ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» தமிழ் நாவல் தேவை
by Guest Today at 4:22 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by Guest Today at 3:38 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

Admins Online

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Page 1 of 2 1, 2  Next

Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:01 pm

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் PeFZUxpwTcKYLpmjyHbM+collagejpg

நான், எனது, எனக்கு என்று சுருங்கிவிட்ட உலகில், இன்றும் உள்ளம் நெகிழச் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம்மைச் சிலிர்க்க வைத்து, சிலாகிக்கவும் வைத்து, கவனம் ஈர்த்த சில நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக....

'ஐபிஎஸ்' மகளுக்கு பெருமையுடன் 'சல்யூட்' அடித்த காவல்துறை துணை ஆணையர்

காவல்துறையில் பலர் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து அடித்தே பழக்கப்பட்டுப் போயிருப்பர். ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வர சர்மா, தன் பணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு சல்யூட் அடித்தபோது பெருமைப்பட்டார்

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:02 pm

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் IEJEUreqTaimi3NjMfrZ+Sindhu-Sarmajpg

ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஜக்தியால் மாவட்ட எஸ்.பி.யாக வந்த தனது மகள் சிந்து சர்மாவுக்குத்தான் அவர் சல்யூட் அடித்தார். கொங்கலா காலன் பகுதியில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில், பாதுகாப்புப் பணிக்காக இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றினர். அப்போது உயரதிகாரியான தனது மகளுக்கு முதல் முறையாக சல்யூட் அடித்து நெகிழ்ந்தார் சர்மா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:04 pm

கேரளா வெள்ள நிவாரணம்: அரிசி மூட்டையை நள்ளிரவில் தோளில் சுமந்து சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள்

தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, கோதுமை மூட்டைகள் நள்ளிரவில் ஆட்சியர் அலுவலகத்தில் வந்திறங்கின. ஜீப்பை அனுப்பினால்தான் அடுத்த பணிகளுக்கு வாகனம் செல்ல முடியும் நிலை. நள்ளிரவு என்பதால் அலுவலத்தில் இரு காவலாளிகளைத் தவிர்த்து யாரும் இல்லை.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் 4FpZgkpSXSuOhsV6ipE3+iasjpg
சிறிதும் யோசிக்காத ஐஏஎஸ்அதிகாரிகள் இருவர், நிவாரணப் பொருட்களைத் தங்களின் தோளில் சுமந்து இறக்கினர். பெரிதும் பாராட்டைப் பெற்ற இரு ஐஏஎஸ்களில் ஒருவர் தமிழர், ராஜமாணிக்கம் ஐஏஎஸ்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:05 pm

உலகத்தையே மெய்சிலிர்க்க வைத்த தாய்லாந்து சம்பவம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய குகை 10 கி.மீ. நீளமுடைய தாய்லாந்தின் தாம் லுவாங் குகை . குகை குறித்து அதிகம் அறியாமல், உள்ளூர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த சிறுவர்களும் துணைப் பயிற்சியாளரும் உள்ளே சென்றனர். திடீர் மழையால் வெள்ள நீர் குகைக்குள் சூழ்ந்தது. இதனால் குகையைவிட்டு வெளியேற முடியாமல் அனைவரும் சிக்கிக் கொண்டனர். 14 நாட்களாக உணவும், நீரும் இல்லாமல் தாகத்தாலும் பசியாலும் தவித்தனர்.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் WFxLC7dS8Oh2W3RRV4s7+cavejpg

சர்வதேச மீட்பு குழுவினர், தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து அவர்களை வெற்றிகரமாக மீட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த குகைக்குள் வீரர்கள் துணிச்சலுடன் சென்று, சிறுவர்களைப் பாதுகாப்புடன் மீட்டது உலகையே மெய்சிலிர்க்க வைத்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:06 pm

பணம் மட்டுமே உதவி அல்ல

துன்பத்தில் இருப்பவர்களுக்கு எப்போதும் பணம் மட்டுமே சிறந்த உதவியாக இருந்துவிடாது. சில நேரங்களில் பணத்தைத் தாண்டிய உதவியும் இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான உதவியைச் செய்தனர் கொல்லம் மீனவர்கள். கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தின்போது தங்களின் வாழ்வாதாரமான படகுகளை மீட்புப் பணிகளுக்காகக் கொடுத்தனர். படகுகளோடு தங்களது உடல் உழைப்பையும்அளித்து அனைவரையும் நெகிழ வைத்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:08 pm

வழிதவறிய சிறார்கள் 434 பேரை மீட்ட ரேகா

கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள் என வழிதவறித் தடுமாறும் குழந்தைகளை மீட்டெடுப்பதையே தனது முதல் பணியாகக் கொண்டிருக்கிறார் ரேகா மிஸ்ரா. மும்பையைச் சேர்ந்த இவர் ஆர்பிஎப்பில் பணியாற்றுகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல இதுவரை 434 பேரை மீட்டிருக்கிறார் ரேகா. இதில் 45 சிறுமிகளும் அடக்கம்.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் 7lEgGYznQxKJUmkITmdH+rekhajpg

குழந்தைகளின் வாழ்க்கை நொடியில் தடம் மாறும் அபாயத்துக்கு மத்தியில் அவர்களை மீட்டு, வழிகாட்டும் ரேகா, குரு மட்டுமல்ல, தாயும்கூட!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:09 pm

கஜா புயலால் கையேந்திய டெல்டா: நம்பிக்கை கொடுத்த முகங்கள்

ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்களை ஒருவேளை சோற்றுக்காகக் கையேந்த வைத்தது 'கஜா' புயல். வீடு, வாசல், தோட்டம், கால்நடைகள், மரங்கள் என அனைத்தையுமே இழந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி நின்றனர் அம்மக்கள். தன்னார்வலர்கள் பலர் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இணைந்து அரசு செய்ய வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்தனர். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையும் அளித்தனர்.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் OefbmlOpSWmLjr2aHiiU+gaja-relief-4jpgjpg
குறிப்பாக ந.வசந்தகுமார், 'லவ் குரு' ராஜவேல், இனியன், ஆன்மன், சரவணன், பிரேமா ரேவதி, சிவகுரு நாதன், ஷேக் முக்தார், ஷாஜகான், ஓவியர் நட்ராஜ், மணிமாறன், கார்த்திக் புகழேந்தி உள்ளிட்டோர் தங்களின் வீடு மறந்து, உணவு துறந்தனர். அவர்கள் செய்த அளப்பரிய சேவையால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:10 pm

கேன்சர் விவசாயி- 450 ஏக்கர் பருத்தியை 5 மணிநேரத்தில் அறுவடை செய்த அக்கம்பக்கத்தினர்

கிரெக் பிஷப் என்ற விவசாயி எல்லோருக்கும் கொடுத்தே பழக்கப்பட்டவர். மற்றவர்களிடம் உதவி கேட்டே அறியாதவர். கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கீமியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புசக்தி குறைந்ததால், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் உத்தரவிட, செய்வதறியாமல் அமர்ந்தார் பிஷப்.

அவரின் 450 ஏக்கர்களில் விதைக்கப்பட்டிருந்த பருத்தி, விளைந்து அறுவடைக்காகக் காத்திருந்தது. செய்தி அறிந்த அக்கம்பக்கத்தினர் கூடினர். நன்றி மறக்காத அவர்கள் ஐந்தே மணி நேரத்தில் அறுவடையை முடித்துக் கொடுத்தனர். வழக்கமாக வாரக்கணக்கில் ஆகும் அவரின் அறுவடைக் காலம், ஒற்றை நாளில் தீர்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:11 pm

முதுகையே படிக்கல்லாக்கிய ஜெய்சல்

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. கேரளா பெரும் துயரத்துக்கு ஆளானது. இதையடுத்து அரசுடன் இணைந்து பொதுமக்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் SEnHXsd7TvWEtOwmqc9i+jeysaljpg

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்கும்போது, சிலர் படகில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது ஜெய்சல் என்னும் மீனவர், தண்ணீரில் குனிந்தார். தனது முதுகையே படிக்கல்லாக மாற்றியவர், அதில் பெண்கள் ஏறிச் செல்ல உதவினார். எதையும் யோசிக்காமல் ஜெய்சல் இயல்பாகவே மேற்கொண்ட இந்தச் செயல்,சமூக ஊடகங்களில் வைரலானது. பார்த்தோரின் பாராட்டை அள்ளியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:13 pm

ஏழைகளின் இதயம் காக்கும் மருத்துவர் மாரியப்பன்

விருதுநகர், இடையங்குளத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, சிரமத்துக்கிடையில் மருத்துவம் படித்தவர் மாரியப்பன். தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் MN2YeLwSKypVw7DQl2LS+mariappanjpg
தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார் இந்த மனிதநேய மருத்துவர் மாரியப்பன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:14 pm

மதத்தை மீறிய மனிதம்: இந்து நண்பருக்காக மொட்டை அடித்து மதச் சடங்கு செய்த இஸ்லாமியர்

மாறி வரும் காலத்தில் பெற்ற தாய், தகப்பனுக்கே சிலர் இறுதிச் சடங்குகளைச் செய்வதில்லை. ஆனால் உடன் பணிபுரிந்த நண்பர் சஞ்சன் குமார் பிஸ்வாஸின் இறப்புக்காக தலைமுடியை மழித்து மதச் சடங்குகளை மேற்கொண்டார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் அஷ்ஃபக் அகமது.

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் OBlyvNOLSZWiTvUgz2Sq+asfaqpng
பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, மதத்தின் காரணமாகத் தான் புறக்கணிக்கப்பட்டதாகவும், அப்போது சஞ்சனே தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அகமது நினைவுகூர்ந்தார். நன்றி மறக்காத அவர், சஞ்சன் இறந்தபிறகு தனது மனைவி, மகனுடன் 11 நாள் துக்கம் அனுசரித்துள்ளார். அத்துடன் நிற்காமல் மொட்டை அடித்து, பூசாரியை அழைத்து வந்து நண்பனுக்காக இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:18 pm
துப்பாக்கிச் சூடு, கருணாநிதி மறைவு, 'கஜா' பேரிடர்: விடைகொடுக்கும் 2018
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:34 pm

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் IJczxJ6JRm7Ia1m1V2pq+finaljpg

மகிழ்ச்சி, சோகம், போராட்டங்கள், கைதுகள், இழப்பு என பல்வேறு கலவைகளுடன் 2018 ஆம் ஆண்டு நம்மிடம் இருந்து விடை பெறுகிறது இன்னும் சில நாட்களில்...

தமிழகத்தைப் பொறுத்தவரை 'கஜா' பேரிடர், கருணாநிதி மறைவு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை பெருஞ்சோக சம்பவங்களாக பல்லாண்டுகளுக்கு நிலைக்கும் என்றாலும், தமிழக மக்கள் தளர்வின்றி நம்பிக்கையுடன் இந்தாண்டும் நடைபோட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழக மக்களின் மனதில் இந்தாண்டு மட்டுமல்லாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய சம்பவங்களை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:36 pm

குரங்கணியிலிருந்து பாடம் கற்றோமா?

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் VkKYGf8TOy39yJH30cnm+download-4jpg

தமிழகத்தில் காட்டுத்தீயின் கோரத்தை பெருஞ்சோக சம்பவமாக உணர்த்தியது குரங்கணி காட்டுத்தீ விபத்து. மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் தேனி மாவட்டத்திலுள்ள குரங்கணி மலைப்பகுதிக்கு பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றபோது அங்கு காட்டுத்தீ ஏற்பட்டத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதியில் மலையேற்றம் போன்றவற்றை மேற்கொள்வது மனிதர்களுக்கும் அதே சமயத்தில் சூழலுக்கும் எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பது குறித்த பல படிப்பினைகளை இச்சம்பவம் நமக்கு விட்டுச் சென்றது எனலாம்.

அதேபோல், வனத்துறை இம்மாதிரியான விஷயங்களில் வகுத்துள்ள விதிமுறைகளை கவனமாக கடைபிடிக்கிறார்களா என்ற கேள்வியையும் குரங்கணி தீ விபத்து எழுப்பியது. பல மாதங்கள் கழித்து குரங்கணியில் மலையேற்றம் செல்வதற்கு தமிழக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இச்சம்பவத்திலிருந்து நாம் ஏதேனும் கற்றுக்கொண்டோமா என்ற சந்தேகத்தை நம்மிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:37 pm

மோடியே திரும்பிப்போ' போராட்டம்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Spv43ioRrWfySXdCA9p0+gobackmodijpg

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வு, 2018 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது எனலாம். இந்த ஆண்டை மிக முக்கியமான போராட்டங்களின் ஆண்டு என்றே கூறலாம். அதில் தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரி நீருக்காக நடந்த உரிமைப் போராட்டம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க  வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில் ராணுவ தளவாடம் குறித்த நிகழ்ச்சி ஒன்றுக்காக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக 'Go Back Modi', 'மோடியே திரும்பிப் போ' என்ற போராட்டத்தை திமுக முன்னெடுத்தது. மோடி தமிழகம் வந்த நாளன்று, எங்கெங்கு பார்த்தாலும் கருப்புக் கொடிகள், கருப்பு பலூன்கள், கருப்பு உடையணிந்து எதிர்ப்பு என கருப்பாகவே தமிழகம் காட்சியளித்தது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் கருப்பு உடை அணிந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும், பிரதமர் மோடி சாலை மார்க்கமாகச் சென்றபோது ஐஐடி மாணவர்கள் சிலர் அவருக்கு எதிர்ப்பு முழக்கமிட்டனர். திமுக அறிவித்த போராட்டமாக இருந்தாலும், மக்கள் ஈடுபாட்டின் காரணமாக, பிரதமர் மோடிக்கு எதிரான இந்தப் போராட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இதைத் தவிர்த்து காவிரிக்காக ஐபிஎல் போட்டியின்போது ஸ்டேடியத்தில் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சியினரும் இளைஞரும் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு காட்டியது என பல வித்தியாசமான போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15319
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum