ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by ayyasamy ram Today at 8:12 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» கரூருக்கு வருவாரா?
by Muthumohamed Yesterday at 11:10 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Yesterday at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» புத்தகம் தேவை
by rravicha Yesterday at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Yesterday at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 2:45 am

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Sun Aug 02, 2020 8:58 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Sun Aug 02, 2020 8:05 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Sun Aug 02, 2020 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Sun Aug 02, 2020 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Sun Aug 02, 2020 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:53 pm

Admins Online

அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்

Go down

அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள் Empty அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்

Post by ayyasamy ram on Fri Jun 07, 2019 2:03 pm

அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள் Sk1
-
வனராஜன் | தினமணி
----------------
இந்தியாவிலேயே முதன்முறையாகச் சென்னையில் பிரத்யேகமான அரிய வகை ஆழ்கடல் மீன் காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈஞ்சம்பாக்கத்திலுள்ள வி.ஜி.பி தங்கக்கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மீன் காட்சியகத்தைப் பார்வையிட பார்வையாளர்களில் ஒருவராக நாமும் சென்றோம். கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் ஏராளமான குட்டீஸ்களைப் பார்க்க முடிந்தது.

மீன் காட்சியகத்தில் பள்ளத்தாக்கு, சதுப்புநிலம், மழைபொழியும்காடு, ஆழ்கடல், கடலோரம் என ஐந்து மண்டலங்களாக பூமிக்கு அடியில் பிரித்து உருவாக்கி இருக்கிறார்கள்.

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட குடுவைகளில் பல அரிய வகைக் கடல் வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றின் நடுவே நின்று புகைப்படம் எடுப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி என்ன ஸ்பெஷலான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. மீன் காட்சியகத்தின் பொறுப்பாளரான கண்ணனிடம் பேசினோம்:

“”வெளிநாடுகளில் உள்ள மீன்காட்சியகத்திற்கு நிகராகச் சர்வதேச அளவில் இந்த மீன் காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறோம். இதனை வடிவமைப்பதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆனது.

இங்கு 90 அரிய வகை மீன்கள் காட்சிப்படுத்தியிருக்கிறோம். இவை இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தென்ஆப்பிரிக்கா, மாலத்தீவு, தாய்லாந்து போன்ற பல நாடுகளில் ஆழ்கடல் பகுதியிலிருந்து இருந்து வரவழைக்கப்பட்டவை.

கடலில் இருந்து பிடித்து வரும் மீன்களை அப்படியே நாம் பார்வையாளர்களுக்குக் காட்சிபடுத்த முடியாது. அதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

முதலில் அவை பிடிக்கப்படும் போது காயம் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கவேண்டும். அவை தனிமைப்படுத்தப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும்.

முறையாக உணவு எடுத்துக் கொள்கிறதா? மற்ற மீன்களுடன் சண்டை போடுகிறதா? கடல்நீர் அல்லாமல் அவற்றிற்கு எந்த வகை தண்ணீர் ஒத்துக்கொள்கிறது. தட்ப வெட்பநிலை போன்றவற்றைக் கண்காணித்து அதன் பிறகு தான் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

குறிப்பாக மீன்களையே உணவாக உண்ணும், வேட்டையாடும் மீன்கள், ஊர்ந்து செல்லும் மீன்கள், தூங்கும் மீன்கள், நீர் மரப்பொந்தில் வாழும் மூரோ வகை பாம்பு மீன்கள், நட்சத்திர மீன்கள், சுராமீன்கள் “நீமோ’ படத்தின் கதாபாத்திரமாக வரும் குட்டி வகை ஆரெஞ்சு மீன்கள், பாறைமீன்கள், லாப்ஸ்டர் மீன்களைப் பார்வையாளர்கள் அதிசயித்துப் பார்த்துச் செல்கிறார்கள்.

மேலும் வெளிநாட்டில் உள்ள மீன் காட்சியகங்களில் இருப்பது போன்றே இங்கும் 70 மீட்டரில் ஆழ்கடல் கண்ணாடிக் கூண்டுப் பகுதி அமைத்துள்ளோம். இதற்குள் 50 இனங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் விடப்பட்டுள்ளன.

இதில் 5 அடி நீளம் கொண்ட சுறா மீன்களே ஹைலைட். நாம் அந்தப் பாதையில் நடந்து செல்லும் போதே நம்முடைய தலையைக் கடிப்பது போல் மீன்கள் வந்து சென்று பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனைப் பராமரிப்பது கடினம் ஆயிற்றே?

நாள்தோறும் இவற்றைக் கண்காணிப்பது அவசியம். உயர் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இருப்பதால் இந்தக் கண்ணாடி தொட்டியிலுள்ள தண்ணீரை மாற்ற வேண்டிய தேவை கிடையாது.

அவை மறுசுழற்சி செய்யப்பட்டு உடனுக்குடன் சுத்தம் செய்யப்படுகிறது. மீன்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அத்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59154
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள் Empty Re: அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்

Post by ayyasamy ram on Fri Jun 07, 2019 2:03 pm

மேலும் இந்த மீன்களுக்கு உணவளிக்கத் தனி நபர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிப் பெற்றவர்கள். அவர்கள் குறிப்பிட்டப் பகுதிக்குள் நீந்திச் சென்று மீன்களுக்கு உணவு வழங்குகிறார்கள்.

இந்த அரிய வகைக் கடல் வாழ் உயிரினங்களை மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கம். ஆனால் அதற்கு ஏற்ப மீன்களுக்கு வாழ்விடம் அமைப்பது மிகவும் முக்கியம். அதிலும் முழுமையாகக் கவனம் செலுத்தியிருக்கிறோம். செயற்கையிலும் இயற்கையைக் கொண்டு வந்து இருக்கிறோம்” என்றார்.

வி.ஜி.பி. நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரான வி.ஜி.பி.ரவிதாûஸ சந்தித்தபோது சொன்னார்:

“”நாங்கள் தீம்பார்க், வாட்டர் பார்க், ஸ்நோ பார்க் வைத்துள்ளோம். பார்வையாளர்களாக வருபவர்கள் அடுத்து இங்கு என்ன வித்தியாசமாக உள்ளது என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களுக்காக ஏதாவது ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சில ஆண்டுகளாக உருவானது. மீன் காட்சியகம் உருவாக்கலாம் என்ற முடிவானதும் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட மீன் காட்சியகத்தைப் பார்வையிட்டு வந்தோம்.

வெளிநாட்டில் இருந்து வந்த கம்பெனிகள் இதனை வடிவமைக்க ஐடியா கொடுத்தார்கள். 40 கட்டட ஒப்பந்தக்காரகள் சேர்ந்து இதை உருவாக்கி கொடுத்தார்கள். நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் காட்சியகத்தை உருவாக்குவதற்கு 115 கோடி ரூபாய் செலவானது.

தற்போது 70 சதவீதம் அரிய வகை மீன்கள் உள்ளன. இன்னும் சில மாதங்களில் இதனுடைய எண்ணிக்கை படிபடியாக உயர்த்தப்படும். வீட்டில் மீன் தொட்டி வைத்து பராமரிக்காத வீடுகளே இன்று கிடையாது என்று சொல்லலாம். மக்கள் அந்தளவு மீன் பிரியர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தக் காட்சியகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் இது போன்ற மீன்காட்சியகத்தைப் பார்க்க முடியும். தற்போது சென்னையிலேயே காணலாம் என்பது பார்வையாளர்களுக்கு ஸ்பெஷல் வசதி தான். நாள்தோறும் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து ஐந்தாயிரம் பேர் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிவிடுகிறது. சில நேரங்களில் பார்வையாளர்களைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொல்கிறோம். அதன் பின்னரே உள்ளே அனுப்புகிறோம்.

இது மீன்களை பார்வையிடுவதற்கான இடம் மட்டுமல்ல படிக்கும் மாணவர்கள் மீன்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு ஸ்பெஷல் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

ன்கள் பற்றி குறும்படங்கள் திரையிட இருக்கிறோம். சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் இன்னும் பல திட்டங்கள் இங்குச் செயல்படுத்தப்பட உள்ளன” என்றார்.

மீன் காட்சியகத்தைப் பார்வையிட வந்த கோவையைச் சேர்ந்த சீதாராமன் குடும்பத்தாரிடம் பேசினோம்.

“”இது போன்ற அரிய வகை மீன் காட்சியகத்தை வெளிநாடுகளுக்குச் சென்றால் மட்டுமே பார்க்கலாம். அது தற்போது சென்னைக்கு வந்துவிட்டது என்பது கூடுதல் ஸ்பெஷல் தான்.

பெரியவர்களை விடக் குழந்தைகள் இந்த மீன்களைப் பார்வையிடவும் புகைப்படம் எடுக்கவும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆழ்கடல் கண்ணாடி கூண்டுப் பகுதி பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ளது. கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்பட்டுள்ள மீன்களின் விபரம் பற்றி ஒரு சில இடத்தில் மட்டுமே வைத்து இருக்கிறார்கள்.

இது போன்று அனைதுஇடங்களிலும் வைத்தால் மீன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றவர், நிச்சயம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய இடம் இந்த மீன் காட்சியகம்” என்றார். பேட்டி : வனராஜன்

படங்கள் : அகிலா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59154
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள் Empty Re: அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jun 08, 2019 10:33 am

இங்கு நிறைய பார்வையாளர்கள் வரக்கூடும்.
சென்னைக்கு அருகில் ஒரு அற்புதம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14633
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள் Empty Re: அசர வைக்கும் ஆழ்கடல் அற்புதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum