ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Wed Oct 21, 2020 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Wed Oct 21, 2020 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Wed Oct 21, 2020 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Wed Oct 21, 2020 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Wed Oct 21, 2020 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Wed Oct 21, 2020 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Wed Oct 21, 2020 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Wed Oct 21, 2020 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Wed Oct 21, 2020 7:59 pm

Admins Online

டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்

Go down

டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள் Empty டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பாதிப்பு: 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்

Post by சிவா on Wed Oct 24, 2018 11:57 am


சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கொசு வலை பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலில் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்களை தமிழக சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு வகையான காய்ச்சல் பரவி வருவதால் அதைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், குறிப்பாக சென்னை கொளத்தூர் மேற்குத் தெருவைச் சேர்ந்த 6 வயது நிரம்பிய தீக்ஷா, தக்ஷண் ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருவரும் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தது, பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.

200 பேர் பாதிப்பு: இது குறித்து சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 200 பேர் டெங்கு காய்ச்சலிலும், 100 பேர் பன்றிக் காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் அக்டோபர் மாதத்தில் மட்டும் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சுமார் 10 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சுமார் 23,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், சுகாதாரத் துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை தமிழகம் முழுவதும் 2,400 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

82 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறை சார்பில் 82 நடமாடும் மருத்துவக் குழுக்கள், கொசு ஒழிப்பு விரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவக் குழு வாகனங்களை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் போன்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

20,000 பணியாளர்கள்: சுகாதாரத் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒரு வட்டத்துக்கு 20 தற்காலிகப் பணியாளர்களும், பேரூராட்சி சார்பில் ஒவ்வொரு பேரூராட்சிக்கு 10 தற்காலிகப் பணியாளர்களும், நகராட்சி, மாநகராட்சி சார்பில் 250-300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் மொத்தம் 20 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எலைசா முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்கும் ரத்தப் பரிசோதனை மையங்கள் 31-இல் இருந்து 125-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனைக் கருவி, ரத்தக் கூறுகள், ரத்தம், சுய தற்காப்பு சாதனங்களும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 27 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ரத்தப் பரிசோதனையில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சுமார் 13 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் சிலரும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044 24350496, 044 24334811, 94443 40496, 87544 48477 என்ற எண்களில் இந்த மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum