ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by ayyasamy ram Today at 12:28 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

Admins Online

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Page 2 of 2 Previous  1, 2

Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:01 pm

First topic message reminder :

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 PeFZUxpwTcKYLpmjyHbM+collagejpg

நான், எனது, எனக்கு என்று சுருங்கிவிட்ட உலகில், இன்றும் உள்ளம் நெகிழச் செய்யும் நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அப்படி நம்மைச் சிலிர்க்க வைத்து, சிலாகிக்கவும் வைத்து, கவனம் ஈர்த்த சில நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக....

'ஐபிஎஸ்' மகளுக்கு பெருமையுடன் 'சல்யூட்' அடித்த காவல்துறை துணை ஆணையர்

காவல்துறையில் பலர் உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து அடித்தே பழக்கப்பட்டுப் போயிருப்பர். ஆனால் ஹைதராபாத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வர சர்மா, தன் பணியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு சல்யூட் அடித்தபோது பெருமைப்பட்டார்

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:48 pm

டோல்கேட்' வேல்முருகன்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 HtSSdgiSz2mCy4xAn1UP+download-10jpg
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்களில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியது முக்கியமான போராட்டமாகக் கருதப்படுகிறது. இந்தப் போராட்டம் மத்திய அரசை நேரடியாக கேள்வி கேட்பது போன்று அமைந்தது. இதனால், வேல்முருகன் உள்ளிட்டோர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இது வன்முறைச் சம்பவம் அல்ல எனவும், தமிழக வாழ்வுரிமைக்காக மத்திய அரசை நோக்கி எதிர்கேள்வி கேட்கும் வடிவம் எனவும் அச்சமயத்தில் வேல்முருகன் தெரிவித்திருந்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:51 pm

கல்வித்துறையில் கரும்புள்ளி

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 VCzZVs7fSdKhGm7HgqGr+download-5jpg

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அம்மாணவிகளிடம் அவர் பேசிய ஆடியோ வெளியானது, இந்தாண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம். பேராசிரியர் ஒருவரே மாணவிகளைத் தவறான பாதைக்குத் தூண்டுவது கல்வித்துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளதாகவும், இந்த விவகாரம் நிர்மலா தேவியுடன் முடித்துவிட்டு உயர்நிலை அதிகாரிகளையும், அரசியல் அதிகாரம் கொண்டவர்களையும் தப்பிக்க வைக்க சூழ்ச்சி நடப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது சிறையில் உள்ள நிர்மலாதேவி, தன்னைக் கொலை செய்ய சூழ்ச்சி நடப்பதாக வாக்குமூலம் அளித்ததையடுத்து இந்த விவகாரம் புதிய திருப்பத்தை அடைந்திருக்கிறது. அடுத்த ஆண்டிலும் இந்த வழக்கில் பல திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:52 pm

சமூக நீதியை நோக்கி...

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Ct1XyozTBGxEMDvmIvoX+periyarjpgjpgjpg

கோயில் கருவறையில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை அகற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியார் இறுதியில் அது நிறைவேறும் முன்பே மறைந்தார். அதனால் தான், பல்வேறு சட்ட மற்றும் நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி 2006 ஆம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான தனிச்சட்டத்தை இயற்றிய கருணாநிதி, பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்குவதற்கான நடவடிக்கை தான் இது எனக் கூறினார்.

சட்டம் இயற்றிய பிறகும் பிராமணரல்லாத ஒருவரை அர்ச்சகராக்க முடியாமல் சிக்கல்கள் நீண்டுகொண்டே இருந்தன. சட்டம் இயற்றி 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் பிராமணரல்லாத ஒருவர் இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். சமய நம்பிக்கை கொண்டவரான மாரிச்சாமி என்பவர்தான் தள்ளாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.இது சமூக நீதிக்கான மிக முக்கியமான நகர்வு எனினும், ஆகமம் உள்ள பெரிய கோயில்களில் பிராமணரல்லாத ஒருவர் இன்னும் அர்ச்சகராக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:54 pm

பலியான மனித உயிர்களும், மனித உரிமைகளும்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 H0BOEawqTwWNmBaScMVx+download-3jpg

தங்கள் வாழ்விடத்தின் சுற்றுச்சூழலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, யாரும் நினைத்திருக்க மாட்டர்கள், வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் நிலைத்திருக்கக்கூடிய சம்பவம் ஒன்று அப்போது நிகழும் என்று. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, தடியடி ஆகியவற்றால் பள்ளி மாணவி ஸ்னோலின் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதனை மிகப்பெரும் அரச பயங்கரவாதம் என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதன்பிறகு அரசாணை இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடினாலும், இதுதொடர்பான வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்ற உத்தரவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் மாதத்தில் வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறந்தள்ளியதாலேயே, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:55 pm

"நான்தான்பா ரஜினிகாந்த்":திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 QuaromJCTuG9Ore4Y90U+download-6jpg

2017, டிசம்பர் 31 ஆம் தேதி தான் அரசியலுக்குள் நுழைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்ததிலிருந்து அவர் ஊடகங்களிடம் பேசும் கருத்துகளும், ட்வீட்டுகளும் விவாதப் பொருளாகின. காவிரி போராட்டத்தின்போது, காவலர் ஒருவர் தாக்கப்படுவதாக தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த அவர், காவலர்கள் மீதான இத்தகைய நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்தார். இதற்கு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மக்களை சுட்டதும் காவலர்கள் தான் என்று நெட்டிசன்கள் பதிலடி தந்தனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை ரஜினி நேரில் சென்று பார்த்தபோது, அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் "யார் நீங்கள்?" என கேள்வி கேட்டதும், "நான்தான்பா ரஜினிகாந்த்" என அவர் பதில் சொன்னதும் கேலியானது. இதுதவிர ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை "எந்த ஏழு பேர்?" என கேட்டதும் விமர்சிக்கப்பட்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:57 pm

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 2zYXHxOHQCWKj61pRv8W+imagesjpg
சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அம்மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல விவசாயிகள் நில அளவீடு செய்ய வரும் அதிகாரிகளிடம் அழும் காட்சி, போராடுவது, தற்கொலை முயற்சி செய்வது, அதிகாரிகள் காலில் விழுந்து அழுவது என, தங்களின் நில உரிமைக்காக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர். திட்டத்திற்கு எதிராகப் பேசுபவர்களும், பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்திப்பவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த திட்டத்திற்கான அவசியம் என்ன என பல கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பினர். அதன்பின்பு, இதுதொடர்பான வழக்கில் இத்திட்டத்திற்கு நிலம் அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 6:58 pm

கருணாநிதி மறைவு

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 KPwhNsj6TKGX49JYBA4N+download-7jpg

திமுக தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி வயது மூப்பின் காரணமாக, தனது 94-வது வயதில் மறைவெய்தினார். 'என் பிறப்பே போராட்டம் தான்' என்று சொன்ன கருணாநிதி, இறந்த பின்பு அவருக்கான இடமான மெரினா கடற்கரையையும் சட்டப் போராட்டம் மூலமாகவே பெற்றார் என்பதற்கு தமிழகமே சாட்சி. தன் தலைவனான அண்ணாவின் நினைவிடம் அருகிலேயே கருணாநிதி இடம் பிடித்தது அவரைப் போன்றே தனி வரலாறாகியுள்ளது. திராவிடம், சமூக நீதி, மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவம் குறித்து தமிழகத்தில் இளைஞர்களிடையே கருத்துப் பரிமாறல்களும், மீள் வாசிப்பும் கருணாநிதியின் மறைவை ஒட்டி இன்றளவும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:01 pm

பெரியார் சிலை அவமதிப்பு

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 ZRJmmEB4SfaEvloEejjh+download-6jpg(1)

பெரியார் குறித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பெரியாரின் சிலையை அகற்ற வேண்டும் என ட்வீட் செய்தது, பின்னர் அதனை தன்னுடைய 'அட்மின்' தான் பதிவிட்டார் என்று கூறி தன் கருத்திலிருந்து பின் வாங்கியது இணையத்தில் பேசுபொருளானது. எனினும், பெரியார் சிலையை அவமதிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து கருத்துகள் கூறிவந்த நிலையில், பெரியாரின் பிறந்த நாளன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் பாஜக நிர்வாகி ஒருவர் காலணியை வீசியது தமிழகம் முழுவது எதிர்ப்பு அலைகளை வீசியது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:02 pm

அமைதி இழந்த தமிழிசை சவுந்தரராஜன்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 PazrAl7DRTaWDi334R3B+download-8jpg

தூத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோஃபியா என்பவர் 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக' என முழக்கமிட்டார். இதனால் கோபமடைந்த தமிழிசை, அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "நானும் சொல்கிறேன் பாசிச பாஜக ஒழிக" என ட்வீட் செய்தார். இதையடுத்து ட்விட்டரில் 'பாசிச பாஜக ஒழிக' என்பது டிரெண்ட் ஆனது. இச்சம்பவத்தால் தமிழிசையின் நடவடிக்கையை பலரும் விமர்சித்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:03 pm

விடுதலைக்காகக் காத்திருக்கும் அந்த 7 பேர்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 ZdEyCeQSGFpVS0uNcwyh+download-9jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், நளினி ஆகியோரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என பலகட்ட சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு தான் தீர்ப்பளித்தது. செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி இதனை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடாததால் அவர்களது விடுதலை தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. ஆளுநர் அரசியல் சட்டத்திற்கே எதிராக செயல்படுவதாக, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:05 pm

டெல்டாவை சிதைத்த 'கஜா' புயல்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 8nTCwOyS0KDgxPYgrZym+images-1jpg

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் ஆண்டின் இறுதியில் ஏதேனும் ஒரு 'இயற்கை' பேரிடரில் சிக்கிக்கொள்கிறது. 2015 இல் சென்னை வெள்ளம், 2016 இல் வர்தா புயல் பாதித்த நிலையில் இந்தாண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ’கஜா’ புயல் டெல்டாவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டது. வீடுகள் சேதம், தென்னை உள்ளிட்ட விவசாயம் நாசம், போக்குவரத்து தடை, மின் தடை என, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. அம்மக்களின் பல்லாண்டு கால உழைப்பையும், வருங்கால வாழ்வாதாரத்தையும் 'கஜா' புயல் அடியோடு எடுத்துக்கொண்டு போய்விட்டது.

தமிழக அரசு சரிவர நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை, பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை என குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த பேரிடரில் இருந்தும் மக்கள் மீள்வதில் தன்னார்வலர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:07 pm

தொடரும் கைதுகள்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 LicceIORYah6etxBkgt4+30chrgnthirumurugan-gandhijpg

அரசின் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும், கருத்து சொல்பவர்களையும் கைது செய்யும் நடவடிக்கை இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது எனலாம். தமிழக அரசு அடக்குமுறையை ஏவி மக்களின் குரலை நசுக்குகிறது என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஐ.நா.வில் பேசியதற்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளைச் சந்தித்ததற்காக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, ஆளுநர் பன்வாரிலால் குறித்த கட்டுரைக்காக 'நக்கீரன்' ஆசிரியர் கோபால் என தமிழக காவல்துறையால் கைதானவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் ஒருநாள் முதல் மாதக்கணக்கில் சிறையில் இருந்தனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:08 pm

தலைமை ஏற்ற ஸ்டாலின்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Zb5i1uLlQUqrG47pc1wE+download-11jpg

கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். மாநில அரசையும் மத்திய அரசையும் அகற்ற வேண்டும் என, தான் தலைவரான சமயத்திலிருந்து குரல் எழுப்பி வருகிறார். கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர் அமித் ஷாவை அழைத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. அமித் ஷா கலந்துகொள்ளாத நிலையில், நிதின் கட்கரி கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியிலும் பாஜகவை எதிர்த்து ஸ்டாலின் பேசினார். அதுமட்டுமல்லாமல், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் கூட்டணியை அமைக்கத் திட்டமிடும் மாநிலத் தலைவர்களில் ஸ்டாலின் முதன்மை வகிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில், ராகுல் காந்தியை தலைமையேற்க அழைப்பு விடுத்ததன் மூலம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முதன்முதலாக முன்மொழிந்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 24, 2018 7:09 pm

சர்ச்சைகளுக்கு குறை வைக்காத தமிழக பாஜக தலைவர்கள்:

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 SI0KmY0JQcug5nGY2tCV+TamilNews483512520791jpg
ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், தமிழிசை சவுந்தரராஜன் என தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பல சர்ச்சைகளில் சிக்கினர். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த எஸ்.வி.சேகரின் ட்வீட்டுக்கு அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. ஹெச்.ராஜா பெரியார் குறித்த ட்வீட்டுகளுக்காகவும், தமிழிசை சவுந்தரராஜன் சோஃபியா விவகாரத்திற்காகவும், எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த ட்வீட்டுக்காகவும் சர்ச்சையைச் சந்தித்தனர். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்து கேள்வியெழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாஜக நிர்வாகிகள் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின்னர் தமிழிசை அவரது வீட்டுக்கு சென்று 'நட்பு' பாராட்டினார். இந்த ஆண்டு பாஜகவினர் எழுப்பிய சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் குறைவே இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர் - Page 2 Empty Re: திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum