ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:59 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:51 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

Go down

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை Empty 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

Post by ayyasamy ram on Sun Apr 28, 2019 7:54 pm

சென்னை:
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால் போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பெலுகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் நீதிமன்றம், சபரிநாதனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து 2018 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிநாதன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை யாரும் கடத்தவில்லை என்று பிறழ் சாட்சியம் அளித்ததை கருத்தில் கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

எனவே, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சபரிநாதன் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, வழக்கில் சபரிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல்துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது:


போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு அரசு தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் மண்டல அளவிலும், பள்ளிகளிலும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

காவல் துறையில் 523 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 டிஎஸ்பிக்கள், 2232 இன்ஸ்பெக்டர்கள், 15,475 சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பயிற்சி பெற்றுள்ளனர்.

திரைப்படங்கள், சுவர் விளம்பரங்கள் மூலம் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தை விளம்பரப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், அதுதொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த குற்றங்களை குறைப்பதற்கு அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும்.

வளர் இளம் பருவ (டீன் ஏஜ்) உறவு பற்றி எடுக்கப்படும் திரைப்படங்களை திரையிடும் போது, அதில் போக்சோ சட்டம் குறித்த எச்சரிக்கையை இடம்பெற செய்ய வேண்டும். 18 வயதுக்கு கீழான ஆண்-பெண் காதல் திருமணம் செய்யும் போது, 7 ஆண்டு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

போக்சோ சட்டத்தில் 18 வயது வரை சிறுமிகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வயதை 16 வயதாக குறைக்க வேண்டும். 16 வயதை தாண்டியவர்கள் விருப்பப்பட்டு பாலுறவு கொண்டால், போக்சோ சட்டத்தில் குற்றமாக கருதாமல் விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
குற்றத்தின் தன்மை குறித்து அறியாத வயதில் கவர்ச்சி காரணமாக இதுபோன்ற குற்றங்களில் இளம் வயதினர் ஈடுபடுகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படாத ஆபாச காட்சிகள் இணைய தளங்களில் கிடைக்கின்றன.

இந்த படங்களும், வீடியோக்களும் கையில் வைத்திருக்கும் செல்போனில் எளிதாக கிடைக்கின்றன. இதுபோன்ற இணைய தளங்களைப் பார்க்கும் இளம் வயதினர் தவறான பாதைக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பல திரைப்படங்களில் பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இவை பெண்களையும், பெண் குழந்தைகளையும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழலை ஏற்படுத்திவிடுகின்றன.

இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். பாலியல் குற்றங்கள், போக்ேசா சட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்டனை, அதனால் வாழ்வு சீரழிவது போன்றவை குறித்து இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின் பிணியாக மாறியுள்ள போக்சோ குற்றங்கள் பெருகுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை Empty Re: 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 29, 2019 11:22 am

Code:

குற்றத்தின் தன்மை குறித்து அறியாத வயதில் கவர்ச்சி காரணமாக இதுபோன்ற குற்றங்களில் இளம் வயதினர் ஈடுபடுகிறார்கள். தற்போது 24 மணி நேரமும் தணிக்கை செய்யப்படாத ஆபாச காட்சிகள் இணைய தளங்களில் கிடைக்கின்றன.

இந்த படங்களும், வீடியோக்களும் கையில் வைத்திருக்கும் செல்போனில் எளிதாக கிடைக்கின்றன. இதுபோன்ற இணைய தளங்களைப் பார்க்கும் இளம் வயதினர் தவறான பாதைக்கு மாறும் நிலை உருவாகியுள்ளது.


நூறு சதவீதம் இந்த டிஜிடல் உலகமே தற்போது நடக்கும்
பாலியல் குற்றங்களுக்கு காரணம்.
முன்பு இலைமறை காயாக இருந்த விசயம்
தற்போது யாரும் எப்போது வேண்டுமானாலும்
எளிதாக பார்க்க கூடியதாக மாறி விட்டது.
இதை பார்த்து பார்த்து சீரழிபவர்கள் கணக்கில்
அடங்காது. இது இருபாலருக்கும் பொறுந்தும்.
தற்போதய செல்போன் யுகம் பல சீர்கேட்டிற்கு
காரணம் என்பதை மறுப்பதிற்கில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை Empty Re: 16 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பத்துடன் உறவு கொண்டால் போக்சோ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க சட்டத்திருத்தம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum