ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by ayyasamy ram Today at 7:34 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by மாணிக்கம் நடேசன் Today at 7:28 am

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

» முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கண்ணன் என்ன சொன்னான் -
by ayyasamy ram Yesterday at 4:38 pm

Admins Online

சற்றே யோசிக்கலாமே

Go down

சற்றே யோசிக்கலாமே Empty சற்றே யோசிக்கலாமே

Post by ayyasamy ram on Sun Nov 03, 2019 12:34 pm

சுமார் பதினான்காயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு
அப்பால் இருந்து தொலைபேசியில்,  'அம்மா’  என்றழைத்த
மகனின் முதல் சொல்லிலேயே,
ஏன்டா, சளி பிடிச்சிருக்கா? சரியாத் தூங்கலையா?
குரல் கம்முது!  என்று கேட்டுப் பதறும் நம் அம்மாக்கள்,
எந்தப் பல்கலைக்கழகத்திலும்  எம்.பி.பி.எஸ் பட்டம்
பெற்றிருக்கவில்லை.

'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு,
மாடில காயிற வத்தலை எடுத்துட்டு வா’  என்று சொன்ன  
பாட்டி  வானிலை அறிவியல் படித்தது இல்லை.

ஆடிப் பட்டம் தேடி விதை  என இன்றைக்கும் சொல்லும்  
வரப்புக் குடியானவன் விவசாயக் கல்லூரிக்குள் மழைக்குக்கூட
ஒதுங்கியது இல்லை.

மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்  
எனப் பாடிய தேரன் சித்தர்  மைக்ரோபயாலஜி தேர்வுகளில்
தேறியது இல்லை.

செந்தட்டிக்கும் ஓடைத் திருப்பிக்கும் கொஞ்சம் உடம்புக்கு
ஆகலை. எங்கேயோ நின்னுட்டு இருக்குங்க புடிச்சிட்டு வாரேன்  
எனச் சொல்லி மேய்ச்சல் நிலத்துக்கு ஓடும் சடையனுக்கு  
60 ஆடுகளில் இரண்டை மட்டும் காணவில்லை என்பதைக்
கண்டுபிடித்து, போதாக் குறைக்கு அதற்கு உடம்பும் சரியில்லை
என்றும் சொல்லும் அறிவாற்றலை, எந்த வெர்ட்னரி
கல்லூரிப் படிப்பும் அவருக்குக் கொடுத்தது இல்லை.

அப்புறம் எப்படி இவர்கள் எல்லாம் இப்படித் துல்லியமாகக்
கணக்கிடுகிறார்கள்?


அப்போது எங்கிருந்து வந்தது இந்த அறிவியல்?
இப்போது எங்கே போனது அந்த அனுபவம்?

ஒவ்வொரு மனிதனும் அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்குக்
கடத்திய காய்ப்பு உவப்பிலாத அனுபவம்தான் அந்த அறிவு.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59355
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சற்றே யோசிக்கலாமே Empty Re: சற்றே யோசிக்கலாமே

Post by ayyasamy ram on Sun Nov 03, 2019 12:37 pm


வள்ளுவன்
  சொல்லும்
மெய்ப்பொருள் காணும் அறிவும்

பாரதி
  சொன்ன
விட்டு விடுதலையாயிருந்த மனமும்
  சில காலமாக ஒட்டு மொத்தமாகக் காணாமல் போனதில்தான் அத்தனை அறிவையும் இழந்து வருகிறோம்.

மம்மி
  எனக்கு
வொயிட் சட்னிதான்
  வேணும்,
க்ரீன் சட்னி
வைக்காதே, சொல்லிட்டேன்’ எனப் பள்ளி செல்லும் குழந்தை உத்தரவிடும் போது,
'எப்போது முதல் ஏசியன் பெயின்ட்டில் சட்னி செய்யத் தொடங்கினார்கள்?’ என்றே மனம் பதறுகிறது.

அந்தக் குழந்தையிடம், 'க்ரீன் சட் னின்னா என்ன தெரியுமா?’
எனக் கேட்டால் நிச்சயம் தெரிந்திருக்காது.

  ஏனென்றால், சொல்லித்தர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேரம் இல்லை.

இந்த மௌனங்களும், அவசரங்களும் தொலைத்தவை தான் அந்த அனுபவப் பாடம்!

  தொலைக்காட்சி விளம்பரங்கள் சொல்லிக் கொடுத்து
புரோட்டின், கலோரி, விட்டமின்  பற்றிய ஞானம்  பெருகிய அளவுக்கு,
'கொள்ளும், கோழிக்கறியும் உடம்புக்குச் சூடு;
எள்ளும், சுரைக் காயும் குளிர்ச்சி.
பலாப் பழம் மாந்தம்.
பச்சைப் பழம் கபம்·
புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்
என்ற வார்த்தைகள் வழக்கொழிந்து போய்விட்டன.

  'அதென்ன சூடு, குளிர்ச்சி?
அப்படி எல்லாம் ஒண்ணும் கிடையாது !
இந்த தெர்மாமீட்டர்ல  உங்க சூடு எங்கேயாவது தெரியுதா?’ என இடைக்கால அறிவியலிடம் தோற்றுவிட்ட  அந்தக் கால அறிவியலின் அடையாளங்களை,  வணிக உலகமும் தன் பங்குக்குச் சிரச்சேதம் செய்துவிட்டது.

விளைவு?

  'லெஃப்ட் ஐப்ரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட நாளைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட்’  எனும் அம்மா,
  'சாப்பிடவே மாட்டேங்கிறான்ல, அதான் 3,500 ரூபாய்க்கு இந்த எனர்ஜி டிரிங்க்’  என்று அக்கறை காட்டும் அப்பா.

  'ஃபியூஸ் போயிருச்சா? எனக்கு என்ன தெரியும்? போய் எலக்ட்ரீஷியனைக் கூப்பிடுங்க!’  என எரிந்துவிழும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்த அண்ணன்  போன்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

  'வயிறு உப்புசமா இருக்கா?
  மாந்தமாயிருக்கும் கொஞ்சம் ஓமத்தை வாணலில லேசாக் கறுக்கி, நாலு டம்ளர் தண்ணி விட்டுக் கொதிக்க வெச்சு ராத்திரி கொடு’  என்ற அனுபவத்துக்குள் அறிவியல் ஒளிந்திருக்கிறது.

  ஏழு மாதக் குழந்தைக்கு மாந்தக் கழிச்சல் வந்தபோது,  வசம்பைச் சுட்டுக் கருக்கி, அந்தக் கரியைத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்த தாய்க்கு இன்று திட்டு விழுகிறது.

  'கைக் குழந்தைக்கு ஏன் வசம்பைக் கொடுத்தே?
குழந்தைகளுக்கு வசம்பைக் கொடுக்கக்கூடாதுனு அமெரிக்காவுல எச்சரிச்சிருக்காங்க’ என்று கரித்துக் கொட்டுகிறார்கள்.

  வசம்பில் 0.04 சதவிகிதம் மட்டுமே உள்ள அசரோன் என்ற  பொருள் நச்சுத்தன்மைக் கொண்டது  என இன்றைய விஞ்ஞானம் கண்டறிந்திருக்கலாம். ஆனால், வசம்பைச் சுட்டுக்கருக்கும்போது அந்த அசரோன்காணாமல் போய்விடும் என்பதை அன்றைய அனுபவ அறிவியல் உணர்ந்திருந்தது.

பேச்சு வர தாமதமாகும் குழந்தைக்கும், மாந்தக் கழிச்சலுக்கும், இன்னும் பல குழந்தை நோய்க்கும் மிக அற்புதமான மருந்தாக விளங்கும் வசம்புக்குப் பாட்டி வைத்தியப் பெயர் என்ன தெரியுமா?
'பிள்ளை-வளர்ப்பான்’!

  'சளி பிடிச்சிருக்கா? கற்பூரவல்லில பஜ்ஜி போட்டுக் கொடுங்க.
மத்தியான ரசத்தில் கொத்தமல்லியோட கொஞ்சம் தூதுவளை, கொஞ்சம் துளசிப் போடுங்க;

  மலச் சிக்கல்ல கஷ்டப்படுறானா?
ராத்திரில பிஞ்சு கடுக்காயைக் கொட்டையை எடுத்துட்டு வறுத்து பொடி செஞ்சுக் கொடுங்க;

  சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம் இந்த அஞ்சையும் வறுத்துப் பொடிசெய்து, சரிக்குச் சரியா பனைவெல்லம் கலந்து மூணு சிட்டிகை கொடுத்தா, பசிக்கவே பசிக்காத பிள்ளை கன கனனுபசி எடுத்துச் சாப்பிடும்;

  வாய்ப் புண்ணுக்கு மணத்தக்காளி கீரையில சிறுபருப்பு போட்டு கொஞ்சம் தேங்காய்ப் பால் விட்டு, திருநெல்வேலி சொதி செஞ்சு கொடுங்க;

  பித்தக் கிறுகிறுப்புக்கு
முருங்கைக்காய் சூப்,

  மூட்டு வலிக்கு
முடக்கத் தான் அடை,

  மாதவிடாய் வலிக்கு
உளுத்தங்களி,

  குழந்தை கால்வலிக்கு
ராகிப் புட்டு,

  வயசுப் பெண் சோகைக்கு
கம்பஞ்சோறு,

வயசான தாத்தாவின் கால்வீக்கத்துக்கு
வாழைத்தண்டுப் பச்சடி’
    என விரியும் இந்தப் பட பட பட்டியலில் இடம் பெற்றிருக்கும் அத்தனையும்
சில நேரம் மருந்துகள்;
பல நேரம் மருத்துவ உணவுகள்.

    காப்புரிமைப் பிடியில்லா இந்த அடுப்பங்கரையின் அறிவியல் நம் தொன்மைச் சிறப்பு மட்டுமல்ல வரும் நாட்களில் தொற்று நோய்க் கூட்டத்தின் பிடியில் நாம் சிக்கித் தவிக்காமல் இருக்க உதவும் ஒரே வழி.

     சுழியத்தைக் (ஜீரோவை)
கண்டுபிடித்து இன்றைய கணிதத்தின் அச்சாணியைத் தந்த தேசம் இது.

  'பை’  என்றால் 22/7 என்ற பரிச்சயமே இல்லாத வெகு காலத்துக்கு முன்னரே, சுற்றளவுச் சூத்திரத்தைக் கச்சிதமாகத் தெரிந்துகொண்டு நிலத்தை அளந்த கொத்தனார்கள் புழங்கிய மண் இது.

  'ஆறறிவதுவே அதனொடு மனமே’
என மனதின் முதல் சூத்திரத்தை சிக்மண்ட் ஃப்ராய்டுக்கு 30 தலைமுறைகள் முன்பே சொன்ன
தொல் காப்பியம்
எழுதிய ஊர் இது.

  இத்தனை காலம் நாம் காத்து வந்த அறிவியலை, எந்த நெருக்கடியிலும் இழக்கலாமா?
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59355
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சற்றே யோசிக்கலாமே Empty Re: சற்றே யோசிக்கலாமே

Post by சக்தி18 on Sun Nov 03, 2019 1:02 pm

சற்றே யோசிக்கலாமே 3838410834 சற்றே யோசிக்கலாமே 103459460 சற்றே யோசிக்கலாமே 1571444738
சற்றே யோசிக்கலாமே Tenor
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1891
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

சற்றே யோசிக்கலாமே Empty Re: சற்றே யோசிக்கலாமே

Post by T.N.Balasubramanian on Sun Nov 03, 2019 7:03 pm

பழமையை வரவேற்கும் நாள் கூடிய சீக்கிரத்தில் வந்தால் சமூகத்திற்கு நன்று.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26978
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9685

Back to top Go down

சற்றே யோசிக்கலாமே Empty Re: சற்றே யோசிக்கலாமே

Post by krishnaamma on Sun Nov 03, 2019 10:11 pm

உண்மை அண்ணா, பயனுள்ள பகிர்வு.... எந்த குழந்தைக்காக பணம் பணம் என்று அலைந்து சம்பாதிக்கிறார்களோ, அந்தக் குழந்தை அந்த பணத்திற்காக எவ்வளவு இழப்புகளை சந்திக்கிறது என்று பெற்றவர்களுக்கு புரிவதில்லை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62166
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12600

Back to top Go down

சற்றே யோசிக்கலாமே Empty Re: சற்றே யோசிக்கலாமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum