ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 7:13 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by ayyasamy ram Today at 4:11 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by ayyasamy ram Today at 4:07 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by ayyasamy ram Today at 4:03 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

Admins Online

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?

Go down

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன? Empty ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?

Post by ayyasamy ram on Fri Sep 21, 2018 7:05 am

புதுடில்லி:
டில்லியில் மூன்று நாட்கள் நடந்த ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில்,
அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அரசியல் சட்டம்,
இந்துத்வா, சுதந்திர போராட்டத்தில் காங்கிரசின் பங்கு,
ராமர் கோவில், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல
விஷயங்களை கையில் எடுத்து பேசினார். அவரது பேச்சை
அலசுபவர்கள், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றம்
ஏற்பட்டுள்ளதா என அரசியல் நிபுணர்கள் வியப்பு
தெரிவித்துள்ளனர்.

காங்.,கிற்கு பாராட்டு:

'எதிர்கால இந்தியா - ஆர்.எஸ். எஸ்., பார்வையில்' என்ற
தலைப்பில், டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., மாநாடு நடந்தது. இதில்
பங்கேற்க வரும்படி 60 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநாட்டில் மோகன் பகவத் பல்வேறு விஷயங்களை பேசினார்.
'சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ் வடிவில், எழுச்சி
உருவானது. பலர் தியாகங்கள் செய்தனர். அவை இன்றும் நம்மை
ஊக்குவிக்கின்றன. அந்த சித்தாந்தம் நாட்டை சுதந்திரத்திற்கான
பாதையில் செல்ல வைத்தது' எனக்கூறி காங்கிரசுக்கு பாராட்டு
தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள்,
'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று முழக்கமிட்டு வரும்
நேரத்தில், மோகன் பகவத் இப்படி பேசியது புதிய திருப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது.

அதுபோல், முஸ்லிம்கள் இல்லாமல் இந்து நாடு கிடையாது
என்றும் குறிப்பிட்டார். அரசியல் சட்டத்தை மாற்ற ஆர்.எஸ்.எஸ்.,
முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும்
சூழ்நிலையில், 'சுதந்திரத்திற்கான அனைத்து
அடையாளங்களையும் நாங்கள் மதிக்கிறோம். அந்த வகையில்
அரசியல் சட்டமும் ஒரு அடையாளம் தான்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசியகொடி விவகாரம்:

அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் தேசிய கொடிக்கு
முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற புகார் உள்ளது. அதற்கு
பதில் அளிக்கும் வகையில், 'ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள்,
தேசிய கொடி உதயமான நாள் முதல் அதற்கு முக்கியத்துவம்
கொடுப்பதில் தங்களை இணைத்துள்ளனர்' என்று தெரிவித்தார்.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன? Empty Re: ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?

Post by ayyasamy ram on Fri Sep 21, 2018 7:06 am


பொது சிவில் சட்டம்:

பொது சிவில் சட்டம் குறித்து பேசும் போது, 'பொது சிவில்
சட்ட விஷயத்தை ஒரு இந்து - முஸ்லிம் பிரச்னையாக
சித்தரித்து விட்டனர். ஆனால், பொது சிவில் சட்டத்தை
அந்த அளவில் சுருக்கி விட கூடாது.

நாட்டில் பழங்குடியினர் உட்பட பலரும் தங்களுக்கான
தனி சட்டத்தை பின்பற்றி வருகின்றனர். பன்முகத்தன்மையை
கருத்தில் கொண்டு அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறது.

நாடு முழுவதும் ஒரே சட்டத்தை பின்பற்ற, ஒருமித்த கருத்தை
ஏற்படுத்த வேண்டும். ஒரு சமூகத்தில் பல்வேறு குழுக்கள்
இருக்கக் கூடாது' என, விளக்கம் அளித்தார்.

இட ஒதுக்கீடு பிரச்னை:

பீஹார் தேர்தலின் போது மோகன் பகவத், இட ஒதுக்கீடு
குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். இதற்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியது. டில்லி மாநாட்டில் அவர் பேசும் போது,
' இட ஒதுக்கீடு பிரச்னை இல்லை. அதை ஒட்டி நடக்கும்
அரசியல் தான் பிரச்னை. பயனாளிகள் விரும்பும் வரை இட
ஒதுக்கீடு தொடர வேண்டும்.

அரசியல் சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து இட
ஒதுக்கீடுகளையும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரிக்கிறது' என்று கூறி
பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அயோத்தி விவகாரம்:

அவர் மேலும், 'அயோத்தியில் ராமர் கோவில் விரைவில்
கட்டப்பட வேண்டும். அப்படி செய்தால், இந்துக்கள் மற்றும்
முஸ்லிம்களிடையே உள்ள பதட்டம் தீரும்' என்றும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சாதி மறுப்பு திருமணம் மற்றும்
ஓரினச்சேர்க்கையை ஆர்.எஸ்.எஸ்., எதிர்த்து வந்தது. தற்போது
அதில் மாற்றம் வந்துள்ளது. அது குறித்து மோகன் பகவத்
கூறுகையில், 'ஓரினச்சேர்க்கையாளர்களை தனிமைப்படுத்தி
விடக் கூடாது.

அவர்களும் சமூகத்தின் ஒரு அங்கம். காலம் மாறி விட்டது.
அது போன்ற விஷயங்களை சமூகம் எதிர் கொள்ள தான்
வேண்டும். சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.,
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்துத்வாவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த
தொண்டர்களிடம் அது பரவலாக காணப்படுகிறது.

சாதி மறுப்பு திருமணம் நடத்தியவர்கள் குறித்து கணக்கெடுப்பு
நடத்தினால், அதில் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களின்
எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்' என்றார்.

அவர் மேலும், 'காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தரும் அரசியல்
சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை ஆர்.எஸ்.எஸ்.,
ஒருபோதும் ஏற்காது. பசுக்களை பாதுகாக்க வேண்டும்
என்பதில் மாற்றம் இல்லை.

ஆனால், பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டத்தை
கையில் எடுப்பது குற்றம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்
முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக பேசியவர். அது குறித்து
மோகன் பகவத்திடம் கேட்ட போது, கோல்வால்கர் பேசியது,
நாட்டின் பிரிவினை மற்றும் இந்து - முஸ்லிம் மோதல் நடந்த
கால கட்டத்தை சேர்ந்தது.
தற்போது அந்த பேச்சுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை
என்று குறிப்பிட்டார்.

கொள்கையில் மென்மையா:

இந்த பேச்சைக் கேட்ட அரசியல் வல்லுனர்கள்,
பல கொள்கைகளில் தற்போது ஆர்.எஸ்.எஸ்.,ஸூக்கு மென்மைத்
தன்மை ஏற்பட்டுள்ளதாகவும், காலத்திற்கேற்ப மாற
நினைப்பதாகவும் கருதுகின்றனர்.
-
-------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum