ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by krishnaamma Yesterday at 9:37 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Yesterday at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Yesterday at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Yesterday at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Yesterday at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Yesterday at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Yesterday at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Yesterday at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Yesterday at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Yesterday at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Yesterday at 7:41 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Yesterday at 7:36 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Yesterday at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Yesterday at 6:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Yesterday at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:35 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by ayyasamy ram Yesterday at 9:31 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:28 am

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 7:52 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Yesterday at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Yesterday at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Yesterday at 4:21 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Yesterday at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Fri Sep 25, 2020 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Fri Sep 25, 2020 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Fri Sep 25, 2020 8:15 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Fri Sep 25, 2020 7:52 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Fri Sep 25, 2020 5:46 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

Admins Online

பெண்பாவம் பொல்லாதது

Go down

பெண்பாவம் பொல்லாதது Empty பெண்பாவம் பொல்லாதது

Post by ayyasamy ram on Mon Sep 24, 2018 7:58 am

[You must be registered and logged in to see this image.]
-
தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல்
இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே
பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.

இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை
நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம்
இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.

ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு
தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி
அறிந்தாள்.

அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன்
கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.

"ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு
ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது
போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு
தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில்
தூங்காமல் இருக்கிறாள்.

நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்
ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த
மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த
மாங்காயைத் தின்றுவிட்டாள்.

இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின்
தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும்,
அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான
பாவையையும் கொடுத்தான்.

அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை
செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத
கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய
நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக' என்றாள்.
-
-------
"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே' (குறுந்- 292)
-
--------
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப்
பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின்
செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள்.

இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க
முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட
தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க
விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை
செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும்
கூறப்பட்டுள்ளது.

இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால்
"அலர்' ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும்.
மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே
சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.

அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக்
கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட
தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான்
எனக்கருதவும் இடமுண்டு.

இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம்
"திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, காலம்
நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது.

இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்
குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம்
பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள்
அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
-
---------------------------

- முனைவர் கி. இராம்கணேஷ்
நன்றி- தமிழ்மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum