ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by krishnaamma Yesterday at 10:25 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:51 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by M.Jagadeesan Yesterday at 8:34 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 6:14 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Yesterday at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Yesterday at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Wed Aug 12, 2020 11:56 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Wed Aug 12, 2020 11:46 pm

Admins Online

சோழர்கள் சிறு குறிப்பு

Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty சோழர்கள் சிறு குறிப்பு

Post by mbalasaravanan on Wed Nov 06, 2019 9:35 pmஎங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்

கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது

அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன், அவன் பிற்கால சோழ வம்சம் என்கின்றது வரலாறு.

ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.

அந்த ராஜ ராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்

அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது என சொன்னாலும் சோழனுக்கு முன்பு 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஜூலியஸ் சீசர் கப்பல் படை வைத்திருந்தான். நாவாய் என்பது பொதுபெயராக வழக்கில் இருந்திருக்கலாம்

சோழ்நாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது

சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது, அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது

பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்த்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது

வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.

ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்

இன்றைய இந்தோனேஷியா , மலேசியா , கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸ்ரீ விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலமையில் பெரும் போர் புரிந்து வென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்

அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன‌

உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள் வைக்கட்டும்.

சிவன் மேல் தீராதபற்றுகொண்ட ராசராசன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும்ட் திட்டமிட்டான்.

ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன‌

காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.

இத்தனை பெரிய கற்களை எப்படி செதுக்கினார்கள், எப்படி கொண்டு வந்தார்கள், எந்த ஆயுதத்தால் செதுக்கினார்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்பதை கண்டவரும், எழுதி வைத்தவரும் எவருமில்லை, எல்லாம் யூகமே

ஆனால் அப்படி அற்புதமாக, பெரும் அதிசயமாக கட்டியிருக்கின்றான் என்பது நம் கண்முன்னே நிற்கின்றது

கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு. உலகில் எங்குமே காணப்படா உத்தி அது.

ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.

ஆலயத்தின் பாதுகாப்பு அஸ்திவாரத்தில் மட்டுமல்ல, உச்சிலும் உண்டு என சொல்லும் மகா வித்தியாசமான அமைப்பு அது

அந்த கோவிலில்தான் அவன் ஒரு மூலையில் தங்கி அவை நடத்தியிருக்கின்றான், அக்கோவிலை சுற்றி இருக்கும் அகழி முதலானவை அதனைத்தான் சொல்கின்றன, அவனுக்கு எல்லாமுமாக இருந்தது அந்த ஆலயம், அவ்வளவு நேசித்திருக்கின்றான்

தன்வாழ்வின் மிகபெரும் வெற்றியாக அவன் அந்த அலயத்தைத்தான் கருதியிருக்கின்றான், அக்காலங்கள் வித்தியாசமானவை

அதாவது அந்நியநாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் இந்திய முறைபடி அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்

அதனை எண்ணித்தான், தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லபடுகின்றது

கரூர் சித்தர் உதவியுடன் அவன் அதை செய்தான் என்கின்றார்கள்

நம்பாதவர்கள் விட்டுவிடலாம், ஆனால் நானே அதிபதி என சொல்லி அங்கு சென்ற அரச பிரதிநிதிகள், ஏன் மக்களாட்சி பிரதிநிதிகள் , நாத்திகர்கள் எல்லாம் கடும் அனுபவத்தில் அதன் பின் உணர்ந்திருக்கின்றார்கள்

ஆம் அந்த ஆலயத்தில் நுழையும் பொழுது அரச பதவி இன்றி, அதிகார தோரணையின்றி, உடலெல்லாம் விபூதி பூசி ஒரு வித சிவனடியார் கோலத்தில்தான் யாராயினும் நுழைய வேண்டும் என்பது அந்த ஆலயத்து விதியாம்

அதை மீறி நானே முதல்வர், நானே பிரதமர் என அதிகார தோரணையில் செல்லும் எக்கொம்பனும் ஆட்சி இழந்து சிக்கலில் சிக்குவது உறுதியாம்

அது மக்களாட்சியில் அல்ல மன்னர் ஆட்சியிலே இருந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் அந்த ஆலயத்தை கண்டு அஞ்சி ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள்

வருவதாக இருந்தால் ஆலய வாசலில் நான் அரசன் அல்ல, முடி சூட்டியவனும் அல்ல இங்கு ஈசனை சந்திக்க வந்த ஆண்டிகளில் ஒருவன் என சொல்லிவிட்டு உள்ளே வா என்பது அந்த ஆலய சூட்சுமம்

அதை புரிந்துகொள்ளாத மன்னர்கள் அல்லது புரிந்தாலும் முடியிழக்க விரும்பா மன்னர்கள் அந்த ஆலயத்தை ஒதுக்கினர்

அது பிற்காலமும் தொடர்ந்திருக்கின்றது, நாயக்க மன்னர்கள் ஆட்சியிலும், மாராட்டியர் ஆட்சியிலும் ஆட்சியாளர்கள் அதனை ஒதுக்கியே வைத்திருக்கின்றார்கள்

எல்லா கோவிலிலும் உருண்டு புரண்ட நாயக்கர்கள் தஞ்சை ஆலயத்தில் ஒரு வகையான விலகலை கடைபிடித்திருக்கின்றார்கள்

பின் வவ்வால்கள் கூடாரமாக ஆகிய ஆலய பகுதிகளில் சில வாவ்வால் கழிவுகளால் ஆன சுவர்களால் பிரிக்கபட்டன, ஆம் வாவ்வால் கழிவு சுவராகும் அளவிற்கு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

வெள்ளையன் ஆட்சியில் இந்நாட்டிற்கு வந்த ஜெர்மானியன் ஒருவனே உள்ளே புகுந்து தேடினான், அந்த வவ்வால் உருவாக்க்கிய சுவரை எல்லாம் இடித்து உள்சென்றான், பல கல்வெட்டுக்களை படித்தான்

அதில்தான் இக்கோவிலை கட்டியது ராஜராஜன் என்றிருந்தது, அதில் இருந்துதான் தமிழகம் அக்கோவிலை கட்டியது அவன் என நம்புகின்றது, அவன் ஆலய கல்வெட்டுகளே அவன் வரலாற்றினை சொன்னது.

அதுவும் இல்லையென்றால் அது ஏலியன்கள் கட்டிய ஆலயமாக மாறியிருக்கும்

அவன் மன்னர்களுக்கு எல்லாம் மன்னராக இருந்ததால் அவன் ராஜ ராஜன் என அழைக்கபட்டான், மற்றபடி அவன் இயற்பெயர் என்பது மிக சரியாக தெரியவில்லை.

(ராஜராஜன் வரலாறே இப்படி சிரமபட்டு வந்த நிலையில்தான் சிலர் அவன் எங்கள் சாதி எனவும் சொல்கின்றார்கள், அதனை விட அபத்தம் இருக்க முடியாது)

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்

எகிப்தியருக்கு பிரமிடு போல, யூதர்களுக்கு சாலமோனின் ஆலயம் போல, தமிழரின் பெருமையினை சொல்வது அக்கோவில்

தமிழக அரசின் சின்னமாக நிச்சயம் அதுதான் அறிவிக்கபட்டிருக்க வேண்டும், ஆனால் பிற்காலங்களில் மாறிற்று. அதற்கு ஆயிரம் காரணங்கள்

தமிழகம் கண்ட அந்த தனிபெரும் அரசனுக்காக கலைஞர் கருணாநிதி ஆலயத்தில் சிலை நிறுவ விரும்பினார். அது தொல்பொருள் துறையின் கட்டுபாடு என சொல்லி மறுக்கபட்டது

அதனால் ஆலயத்தின் வெளியே அவன் சிலையினை நிறுவினார் கலைஞர்

தான் பெற்ற முடிகளை விட, தான் பெற்ற செல்வங்களை விட, தான் பெற்ற அரசுகளை விட தன்னால் கட்டபட்ட ஆலயமே சிறந்தது என உலகிற்கு தன் சிவபக்தியினை விட்டு சென்ற ராஜராஜன் அந்த சிலை வடிவில் அந்த ஆலயத்தை அனுதினமும் வணங்கிகொண்டே இருக்கின்றான்

ஐப்பசி மாதம், சதய நட்சத்திரத்தில் அவன் அவதரித்தான் என்கின்றது குறிப்பு

எத்தனைபேர் வந்தாலும் ஐரோப்பாவில் சீசருக்கு இருக்கும் மவுசு என்றளவும் உண்டு, அந்த ராஜராஜ சோழன் தமிழ்நாட்டு ஜூலியஸ் சீசர்

அக்கால காவேரியும், செழித்த சோழநாடும், தென்கிழக்காசியா எங்கும் பறந்த சோழ புலிகொடியும் இன்னும் பிற காட்சிகளும் நினைவுக்கு வருகின்றன‌

அந்த மாபெரும் தமிழ் சாம்ராஜ்யத்தின்
அடையாளமாக எஞ்சியிருப்பது இப்போது தஞ்சாவூர் ஆலயம் மட்டுமே.

வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும் , உலகின் மிக வலுவான கப்பல் படையினை இந்தியாவில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான்

கிரேக்கருக்கு ஒரு அலெக்ஸாண்டர், பிரான்சுக்கு நெப்போலியன், ரோமுக்கு ஜூலியஸ் சீசர், மங்கோலியாவுக்கு செங்கிஸ்கான்

தமிழகத்துக்கு ராஜராஜசோழன், அவன் வீரத்தையும் ஆட்சியும் விட மகா முக்கியமானது அவன் பக்தி

வரலாற்றில் யார் செய்யும் காரியம் நிற்கும் என்றால் ஆன்மீக உணர்வில் தன்னை கலந்து, தெய்வத்தை முன்னிறுத்தி எவன் கடமையாற்றுவானோ அவனே நிற்பான், அவன் படைப்பும் காலம் கடந்து நிற்கும்

மாறாக தன் மிக சிறிய மூளையின் மிக சிறிய அறிவில் கடவுளுக்கு சவால்விட்டவன் படைப்பெல்லாம் காலவெள்ளத்தில் அடிபட்டு ஓடும்

ராஜராஜனும் அவன் ஆலயமும் காலகாலத்துக்கு நிற்க காரணம் அவன் மனம் சிவனில் கலந்திருந்தது, சைவமதத்துக்கு மன்னனாய் அல்ல ஒரு அடியவனாய் அவன் நின்றான்

அதனால் இன்றும் என்றும் வரலாற்றில் நிற்பான்

அவனை நினைத்து நினைத்து பார்க்கின்றோம், எவ்வளவு பக்தி அவனுக்கு இருந்திருந்தால் அந்த ஆலயத்தை அவ்வளவு நுணுக்கமாக கட்டி, அதன் கற்பகிரகத்தில் கைவைப்பவன் அழிந்து போகும் அளவு உச்சியில் கல்லை நிறுத்தி, அது போக வருபவெல்லாம் அடியானாக மட்டும் வர சிறப்பு வரங்களையும் நிறுத்தியிருப்பான்

அந்த வரம் வாங்கி ஆலயத்தில் நிறுத்தியவன் எவ்வளவு எளிய சிவனடியானாய் வாழ்ந்திருப்பான்?

தமிழ்நாட்டின் மகுடம் அவன், தமிழரின் பெருமை அவன், சைவத்தின் சின்னம் அவன், எந்நாளும் தமிழர்குல மன்னன் அவன்.

தமிழர் இந்துவாய் இருந்தனர், அந்த இந்துக்களுக்கு சிவனடியார் ஒரு மன்னனாய் இருந்தான் என்பதுதான் ராஜராஜசோழன் வாழ்வும் ஆலயமும் சொல்லும் தத்துவம்.

நல்லவேளையாக அவன் சிவனுக்கோர் ஆலயம் கட்டினான் அதில் கல்வெட்டும் வைத்தான், அதை ஒரு ஜெர்மானியன் வந்து மீட்டும் கொடுத்தான்

இல்லையெனில் இந்நேரம் சோழன் மதமற்றவன் என்றும் அவனுக்கு மதம் மொழி என எதுவுமே கிடையாது அவன் ஒரு அனாமதெய சோமாரி மன்னன் என்றொரு கோஷ்டி கிளம்பியிருக்கும்

அவன் அமைத்த ஆலயமே அவன் பெருமையினை மீட்டு கொடுத்திருக்கின்றது அவ்வையினை முருகன் காத்தது போல...

WhatsApp பதிவு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by ayyasamy ram on Wed Nov 06, 2019 9:56 pm

சோழர்கள் சிறு குறிப்பு 103459460
-
சோழர்கள் சிறு குறிப்பு BvGgBaVjTxuZQWSPx8sX+_107323349_3dcea05c-e38b-43e4-895c-675532c3f8fe
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59563
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by krishnaamma on Wed Nov 06, 2019 10:00 pm

நல்ல பகிர்வு சரவணன்....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Nov 06, 2019 10:03 pm

அந்த காலத்திலேயே ஆராய்ச்சி செய்து
அருமையாக கல்லணை கட்டி இன்றும்
அது தமிழகத்திற்கு நீர்பாசனத்திற்கு
உதவிகரமாக உள்ளது.
தற்காலத்தில் நாமும்தான் ரோடு போடுகிறோம்.
போட்டு ஒரு மழைக்கே தங்கமாட்டேன் என்கிறது.
வெட்கம். வெட்கம்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by mbalasaravanan on Thu Nov 07, 2019 3:50 pm

உண்மை அய்யா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3175
இணைந்தது : 21/05/2012
மதிப்பீடுகள் : 745

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by krishnaamma on Thu Nov 07, 2019 6:05 pm

@T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலேயே ஆராய்ச்சி செய்து
அருமையாக கல்லணை கட்டி இன்றும்
அது தமிழகத்திற்கு நீர்பாசனத்திற்கு
உதவிகரமாக உள்ளது.
தற்காலத்தில் நாமும்தான் ரோடு போடுகிறோம்.
போட்டு ஒரு மழைக்கே தங்கமாட்டேன் என்கிறது.
வெட்கம். வெட்கம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1306943

பிளாஸ்டிக்கில் ரோடு போட ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்து , ரோடும் போட்டு காட்டி வருடம் இருபதுக்கும்மேலாகிறது.............அதை அமுல்படுத்தினால் அரசியல் வாதிகள் வீடு கட்டமுடியாதே என்கிற காரணத்தினால் அதை இன்று வரை செயல் படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளார்கள்.... அந்த மனிதர் அதை அயல்நாட்டுக்குக்கும் விற்கமாட்டேன் நம் நாட்டுக்குத்தான் பயன்படுத்துவேன் என்று வேறு சொல்லிவிட்டார்....இது போதாதா நம் ஆட்களுக்கு............திடடத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்....இப்படி எத்தனையோ....என்னத்தை சொல்வது....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62341
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12625

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by T.N.Balasubramanian on Thu Nov 07, 2019 8:26 pm

@krishnaamma wrote:
@T.N.Balasubramanian wrote:அந்த காலத்திலேயே ஆராய்ச்சி செய்து
அருமையாக கல்லணை கட்டி இன்றும்
அது தமிழகத்திற்கு நீர்பாசனத்திற்கு
உதவிகரமாக உள்ளது.
தற்காலத்தில் நாமும்தான் ரோடு போடுகிறோம்.
போட்டு ஒரு மழைக்கே தங்கமாட்டேன் என்கிறது.
வெட்கம். வெட்கம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1306943

பிளாஸ்டிக்கில் ரோடு போட ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்து , ரோடும் போட்டு காட்டி வருடம் இருபதுக்கும்மேலாகிறது.............அதை அமுல்படுத்தினால் அரசியல் வாதிகள் வீடு கட்டமுடியாதே என்கிற காரணத்தினால் அதை இன்று வரை செயல் படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளார்கள்.... அந்த மனிதர் அதை அயல்நாட்டுக்குக்கும் விற்கமாட்டேன் நம் நாட்டுக்குத்தான் பயன்படுத்துவேன் என்று வேறு சொல்லிவிட்டார்....இது போதாதா நம் ஆட்களுக்கு............திடடத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்....இப்படி எத்தனையோ....என்னத்தை சொல்வது....சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1307003

தற்காலத்திய அரசியல்வாதிகள் காமராஜர் அல்ல.
ஒரு விதத்தில் காம ராஜன்கள்

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27036
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

சோழர்கள் சிறு குறிப்பு Empty Re: சோழர்கள் சிறு குறிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum