புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_m10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10 
21 Posts - 66%
heezulia
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_m10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_m10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10 
63 Posts - 64%
heezulia
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_m10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_m10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_m10இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 09, 2019 5:37 pm

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்... பாத்து பழகுங்க
......................(பகுதி)
அனைவரும் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அனைவராலும் அது முடிவதில்லை. சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் கடுமையாக நடந்து கொள்பவராகவும், கிண்டல் செய்பவர்களாகவும், வார்த்தைகளால் காயப்படுத்துபராகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மனது காயப்படுமே என்று தங்கள் விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.

இவ்வாறு நடந்து கொள்ள ஒரு தனி ஆளுமை தேவை. மற்றவர்களின் மனது காயப்படுமே என்று நீங்கள் விலக்கு  இருப்பவராக இருந்தால் உங்களுக்கு நிச்சயமாக இந்த ஆளுமை கிடையாது. இப்படி நடந்து கொள்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், அதேசமயம் முட்டாள்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள். மற்றவரின் மனது காயப்படுவதை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த குணம் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள், ஆனால் அவர்கள் உங்களின் உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள். மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும். இவர்கள் தங்களையும், மற்றவர்களையும் கடுமையாக விமர்சிப்பதால் இவர்கள் அனைவர்க்கும் கடுமையானவர்களாகவும், கசப்பானவர்களாகவும் தெரிவார்கள். கடுமையாக நடந்து கொள்வதும், கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதும் இவர்களிடம் இருக்கும் கெட்ட குணங்களாகும்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2019 5:41 pm

இந்த ராசிக்காரங்க துளியும் யோசிக்காமல் மற்றவர்களின் மனதை காயப்படுத்திவிடுவார்கள்                                                        1571444738
இரண்டு தடவை பதிவாகி விட்டது என நினைக்கிறேன்.
ஆனாலும் நான் அந்த ராசி கிடையாது.நிம்மதி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 09, 2019 6:09 pm

flooding தான் காரணம் . நான் காரணம் இல்லை.
முழு பதிவு மீதி ராசிகளுடன் பதிவு செய்துள்ளேன். t154204-topic#1301990 பார்க்க
இந்த இரண்டாம் பதிவில் உங்கள் ராசி உள்ளதா என்று
சொல்லவும் சக்தி.

ரமணியன்

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2019 7:49 pm

HTTP web flood நல்லதுதானே.பாதுகாப்பு.

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2019 7:53 pm

ஒவ்வொரு இணைய பக்கத்திலும் ஒவ்வொருவிதமாக இருக்கிறதே!ஊதாரணத்திற்கு...………….

கன்னி.
மிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.

புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.

11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.

துலாம்.
அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.

நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான்.

உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள்.

வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர். 6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும்.

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள்.

ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.

(இணையம்)


avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2019 7:55 pm

இது பெண்களுக்கு………….

மேஷம்
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் குணம் உடையவராய் இருப்பார்கள், ஆனால் இது அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது. நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டியதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு ஓருபோதும் துரோகம் செய்யக்கூடாது. ஏனெனில் பழிவாங்குவதில் இவர்க்ளுக்கு எந்தவித வரைமுறையும் கிடையாது. கொடூரமான மற்றும் இரக்கமற்ற முறையில் தங்கள் எதிரிகளை அவர்கள் அழிக்க முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். ஒருவரின் முகத்தை பார்த்து அவர்களை நம்புவது இவர்களின் வழக்கமல்ல.

கன்னி
மிகவும் கூச்ச சுபாவம் உடைய கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள் ஆனால் அந்த முகமூடி உடையும் அவர்கள் மொத்த தீயசெயல்களின் உருவமாக மாறிவிடுவார்கள். அவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகம் வெளிப்படும். இவர்கள் இரக்கமின்றி செய்யும் சதிச்செயல்களால் ஏற்படும் விளைவுகள் உங்களை யாரையும் குறைவாக மதிப்பிடவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்று பாடத்தை கற்றுத்தரும்.

கடகம்
இந்த ராசியில் பிறந்த பெண்கள் நடமாடும் வெடிகுண்டு போன்றவர்கள். தங்களுக்கு பிடிக்கத்தவர்களை சாய்க்க தாக்க தருணம் அமையும்போது எந்தவித தயக்கமும், இரக்கமும் இன்றி எதிரிகளை சாய்த்துவிடுவார்கள். அதனால்தான் இவர்கள் மிகவும் மர்மமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த தீயகுணத்தை சரிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு பிடித்தாவர்களுக்கு மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்க போடும் சதிதிட்டங்களில் எந்த நியாயமோ, இரக்கமோ இருக்காது, இவர்களின் ஒரே குறிக்கோள் எதிராளியை காயப்படுத்துவதுதான்.

சிம்மம்
இவர்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியோ அல்லது மறைமுகவோ எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யவும் தயங்கமாட்டார்கள். இவர்களின் இந்த குணம் இவர்களை எப்பொழுதும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக காட்டும், ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். தாங்கள் நினைப்பதுதான் சரி என்னும் மனோபாவம் இவர்களிடம் ஏராளமாக இருக்கும். இவர்களின் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு எதிரிதான். சிம்ம ராசி பெண்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள், பின்னர் அதற்கான மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையும், இனிமையான குணமும் கொண்டவர்கள் ஆனால் இதெல்லாம் நீங்கள் அவர்களின் நண்பராக இருக்கும் வரைதான். ஏனெனில் ஒருமுறை அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் அவர்களை போல மோசமான, கொடூரமான எதிரிகள் இருக்கவே வாய்ப்பில்லை. இதையும் மறந்து விடாதீர்கள் இவர்கள் அதீத பொறாமை குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள், எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்.

(நான் சொல்லல, இணையம் சொன்னது)

ஆனாலும் பயமாக இருக்கு.

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 09, 2019 7:57 pm

மற்றப் பதிவில் இருக்கிறது என் ராசி.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 09, 2019 9:22 pm

சக்தி18 wrote:HTTP web flood நல்லதுதானே.பாதுகாப்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1301994

நீங்க சொன்னா சரிதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 09, 2019 9:30 pm

சக்தி18 wrote:மற்றப் பதிவில் இருக்கிறது என் ராசி.
மேற்கோள் செய்த பதிவு: 1301997
அந்த நாலில் ஒருவரா நீங்க?
அதான் ......... புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக