ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Today at 4:30 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by ayyasamy ram Today at 4:29 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Today at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Today at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Today at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Today at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Today at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:15 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by ayyasamy ram Today at 4:13 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

Admins Online

சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்

Go down

சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல் Empty சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்

Post by ayyasamy ram on Thu May 02, 2019 2:49 pm

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஜருகு கிராமத்தை சேர்ந்த
பாலு மகன் முனுசாமி (வயது 25). டிப்ளமோ மெக்கானிக்கல்
என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கோவை சங்கோதி பாளையத்தில்
உள்ள தனியார் லாரி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்
வேலை பார்த்தார்.

அடிக்கடி கம்பெனி வேலையாக கொல்கத்தா செல்வது வழக்கம்.

கடந்த வாரம் கொல்கத்தா சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு
வந்தார். அங்கு விருந்தாளியாக வந்து இருந்த ஈரோடு கருங்கல்
பாளையத்தை சேர்ந்த தனது அக்காள் மகளை மோட்டார் சைக்கிளில்
அழைத்துக்கொண்டு ஒகேனக்கல் சென்றார்.

ஒகேனக்கல்லில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
பண்ணப்பட்டியில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர்கள் 2 பேரும் பேசிக்கொண்டு
இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த சிறுமியை கையை பிடித்து இழுத்து
பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதை முனுசாமி தடுத்த
போது அவரை நாட்டு துப்பாக்கியால் அந்த நபர் சரமாரியாக சுட்டார்.

இதில் மார்பு, இடுப்பு உள்ளிட்ட 4 இடங்களில் குண்டு பாய்ந்து சம்பவ
இடத்திலேயே முனுசாமி இறந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவத்தை கண்டு
அதிர்ச்சியடைந்த சிறுமி அலறியபடியே சாலையை நோக்கி ஓடிவந்தார்.
அவரது சத்தத்தை கேட்டு அங்கு வந்த சுற்றுலா பயணிகள் காட்டுக்குள்
சென்று பார்த்தனர். அப்போது முனுசாமி சுடப்பட்டு இறந்து கிடந்ததை
கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்.

சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன்,
பென்னாகரம் டி.எஸ்.பி. மேகலா, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபானி
மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். சுட்டுக்
கொல்லப்பட்ட முனுசாமியின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு
மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முனுசாமியை சுட்டுக் கொன்றது யார்? என்று முதலில் அடையாளம்
தெரியாமல் இருந்தது. கொலை நடந்த அதிர்ச்சியில் இருந்த சிறுமி
4 பேர் கும்பல் தனது மாமாவை சுட்டுக்கொன்றதாக முதலில் கூறினார்.

பின்னர் அவரிடம் விசாரித்தபோது வேட்டைக்காரன் தோற்றம் கொண்ட
ஒருவர் மட்டுமே சுட்டதாக கூறினார். அவர் கூறிய அடையாளங்களை
வைத்து கொலைகாரன் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கொலையாளி பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வமாக
இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவரை தேடிச்சென்ற
போது அவர் வீட்டில் இல்லை. தலைமறைவாகிவிட்டார்.

அவர் வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில்
இன்று காலை போலீசார் 4 குழுவாக ஒகேனக்கல் வனப்பகுதியில்
தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதிரடிப்படை மற்றும் ஆயுதப்
படை போலீசாரும், வனத்துறையினரும் துப்பாக்கியுடன் காட்டுக்குள்
சென்று தேடி வருகிறார்கள்.

அவர் பிடிபட்ட பிறகுதான் அவர் வாலிபர் முனுசாமியை கொன்றாரா?
என்பது முழுமையாக தெரியவரும்.

வாலிபர் முனுசாமியை சுட்டுக்கொன்றதாக கருதப்படும் செல்வம்
ஏற்கனவே வனத்துறை மற்றும் போலீசாரால் தேடப்பட்டு வருபவர்
ஆவார். இவர் காட்டுப் பகுதியில் மான்களை வேட்டையாடி மான்
கறிகளை விற்று வந்தார். மேலும் நாட்டுத் துப்பாக்கிகளை வாங்கி
வேட்டைக்காரர்களுக்கு சப்ளை செய்யும் தொழிலையும் செய்து
வந்தார்.

இவர் பண்ணப்பட்டி மலைப்பகுதியில் வசித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த பகுதியில் 20 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சாய்குமார் தர்மபுரி கலெக்டராக இருந்தபோது
மலைவாழ் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்தார்.

அதில் 10 குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர்ந்து அந்த வீடுகளுக்கு
குடியேறினர். செல்வம் உள்பட சிலர் மட்டும் வீட்டை காலி செய்ய
மறுத்துவிட்டனர். அப்படி காலி செய்ய மறுத்து அங்கேயே வசித்து
வந்த செல்வம் தான் இந்த கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று
போலீசார் கருதுகிறார்கள். அவனை பிடிக்க தனிப்படையும்
அமைக்கப்பட்டு உள்ளது.
-
--------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61947
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum