ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:24 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by ayyasamy ram Today at 11:14 am

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by ayyasamy ram Today at 9:05 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 7:14 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Yesterday at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Yesterday at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

Admins Online

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 09, 2018 11:12 am

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ 0JifwUDRdepceUssDP58+a40c539eP1727371mrjpg
மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே 133 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஏவி. மேம்பாலம் நூறாண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

மதுரையில் பாரம்பரிய அடையாளங்களில் பழமையான ஏவி. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர்) முக்கியமானது. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை எடையையும், அதன் வேகத்துக்கும் ஈடு கொடுத்து, இன்றும் வலுவாக இருக்கும் இந்த ஏ.வி.மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்றுவரை சான்றாக திகழ்கிறது.

லட்சக்கணக்கானோர் கூடும் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் இந்த மேம்பாலத்தின் அருகேதான் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்த பாலம் கட்டுவதற்கு முன் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்கள் மதுரையின் தென் பகுதியிலிருந்து வடபகுதிக்கு செல்ல முடியாமல் இரு பகுதிகளும் தனித்தனி தீவாகவே இருந்துள்ளன.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15325
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty Re: வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 09, 2018 11:13 am

அப்போது யானைக்கல் - செல்லூர் பகுதிக்கு இடையே வைகை ஆற்றில் கற்களை கொண்டு அடுக்கி தரைப்பாலம் ஒன்றை பிரிட்டிஷார் அமைத்தனர். வைகை ஆற்றில் வெள்ளம் வரும்போது, இந்தப் பாலத்தில் செல்வதற்கு மக்கள் சிரமம் அடைந்தனர். அதனால், தற்போது ஏவி மேம்பாலம் இருக்கும் பகுதியிலேயே பிரிட்டிஷ் அதிகாரிகளின் சாரட் வண்டிகள் மட்டும் செல்வதற்காக மூங்கில்களைக் கொண்டு முதலில் பாலம் அமைத்துள்ளனர். ஆனால், சாரட் வண்டிகளின் சக்கரம் அடிக்கடி இந்த மூங்கில் கழிகளில் சிக்கியதால் வண்டியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

அதன் பிறகுதான், இந்த இடத்தில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் வந்தனர். அப்படி அவர்கள் சிரமப்பட்டு உருவாக்கிய பாலம்தான், எத்தனையோ இயற்கை சீற்றங்களை தாங்கி நூறாண்டுகளை கடந்தும் தற்போது கம்பீரமாய் நிற்கிறது.

நேற்று வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன், நீர்நிலைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் மேம்பாலத்தில் திரண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15325
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty Re: வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Dec 09, 2018 11:14 am

இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:

1886-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வைசிராயாக இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்தப் பாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை திறந்து வைக்க அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் மதுரைக்கு வருவதாக இருந்தது. மதுரையில் அந்த நேரத்தில் கொடிய பிளேக் நோய் பரவியதால் இளவரசர் அந்த பயணத்தை தவிர்த்தார். ஆனாலும், அவரது நினைவாக அந்த பாலத்துக்கு ஆல்பர்ட் விக்டர் என்ற பெயரே வைக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டுவதற்கு அப்போது ரூ. 2.85 லட்சம் செலவானது.

தற்போது இந்த பாலம் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே சிதலமடைந்துள்ளது. மதுரையின் அடையாளமாகத் திகழும் ஏவி மேம்பாலத்தை அதன் பழமை மாறாமல் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15325
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty Re: வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum