ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Wed Oct 21, 2020 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Wed Oct 21, 2020 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Wed Oct 21, 2020 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Wed Oct 21, 2020 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Wed Oct 21, 2020 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Wed Oct 21, 2020 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Wed Oct 21, 2020 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Wed Oct 21, 2020 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Wed Oct 21, 2020 7:59 pm

Admins Online

முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை

Go down

முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை Empty முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை

Post by ayyasamy ram on Mon Sep 23, 2019 6:01 am

முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை 201909230304254115_First-World-War-Ship-of-Emden-in-Chennai-105-years-of_SECVPF

சென்னை,

முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு
வரை நேச நாடுகளான பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து,
அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான
ஆஸ்திரேலியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய
நாடுகளுக்கும் இடையே நடைபெற்றது.

அப்போது இந்தியா ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதனால்,
முதலாம் உலகப்போரின் தாக்கம் இந்தியாவையும் விட்டு
வைக்கவில்லை. அப்போது, ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய
கம்பெனியை ‘மதரசாப்பட்டினம்’ என்று அழைக்கப்பட்ட
சென்னையில் ஆரம்பித்து இருந்ததால், அதனை சுற்றியே
அவர்களின் வாழ்வாதாரத்தை அமைத்திருந்தனர்.இதனால் ஜெர்மனியின் கோரப் பார்வை சென்னை மீது
திரும்பியது. ஜெர்மனியின் “எஸ்.எம்.எஸ். எம்டன்” என்ற
நவீன போர்க்கப்பலில் 1914-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,
சென்னை நோக்கி வீரர்கள் வந்தனர்.

கேப்டன் வான் முல்லர் தலைமையில், வந்த கப்பலில்,
திருவனந்தபுரத்தை சேர்ந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த
பொறியாளர் செண்பகராமன் என்ற வீரரும் இடம்
பெற்றிருந்தார். ஜெர்மனியின் படையில் அவர் இருந்த
போதும், இங்கிலாந்தின் பிடியில் இருந்து இந்தியாவை
காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தார்.

செப்டம்பர் 22-ந்தேதி இரவு 10 மணி அளவில், சென்னையில்
இருந்து 2 கடல் மைல் தொலைவில் “எம்டன்” கப்பல் நிலை
நிறுத்தப்பட்டது. இதை அறிந்த ஆங்கிலேயர்கள்
(பிரிட்டிஷ்காரர்கள்) மின்சாரத்தை நிறுத்தி நகரையே இருளில்
மூழ்கச் செய்தனர்.

ஆனால் ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த கலங்கரை விளக்கம்
மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

அந்த வெளிச்சத்தை மையமாக வைத்து, ‘எம்டன்’ கப்பலில்
இருந்து பீரங்கிகள் மூலம் 130 முறை குண்டுகள் வீசினர். இதில்
சென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்குகள்
வெடித்து சிதறின. ஒரு குண்டு விழுந்து வெடித்ததில் ஐகோர்ட்டு
சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.

மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே
கிடந்தது. சேதத்தை ஏற்படுத்திவிட்டு ‘எம்டன்’ கப்பல்
சென்னையைவிட்டு ஆழ்கடலுக்கு சென்றது.

ஆங்கிலேயே கடற்படை பின்தொடர்ந்தும், ‘எம்டன்’ கப்பலை
ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயே படைக்கு சிம்ம
சொப்பனமாக விளங்கிய இந்த ‘எம்டன்’ கப்பல் 1914-ம் ஆண்டு
நவம்பர் 9-ந்தேதி ஆஸ்திரேலிய போர் கப்பலால் சிட்னி துறைமுகம்
அருகே சுட்டு வீழ்த்தப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.

சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய பகுதியான
ஐகோர்ட்டு வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.
வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு
அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை
கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசிய இடத்தை காட்டும்
வகையில் ஐகோர்ட்டுக்குள் நீதிபதிகள் செல்லும் வாசல் அருகில்
உள்ள சுற்றுச்சுவரில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டில்,
பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மலர் தூவி மரியாதை
செய்தனர்.

இவர்களுடன் ஐகோர்ட்டு வக்கீல்கள் ஏ.செல்லமுத்து, இரா.சிவசங்கர்,
ஜெ.எப்.பிரகாஷ், ஆர்.லட்சுமிகாந்த் உள்பட பலர் நேற்று மலர் தூவி
மரியாதை செலுத்தினார்கள்.

சென்னையில் “எம்டன்” கப்பல் குண்டு வீசி நேற்றுடன்
105 ஆண்டுகள் நிறைவடைந்தது. ஆனால் சென்னையில் “எம்டன்”
கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் தடயங்கள் எதுவும்
சொல்லும்படி இல்லை. சாதாரண மைல் கல்லைப்போலவே
இதற்கான நினைவு கல்வெட்டு தேடிக் கண்டுபிடிக்கும் நிலையில்தான்
உள்ளது.

எனவே தமிழக அரசு “எம்டன்” கப்பல் குண்டுவீசிய இடத்தை
அடையாளம் காட்டும் வகையில் புதிதாக நினைவிடம் அமைக்க
வேண்டும் என்று வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum