ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:46 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 7:47 am

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:40 pm

Admins Online

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது

Go down

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது Empty எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது

Post by ayyasamy ram on Fri Sep 21, 2018 7:23 am

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
-
சென்னை,

ஊழல் வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெறும்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 6 ஆண்டுகள் பொதுத்தேர்தலில்
போட்டியிட தடை விதிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
வழிவகை செய்கிறது.

ஆனால், சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள்
ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்றால் அவர்கள்
ஆயுள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க
வேண்டும் என்று கோரி டெல்லியைச் சேர்ந்த
பாரதீய ஜனதா நிர்வாகியும், வக்கீலுமான
அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நாடு முழுவதும்
அனைத்து மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான
கிரிமினல் வழக்குகளை விசாரிப்பதற்காக தனிக்
கோர்ட்டுகளை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் 14-ந்தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அத்துடன் இந்த உத்தரவை அமல்படுத்தி அதுகுறித்து
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு
கட்டளையிட்டது.

மேலும் இது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசுக்கும்,
அந்த மாநில ஐகோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடிதம்
அனுப்பியது.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம்,
தெலுங்கானா, மத்திய பிரதேசம், மராட்டியம்,
மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய
10 மாநிலங்களில் தலா ஒரு தனிக்கோர்ட்டும், டெல்லியில்
2 தனிக்கோர்ட்டுகளும் என மொத்தம் 12 தனிக்கோர்ட்டுகள்
அமைக்கப்பட்ட தகவலை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
தெரிவித்தது.

இந்த நிலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மீதான
கிரிமினல் வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகளை
உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 178 எம்.பி., எம்.எல். ஏ.க்கள்
கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
நாட்டிலேயே உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக
அதிகபட்சமாக தமிழகத்தில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு
எதிராக 324 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும்,
சொத்துகளை அபகரித்ததாகவும் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
மீது வழக்குகள் உள்ளன. இதுதவிர தேர்தல் வழக்குகள்
தனியாக உள்ளன.

தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்
மூலம் இந்த தகவல் தெரியவந்து இருக்கிறது.

தமிழகத்தில் தனிக்கோர்ட்டு அமைப்பதற்காக மத்திய அரசு
ரூ.14.89 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து,
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனிக்கோர்ட்டு
அமைக்கப்பட்டது.

இந்த கோர்ட்டின் நீதிபதியாக ஜெ.சாந்தியை நியமித்து,
ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் உத்தரவிட்டார்.

இந்த தனிக்கோர்ட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் குத்துவிளக்கு
ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் தனிக்கோர்ட்டை திறந்து
வைத்தார்.

இந்த விழாவில், ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.பி.முரளிதரன்,
ஜெகதீஷ் சந்திரா, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க
தலைவர் மோகனகிருஷ்ணன், பெண் வக்கீல் சங்க தலைவர்
நளினி மற்றும் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர்
கலந்து கொண்டனர். பின்னர் தனிக்கோர்ட்டு அதிகாரிகள்
கூறியதாவது:-

தமிழகத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது ஊழல், குற்றம் மற்றும்
தேர்தல் தகராறு தொடர்பாக ஏராளமான வழக்குகள்
நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை இனி இந்த
தனிக்கோர்ட்டு விசாரிக்கும்.

முன்பு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா நில மோசடிக்கு
எதிராக மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக, கடந்த
2011-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவரை விமர்சித்து
பேசியதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் கோரி டி.ஜி.பி.யிடம் அ.தி.மு.க. சார்பில்
அப்போது புகார் மனு அளிக்கப்பட்டது.

தனிக்கோர்ட்டில் இந்த வழக்கு முதல் வழக்காக நேற்று
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த
நீதிபதி ஜெ.சாந்தி பின்னர் வழக்கு விசாரணையை வருகிற
25-ந்தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
-
----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62134
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum