ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Mon Oct 19, 2020 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Mon Oct 19, 2020 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Mon Oct 19, 2020 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Mon Oct 19, 2020 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Mon Oct 19, 2020 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Mon Oct 19, 2020 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Mon Oct 19, 2020 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Mon Oct 19, 2020 7:02 pm

Admins Online

ரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்

Go down

ரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும் Empty ரஃபேல் பேரம்: உண்மை வெளிவர வேண்டும்

Post by ayyasamy ram on Sat Sep 29, 2018 1:21 pm

பிரான்ஸிடமிருந்து 36 ‘ரஃபேல்’ போர் விமானங்களை
வாங்கும் விவகாரத்தில் மோடி அரசின் மீது ஊழல்
குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இரண்டு குற்றச்சாட்டுகள் பிரதானமாக முன்வைக்கப்படுகின்றன:
“விமானங்களுக்கு அதீத விலை கொடுக்கப்படுகிறது. ஆளும்
கட்சிக்கு வேண்டிய ‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தைத்
தருமாறு சலுகை காட்டப்பட்டிருக்கிறது.”

“விலை விஷயம் ராணுவ ரகசியம்” என்று மோடி அரசு கூறுவதும்,
இந்த ஒப்பந்தத்தில் பிரான்ஸ் சார்பில் கையெழுத்திட்டவரான
அன்றைய அதிபர் ஒல்லாந், “தொழிலதிபர் அனில் அம்பானிக்குச்
சொந்தமான ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தை,
தயாரிப்பில் இந்தியத் தொழில் கூட்டாளியாகச் சேர்க்க வேண்டும்
என்று இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டது” என்று
பேட்டியளித்ததும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கின்றன.

இந்திய அரசு, பிரான்ஸ் அரசு, தஸ்ஸோ நிறுவனம் ஆகியவை
குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளன என்றாலும்,
இதுவரையிலான விளக்கங்கள் எதுவுமே குற்றச்சாட்டுகளைத்
தகர்க்கும் வகையில் இல்லை.

முக்கியமான கேள்விகள் என்னவென்றால், ஒல்லாந் கூறியதைப்
போல ரிலையன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரியுங்கள் என்று
இந்திய அரசு கோடி காட்டியதா?

உண்மையென்றால், எந்தவிதத்தில் அது கூறப்பட்டது?
அதைக் கூறியவர் யார்? ஒல்லாந் முழுமையாக விவரங்களை
வெளியிடவில்லை. ஆகையால், இதுகுறித்துப் பேச வேண்டிய,
நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இந்தியப்
பிரதமருக்கே இருக்கிறது.

ரஃபேல் போர் விமானத்தின் தாக்கும் திறன் குறித்து யாரும்
சந்தேகம் எழுப்பவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில்
கூறப்பட்டதைப் போல, இத்தனை கோடி ரூபாய் இன்ன கணக்கில்
போடப்பட்டிருக்கிறது என்றும் யாரும் கூறிவிடவில்லை.

இந்த பேரம் எந்த முறையில் நடத்தப்பட்டது என்பதைச் சுற்றித்தான்
சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும். 2015 ஏப்ரலில் பிரான்ஸ்
நாட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய
பயணம் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காக
36 விமானக் கொள்முதல் குறித்துத் திடீரென அறிவித்தபோது
அரசின் மூத்த அதிகாரிகளைக்கூட அந்த அறிவிப்பு வியப்பில்
ஆழ்த்தியது.

காரணம் அவர்கள் காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில்
தொடங்கிய 126 விமானங்களை வாங்குவதற்கான பேரத்தை
முடிப்பதற்காகத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆக, இந்த ஒப்பந்த உருவாக்கத்தில் வழக்கமான
ஒப்பந்தங்களைக் காட்டிலும் கூடுதலான பொறுப்பு மோடிக்கு
இருக்கிறது. புதிய அறிவிப்பு இன்று ஏராளமான
சந்தேகங்களுக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும்
வித்திட்டிருக்கும் நிலையில் இனியும் யாரும் மௌனம் காக்க
முடியாது.

வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. ஊழல் நடக்கவில்லை,
தவறுகளுக்கு இடமில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு
விசாரணைக்கு உத்தரவிடுவதில் அரசுக்கு என்ன தயக்கம்?
-
--------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum