்லை. ஓர் ஆங்கிலச் சொல்லைக் கலந்து எழுதுவதில் வணிகக்கதை எழுத்தாளர் முதற்றே புத்திலக்கியம் படைப்பவர்வரை ஒருவரும் கூச்சப்படுவதில்லை. ஆங்கிலம் போன்றே வடமொழி, உருது முதலிய பிறமொழிச்சொற்களும் கலந்திருக்கின்றன.

ஆங்கிலக் கலப்பைக்கூட எளிதில் அறிந்துவிடலாம். வடசொற்கலப்பினை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஐக்கியம், முக்கியம், சகோதரி, நீதி ஆகியன வடசொற்கள் என்றால் பலர்க்கும் அதிர்ச்சியாக இருக்கும். அவை சொற்கட்டுமானத்திலும் ஒலிப்பிலும் தமிழ்போலவே விளங்குவதால் இத்தகைய குழப்பம் ஏற்படுவது இயற்கை. ஆக, இவை அனைத்திற்கும் ஒரேயொரு தீர்வுதான். நம் தமிழ்ச்சொல்லறிவைப் பெருக்கிக்கொள்வது. பேச்சிலும் எழுத்திலும் தமிழ்ச்சொல்லாட்சியை மேம்படுத்துவது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 10:59 pm

'அம்மா' என்றால் தெரியும், 'அம்மம்' என்றால்?


புதிய சொற்களை அறிவது என்னும் நம் பயணத்தில் நாம் முதன்மையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. தமிழ் மொழியின் தனித்தன்மைகளில் தலையாயது என்று அதன் சொற்பொருள் தன்மையைக் கூறலாம்.

சொல் என்றால் அது பொருளைத் தருவது. அதற்கென்று ஓர் அர்த்தம் இருக்கும். பொருள் தராதது சொல்லாகாது. அம்மா என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் இருக்கிறது. பெற்றெடுத்த தாயைக் குறிக்கிறது. பொருள் தராதவை வெற்றொலிக் குறிப்புகளாக நின்றுவிடும்.

சொல் எனப்படுவது ஏதேனும் ஒரு பொருளைக் கட்டாயம் குறிக்க வேண்டும். பொருள் தராதவற்றை நாம் சொல்லென்று கருதத் தேவையில்லை.

தமிழ் மொழியின் இந்தத் தன்மையை நம்மளவில் பொருத்திப் பார்ப்போம். சொற்களுக்குப் பொருள்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்தப் பொருள் நாமறிந்த ஒன்றாக இருக்கையில்தான் ஒரு சொல் நமக்குச் சொல்லாகிறது.

அம்மா என்பது நமக்குத் தெரிந்த பொருளையுடைய சொல். அதனால் அது நம் அறிவுப் பரப்பில் ஒரு சொல்லாகத் தெரிகிறது. சொல்லின் பொருள் தெரிந்ததால் அச்சொல்லை நாம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.

“அம்மம்” என்றும் ஒரு சொல் இருக்கிறது. அம்மம் என்ற சொல்லின் பொருள் நமக்குத் தெரிகிறதா? தெரியவில்லை. ஒரு சொல்லின் பொருள் நமக்குத் தெரியவில்லை என்றால் என்னாகும் ? அம்மா என்ற சொல் நாம் பேச்சிலும் எழுத்திலும் பயன்பாட்டிலும் இடம் பெற்றதைப்போல் அம்மம் என்ற சொல் இடம்பெறப் போவதில்லை. நாம் அறியாதிருந்ததனால் அம்மம் என்ற சொல்லுக்கு நம் வாழ்க்கையில் இடமில்லை.

நம்மை அடையாத சொல் நம்மை விட்டுப் போய்விடுகிறது. நமக்கு உடைமையான ஒன்று நம்மால் கைவிடப்படுகிறது. காலப்போக்கில் அதன் பயன்பாடு அருகிப்போய்க் கேட்பாரற்றுக் கிடக்கும். பார்க்காத பயிரெல்லாம் பாழ் என்று சொல்வார்கள். ஒரு சொல் பாழடைவதும் இப்படித்தான்.

அம்மம் என்ற சொல்லுக்கு ‘முலை’ என்று பொருள். ஒரு பொருளிலிருந்து தோன்றும் விளைபொருளுக்கும் அப்பொருளே பெயராகும். குழல் இனிது, யாழ் இனிது என்பது குழல், யாழ் ஆகிய பொருள்களிலிருந்து தோன்றும் இசையைக் குறிப்பது. அவ்வாறே குழந்தைக்கு ஊட்டப்படும் தாயின் முலைப்பாலும் அம்மம் எனப்படும்.

இப்போது எண்ணிப் பாருங்கள், அம்மம் என்ற சொல்லுக்கும் அம்மா என்ற சொல்லுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெற்றென விளங்கும். அம்மம் என்ற சொல் அம்மாவோடு தொடர்புடைய பொருளைத்தர வல்லது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் சொற்பொருள் அறிவதற்கான அடிப்படை.

ஒரு சொல்லின் ஏதேனும் ஒரு முன்னசையோ பின்னசையோ பகுதியோ விகுதியோ அந்தச் சொல்லுக்குரிய பொருளைப் பற்றிய குறிப்பைத் தரும். அதன்வழியே சென்று அப்பொருளை அடையலாம். ஞாலத்தின் எல்லா மொழிகளிலுமே சொற்களின் கட்டுமானங்கள் பெரும்பாலும் இவ்வகையில்தான் இருக்கும்.


அம்மான் என்பது தாயுடன் பிறந்தவர்களைக் குறிக்கும் ஆண்பால் சொல். தாய்மாமனைக் குறிப்பது. அம்மன் என்பது தாய் நிலையில் நின்று ஊர்காக்கும் பெண்கடவுளைக் குறிப்பது. அம்மணி என்பது தாய்க்குலத்திற்கான உயர்வுச் சிறப்பினை நல்கும் சொல். மேடம் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அம்மணி என்ற சொல்லைப் பரிந்துரைப்பேன். அம்மையார் என்பது மூத்த பெண்களைக் குறிக்கும் மரியாதையான சொல்தான். அம்மையப்பன் என்றால் தாயும் தந்தையும் சேர்ந்த வடிவத்தினன்.

ஒரேயொரு சொல் நமக்குத் தெரிந்ததாக இருந்தால் அது தொடர்புடைய பத்து இருபது சொற்களுக்கும் நமக்குப் பொருள் கிடைத்துவிடுகிறது. வேர்த்தன்மையுடைய ஒரு சொல்லை அறிந்திருந்தால் போதும். அதன் வழியொற்றித் தோன்றும் பற்பல சொற்களுக்குப் பொருள் கண்டுவிடலாம். அத்தகைய சொற்களை அறிந்துவிடலாம். அவற்றில் பெரும்பான்மையான சொற்கள் நமக்குத் தெரிந்தவையாகவே இருக்கும். சொல்லறிவைப் பெறுவதில் எவ்வகையான இடர்ப்பாடும் இராது. இதுதான் எளிய வழி.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:00 pm

ஆங்கிலத்திலேயே இத்தனையென்றால் தமிழில் இதற்கு பஞ்சமா?


பொருள் தரத்தக்க ஒரு சொல், வேர்த்தன்மையும் பொருளும் நிறைந்த ஒரு சொற்பகுதி... முன்பின்னாக ஒட்டிக்கொண்டு பத்திருபது சொற்களைத் தோற்றுவித்துவிடும். பெரும்பாலான மொழிகளின் சொல் தோற்றுவாய் முறைமை அவ்வகையிலேயே அமைந்திருக்கிறது. தமிழுக்குள் நுழைவதற்கு முன்பாக ஆங்கிலத்திலேயே ஒரு நல்லெடுத்துக்காட்டின்வழி இத்தன்மையை விளக்குவது இன்னும் எளிமையாக இருக்கும். ஆங்கிலச் சொற்களின் தோற்றத்திற்கு அவற்றின் முன்னும் பின்னுமாக ஒட்டும் ஒரேயொரு சொல்லுருபு எப்படிப் பொருள் தருகிறது என்பதைப் பார்க்கலாம். ஆங்கிலத்தின் வழியாக வந்தால்தான் இன்றைய தலைமுறையினர்க்கு எதுவும் எளிதில் விளங்குகிறதாயிற்றே...!

Cent என்னும் இலத்தீனத்து மொழிச்சொல் ஒன்று இருக்கிறது. அச்சொல் ஆங்கிலத்துக்கு ஏற்றுமதியாகிறது. Cent என்றால் “நூறு” என்னும் எண்ணிக்கைப் பொருள். Centi என்றால் “நூற்றின் ஒரு பகுதியான” என்று பொருள். இந்த Cent என்னும் இலத்தீனச் சொல்லுருபை வேராக வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் கைக்கொள்ள முடியாத அளவுக்குச் சொற்களை உருவாக்குகிறார்கள். ஒரேயொரு சொல்லுருபு பத்து, இருபது, முப்பது என்று சொற்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. எப்படி என்று பார்ப்போம்.

Cent என்று முன்னும் பின்னுமாக ஒட்டித் தோன்றும் ஆங்கிலச் சொற்களை நினைவுபடுத்திப் பாருங்கள். Percent என்றால் ‘நூற்றுக்கு இவ்வளவு” என்பது பொருள். அதைத்தான் நாம் ‘விழுக்காடு’ என்கிறோம். Century என்ற சொல் “ஆண்டுகளின் நூற்றுத் தொகுதி”யைக் குறிக்கிறது. நூற்றாண்டு. மட்டைப்பந்தாட்டத்தில் எடுக்கப்பட்ட நூறு ஓட்டங்களுக்கும் அதுவே பெயர். Centurian என்றால் நூற்றினை அடைந்தவர். நூறாம் அகவை வரை வாழ்ந்தவர் என்றாலும், நூறு ஓட்டங்களை அடைந்தவர் என்றாலும் அவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். நூற்றுக்கால் பூச்சியினங்களை “Centipede” என்று அழைக்கிறார்கள். அமெரிக்க நாணயம் டாலர். ஒரு டாலரின் நூற்றில் ஒரு பங்கு “Cent” என்றே அழைக்கப்படுகிறது. தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவனை “Centum எடுத்திருக்கான்…” என்று பாராட்டுகிறோம். ஒரு மீட்டர் நீளத்தை நூறு பங்காகப் பிரித்தால் ஒவ்வொரு பங்கும் Centimetre. ஒரு இலிட்டரில் நூற்றில் ஒரு பங்கு Centilitre. ஒரு கிராம் நிறுத்தல் அளவையில் நூற்றில் ஒரு பங்கு Centigram.

ஒரேயொரு வேரிலிருந்து எப்படியெல்லாம் பற்பல கிளைச்சொற்கள் தோன்றுகின்றன என்பது இப்போது விளங்குகிறதா ? Centi என்பதற்கு நூற்றில் ஒரு பங்கு என்னும் பொருள் விளக்கம் தெரிந்திருந்தால் ஒரு மீட்டர்க்கு நூறு சென்டிமீட்டரா, ஆயிரம் சென்டிமீட்டரா என்னும் குழப்பமே வராதில்லையா ? ஆங்கிலத்தைக் கற்பிக்கின்ற மேலை நாட்டுப் புலவர் பெருமக்கள் அம்மொழியின் சொல்வேர்த்தன்மையைக் கற்பித்துத்தான் மொழிப்புலமையை ஊட்டுகிறார்கள்.

ஆங்கிலத்திலேயே இத்தன்மை இருக்கையில் அம்மொழியைவிடவும் தொன்மையான தமிழில் வேர்ச்சொற்களுக்கும் சொல்லுருபுகளுக்கும் பஞ்சமா என்ன? நம் மொழியிலும் கணக்கிலடங்காத வேர்ச்சொற்கள் இருக்கின்றன. ஒரு சொல் எவ்வாறெல்லாம் தோற்றுவிக்கப்படலாம் என்பதற்கும் வரையறுப்புகள் இருக்கின்றன. அவற்றை முறையாக அறிந்துகொண்டால் நம் நினைவெங்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் மணிமணியாக நிரம்பிவிடும். பேசுவதற்கும் எழுதுவதற்கும் சொல் தட்டுப்பாடே தோன்றாது. ஒன்றைக் கூற விரும்பினால் பொருத்தப்பான்மை மிக்க நற்சொற்களைப் பயன்படுத்திக் கூறும் ஆற்றல் கைவந்துவிடும். நமக்குத் தெரியாத அருஞ்சொற்களின் எண்ணிக்கை மடமடவெனச் சரியும். நாமே புதிதாய் ஒரு சொல்லை உருவாக்கிக் காட்டலாம். அவ்வாறு நாம் உருவாக்கும் சொற்கள் மொழியை வளப்படுத்தும். நாம் சொற்களை உருவாக்குகிறோமோ இல்லையோ, மொழிப்புலத்தில் இருண்மையாகவே இருக்கின்ற இந்தத் தன்மைகள் நமக்குப் பிடிபட்டுவிடும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:02 pm

கலவி தெரியும்... கண்கலவி தெரியுமா?


ஆங்கிலத்தில் ஒரு சொல்லுருபை முன்பின்னாக ஒட்டி எண்ணற்ற புதுச்சொற்கள் உருவாவதைப் பார்த்தோம். தமிழில் அப்படி முன்பின்னாக ஒட்டி எப்படிச் சொற்களை உருவாக்குகிறோம்? அத்தன்மையை நன்கு விளங்கிக்கொள்ள எடுத்துக்காட்டுகளின் வழியே தமிழ்ச்சொற்களை அறிய வேண்டும். பிற மொழிகளில் பத்துச் சொற்கள் உருவாகின்ற இடத்தில் தமிழில் நூறு சொற்கள் உருவாகும். அந்நூறும் முடிவான கணக்கில்லை. மேலும் சொற்களை உருவாக்கிச் செல்லலாம். சொற்களைத் தோற்றுவிக்கும் மொழி வாய்பாடுகளை அறிந்திருந்தால் புதுச்சொற்களை யாரும் ஆக்கலாம்.

தமிழில் ஒரு சொல்லொற்று எப்படியெல்லாம் புதுச்சொற்களை உருவாக்கிச் செல்கிறது என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டுக்குக் “கண்” என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். கண் என்னும் அச்சொல்லின் எளிய பொருள் என்ன? பார்ப்பதற்குப் பயன்படும் உடற்பகுதி. கண்ணால் பார்க்கிறோம். கண் என்பதற்கு அஃதொன்றே பொருளில்லை. மேலும் பல பொருள்கள் இருக்கின்றன. மரக்கணுக்களும் கண் என்றே கூறப்படும். மூங்கில், முரசடிக்கும் இடம், மூட்டுவாய், பெருமை, இடம், அறிவு, பற்றுக்கோடு, உடம்பு, அசை, உடலூக்கம் ஆகிய வேறு பல பொருள்களும் இருக்கின்றன.

“தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள், ஒரு பொருளுக்குப் பல சொற்கள்” என்னும் தலையாய தன்மையை நாம் எப்போதும் நினைவிற்கொள்ள வேண்டும். அப்படிக்கொண்டால்தான் ஒரு சொல்லின் வெவ்வேறு பொருள் வாய்ப்புகளை நோக்கி நம் எண்ணம் நகர்ந்தபடியே இருக்கும். ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற வெவ்வேறு சொற்களுக்கான தேட்டமும் வரும்.

இவ்விடத்தில் நாம் “கண்” என்பதற்கு வழங்கப்படுகின்ற “பார்க்கும் உடலுறுப்பு” என்னும் பொருளை எடுத்துக்கொள்கிறோம். அப்பொருள் வழியே நாம் ஆக்கிக்கொண்ட வெவ்வேறு சொற்கள் என்னென்ன ?

கண்ணில் ஒரு கட்டி வந்தால் அது “கண்கட்டி”.

கண்ணைப் பொத்தினால் அது “கண்கட்டு”.

நம் கண்ணை மறைக்குமாறு ஒரு வித்தையைச் செய்து ஏமாற்றி வியக்க வைத்தால் அது “கண்கட்டு வித்தை”. கண்ணைக் கட்டியதுபோல் ஏதோ செய்துவிட்டான்.

தேங்காய்க்குக் கண்கள் இருப்பதை அறிவோம். தேங்காயின் குடுமிப் பகுதியில் மூன்று துளைகள் இருப்பதைக் கண் என்றே வழங்குவர். கண்ணுள்ள அந்த மேல்மூடியைக் “கண்கயில்” என்பார்கள். கயில் என்றால் பற்றித் தூக்கும் பிடரிப் பகுதி. தேங்காயின் மேற்பகுதியில்தான் அதன் கண்பகுதி இருக்கும். அதனால் அதனைக் கண்கயில் என்றார்கள்.

கண்ணெதிரே கடவுளைப்போல் ஒருவர் தோன்றி நலம் செய்தால் அவரைக் “கண்கண்ட தெய்வம்” என்போம். தெய்வம் கண்ணுக்குத் தெரியாதது. அவரோ கண்ணால் காணும்படி எதிரே நிற்கின்ற தெய்வம்.

காதற்குறிப்போடு தலைவனும் தலைவியும் பார்த்துகொள்கின்ற பார்வைக்குக் “கண்கலவி” என்றே பெயர். “சைட் அடிக்கிறது” என்று பேச்சு வழக்கில் சொல்கிறார்கள். பார்த்து மகிழ்தல். கண்கலவி என்பது அதற்கு ஓரளவு பொருந்துகிறது. கண்கலவியில் இருதரப்பும் பங்கெடுக்கிறது. “சைட் அடிப்பது” ஒருதலையாக இருக்கலாம்.

காணத் திகட்டாத பார்வையின்பத்திற்குரியதைக் “கண்காட்சி” என்கிறோம். அந்தக் காட்சியானது பெரிதினும் பெரிதாக இருப்பின் அதைக் “கண்கொள்ளாக் காட்சி” என்கிறார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்கு ஏவுபவன் “கண்காட்டி”. நடந்துகொண்டிருக்கும் ஒரு செயலை மேற்பார்வையிடுபவன் “கண்காணி”. கண்ணால் காண்பதன் வழியே மேற்பார்வையிடுபவன். அந்தச் செயல் “கண்காணிப்பு”. கண்காணிப்புக்குத் தரும் கூலி “கண்கூலி”.

நேரடியாகப் பார்த்ததைக் “கண்கூடாகக் கண்டேன்” என்று சொல்வார்கள். கண்கள் அந்தக் காட்சியில் கூடின என்பது பொருள். சினந்தால் அது “கண்சிவப்பு”. கண்சிவந்தால் மண்சிவக்கும். தூக்கத்திற்கு முன்னான நிலை “கண்சுழல்தல் அல்லது கண்சொக்குதல்”. கண்ணால் தெரிவிக்கும் குறிப்பு “கண்சாடை”. உறங்குவதும்கூட “கண்ணுறக்கம்.”

இச்சொற்களையும் சொற்றொடர்களையும் இயல்பாகப் பயன்படுத்திக்கொண்டிருந்த நமக்கு இப்போது அதன் தோற்றுவாய்த் தன்மையை உணர்ந்தவுடன் சற்றே வியப்பேற்படுகிறது. ஆம், ஒரேயொரு சொல்வேரைப் பயன்படுத்தி நாமும் பற்பல சொற்களை உருவாக்குகிறோம். நான் மேலே சொன்னவை கொஞ்சம்தான். இன்னும் பல சொற்கள் இருக்கின்றன. அப்படி உருவாக்கித்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நாம் எடுத்துக்கொண்ட சொல்வேர் கண் என்பதால் அவையெல்லாம் நல்ல பயன்பாட்டில் உள்ளன. ஓரளவு அறிந்த சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் இருக்கின்றன. கண்கலவி, கண்கயில் போன்ற அருஞ்சொற்களும் கிடைத்தன. நாம் நன்கறியாத சொல்வேர்களும் பற்பல சொற்களை உருவாக்குகின்றன. அறியாத சொல்வேரை அறிந்தால் அங்கேயும் கொத்து கொத்தாக புதுச்சொற்களை அறிந்துகொள்ளலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:05 pm

திருக்குறளில் உள்ள இந்த சொல், தமிழ்ச் சொல்லா?


சொற்களை அறிவதற்கு அகரமுதலிகளைப் புரட்டுவதுதான் தலைசிறந்த ஒரே வழி. அகரமுதலி என்றால் அகராதிதானே என்று கேட்பீர்கள். ஆம். அகராதி என்றாலும் அகரமுதலி என்றாலும் ஒன்றே. “அகர முதல எழுத்து” என்பது ஐயன் வள்ளுவனின் தொடக்கம். அகரத்தைத் தொடக்கமாகக் கொண்ட, அகர வரிசைப்படி அமைக்கப்பட்ட சொற்பொருள் களஞ்சியம்தான் அகராதி. அகரத்தை ஆதியாக – தொடக்கமாகக் கொண்ட நூல் என்பதே அகர ஆதி – அகராதி என்ற சொல்லின் தோற்றுவாய்.

இடைக்காலத்தில் ஆதி என்பது வடசொல் என்று சிலர் கூற முனைந்தனர். செந்தமிழ்ச் சொற்கள் தொகுக்கப்படும் பெருநூலின் தலைப்பிலேயே வடசொல் இருப்பது தகாது என்று கருதிய தனித்தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆதி என்பதற்கு முதல் என்ற தமிழ்ச்சொல்லை நேராகக் கொண்டனர். அகரத்தை முதலாகக்கொண்ட நூல் என்னும் பொருளில் அகரமுதலி என்று கூறத்தொடங்கினர். இதுதான் அகராதி அகரமுதலி ஆன வரலாறு. என்னுடைய அறியாச் சிறுவத்தில் நான் அகராதிக்கும் அகரமுதலிக்கும் வேறுபாடு தெரியாமல் விழித்திருக்கிறேன். இன்றும் இவ்விரண்டையும் கேட்பவர்கள் அகராதி, அகரமுதலி ஆகிய சொற்களால் தடுமாறி நிற்பதுண்டு. பிற்பாடு தொடர்ச்சியான ஆய்வுகளின் வழியாக “ஆதி” என்பதற்கும் தமிழ்வேர்த்தன்மை உண்டு என்று நிறுவினர். திருக்குறளில் இடம்பெற்றுள்ள எச்சொல்லும் பிறமொழிச் சொல் இல்லை, அவை அனைத்தும் தூய தமிழ்ச்சொற்களே என்று நிறுவுகின்ற ஆய்வு முடிவுகளும் இருக்கின்றன.


அகராதி எனப்படுகின்ற அகரமுதலியை நாடுவதுதான் நம் சொல்லறிவைப் பெருக்கிக்கொள்ள நல்ல வழி. ஓர் அகராதியை எப்படி அணுகுவது என்று நான் சொல்வதற்கு முன்னால் தமிழில் வெளிவந்துள்ள அகராதிகளைப் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வையைச் செலுத்திவிடுவோம். என்னிடம் எல்லாரும் தவறாமல் கேட்கின்ற வினாக்களில் ஒன்று “ஐயா… நல்ல தமிழ் அகராதியைப் பரிந்துரைக்க முடியுமா…?” என்பதே. ஒரு மொழியில் எழுதப்பட்ட நூல்களில் - இலக்கியமானாலும் சரி, இலக்கணமானாலும் சரி, சொற்பொருள் தொகுப்பானாலும் சரி… காலத்தால் பழையவையே சிறப்பானவை என்பதை முதற்கண் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மொழிப்பிரிவு நூல்களில் காலத்தால் முந்தியவற்றின் தகைமை குறித்து நாம் புதிதாக எதையும் கூற வேண்டியதில்லை.

அகராதியைப் பொறுத்தவரையில் வீரமாமுனிவர் தொகுத்த “சதுரகராதி” என்னும் நூல்தான் காலத்தால் பழையது. அந்நூல் கிபி. 1732இல் வெளியாயிற்று. அதற்கும் முன்பாக எட்டாம் நூற்றாண்டு வாக்கிலேயே நிகண்டுகள் எனப்படுகின்ற நூல்கள் தமிழில் தோன்றி வழங்கின. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகியவை முறையே எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. நிகண்டுகள் எனப்படுபவை ஒரு சொல்லுக்கு வழங்கப்படுகின்ற பல பொருள்களையும் ஒரு பொருளுக்கு வழங்கப்படுகின்ற பல சொற்களையும் தொகுத்துக் கூறுபவை. அகராதி என்னும் நூலில் செய்யப்படும் செயலும் அதுதான். அதனால் நிகண்டுகள் என்றதும் அஞ்சி ஒதுங்க வேண்டா.

சதுரகராதி முதற்று அண்மைக்காலத்தில் வெளியாகியுள்ள கிரியா தற்காலத் தமிழ் அகராதி வரைக்கும் ஏறத்தாழ ஐம்பது அகராதி நூல்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. அந்நூல்கள் வெளியான காலம், பொருட்படுத்தத் தக்க வெளியீட்டாளர், தொகுப்பாசிரியர் ஆகியவற்றின் வழியே இவ்வெண்ணிக்கை கொள்ளப்படுகிறது. அண்மைக் காலத்தில் அகராதி தொகுக்கும் முயற்சியில் தனிப்பட்ட ஆர்வலர்கள்தாம் ஈடுபட்டார்களேயன்றிப் பல்கலைக்கழகங்களோ தமிழ் அமைப்புகளோ அரசோ ஈடுபடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இவற்றிடையே நமக்கு வேண்டிய அகராதி நூல் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எதைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும் ?அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:06 pm

தண்டனை வழங்குவதற்கு நிகரான தமிழ்ச்சொல் தெரியுமா?


ஐம்பதுக்கும் மேற்பட்ட அகராதிகள் வெளியாகியிருப்பினும் நமக்கேற்ற அகராதிகளைத் தேடித் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான அகராதிகள் வெளியாகியிருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் அவ்வளவுக்கு வெளியாகவில்லை. ஓர் அகராதியைத் தேர்ந்தெடுப்பதற்குச் சில அளவுகோல்கள் இருக்கின்றன. முதலில் அதைத் தொகுத்த பெருமானின் தகுதிநிலையைப் பார்க்க வேண்டும். மொழிப்புலமையில் ஆழங்கால்பட்டவராக அவர் இருத்தல் வேண்டும். தமிழுக்கென்றே தம் வாழ்க்கையை ஈந்தவராக இருத்தல் நன்று. அவ்வகையில் தமிழில் வெளியான தலைசிறந்த அகராதிகள் யாவும் தகுதி வாய்ந்த தமிழறிஞர் பெருமக்களால்தாம் தொகுக்கப்பட்டிருக்கின்றன.


அடுத்ததாக, ஓர் அகராதியை வெளியிட்டவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டு அரசுக்குத் தம் ஆட்சிப் பரப்பின் மொழியைப் பேணிப் புரக்கும் பெரும்பொறுப்பு உண்டு. அதனால் தமிழ்நாட்டு அரசு வெளியிட்ட அகராதிகள் எனில் சிறப்பு. பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களின் மொழித்துறைகளும் மொழியாய்வு அமைப்புகளும் அகராதிகளை வெளியிடும் பொறுப்பை வகிக்கின்றன. அவ்வகையில் வெளியிடப்பட்ட அகராதிகள் எவையென்றும் பார்க்க வேண்டும்.


இவ்விரண்டும் இல்லாமல் தனிப்பட்ட புத்தக வெளியீட்டாளர்களும் அகராதிகளை வெளியிட்டிருக்கிறார்கள். தனிப்பட்ட எழுத்தாளர்களும் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுடைய முனைப்பும் உழைப்பும் எத்தகையது என்பதைக் கணித்தும் வாங்கலாம். ஒரு பதிப்பகம் என்றால் அங்கே கட்டாயம் திருக்குறள் உரைநூலும் தமிழகராதியும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்பது முற்காலத்தில் எழுதாத விதியாக இருந்தது. இன்றைக்கும்கூட எவ்வொரு பதிப்பாளும் இவ்விரண்டு நூல்களையும் வெளியிடுவதில் ஆர்வமுடையவராகவே இருக்கின்றார். திருக்குறள் உரைநூலும் தமிழ்மொழி அகராதியும் என்றைக்கும் விற்றுக்கொண்டே இருக்கும் நூல்கள் என்பது அவர்களுடைய வணிகக் கணக்கு.


அகராதி நூல்களைப் பொறுத்தவரையில் காலத்தால் பழைமையானதை வாங்குவது சிறப்பு. அதற்காக, வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியைத்தான் வாங்க வேண்டும் என்றில்லை. ஐம்பதாண்டுகள் பழைமையானதை வாங்கலாம். தற்காலத் தமிழகராதிகளை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் இலக்கியத்தில் ஆளப்படும் சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்று சொல்வதில்லை. ஏனென்றால் தற்காலத் தமிழகராதிகள் தற்காலப் பயன்பாட்டில் உள்ள சொற்களைத்தாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, தற்காலத் தமிழகராதி ஒன்றில் “ஒறுத்தல்” என்ற சொல்லுக்குப் பொருள் இல்லை. தண்டனை வழங்குதல் என்பதற்கு நிகரான நற்றமிழ்ச்சொல் ஒறுத்தல் என்பது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.


பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அகராதிகளை முதற்கண் வாங்கலாம். சென்னைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவை வெளியிட்ட அகராதிகள் அச்சில் இருப்பின் பாய்ந்து வாங்கிவிட வேண்டும். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட “தமிழ் தமிழ் அகர முதலி” என்ற அகராதி சிறப்பாக இருக்கிறது. கு. சண்முகம் பிள்ளை தொகுத்தளித்த அவ்வகராதி எனக்கு மிகவும் பயன்படுகிறது. அந்நூலைத் தற்போது “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்” வெளியிட்டிருக்கிறது. அதைத் தேடி வாங்குங்கள். அதன் விலை ஆயிரம் உரூபாய் என்று பார்த்ததாக நினைவு. தேவநேயப் பாவாணரும் அவர்வழியொற்றியவர்களும் தொகுத்த “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” என்பதுதான் தமிழ் அகராதிகளில் தலையாயது. ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட நூற்பாகங்களால் ஆகிய அந்நூற்றொகுதியைப் பயன்படுத்துவதற்கு எடைத்தூக்கலில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். “சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி” கிடைத்தால் எதை விற்றேனும் அதைப் பெறுக.


அபிதான சிந்தாமணி என்றொரு நூலும் இருக்கிறது. அது பெயர்ச்சொல்லகராதி எனப்படும். ஆ.சிங்காரவேலு முதலியாய் தொகுத்த அந்நூலில் பெயர்ச்சொல் விளக்கங்கள் இருக்கும். மொழியகராதியில் ‘கபிலர்’ என்ற சொல்லுக்கு விளக்கம் இராது. அபிதான சிந்தாமணியைப் போன்ற பெயர்ச்சொல்லகராதியில் விளக்கம் இருக்கும். ஆனால், பெயர்ச்சொல் அல்லாத பிற சொற்களுக்கு அபிதான சிந்தாமணியை நாடக்கூடாது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:07 pm

நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோல்


மொழியைப் பயில்வது என்பது தொடர்வினை. அது ஒருநாள் இருநாள்களில் அடைந்துவிடக்கூடியதன்று. இடையறாது செய்யப்படவேண்டிய முயற்சி. மொழியைத் தன்வயப்படுத்திக்கொள்வதைப் போன்ற அருஞ்செயல் வேறொன்றில்லை. நன்கு பேசவும் நன்கு எழுதவும் கற்றுக்கொண்டுவிட்டால் போதும், அதன் பின்னர் நாமடையும் பேறுகள் ஆயிரம்.

பேச்சுத்திறன் என்பது சொற்களை ஆளும் திறன். எழுத்துத்திறமை என்பது வாக்கியங்களை நடனக்காரனின் உடல் மடிப்புகளைப்போல் துடிக்க விடும் திறமை. அன்றாட வாழ்க்கைக்கும் பேச்சாற்றலே துணைக்கருவி. நூறு, நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோலின் பெயர் பேச்சாற்றல். பேச்சும் எழுத்தும் வாய்க்கப்பெற்றவன் அடையும் முன்னேற்றங்களுக்கு எல்லையே இல்லை. அதை உணராதவர்கள் மொழியைக் கற்பதில் தேங்கி நின்றுவிடுகின்றனர். சொல்லாற்றலைப் பெருக்கிக்கொள்ளாமல் தடுமாறுகின்றனர்.

சொல்லாற்றலைப்பெருக்கிக்கொள்வதற்கு சொற்களோடு விழுந்து புரள வேண்டும். நல்முத்தைத் தேடி நீர்மூழ்குவோனைப்போல் நாள்தோறும் பத்திருபது சொற்களைத் தேடிப் பயின்று நினைவில் இருத்த வேண்டும். படைப்பாளர்களாக விளங்குபவர்கள் புதுச்சொற்களையும் புதுத்தொடர்களையும் தொடர்ந்து ஆக்கி அளிக்க வேண்டும். மொழி மக்களாக வாழ்பவர்கள் தம் மொழியின் புத்துயிர்ப்பை உணர்த்தும் சில பக்கங்களையேனும் படிக்க வேண்டும். நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரோ கவிஞரோ இம்முனைப்பு உடையவரா என்று தேர்தல் வேண்டும். இப்படிப் பற்பல வினைத்தொடர்களின் வழியாகச் செய்யும் கூட்டுழைப்பே மொழியைச் செம்மாந்து வாழச் செய்யும்.

சொற்களைப் பயில்வது என்னும் முனைப்பின் முதல் எட்டுவைப்பாக அகராதி ஒன்றை வாங்கிவிட்டோம். அகராதியை முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் கண்ணெடுக்காமல் படித்துவிடுவது என்று தொடக்கூடாது. அகராதி என்பது படித்து முடித்துவிட்டு ஓரங்கட்ட வேண்டிய நூலன்று.

அகராதியை எடுத்து வைத்து வரிவரியாகப் படித்து முடித்தால் எல்லாச் சொற்களையும் அறிந்ததாக ஆகுமே என்றும் எண்ணாதீர்கள். என் இளமையில் நான் அப்படிப் படிக்க முயன்றிருக்கிறேன். அப்போதைக்கு எல்லாச் சொற்களையும் அறிந்த உணர்வு தோன்றுமேயன்றி, நாளடைவில் நாமறிந்த சொற்கள் பலவும் மறதிக்குள் புதைந்துபோய்விடுகின்றன. அகராதிகளை நமக்கு வேண்டிய எந்தப் பக்கத்திலிருந்தும் தொடங்கலாம். பக்கங்களின் ஏறு வரிசைப்படியும் செல்லலாம், இறங்கு வரிசைப்படியும் செல்லலாம்.

ஓர் அகராதியை எடுத்து வைத்து எப்போது படித்து முடிப்பது, எப்போது எந்தச் சொல்லுக்குப் பொருள் வேண்டுமோ அப்போது அதை மட்டுமே பார்த்துவிட்டு நகர்வதை விடுத்து எதற்கிந்தத் தேவையற்ற வேலை என்று கேட்பீர்கள். நானும் அப்படித்தான் அகராதியை அணுக வேண்டும் என்று சொல்கிறேன். ஆனால், உங்களுக்கு வேண்டிய ஒரு சொல்லின் பொருளைக் கண்டதும் அகராதியை மூடி வைத்துவிடுவீர்கள். நான் அச்சொல்லோடு தொடர்புடைய பத்திருபது சொற்களுக்கான பொருள்களையும் பார்த்துவிட்டு அகராதியை மூடிவிடுங்கள் என்று சொல்கிறேன். அவ்வாறு பார்ப்பதனால் நீங்கள் அறிய விரும்பிய சொல்லின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிந்துபோகும். மேலும் அறிந்த பல சொற்களின் பொருள்களையும் மறக்க மாட்டோம்.

திருமணத்திற்குச் செல்கிறீர்கள் என்று கொள்வோம். ஓர் உறவினரை அறிமுகப்படுத்தினால் எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? “இவர் என்னோட தம்பி. ஈரோட்டுல மண்டி வெச்சிருக்காரே அந்தப் பெரியப்பாவோட கடைசிப் பையன். உங்க தங்கச்சியும் இவரும் ஒரே இடத்திலதான் வேலை செய்யறாங்க. அம்மா சொல்லியிருப்பாங்களே…” என்று சொல்வோம். ஓர் உறவை அதனோடு தொடர்புடைய பற்பல உறவுகளோடும் சேர்த்து அறிவித்தல்தான் முறையான அறிமுகம். அவ்வாறு அறிமுகப்படுத்துவதுதான் நினைவில் ஊன்றி நிறுத்தும் வழி.

சொற்களையும் அம்முறைப்படியே பொருளறிய வேண்டும். ஒன்றோடொன்று தொடர்புடைய அனைத்தையும் சேர்த்து அறிய வேண்டும்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:08 pm

"நத்திப் பிழைக்கிறான்" என்பதன் அர்த்தம் தெரியுமா?


ஒரு சொல்லின் ஏதேனும் ஓர் அசை அதனோடு தொடர்புடைய பொருளைத்தான் தரும் என்பது சொற்பொருளாய்வின் அடிப்படை. அத்தகைய அடிப்படையான சொல்லுருபைக் கொண்டே அடுத்தடுத்த சொற்களை ஆக்கிக்கொண்டே சென்றோம். இப்படியெல்லாம் சொற்கள் தோன்றலாம் என்ற மனப்பதிவு நம்முடைய மொழிமனத்திற்குள் கட்டமைக்கப்பட்டிருக்கும். மொழி மனம் என்பது உயிர்க்குள் இலக்கும் நினைவாற்றலோடும் தனக்குள்ளாக எண்ணும் தன்மையோடும் தொடர்புடையது.

நாம் பேசாதிருக்கும்போது உள்ளுக்குள் புரளும் எண்ணங்கள் சொற்களைக்கொண்டே உருவாவதை நாம் ஏற்றாக வேண்டும். அதனால்தான் நாம் எண்ணுவது நேரடியாக நம் மொழி நினைவைக் கட்டமைக்கிறது. எண்ணங்களைப் போலவே சொற்கள் தோன்றுகின்றன. நாம் சினத்தோடு இருக்கையில் கடுமையான சொற்களும், இயல்பாக இருக்கையில் தண்மையான சொற்களும் வெளிப்படுகின்றன.

சொல்லின் ஓர் அசை ஓரிடத்தில் ஒரு பொருளைத் தந்தால் அது பயன்படுத்தப்படும் பல இடங்களிலும் அதே பொருளிலோ அதற்கு நெருக்கமான பொருளிலோதான் வழங்கப்படும். இங்கே அசை என்று நான் குறிப்பிடுவது சொல்லின் பொருளாக அமையும் ஒரு பகுதியைத்தான். ஓர் அசைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் வழங்கப்படுகையில்தான் அது வழங்கும் பொருளிலிருந்து மாறுபடும். ஓர் எடுத்துக்காட்டின் வழியாக இதை விளங்கிக்கொள்ள முயல்வோம்.

“நத்திப் பிழைக்கிறான்” என்று நாம் சொல்வதுண்டு. யாரை அப்படிச் சொல்வோம்? யாரையேனும் அண்டியிருந்து, அவர் சொல்கின்றவற்றுக்கெல்லாம் இணங்கிப்போய், அவருடைய மனத்தைக் குளிர்வித்து, கைகால்களை அமுக்கிவிட்டுப் பிழைப்பதைத்தான் அவ்வாறு சொல்கிறோம். ஒருவரைக் குளிர்வித்துப் பிழைத்தல் என்பது அதன் தெளிவான பொருள். ஆனால், நத்துதல் என்பதற்கு விரும்புதல் என்ற பொருளையும் அகராதி சுட்டுகிறது. அகராதி தொகுத்தவர்கள் நத்துதல் என்பதற்குக் “மனம் மகிழுமாறு ஒருவரைக் குளிர்வித்தல்” என்ற பொருளை அடையமுடியவில்லை. ஏனென்றால் அவர்களுடைய ஆற்றலும் ஒரு வரம்புக்குட்பட்டதே. இவ்வாறு ஒரு வினைச்சொல்லுக்குள் மறைந்துள்ள பற்பல பொருள்களையும் அகராதி தொகுத்தவர்களால் அணுகவே முடியவில்லை என்பதற்கு இஃது ஒரு சான்று.

நத்துதல் என்பது குளிர்வித்தல், ஈரத்தன்மை, நீர்ப்பொருள் ஆகியவற்றைக் குறிப்பிடும் பல இடங்களில் சொல்லுருபாகிப் பயில்வதைக் காணலாம். நத்தம் புறம்போக்கு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓர் ஊரின் ஒதுக்குப்புறமான நிலப்பகுதி. பெரும்பாலும் அது பயனற்றுக் கிடக்கும். நத்தம் என்பது என்ன? கோடையில் காய்ந்து கிடக்கும் பயன்பாடற்ற நிலப்பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நல்ல நிலமாக இருக்கிறதே என்று இறங்கிப் பயன்படுத்திவிட முடியாது. அதை அவ்விடத்தின் சுற்றுப்பகுதிகளோடு ஒப்பிட்டால் தாழ்வான பகுதியாக இருக்கும். மழைபெய்தால் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாகிவிடும். அதனால்தான் நத்தம் புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். ஈரம், மழை, வெள்ளம் ஆகியவற்றோடு தொடர்புடைய சொல்தான் நத்தம் என்பது. அகராதியில் நத்தம் என்பதற்கு இத்தகைய பொருளைக் காண முடியவில்லை.

மதுரையில் பழங்காநத்தம் இருக்கிறது. நான் முகநூலில் நத்தம் என்பதற்கான அவ்விளக்கத்தைச் சொன்னதும் மதுரை நண்பர் ஒருவர் “ஆம் அண்ணா… மதுரையில் மழை பெய்தால் முதலில் வெள்ளக்காடாகும் பகுதி பழங்காநத்தம்தான்” என்றார். திருச்செங்கோட்டுக்கு அருகில் கூத்தாநத்தம், பிள்ளாநத்தம், கோழிக்கால்நத்தம் ஆகிய பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் வெள்ளக் காலங்களில் கரைபுரண்டு ஓடும் பேரோடைகளும் நீர்தேங்கும்படி பல குட்டைகளும் இருக்கின்றன.

நத்தை என்ற உயிரியை அறிவோம். அது நீர்வளமுள்ள நிலத்தில்தான் ஊர்ந்து திரியும். நத்தையை நசுக்கினால் தண்ணீர்தான் மிஞ்சும். தன் உடலே தண்ணீராகக் கொண்ட உயிரினம் அது. அதனால்தான் அதற்கு நத்தை என்ற பெயர் வந்தது. தண்ணீரில் வாழும் சங்குவகை உயிர்களும் நத்தைகளே.

நத்துதல், நத்தி என்பனவற்றிலிருந்துதான் நதி என்ற சொல்லும் பிறந்திருக்க வேண்டும். நீர் புரண்டு நகரும் இயற்கைப் பேருருவம்தான் நதி. நத்து, நத்தம், நத்தை போன்ற தமிழ்ச்சொற்கள் நீர்தொடர்பான பொருள்வழியில் இருக்கையில் நதி என்பது தமிழ்த்தோற்றுவாய் கொண்டதாகத்தான் இருக்க முடியும். அச்சொல் தமிழில் தோன்றி வடமொழிக்குச் சென்றிருக்க வேண்டும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:09 pm

உழவாரம், சலவாரம் என்றால் என்ன தெரியுமா?


சொற்களைப் பற்றிய உணர்ச்சி ஏற்பட்டவுடன் அங்கிங்கெனதாபடி எங்கும் சொற்களாகவே நம் கண்களுக்குத் தெரியும். ஒரு சொல் நம்மை எப்படியெல்லாம் வந்தடைகிறது என்பதை நினைக்கையில் புதுவகையான பேருணர்ச்சி ஏற்படும். ஓர் அரிசி மணி நம் உணவுத்தட்டில் சோற்றுப் பருக்கையாக வந்து விழுவதைப்போன்ற பரவயப்படுத்தும் நிகழ்வு. சொல்லுணர்ச்சி ஏற்பட்டவுடன் காணுமிடமெங்கும் சொற்களாகவே தோன்றும். அடிக்கடி தென்படும் சொற்களுக்கும் அரிதாகத் தென்படும் சொற்களுக்குமிடையேயான வேறுபாட்டினை உணர முடியும்.

உங்களுக்கு மிகவும் பிடித்த சொல் எது? உங்களையே வினவிக்கொள்ளுங்கள். சில சொற்கள் நம்மனத்தின் திறவாத் தாழ்களை நீக்கும் தன்மையுடையவை. சில சொற்கள் நம் ஆழ்மனநினைவுகளைத் தொட்டு எழுப்பவல்லவை. சில சொற்கள் கண்ணீரைப் பெருக்கும். சிலவற்றுக்கு ஆறுதல்படுத்தி அணைக்கும் ஆற்றலுண்டு. இந்தப் பக்கத்தின் வழியே நான் உங்கள் மனத்தை அடைவதற்குக் கருவியாகின்றவையும் சொற்களே.

ஆறாம் வகுப்புப் படிக்கையில் எங்கள் பள்ளியில் ஓர் ஆசிரியர் இருந்தார். எங்கள் வகுப்பாசிரியர் வராதபோது அவர் இரண்டு வகுப்புகளைச் சேர்த்து அமர்த்திக்கொள்வார். பாடம் நடத்துகையில் ஒவ்வொரு சொற்றொடரைக் கூறியதும் “விளங்குதா?’ என்றே முடிப்பார். பிற ஆசிரியர்கள் “புரிந்ததா?” என்று கேட்கையில் அவர் “விளங்குதா” என்று கேட்டது புதிதாக இருந்தது. விளங்கியதா, விளக்கம் பெற்றாயா என்கிறார் அவர். என்னே அருமையான சொல். அது முதற்கொண்டு விளங்குகிறது, விளங்கும், விளங்கவில்லை, விளங்கிக்கொண்டான் ஆகிய சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கினேன். புரிந்தது என்ற சொல்லை என் எழுத்தில் அரிதாகத்தான் காண முடியும். புரிந்தது என்பதைக்காட்டிலும் விளங்கியது என்னும் சொல் தேர்ச்சியான பொருள் காட்டுவதாகும். விளங்கு, விளக்கு என்னும் இரண்டு வினைவேர்களும் வியக்கத்தக்க பொருளாட்சி உடையவை.

என் நண்பரின் தாயார் பழுத்து முதிர்ந்தவர். கொங்குத் தமிழின் இலக்கணம் என்று கொள்ளத்தக்கவர். அவர் வீட்டுக்கு நான் எப்போது சென்றாலும் “சோறுண்கிறயா?” என்றுதான் கேட்பார். “வாரபோதே உண்டுட்டுத்தான் வந்தனுங்கொ…” என்று விடை கூறுவேன். உண்டுவிட்டு வந்துவிட்டேன் என்பதற்காக விட்டுவிட மாட்டார். “உண்டுட்டு வாரயா ? எப்ப உண்டே ?” என்று கேட்பார். “காலையில உண்டன்ங்கொ…” என்று கூறினால் “கார்த்தால உண்டது என்னத்துக்காகறது… இப்ப உண்கலாம் வா…” என்று சோறிடுவார். சாப்பிடுவது, தின்பது என்பதற்கு மாற்றான கூர்மையான பொருளுடைய சொல்தான் உண்ணல். உண் என்ற வினைவேரிலிருந்துதான் உணவு, ஊண் ஆகிய சொற்களே பிறக்கின்றன. பொருளழகும் உயிரன்பும் சேர்ந்து பெருகி “உண்கிறயா ?” என்று அவர் வாய்வழியே கொங்கின் இசையோடு வெளிப்படும்போது நான் பெறுகின்ற குளிர்ச்சியை எடுத்தியம்பவே இயலாது. அது முதற்கொண்டு உண்கிறாய், உண்டான், உண்பது போன்ற சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டேன். சாப்பிட்டான் என்று அரிதாகத்தான் எழுதுவேன்.

சொற்களை நகமும் தசையும், உயிரும் உணர்வுமாய் அறிந்துணர்வதற்கு அவற்றை ஆளும் மக்களின் வாய்ச்சொற்களை உற்று நோக்க வேண்டும். என்னைச் சுற்றியுள்ள மக்களே என் சொல்லாய்வுக்கும் அறிதலுக்கும் வலிமையான சான்றாகிறார்கள். அவர்களுடைய வாய்மொழியில் எழுதித் தீராத புதுச்சொற்கள் கிடைக்கின்றன. இலக்கணத்தை அணுகுவதற்குரிய திறப்புகளையும் அவர்களிடமிருந்தே பெறுகிறேன். என்னுடைய தாத்தா மலங்கழிக்கச் செல்வதைச் “சலவாரைக்குப் போறது” என்பார். சலவாரம், சலவாரை போன்ற சொற்களை அகராதிகளில் காண முடியவில்லை. உழவாரம் என்ற சொல் அகராதியில் இருக்கிறது. உழவுத் தொழிலில் “புல் பூண்டு முதலான பயனற்ற களைகளைக் களைதலே” உழவாரப்பணி. சலவாரம்/சலவாரை என்றால் உடலிலிருந்து நீர்முதலான கழிவுகளை நீக்குவது என்ற பொருளில் விளங்கிக்கொள்கிறேன். மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. மக்களின் வாய்ச்சொற்களை உற்று நோக்காவிடில் அச்சொற்கள் அச்சுமேடை ஏறாமல் காற்றோடு கலந்துவிடுவதற்குரிய வாய்ப்புகளே மிகுந்திருக்கின்றன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:10 pm

மனமும், நெஞ்சும் ஒன்றா?


சொற்களை அறிவது என்னும் நெடும்பயணத்தை மேற்கொள்வதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அகராதியின் துணையை நாடுவது, பேச்சுத்தமிழை ஊன்றிக் கேட்பது, வட்டார வழக்கில் வழங்கப்படும் தனித்தன்மையுள்ள சொற்களை இனங்காண்பது, சொல்வேட்கையோடு இலக்கியங்களைப் படிப்பது, செய்யுள்களைப் பொருளுரை பொழிப்புரை விளக்கவுரையோடு கற்பது என எண்ணற்ற வழிகள் இருக்கின்றன.

பேச்சுத் தமிழை ஊன்றிக் கேட்டல் என்னும் முறைமையில் நம்முடைய முயற்சியே இராது. பேசிக்கொண்டிருப்பவரின் மொழிகளுக்குச் செவிகொடுத்தால் போதும். அவருடைய சொற்களை நாம் தொடர்ந்தறிந்தபடியே இருக்கலாம். அதைக் குறித்து நான் பிறகு விளக்குகிறேன்.

அகராதியின் துணையை நாடுவது என்பதை முதலாவதாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அகராதியின் வழியாகவே சொற்களை எப்படி அறிந்து நினைவிற்கொள்வது? முன்பே சொன்னதுதான், அகராதியைக் கதைநூல் படிப்பதைப்போல் தொடர்ந்து படித்துச் செல்வது இயலாது. அவ்வப்போது நமக்கு வேண்டிய சொல்லின் பொருளை அறிவதற்காகவே அகராதியைப் படிக்க வேண்டியிருக்கிறது.

எப்போதாவது நமக்குத் தேவைப்படுகின்ற சொல்லின் பொருளை அறிவதன் வழியாகவே நமக்கு வேண்டிய சொல்லறிவை மிகுதியாகப் பெற்றுவிட முடியாது. அந்நிலையில்தான் ஒரு சொல்லைக் குறித்து அறியத் தொடங்கும்போது அச்சொல்லின் முதல் அசையைத் தொடக்கமாகக்கொண்ட அனைத்துச் சொற்களையும் ஒருசேர அறிந்து வைப்பது என்னும் வழிமுறையைச் சொன்னேன்.

மனம் என்ற சொல்லின் பொருளை அறியத் தொடங்குகையில் “மனம் என்பதை முன்னொட்டாகக் கொண்ட நூற்றுக்கணக்கான சொற்களின் பொருள்களையும் அப்போதே அறிந்துகொள்வது” என்னும் தொகுப்பு முறை.

மனக்கசப்பு, மனக்கசிவு, மனக்கடினம், மனக்கண், மனக்கலக்கம், மனக்கவலை, மனக்கவற்சி, மனக்களிப்பு, மனக்கனிவு, மனக்காய்ச்சல், மனக்கிடக்கை, மனக்கிலேசம், மனக்குருடு, மனக்குழப்பம் என்று தொடங்கும் அச்சொற்களின் அணிவரிசை இறுதியாக மனனம் என்ற சொல்லில் முடிகிறது.

மனம் என்கின்ற ஒரு சொல் வழியாக நெஞ்சம் என்பதைக் குறிக்கும் ஒரு பொருளோடு தொடங்கியது நம் சொற்றேடல். அதற்குப் பின்னொட்டுகள் அமைந்து பொருள் கூட்டியபோது பற்பல பொருள்களைப் பெற்றுவிட்டோம். இவ்வாறு அறிவதன் வழியாக பின்னொட்டுச் சொற்களின் தனிப்பொருளையும் நாம் அறிந்தவர்களையும் அறிந்தவர்களாகிறோம்.

கசப்பு, கசிவு, கடினம், கண், கலக்கம், கவலை, கவற்சி, களிப்பு, கனிவு என்று கைந்நிறைந்த சொற்களை அறிந்துவிட்டோம். அவற்றில் பல சொற்களின் பொருள் நமக்கு முன்பே தெரியும் என்றாலும் இப்போது துலக்கமாகத் தெரிந்துகொண்டோம். கவலை என்பதற்கும் கவற்சி என்பதற்கும் வருத்தம் என்கின்ற ஒரே பொருள்தான். கவல் என்பதிலிருந்து கவலை (கவல்+ஐ) தோன்றுகிறது, கவற்சி (கவல்+சி) தோன்றுகிறது.

மனக்கிடக்கை என்பதிலுள்ள கிடக்கை என்ற சொல்லின் பொருள் தெரியவில்லை. மனக்கிடக்கைக்கு உள்ளக்கருத்து என்ற பொருளைப் பெற்றோம். கிடக்கை என்பது கிடத்தல் என்னும் பொருளில் வழங்கப்படும் தொழிற்பெயர். மனத்தில் நெடுநாளாய்க் கிடந்தது மனக்கிடக்கை. இப்போது கிடக்கையின் பொருள் தெரிந்துவிட்டது. ஒரு சொல்லின் வழியாக ஒன்பது சொற்களை அறிந்துகொள்ளும் எளிய வழி இஃது.

உங்களுக்கு நன்றாகவே தமிழ் தெரியும் என்றால் இவ்வாறு அறிகையில் பெரும்பாலும் பழக்கப்பட்ட சொற்களாகவே இருக்கும். ஆனால், இடையிடையே உங்கள் மொழியறிவைக் கூர்மைப்படுத்தும் அருஞ்சொற்களும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும்.

மொழியைப் பொறுத்தவரையில் எல்லாச் சொற்களுக்கும் பொருளறிந்தவர்கள் என்று எவருமே இல்லை. புலவர் பெருமக்களேகூட எங்கேனும் ஓரிடத்தில் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியாமல் அகராதியை நாடி வருவார்கள். அன்றேல் ஒரு சொல்லுக்கு அவர் அறிந்த பொருளுக்கும் மேலான வேற்றுப்பொருள் இருக்கிறதா என்பதையும் தெளிவு பெறத் துணிவார்கள். அதனால் ஒரு சொல்லின் பொருள் வழங்கீட்டுக்கு முடிவே இல்லை என்று கூறலாம். சொற்களோடும் அவற்றின் பொருள்களோடும் தொடர்ந்து குடித்தனம் நடத்தியே ஆகவேண்டும்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:11 pm

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா?ஒரு சொல்லின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பகுதியில் தொடங்கும் அனைத்துச் சொற்களையும் அறிந்தது எளிமையாக இருந்தது. அகராதியைத் தொட்டு சொல்லாற்றல் பெறுவதற்கு அது நல்ல வழி. அவ்வாறே இன்னோர் எளிய முறையும் இருக்கிறது. இது இன்னும் வலிமையாய் நம் சொல்லாட்சித் திறத்தைப் பெருக்கும் வழிமுறையாகும்.

தமிழில் உள்ள நான்கு வகைச் சொற்கள் எவை ? பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை அவை. அந்நான்குவகைச் சொற்களில் பெரும்பான்மையாக இருப்பவை எவை ? அகராதியை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் உள்ள சொற்களை ஆராய்ந்து பாருங்கள். பெயர் வினை இடை உரி என்னும் நான்கு வகைச்சொற்களில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருக்கின்றன.

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா? வேறு சொற்களே இல்லையா ? வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் ஆகியன எங்கே ? அவையும் இருக்கின்றன. ஆனால், பெயர்ச்சொற்களே பெரும்பான்மையானவையாய் இருக்கின்றன.

பெயர்ச்சொற்களிலும் ஆட்பெயர்ச்சொற்கள், ஊர்ப்பெயர்ச்சொற்கள் போன்றவற்றை ஓர் அகராதியில் தேடிக் கண்டடைய முடியுமா ? ஆட்பெயர்ச்சொற்களின் அகராதியாய் அபிதான சிந்தாமணி போன்ற பெயர்ச்சொற்களஞ்சிய நூல்கள் விளங்குகின்றன. அதிலும்கூட வள்ளுவர் என்ற சொல்லின் பொருள் காண முடியாது. வள்ளுவர் என்பவர் யார் என்பதைத்தான் பெயர்ச்சொற்களஞ்சியங்கள் விளக்கும். ஆக, ஒரு சொல்லின் பொருளை அறிவதேகூட சொல்லாராய்ச்சியின் தலைவாயிலில் அடியெடுத்து வைத்ததைப்போல்தான். திருக்குறளுக்கு உரையெழுதுவதற்காக நான் பல்வேறு அகராதிகளுக்குள் குடியிருந்தபோதுதான் எனக்குச் சொல்லாய்வு வேட்கை பெருகியது.

அகராதிகளில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருப்பின் வினைச்சொற்களை அறிவது எப்போது? இடைச்சொற்களையும் உரிச்சொற்களையும் இனங்கண்டு பொருள் காண்பது எவ்வாறு? பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்தபடியிருந்தால் ஒரு வினைச்சொல்லைப் புதிதாய் அறிந்து பயன்படுத்துவது எப்போது? பெயர்ச்சொல்லறிவு பெருகிக்கொண்டே போகையில் வினைச்சொற்கள் எவற்றையும் அறியாமல் இருப்பின் அது முறையாகுமா?

இங்கேதான் நமக்குத் தமிழ்மொழியைப் பற்றிய “அடிப்படை இலக்கண அறிவு” வேண்டுவதாகிறது. அகராதியை அணுகும்போது எல்லாச் சொற்களும் ஒரே வகைமையில் இருந்தால் நம் சொல்லறிவு பெருகிவிடாது. ஒவ்வொரு அகராதியும் ஒவ்வொரு வகைமைச் சொற்களைச் சேர்த்திருக்கின்றன. வட்டார வழக்கு அகராதி ஒரு வட்டாரத்து மக்களின் பேச்சுமொழியைக் குறிப்பிட்டு நிற்கும் ஆவணமே தவிர, அதில் பொதுநிலைச் சொல்லாட்சியைப் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், சொல்லாய்விலும் அகழ்விலும் ஈடுபட்டுள்ளவர்க்கு ஒரு வட்டார வழக்கு அகராதியானது இல்லான் கண்ட புதையலாகும். தற்காலத் தமிழகராதி இன்றைய பயன்பாட்டில் வழங்கப்படும் சொற்களைத்தான் தொகுத்துத் தருமேயன்றி, திருக்குறளில் பயிலும் ஒரு நற்சொல்லைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். ஈர்ங்கை, ஒறுத்தல் போன்ற சொற்களைத் தற்கால அகராதி கொண்டிருக்காது. அதனால்தான் அகராதியைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்துத் தலைப்பாடாக அடித்துச் சொன்னேன். முறையாய்த் தொகுக்கப்பட்ட நல்ல அகராதியைக் கைக்கொண்டவர்தான் சொல்லறிவுடையவராகத் தழைத்தெழல் இயலும்.

பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்து செல்லல் என்ற தடையினை எப்படித் தாண்டுவது? எல்லாவகைச் சொற்களையும் அங்கே கண்டடைவது இயலாதா? இயலும். பெயரைக் குறிப்பவை பெயர்ச்சொற்கள். வினையைக் குறிப்பவை வினைச்சொற்கள். இவ்விரண்டுக்கும் இடையில் தோன்றுபவை இடைச்சொற்கள். பெயர்க்கும் வினைக்கும் உரியனவாய் அமைந்து சிறப்பித்துக் கூறுபவை உரிச்சொற்கள். ஆக, இடைச்சொற்களும் உரிச்சொற்களும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும். தனித்து வரமாட்டா. அவற்றின் எண்ணிக்கையும் அளவில் குறைவே. எண்ணிக்கையில் குறைவு என்பதால் அவற்றை எளிதில் அறிந்து முடித்துவிடலாம். பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெருங்கடலாய்த் திரண்டிருக்கின்றன என்கின்ற முடிவுக்கு வருகிறோம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:12 pm

பெயர் பெரிதா? வினை பெரிதா? தமிழ் கூறுவது என்ன...


சொற்களை அறிவதில் பெயர்ச் சொற்களை அறிந்தபடியே செல்வது ஒரு முறைமை. அதற்கு மாற்றாக வினைச்சொற்களை ஒவ்வொன்றாக அறிந்து செல்வது இன்னொரு முறைமை என்று கூறினேன். வினைச்சொற்களை அறிவதற்கும் பல்வேறு முறைமைகள் இருக்கின்றன. பேச்சுத் தமிழை ஊன்றி நோக்குவது நல்ல பயன் தரும். பாமரர் பேசுகையில் செவிப்புலனைக் கூர்தீட்டிக் கேளுங்கள். அவர்கள் பேச்சுப்போக்கில் அடிக்கடி அருஞ்சொற்களை இறைத்துக்கொண்டே செல்வார்கள்.

அகராதியின் ஒரு பக்கத்தில் ஐம்பது சொற்களுக்குப் பொருள்கள் தரப்பட்டிருந்தால் அவற்றில் நாற்பது சொற்கள் பெயர்ச்சொற்களாகவே இருக்கும். நான்கைந்து சொற்கள்தாம் வினைச்சொற்களாக இருக்கும். அப்படியானால் அகராதியைப் போன்ற பெருந்தொகை நூலிலேயேகூட வினைச்சொற்களை இனங்கண்டபடியே சென்றால் ஐயாயிரம் சொற்களைத்தான் தேடிப் பிடிக்க முடியும். பல இலட்சக்கணக்கான சொற்கள் தமிழில் இருப்பதாகக் கூறித்திரிந்தவர்களாயிற்றே நாம்! இப்போது வெறும் ஐயாயிரம் வினைச்சொற்கள்தாம் பட்டியலில் வந்தடைந்தனவா? சொற்களில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெரும்பான்மையானவை என்று கூறிவிட்டு அவற்றில் ஐயாயிரமே வினைச்சொற்கள் என்றால் ஏமாற்றமாக இராதா? பல இலட்சங்களில் ஒரு இலட்சமேனும் வினைச்சொற்களாகவே இருக்க வேண்டுமே. இருபெரும் சொற்பிரிவுகளில் வினைச்சொற்களும் ஒன்று எனில் அதுதானே சரிநிலையாக இருக்கவேண்டும்? இப்போது வருகின்ற கணக்கு சிற்சில ஆயிரங்கள் எனில் பொருந்தவில்லைதானே? இந்த முரண்பாட்டைப் பற்றி நாம் இன்னும் தெளிவாக அறியப்போகிறோம். அதன் தொடக்கப்புள்ளியை இங்கே தெரிவித்துவிடுகிறேன் - அகராதிகளில் இல்லாத எண்ணற்ற அருஞ்சொற்கள் வினைச்சொற்களாகவே இருக்கின்றன. அவை பேச்சு மொழியின் வாயிலாகவே ஒவ்வொரு வட்டாரத் தமிழிலும் இம்மண்ணின் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் “பேச்சுத் தமிழில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயின்று வருகின்றன.”

பேச்சுத் தமிழை ஊன்றிக் கற்றபோதுதான் அகராதிகளில் இல்லாத எண்ணற்ற பல தமிழ்ச்சொற்களை இனங்கண்டேன். அச்சொற்கள் யாவும் மொழி இலக்கணச் செம்மையோடு விளங்கின. அவற்றில் பலவும் வினைச்சொற்கள் என்பதும் வியப்பூட்டியது. ஏனோ அகராதியைத் தொகுத்தவர்கள் அத்தகைய சொற்களைப் பட்டியலுக்குள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். நம்முடைய பேரகராதி முயற்சிகள் யாவும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளோடு முடிந்து நிற்கின்றன. அக்கால வரம்புக்குப் பிறகுதான் வட்டார இலக்கியத்துக்கேகூட அச்சு வாய்ப்பு ஏற்பட்டது. ஊர்ப்புறத்து மண்ணின் மணம் கமழத் தொடங்கியது. கடைநிலை வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் படைப்பிலக்கியத்தின் பக்கம் வந்தனர். அவர்களுடைய எழுத்துகளில் இயற்கையாகவே வட்டாரத் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றன. கொடுந்தமிழ் என்று கருதியமையால் எழுதப்படாமல் விலக்கப்பட்ட பேச்சுத்தமிழ்த் தொடர்கள் மேற்கோள் குறிகளுக்குள் எழுதப்பட்டன. கதையில் உரையாடும் பாத்திரங்களின் மொழியாக அவை எழுதிக் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே வட்டார வழக்குகளுக்கு எழுத்துப் பதிவுகள் தோன்றின.

எழுத்தில் ஏறவில்லை என்பதற்காக பேச்சுத்தமிழில் மட்டுமே வழங்கப்பட்ட அச்சொற்கள் அழிந்து போய்விடவில்லை. அருஞ்சொற்களைப் பேசுகின்ற பாமர மக்கள் ஒவ்வொருவரும் தமிழகராதியின் சில பக்கங்கள் என்று கருதத் தக்கவர்கள். அவருடைய பிள்ளைகளான நாம் அந்தப் பேச்சு முறையிலிருந்து வழுவாமல் நிற்க வேண்டும். வட்டாரத் தமிழைப் பேசுவதற்கு வெட்கப்படாவே கூடாது. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற பெருமை நம்மிடம் தோன்றவேண்டும். வட்டாரத் தமிழில் பேசினால் நம் பேச்சு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பது தானாகக் குறைந்துவிடும். நாம் மறந்த சொற்கள்கூட ஆழத்திலிருந்து நீர்க்குமிழிபோல் எழுந்துவரும். ஒவ்வொருவரின் இளமையை எண்ணிப் பார்க்கும்போதும் நம் தாத்தனும் பாட்டியும் கற்றுக்கொடுத்த பற்பல சொற்கள் நினைவுக்கு வரும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் அடையாளமற்றவர்களாக நிற்கிறோம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:13 pm

மாட்டேனும், மாண்டேனும் ஒன்றா?பேச்சுத் தமிழில் நிறையவே சொற்கள் இருக்கின்றன. அவை அகராதிகளின் படியேறாமல் தேங்கிக் கிடக்கின்றன. பொதுமக்களின் பேச்சு மட்டத்தில் அவை நற்பொருள் தருகின்றவையாகவும் பேசத் தகுந்தவையாகவும் இருக்கையில் எப்படி அகராதிகள் அவற்றைப் புறக்கணித்தன ? வேண்டுமென்றே அவை புறக்கணிப்பட்டன என்று கூற இயலாதுதான். ஆனால், மக்கள் வாய்மொழியைக் கருத்தில் கொள்ளாமல் விட்டனர் என்று உறுதியாகக் கூற முடியும்.

கோவைப் பகுதிகளில் ‘மாட்டேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘மாண்டேன்’ என்று சொல்வார்கள்.

“நீ கேட்டதுக்கு நான் மாண்டேன்னா சொன்னேன் ?” என்பார்கள். “அவன் வரமாண்டேங்கிறான்…” என்பார்கள். “எடத்தைக் கொடுக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்… எல்லாரும் மாண்டேன்னுட்டே இருக்கறாங்கொ…” என்று கூறுவார்கள்.

இந்த “மாண்டேன்” என்ற சொல் ஆராய்ச்சிக்குரியது. மாட்டேன் என்பதன் பேச்சு வழக்காக மாண்டேன் என்ற சொல் பயில்வதாகத் தோன்றும்.

இலக்கணத்தில் மெலித்தல் விகாரம் என்று ஒன்று இருக்கிறது. வல்லின மெய் தோன்றவேண்டிய இடங்களில் மெல்லின மெய் தோன்றி வன்மை ஒலிப்பை மென்மையாக்குவது. இத்தகைய விகாரங்கள் செய்யுள்களில்தாம் தோன்றும் என்று இலக்கணத்தை அடியொற்றியே நிற்க வேண்டுவதில்லை. பேச்சுப் பயன்பாடு வரைக்கும் இறங்கி வராத இலக்கணக் கூறுகளே இல்லை.

மெலித்தல் விகாரத்தில் தட்டை என்பது தண்டை என்றாகிவிடும். தொப்பி என்பது தொம்பி என்றாகும். புத்தி புந்தியாகும். கலப்பு அகம் என்ற இரு சொற்சேர்க்கையே கலப்பகமாகி மெலித்தல் விகாரமடைந்து கலம்பகம் ஆயிற்று. ஆக, கலம்பகம் என்று தனிச்சொல் பயிலும்போதும்கூட மெலிந்து விகாரமடையும் என்பதை ஏற்பர். சொற்களில் தோன்றிய வல்லின மெய் மெல்லின மெய்யாகி அச்சொல்லின் வன்மையை நீக்கி மென்மையாக்கித் தருவது மெலித்தல் விகாரத்தின் பணி. அதன்படி மாட்டேன் என்பது மாண்டேன் ஆகிற்றா என்று ஆராய்வது ஒரு பார்வை.

அடுத்து தன்வினை, பிறவினை என்று இருகூறுகள் இருக்கின்றன. மாண்டேன் என்ற சொற்பயன்பாட்டை மாட்டேன் என்பதோடு தொடர்புபடுத்தி நோக்கினால் தன்வினை, பிறவினைப் பொருட்பாட்டுக்கு வாய்ப்பிருக்கிறது.

மீண்டான், மீட்டான் என்கிறோம். தானே மீள்வது மீண்டான் என்னும் தன்வினை. தான் பிறிதொன்றை மீளூம்படி செய்வித்தால் மீட்டான் என்று பிறவினை ஆகும்.

வெள்ளத்திலிருந்து எப்படியோ நீந்தி மீண்டான். வெள்ளத்தில் விழுந்தவர்களைத் துணிந்து நீரில் இறங்கி மீட்டான். இரண்டு ஒரே செயல்தான். தனக்குச் செய்துகொண்டது, பிறர்க்குச் செய்வித்தது என்னும் இருவகையால் வேறுபடுகிறது. அதுதான் தன்வினை, பிறவினை எனப் பயிலும் வினைச்சொற்களின் பொருள் வேறுபாடு.

தன்வினை பிறவினை வேறுபாடுகளோடு பயிலும் எண்ணற்ற சொற்கள் கொங்குத் தமிழில் கலந்திருக்கின்றன. நான் முன்பே சொன்னதுதான், தாட்டி விடுவது என்ற சொல்லை இங்கே பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.

“பையனை வீடு வரைக்கும் அனுப்பி விடுங்க.. வேலை முடிஞ்சதும் உடனே தாட்டி விட்டுர்ரேன்..”

“பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ள அமைஞ்சதும் காலா காலத்துல தாட்டி விட்டுர்ர வேண்டியதுதான்…”

“கிணத்துல தண்ணி கம்மியாத்தான் இருக்குது… இன்னும் இரண்டு பாத்திக்குத் தாட்டுமான்னு தெரியில…”

இவை தாட்டுதல் என்ற வினைச்சொற்பயன்பாட்டில் அமைந்த பேச்சு வழக்குகள். தாண்டு என்னும் தன்வினைக்குரிய பிறவினைச்சொல் தாட்டு என்பதாகும்.

பையனின் வேலை முடிந்ததும் இருக்குமிடத்திலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைந்ததும் பிறந்த வீட்டிலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. இரண்டாம் பாத்தி வரைக்கும் தண்ணீரைத் தாண்டச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.

மாளுதல் அல்லது மாண்டுதல், தாட்டுதல் ஆகிய சொற்கள் அகராதிகளில் இல்லை. மாளுதல் என்ற சொல் இருப்பினும் மக்கள் வழங்கும் நுண்ணிய பொருளில் காணப்படவில்லை. சங்கச் சொல்லடைவு அகராதியில் மட்டும் சாதல், அழிதல், கழிதல், இயலுதல் ஆகிய நான்கு பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அச்சொற்கள் யாவும் சொற்கள் இல்லையா ? பேச்சுத் தமிழின் வினைச்சொல் வளம் அகராதிப் பெருமக்களின் பார்வையில் படாதது ஏன் ? அச்சொற்கள் தாமாகவே இலக்கணத் தன்மைகளோடு வெளிப்பட்டுத் துல்லியமாகப் பொருளுணர்த்திப் பயன்பட்டு வருவதை யாரேனும் கண்டுணர்த்தினார்களா ? ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. விடையில்லை.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by சிவா on Wed Sep 05, 2018 11:14 pm

"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்"ஒரு வினைச்சொல் எப்படியெல்லாம் பயிலும் என்பதை அறிந்தால் வியப்பின் கொடுமுடிக்கே சென்றுவிடுவோம். எண்சாண் உடம்பில் பொருந்தியுள்ளவை எல்லாம் உறுப்புகள். உறுப்புகள் இல்லையேல் இவ்வுடலால் என்ன பயன் ? எல்லாச் செயற்பாடுகட்கும் உறுப்புகளே உதவும் கருவிகள். அதனால்தான் அவ்வுறுப்புகள் ஒவ்வொன்றைக்கொண்டும் எண்ணற்ற வினைச்சொற்களை ஆக்கி வழங்குகிறோம். எப்படி என்று பார்ப்போம்.

உறுப்புகளில் தலையாயது கண். அந்தக் கண்ணைக்கொண்டு எத்தனை வினைச்சொற்களை ஆக்கிக்கொள்கிறோம் தெரியுமா ? தூங்கு என்பதைக் “கண்வளர்” என்று சொல்கிறோம். தாலாட்டுப் பாட்டில் குழந்தையினைத் தூங்கு என்று சொல்லாமல் “கண்வளர்வாய்” என்பார்கள். குழந்தைக்குத் தூக்கமே கண்வளர்ச்சி. தூக்கத்தினின்று விழிப்பதைக் “கண்மலர்வாய்” என்பார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் “கண்கலந்தது” என்றும் இரங்கிய மனநிலையைக் “கண்ணோடுதல்” என்றும் கூறுவர். திருக்குறளில் கண்ணோட்டம் என்றே ஓர் அதிகாரம் இருக்கிறது. அறியாமையில் இருப்பவர்க்கு அறிவுண்டாகும்படி ஒன்றைக் கூறினால் “என் கண்ணைத் திறந்துட்டீங்க…’ என்று மகிழ்வர். இப்படிக் கண்ணைக்கொண்டே எண்ணற்ற வினைச்சொற்கள் இருக்கின்றன. கண்படுதல், கண்காட்டுதல் என்று கண்ணை முன்வைத்துத் தோன்றிய வினைச்சொற்கள் பல.

கண்ணிருந்தால் காதும் இருக்க வேண்டுமே. நம்ப முடியாதவாறு பொய்யுரைத்தலைக் ‘காது குத்துதல்’ என்கிறோம். மறைவாய் ஒன்றைச் சொல்வதைக் ‘காதுகடித்தல்’ என்கிறோம். காதினைக் குறிக்கும் இன்னொரு சொல்லான செவியையும் விட்டுவைக்கவில்லை. ஒன்றை ஏற்று இணங்கிக் கேட்பவன் ‘செவிசாய்க்கிறான்’. வெறுமனே கேட்டு வைப்பது ‘செவிமடுப்பது’.

கை கால்களும் உறுப்புகளாயிற்றே… அவற்றைக்கொண்டும் எண்ணிறந்த வினைச்சொற்களை ஆக்கிக்கொண்டுள்ளோம். இல்லை என்று சொல்வதைக் ‘கைவிரித்தான்’ என்கிறோம். துள்ளுகின்ற ஒருவரை அமைதிப் படுத்துவதைக் ‘கையமர்த்தினான்’ என்கிறோம். துன்பத்தில் உதவினால் ‘கைகொடுத்தான்’ என்கிறோம். சண்டையில் முடிந்தால் அது கைகலப்பாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அது கைப்பிடிப்பதாகும். துன்பத்தில் இருப்பவர்க்கு மேம்பாடடையும் வழி காட்டினால் அது கைதூக்கிவிடுவது. நட்போடு ஒன்றுபட்டால் கைகோப்பது. கையெழுத்திட்டால் அது கைநாட்டுவது. நட்டமானால் கையைக் கடிக்கிறது. அடிக்கத் துணிந்தால் கைநீட்டுவது. பணிவது கைகட்டுவது. எத்தனை எத்தனை சொற்கள் !

கைக்குச் சற்றும் இளைப்பில்லாத உறுப்பு கால். கால்களை வைத்து ஆக்கிய வினைச்சொற்கலை நினைவுபடுத்திப் பாருங்கள். குழந்தை கழித்தால் கழுவிவிடுவதைக் ‘கால்கழுவுதல்’ என்று இடக்கரடக்கலாகச் சொல்கிறோம். மதியாதார் தலைவாயில் மிதிக்கத் தயங்கும் மனநிலையைக் ‘கால்கூசுகிறது’ என்பர். கால்கொள்வது ஒன்றைத் தொடங்குவதாகும். ஒருவரைப் பணிந்து கெஞ்சுவது ‘காலைப் பிடிப்பது’. புதிதாய் ஓரிடத்தில் வெற்றியை நாட்டினால் அது ‘காலூன்றுவது’. காலின் கீழ்ப்பாகமான பாதத்தை அடி என்று சொல்கிறோம். அடியைக்கொண்டும் வினைச்சொற்கள் பல தோன்றியிருக்கின்றன. தாழ்ந்து பணிந்தவன் அடிபணிந்தான். பின்பற்றுபவன் அடியொற்றினான். ஒன்றைப் புதிதாய்த் தொடங்கியவன் அடிவைத்தான்.

முகத்தைக்கொண்டும் பல வினைச்சொற்கள் ஆக்கப்படுகின்றன. சினப்பது முகங்கடுப்பது. மகிழ்வது முகமலர்வது. “அவ என்கூட முகங்கொடுத்தே பேசல’ என்கிறோம். ஒருவரை அன்போடு எதிர்கொள்வது முகங்கொடுத்தலாகும். ஏமாற்றத்தாலும் துன்பத்தாலும் தளர்வது முகஞ்சுண்டுதல். அருவருப்பைக் காட்டுவது முகஞ்சுழிப்பது. கடுமையாக மறுத்தால் அது முகத்தில் அடித்தல். “என்னப்பா இப்படி முகத்துல அடிச்சாப்பல சொல்லிட்டே…”

உடலின் முதற்பேருறுப்பு தலைதான். தலையைக் கொண்டு வழங்கப்படாத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அச்சொற்கள் பரவிக்கிடக்கின்றன. ஏற்றுக்கொள்வது ‘தலையாட்டுவது.’ செத்துப் போவது ‘தலை சாய்ந்தது. தலை தொங்கியது’. பெயருக்கு எட்டிப் பார்ப்பவன் வருபவன் ‘தலைகாட்டுகிறான்’. அடங்காமல் ஆகாதன செய்பவன் ‘தலைவிரித்தாடுகிறான்’. நாணத்திற்கு ஆட்படுவது “தலைகவிழ்வது’. இழிவுக்கு ஆட்படுவது ‘தலைகுனிவது’. ஒரு செயலில் முன்வந்து பங்கேற்பது ‘தலைகொடுப்பது’. ஒன்றில் வலிந்து நுழைவது ‘தலையிடுவது’. மேன்மையுற விளங்குவது ‘தலைசிறந்தது’. முடியை ஒழுங்குபடுத்துவது ‘தலைசீவுவது’. அஞ்சிய இடத்தினின்று விரைந்தகல்வது ‘தலைதெறிக்க ஓடுவது’. தாழ்நிலையிலிருந்து உயர்வது ‘தலைநிமிர்வது’. ஒன்றை முற்றாய்த் துறப்பது ‘தலைமுழுகுவது’. இன்னும் இன்னும் நினைவிலிருந்து கூறிக்கொண்டே செல்லலாம். தலையைக்கொண்டு ஆக்காத வினைச்சொற்களே இல்லை என்னுமளவுக்கு அவை பெருகிக்கிடக்கின்றன.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன் Empty Re: சொல்லேர் உழவு - கவிஞர் மகுடேசுவரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum