ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:16 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by ayyasamy ram Today at 7:04 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by ayyasamy ram Today at 7:03 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

Admins Online

நினைப்பது முடியும்

Go down

 நினைப்பது முடியும்  Empty நினைப்பது முடியும்

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 6:02 am

 நினைப்பது முடியும்  1
-
நேர்மறை எண்ணங்களின் உளவியல் ரகசியம்
டாக்டர் ஷில்பா சிங்கி


மனசு போல வாழ்க்கை என்று பெரியவர்கள் சொல்வதைக்
கேட்டிருப்போம்... எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
என்று கவிஞர்களின் வர்ணனைகளைக் கேட்டு
ரசித்திருப்போம்...

எதை எண்ணுகிறாயோ, அதையே அடைகிறாய் என்று
தன்னம்பிக்கைப் பேச்சாளர்களின் வார்த்தைகளைக் கேட்டு
மெய்சிலிர்த்திருப்போம்... எல்லாம் சரிதான்....

எண்ணங்கள் ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில்
வெற்றிக்கு உதவுவதாக ஏற்றுக் கொள்ளலாம்தான்.
ஒருவரின் ஆரோக்கியத்துக்கும் நேர்மறை எண்ணங்கள்
உதவுமா?

‘நிச்சயம் உதவும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘ஒருவரின் ஆயுட்காலம், நோயிலிருந்து தப்பிப் பிழைத்தல்,
இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, புற்றுநோய்
விளைவு, பிரசவம், வலியை சகித்துக்கொள்ளும் தன்மை
மற்றும் அனைத்து ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களிலும்
எண்ணங்கள் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன.

எங்களுடைய ஆய்வில் எதிர்மறை எண்ணங்கள்
உடையவர்களைவிட நேர்மறை எண்ணங்கள்
கொண்டவர்களிடம் காணப்பட்ட விளைவுகள்
ஆரோக்கியமாக இருந்தது என்று கூறியிருக்கிறது
டென்மார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய
அறிக்கை ஒன்று.

உதாரணத்துக்கு, மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட
பெண்களில் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்
55 சதவீதம் மரணத்திலிருந்து மீண்டு இருப்பதாகவும் இந்த
ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இன்டர்னல் மெடிசன் சிறப்பு மருத்துவரான
ஷில்பா சிங்கியிடம் நேர்மறை எண்ணங்களின் தாக்கம்
ஆரோக்கியத்தில் எப்படிபிரதிபலிக்கிறது என்று கேட்டோம்..

.“ஒரு நோயாளியின் மனதில் விதைக்கப்படும் அல்லது
தோன்றும் எண்ணங்களின் விளைவு அவரது உடலில்
வெளிப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு நோயாளியின் மனதில் தோன்றும் எண்ணங்கள்
நேர்மறையாக இருந்தால் மன அழுத்தம் குறைந்து,
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த நோயிலிருந்து
அவரால் வேகமாகவும் குணமடைய முடியும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63014
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நினைப்பது முடியும்  Empty Re: நினைப்பது முடியும்

Post by ayyasamy ram on Fri Oct 05, 2018 6:03 am

அதேநேரம், எதிர்மறை எண்ணம் அதிகமானால் நோயின்
தாக்கம் இன்னும் தீவிரமாகும். எதிர்மறை எண்ணம்
கொண்டவர்களின் மன அழுத்தத்தினால் தசைகள் இறுக்கம்
அடைந்து உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி,
தூக்கமின்மை, சோர்வு, செரிமானக்கோளாறு மற்றும்
ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

எதிர்மறை எண்ணம் உடையவர்கள் கோபம், எரிச்சலால்
கத்தும்போது இயல்பாகவே ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு
போன்றவை அதிகரிக்கும்.

ஏற்கெனவே ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு இதனால்
பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் உண்டு.

ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நேர்மறை
எண்ணங்கள் உதவுவதைப் போலவே, பாதிப்புகளிலிருந்து
மீண்டுவரவும் நேர்மறை எண்ணங்கள் பக்கபலமாக
இருப்பதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

மனதில் நம்பிக்கையோடு இருக்கும் நோயாளி தன்னை
கவனித்துக்கொள்ளும் மருத்துவர், செவிலியர்,
உறவினர்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதால்
ஆபத்தான அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் வேகமாக
குணமடைந்துவிடுவார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட
ஓர் ஆய்வில், நேர்மறை எண்ணங்கள் கொண்ட முதியவர்கள்
ஆரோக்கியமான மனநிலையுடனும், திடமான
உடலமைப்போடும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

Science Direct என்னும் அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட
மருத்துவ அறிக்கை ஒன்றும் இதே கருத்தினை வழிமொழிகிறது.

இந்த நேர்மறை எண்ணங்கள் அவரை கவனித்துக்
கொள்பவருக்கும், பார்க்க வருகிறவருக்கும் கூட அவசியமாக
இருக்க வேண்டும். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு
நோயாளியின் முன்பாகவே தன்னுடைய அனுபவங்களையும்,
நோயைப்பற்றியும் அலசி ஆராய்பவர்களால் நோயாளிக்கு
மேலும் கஷ்டம் அதிகரிக்கும்.

அதனால், நோயாளிகள் முன்பு நல்ல விஷயங்களைப் பேசுவதே
அது அவருக்கு நோயிலிருந்து விரைவில் குணம்பெற்று வீடு
திரும்ப உதவி செய்யும்’’ என்கிறார் அழுத்தமாக!
-
-----------------------------------
- உஷா நாராயணன்
நன்றி-குங்குமம், டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63014
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நினைப்பது முடியும்  Empty Re: நினைப்பது முடியும்

Post by SK on Fri Oct 05, 2018 5:57 pm

அருமையான பதிவு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8471
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

 நினைப்பது முடியும்  Empty Re: நினைப்பது முடியும்

Post by T.N.Balasubramanian on Fri Oct 05, 2018 7:21 pm

பாசிட்டிவ் --நேர்மறை எண்ணங்கள் எப்போதுமே நல்லதை செய்யும்.
ரமணியன்


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27342
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9758

Back to top Go down

 நினைப்பது முடியும்  Empty Re: நினைப்பது முடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum