புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
139 Posts - 56%
heezulia
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
9 Posts - 4%
prajai
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_m10திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2018 3:04 am

மனித குல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் நிலவியுள்ளன. ஆண்டான் – அடிமைச் சமுதாயம்; நிலபிரபுத்துவ முறை; முதலாளித்துவ முறை என ஒவ்வொரு காலகட்டத்திலும், சுரண்டல்களும், ஒடுக்குமுறைகளும் நடந்தேறியுள்ளன.

அதேபோன்று, நிறவெறியும், இனவெறியும் தலைவிரித்தாடிய காலங்களுமுண்டு. ஒரே மதத்திற்குள்ளும் மதங்களுக்கிடையேயும் மோதல்களும், நாடுகளிடையேயும் மோதல்களும் ஏகாதிபத்தியங்கள் உருவாகி, பல இனங்களையும், நாடுகளையும், காலனிப்படுத்தியதையும் நாம் அறிவோம்.

இந்தியாவைப் பொருத்தமட்டிலும் சாதிய அடுக்குமுறைகள், அதனால் ஏற்பட்ட ஒடுக்குமுறைகள் பல நூறாண்டுகால வரலாறு ஆகும். ஒரு இனமோ, குழுவோ, வர்க்கமோ, நாடோ எதுவாகினும் அவைகள் தங்களுடைய அடையாளங்களை மீட்டெடுப்பதற்காகவே போராடியிருக்கிறார்கள்.

அந்த அடையாளப் போராட்டங்களை முழுமையாக முன்னெடுத்துச் செல்லாததன் விளைவாகவே இந்தியா தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. சமூக சிக்கலுக்கும், பொருளாதார சுரண்டலுக்கும் ஆட்பட்ட மக்கள், முற்றான விடுதலையை நோக்கி பல கட்டங்களில் எழுந்தார்கள். எழுந்த வேகத்திலே விழுந்தும் போயிருக்கிறார்கள்.

பொருளாதார விடுதலை அடையாமல் அரசியல், சமூக, கலாச்சார விடுதலையையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது நியதி. ஆனால் பொருளாதார விடுதலையை அடைய, கலாச்சார மற்றும் சமூக அடையாளங்களை மீட்பதிலிருந்தே துவங்க வேண்டியிருக்கிறது.

இந்த சூத்திரம் முறையாக சொல்லப்பட்டிருந்தால், இந்தியாவில் ஏற்றத் தாழ்வுகள் எப்பொழுதோ ஒழிந்து போயிருக்கும். ஒருவர் ஒருவரை சுரண்ட முடியாத நிலை, ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை தாழ்த்திப் பார்க்க முடியாத நிலை உருவாகியிருக்கும்.

இந்தியாவில் நடக்கும் சாதிய முரண்பாடுகளுக்கு 2000, 3000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. பிரச்சினை எத்தனை ஆண்டுகாலமாக இருப்பினும் தீர்வு ஒன்று தான்.

முகலாயப் படையெடுப்புக்களில் வீழ்ந்த இந்திய சமுதாயம் கட்டாய மதமாற்றத்திற்கு ஆட்பட்டது. அதை புரட்சிகரமான நிகழ்வு என்று எடுத்துக்கொள்ள முடியாது. சூத்திரர்களும் அதற்கு அடுத்த தட்டில் இருந்தவர்கள் மட்டுமே மதம் மாறிச் செல்லவில்லை. பிராமணர்களும், சத்திரியர்களும் கூட மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள்; மாறியிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் வந்தபிறகு கிறித்தவ மதமாற்றங்கள் நடந்தன. அங்கேயும் உடைமையாளர்களும் மாற்றப்பட்டார்கள், உழைப்பாளிகளும் மாற்றப்பட்டார்கள். சுதந்திரப் போராட்ட காலகட்டங்களில், அரசு அதிகாரத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகள் தான் கேட்கப்பட்டதே தவிர, Equality and Equity சமத்துவமும் சம பங்கும் வலியுறுத்தப்படவில்லை..

காந்தியார் அவர்கள், இந்து தர்மம் தொடரட்டும் தீண்டாமை மட்டுமே ஒழியட்டும் என்று பார்த்தார்; அந்தத் தத்துவமும் சாதியை ஒழிக்கப் பயன்படவில்லை. அண்ணல் அம்பேத்கர், பெரியார், பூலே போன்றவர்கள் இந்து சனாதன ஒழியட்டும் இடஒதுக்கீடுகள் ஓங்கட்டும் என்றார்கள். இவர்களின் கருத்துக்களும் முரண்பாடு உடையவைகளே.

எந்த இடஒதுக்கீடுகளும், சட்டமும் பெரும்பாலான மக்களின் அடையாளத்தையும், நன்மதிப்பையும் மீட்டுத் தரவில்லை; நல்வாழ்க்கையையும் உறுதி செய்யவில்லை. அடையாளங்களை இழந்த சமூகங்கள் மீது அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அமைப்புக்களாகத் திரளாத சமூகங்கள், வேறு மத அமைப்புகளுக்குள் தஞ்சம் தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி சென்றவர்கள் தங்களுடைய வேர்களை மறக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்; சென்ற இடங்களிலேயும் வலுவாக காலுன்ற முடியவில்லை. அண்மைக் காலங்களிலே மதம் மாறிய தலித் கிறித்தவர்களுக்கும், தலித் முஸ்லிம்களுக்கும், நியூ புத்திஸ்ட்டுகளுக்கும் பட்டியலின பிரிவின்கீழ் இடஒதுக்கீடு கேட்கவேண்டிய அவசியம் உருவானது அதனுடைய வெளிப்பாடே.

1957-ல் நடந்த தியாகி இம்மானுவேல் படுகொலை சம்பவத்தின் போது பல கிராமங்களில், தென்தமிழக தேவேந்திரகுல வேளாளர்கள் கிறித்தவர்கள் ஆனார்கள். 1980-ல் நடந்தேறிய இராமநாதபுரம் கலவரத்தைத் தொடர்ந்து சிலர் இஸ்லாமியராக மாறினார்கள். 1981-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலப்புத் திருமண நிகழ்வையொட்டி 180 குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மாறினார்கள்.

1995-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி, நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள வீரசிகாமணியிலே தேவேந்திரகுல சமூகத்தைச் சார்ந்த ஒரு பேருந்து ஓட்டுனர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்தமிழகத்தில், ஏறக்குறைய 10 ஆண்டுகள் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல்கள் நடந்தன. அதே 1995-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம், ஆலந்தா, காசிலிங்காபுரம், சவலாப்பேரி, நாரைக்கிணறு, மருதன்வாழ்வு, ஒட்டுடன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளாயின.

இரண்டு தரப்பிலேயும் எண்ணற்ற மோதல்கள்; மரணங்கள்; பொருட்சேதங்கள் ஏற்பட்டன. 1981 சம்பவத்தைப் போல ஒருசில கிராமங்களில் மதம் மாற முஸ்திபுகள் செய்தார்கள். ஆனால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. நீ ஆளப்பிறந்தவனா? இல்லை மாளப்பிறந்தவனா? அடையாளமே இல்லாதவனா? அடையாளம் மறைக்கப்பட்டவனா? உழைத்துக் கொடுப்பவனா? பிறர் உழைப்பில் பிழைப்பவனா? என்ற இந்த மூன்று கேள்விகள் தேவேந்திரகுல மக்கள் முன்பு வைக்கப்பட்டது. தங்களை ஒன்றுபடவிடாமல் தடுத்த சக்திகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

கிராமம்தோறும் சென்று தாங்கள் அரிஜனங்கள் அல்ல, ஆதிதிராவிடர்கள் அல்ல, மருதநில மக்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற வரலாறு அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. தங்களைக் கூறுபோட்ட அரசியல் கட்சிகளுடைய கொடி இறக்கப்பட்டது; தங்களை ஒன்றுபடுத்தி அடையாளப்படுத்திய சிவப்பு - பச்சைக் கொடி மட்டுமே ஒவ்வொரு கிராமத்திலும் ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்தது. அவர்கள் மனதில் குடிகொண்டிருந்த அச்சம் போக்கப்பட்டது, தாழ்வுமனப்பான்மை நீக்கப்பட்டது. தங்கள் பெருமையை உணர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் புதிய ஒளி ஊட்டப்பட்டதை உணர்ந்தார்கள்.

ஒற்றுமை, தங்களுக்கான பெருமை, அடையாளம், வலுவான கட்டமைப்பு, வழிகாட்டும் தலைமை ஆகியவை தேவேந்திரகுல வேளாளர்களை ஒரு புதிய பரிணாமத்திற்கு இட்டுச் சென்றது. எனவே அவர்களுக்கு, 1981-களைப் போல பாதுகாப்பைத் தேடி வேறு மதங்களுக்குப் போக வேண்டிய அவசியம் எழவே இல்லை.

அதைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கத்தின் பெயரில் போக்குவரத்துக் கழகம் துவக்கப்பட்டபோது, இரண்டு சமூகங்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்தது. எண்ணற்றக் கைதுகள்; சிறைச்சாலைகள்; சித்திரவதைகள் என சொல்லி மாளாத் துன்பங்கள் இச்சமூகத்தின் மீது ஏவப்பட்டன. தேயிலைத் தோட்ட தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகப் போராடி 17 விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தார்கள்.

எனினும், அவர்களுக்கு வேறு எந்த மார்க்கத்தைப் பற்றியும் சிந்திப்பதற்கான அவசியம் ஏற்படவே இல்லை. 1995 கொடியங்குளம் நிகழ்விற்குப் பிறகு, தேவேந்திரகுல வேளாளர்கள் புதிய உலகைக் கண்டு கொண்டார்கள். சமூக விடுதலை கைக்கு எட்டிய தூரத்தில் தான் உள்ளது என்பதையும் புரிந்து கொண்டார்கள். அதனுடைய பின்னணியில் தான், ஒரே சமுதாயம் மட்டுமே, ஒன்று திரண்டு 1996-ல், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலே என்னை வெற்றி பெற வைத்து, சட்டமன்றத்திற்கு அனுப்பியது.

தென்தமிழகத்தில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய சமூக மாற்றமே, மேற்குத் தமிழகத்திற்கும், வடக்குத் தமிழகத்திற்கும் பாதுகாப்பளித்தது. நாளுக்கு நாள் தேவேந்திரகுல மக்கள் மத்தியில் பல முற்போக்கான சமூக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வந்தன. அடையாளம், அங்கீகாரம், அதிகாரம் இவைகளே சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்ற கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட தேவேந்திரகுல சமுதாயம் புதிய தமிழகத்தின் பின்னால் முழுமையாக அணி திரண்டது. புதிய தமிழகத்தை தங்களுக்கு வழிகாட்டும், பாதுகாப்பளிக்கும் ஒரு மார்க்கமாக தேவேந்திரர்கள் இதய பூர்வமாக நம்பினார்கள். எனினும் ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்கு இன்னும் ஏதோ ஒரு இடையூறு, ஒரு தடைக்கல், ஒரு திரை, ஒரு பிணை தங்களைச் சுற்றி இருப்பதை உணரத் தொடங்கினர்.

ஆதிதிராவிடர் அல்லது பட்டியல் அல்லது அரிஜன் என்ற முத்திரையே இந்த சமூகத்திற்கான தடைக்கால்லாக இருக்கிறது என்ற கொதிப்பு, இந்த சமூகத்திற்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒருபக்கம் சலுகை என்ற மாயை; இன்னொரு பக்கம் மதிப்பு, மரியாதை, அடையாளம் என்ற நிஜம்; எதற்காக எதை இழப்பது? இடஒதுக்கீடு, சலுகை போன்றவைகளுக்காக விலைமதிப்பற்ற அடையாளத்தை இழப்பதா? அல்லது அடையாளத்திற்காக, அரைகுறை சலுகைகளைத் துறப்பதா? என்ற கருத்து மோதல்கள் எழுந்தன.

முற்போக்கான சிந்தனைகளும், கருத்துக்களும் மட்டுமே எந்தவொரு வர்க்கத்தையும், தனிமனிதையும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் விடுவிக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்ட வரலாற்று முற்போக்கு சக்தி மிக்க, வரலாற்று புரட்சிக்காரர்களான தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களது அடையாளத்திற்காக சலுகைகளை இழக்க தயார் என்று, 2017, அக்டோபர் 6-ஆம் தேதி போர் பரணி எழுப்பினார்கள்; அதே அண்டு டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லியிலே முழங்கினார்கள்; 2018, மே மாதம் 6-ஆம் தேதி விருதுநகரிலே வரலாறு படைத்தார்கள்.

அய்யோ! தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டால் இடஒதுக்கீடுகள் போய்விடுமே என்று தலித்தியவாதிகள், திராவிட இயக்கப் போலிகள், போலிக் கம்யூனிஸ்டுகள் புலம்பினார்கள்; ஊடகங்கள் வாயிலாக எதிர்ப் பிரச்சாரம் செய்தார்கள்; இது ஒரு தலைவர், ஒரு கட்சி, ஒரு அமைப்பினுடைய குரல் என்று ஊளையிட்டார்கள். அது சிங்கங்களின் குரல் என்று அன்று அவர்கள் உணர்ந்து கொள்ளவேயில்லை.

எப்பொழுதுமே எதிரிகள் தோல்வியை எளிதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுவும் நேர்மையான எதிரிகளுக்கும், வஞ்சகமான எதிரிகளுக்கும் வித்தியாசமுண்டு. திருமாவளவன் ஒரு நேர்மையற்ற விரோதி; அவருக்கு டாக்டர் பட்டத்தின் மீது இருக்கிற மோகத்தை நாம் அறிகிறோம். ஒரு முனைவர் பட்டத்தைப் பெறுவதற்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் போதும். ஆனால் அவர் 16 ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார். எதை ஆய்வு செய்தார்?

1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் கிராமத்தில் நடந்த நிகழ்விற்குப் பிறது, அதைத் தொடர்ந்து வேறு எந்த கிராம மக்களும் அதை பின் தொடரவில்லை. அவ்வப்பொழுது அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த சம்பவங்கள் கூட 1995-க்குப் பிறகு எங்குமே நடைபெறவே இல்லை. தென்தமிழகத்திலே மட்டுமல்ல, வடக்கு, மேற்கு என எந்த மாவட்டத்திலும் மதமாற்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை.

எப்பொழுதுமே ஒரு புதிய பொருள் அல்லது கோட்பாடு கண்டுபிடிக்கப்படுகிறது என்றால், அது எல்லோருக்கும் பொருத்தமானதாகவும், ஏற்புடையதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும். எனவே மீனாட்சிபுரம் சம்பவத்தை வரலாற்று முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது எந்தவிதமான நல்ல படிப்பினைகளையும் தரவில்லை.

ஆனால், மேல்நோக்கிய சமூக வளர்ச்சிக்காகவே மதம் மாற்றம் நடந்தது என்ற கருத்து, இந்தியத் திருநாட்டின், தமிழ்த்தாயின் புத்திரர்களின் வரலாற்று அடையாளங்களை அழித்தொழிப்பதற்கு சமமானதாகும்.

மீனாட்சிபுரம் சம்பவத்தை ஆராய்ச்சிக்கு ஏற்றுக் கொண்டது அடைப்படையிலேயே தவறானது. அதில் ஆராய்வதற்கு ஒன்றுமே இல்லை. 40 வருடங்களுக்கு முன்பு தேவேந்திரர்களுக்கு ஒரு சங்கமோ, கட்சியோ, தலைவர்களோ இல்லாத நேரத்தில், ஒருசில குடும்பங்கள் பாதுகாப்பெனக் கருதி எடுத்த நடவடிக்கை அது. அது ஏற்கெனவே செய்தித் தாள்களில் வந்த விசயம்.

எனவே மீனாட்சிபுரம் சம்பவம் ஆராய்ச்சிக்கு உகந்தது அல்ல. அதற்கு மாறாக 1981-ல் மீனாட்சிபுரத்தில் ஏற்பட்ட மதமாற்றம் 1995-ல் புதிய தமிழகம் கட்சி உதயமான பிறகு முற்றாக தமிழகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறதே அதை ஆராய்ச்சிக்கு எடுத்திருக்கலாம்; புதிய தமிழகம் கட்சியால் மாஞ்சோலை உட்பட, 5 இலட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய வாழ்வில் ஒளியேற்றப்பட்டிருக்கிறதே அதை ஆராய்ச்சிக்கு எடுத்திருக்கலாம்; புதிய தமிழகத்தின் தோற்றுவாயால் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டிருப்பதை ஆராய்ச்சிக்கு எடுத்திருக்கலாம்;

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, எல்லோருமே மறந்து போன ஒரு சம்பவத்திற்கு, யாருமே பின்தொடராத ஒரு சம்பவத்திற்கு அவர் உயிரூட்ட நினைத்திருப்பது மிகப்பெரிய உள்நோக்கம் கொண்டது.

தேவேந்திரகுல வேளாளர்களை பள்ளர் என்று சொல்லி குறைத்துப் பேசி ஆவணப்படுத்த வேண்டும் என்ற வக்கிரப் புத்தியும், தங்களை ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பிரிவில் வைத்ததே தவறு என்றும், தங்களை தேவேந்திரகுல வேளாளராக அடையாளப்படுத்த வேண்டும் என்றும், பட்டியல் பிரிவிலிருந்து இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியிலில் சேர்க்க வேண்டும் என்றும் தேவேந்திரகுல மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிற எண்ணத்திற்கு மாறாக, மீண்டும் அவர்களுடைய அடையாளத்தை அழிக்கும் நோக்கில், மதமாற்றத்திற்குத் தூண்டும் கீழ்த்தரமான செயலே திருமாவளவனின் செயலாகும். மேலும் இது, இந்த தேசத்தின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் அழித்து, தேவேந்திரகுல வேளாளர்களின் மேல்நோக்கிய பயணத்திற்கு முட்டுக்கட்டை போடும் ஒரு கீழ்த்தரமான செயலாகும்.

எப்பொழுதுமே அடிமைகள் ஆபத்தானவர்கள் என்பது, திருமாவளவனுடைய தேவேந்திரகுல வேளாளர் அடையாள அழிப்பு முயற்சியிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. தேவேந்திரகுல வேளாளர்களும், தமிழக மக்களும், இந்தியத் திருநாடும் இதுபோன்ற பிழைப்புவாதிகளிடம் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

சமூக விடுதலைக்காக அடையாள மீட்புப் போராட்டம் நடத்தும் ஒரு சமூகத்திற்கு எதிராக, முட்டுக்கட்டை போட நினைக்கும் திருமாவளவன் முதலில் தனது எதிர்ப்புரட்சி சிந்தனைகளை தன்னைத்தானே ஆராய்ச்சி செய்வதே சாலச்சிறந்ததாகும்.

தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாறுகளை திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்.


இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA




திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக