புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_m10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10 
21 Posts - 66%
heezulia
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_m10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_m10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10 
63 Posts - 64%
heezulia
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_m10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_m10விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன்.

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:15 pm

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன்...! சினிமாவை மிஞ்சும் கெத்து சம்பவம்...
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 72126481
1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி அமெரிக்காவில் ஒரு வழக்கம்போல நல்ல விடியலாக இருந்தது. இந்த நாள் மக்கள் எல்லாம் பரபரப்பாக இயங்க துவங்கினர். ஒவ்வொருவரும் தங்கள் அலுவலகம், வீட்டு வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் யாருக்கும் அன்றைய நாள் பல ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் நாம் படிக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடக்கப்போவதை அவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

நன்றி சமயம்

ரமணியன்

தொடரும்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:19 pm

போர்ட்லாண்ட் விமான நிலையம்

குறிப்பிட்ட அந்த நாளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அழகான கோர்ட் சூட் உடன் அமெரிக்காவின் போர்ட்லாண்ட் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து நார்த் ஓரியண்ட் ஏர்லைன்ஸ் மூலம் சீட்டேல் விமான நிலையத்திற்குச் செல்ல ஒரு டிக்கெட் வாங்கினார். டேன் கூப்பர் என்ற பெயரில் அவர் டிக்கெட் வாங்கினார்.

நார்த் ஓரியண்ட் ஏர்லைன்ஸ்

பின்பு அவர் நார்த் ஓரியண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயீங் 727 -100 ரக விமானத்தில் ஏறி 18சி சீட்டில் அமர்ந்தார். அந்த சீட்தான் அவருக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் அந்த விமானம் முழுமையாக நிரம்பவில்லை. மாறாக 3ல் 1 பகுதி சீட்டில் மட்டுமே பயணிகள் இருந்தனர்.

விமானம் புறப்பாடு

விமானம் 305 சரியாக மதியம் 2.50 மணிக்கு சுமார் 37 பயணிகள் மற்றும் 6 விமானப்பணிப்பெண்களுடன் போர்ட்லண்ட் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் செய்யப்பட்டது. வில்லியம் ஸ்கூட் என்பவர் விமானத்தின் கேப்டனாக செயல்பட்டார். துணை விமானியாக வில்லியம் பில் ரடாஸ்க் என்பவரும், ஹெரால்டு ஈ. ஆண்டர்சன் என்பவர் விமான இன்ஜினியர்களாகவும் அந்த விமானத்திற்கான பொறுப்பில் இருந்தனர்.

ரமணியன்

தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:24 pm

ஃபிளோரன்ஸ் ஸ்காப்னர்
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 72126927

அப்பொழுது தான் விபரீதம் துவங்கியது. டேன் கூப்பர் என்ற பெயரில் பயணித்தவர் விமானப்பணிப்பெண்ணான ஃபிளோரன்ஸ் ஸ்காப்னர் என்பவரை அழைத்து ஒரு துண்டு சீட்டை கொடுத்துள்ளார். பொதுவாக விமானப்பணிப்பெண்களுக்கு பெரும் வர்த்தகர்கள் விமானத்தில் பயணிக்கும்போது அவர்களது போன் நம்பர்களைக் கொடுப்பது வழக்கம் அப்படிப்பட்ட சீட்டு தான் அது என ஸ்காப்னர் அந்த சீட்டை படிக்காமலேயே தனது பர்ஸிற்குள் வைத்துவிட்டார்.

சூட்கேஸில் வெடிகுண்டு

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 72126923

பின்னர் கூப்பர் மீண்டும் ஸ்காப்னரை அழைத்து நான் கொடுத்த சீட்டை படியுங்கள் என்னிடம் வெடிகுண்டு உள்ளது என சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சீட்டை படித்துள்ளார். அந்த சீட்டில் சரியாக என்ன எழுதியிருந்தது என்று இன்றும் தெரியவில்லை. ஆனால் அந்த சீட்டில் தான் இந்த விமானத்தைக் கடத்திவிட்டதாகக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விமானம் கடத்தல்

அதைப் பார்த்துப் பதற்றமடைந்த ஸ்காப்னரை கூப்பர் தனது பக்கத்துச் சீட்டில் அமர வைத்தார். மேலும் தான் தனது சூட்கேஸில் வைத்திருந்த வெடிகுண்டை அவரிடம் காட்டியுள்ளார். கூப்பர் ஸ்காப்னரிடம் தான் இந்த விமானத்தை தற்போது கடத்திவிட்டதாகவும், இனி தான் சொல்வது தான் விமானத்தில் நடக்கவேண்டும் எனவும், மீறி வேறு விஷயங்கள் நடந்தால் விமானத்தையே வெடிக்க வைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

ரமணியன்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 23, 2019 9:27 pm

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 1571444738
விறுவிறுப்பான பதிவுகளை தருவதற்காக விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 1571444738
திரையரங்கில் படம் பார்த்தவர் பக்கத்தில் இருக்கக் கூடாது.கதை தெரிந்தவர் பதிவை படிக்கக் கூடாது. ஆனாலும் படிக்கும் போது ஒரு கிக் கிடைப்பதால் படிக்க தூண்டுகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:29 pm

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 72126503

பணம் கேட்பு

மேலும் தனக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் பணம், 4 பாராசூட்கள் மற்றும் சீட்டேல் சென்றதும் விமானத்தின் எரிபொருள் மீண்டும் நிரப்பப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஸ்காப்னர் இந்த தகவலை விமானிகளிடம் சென்று தெரிவித்தார். பின்னர் ஸ்காப்னர் மீண்டும் வரும்போது கூப்பர் தனது கெட்டிப்பை மாற்றி கருப்பு நிற கண்ணாடி அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பதற்றம்

இந்த விமானத்தின் கேப்டன் வில்லியம் ஸ்கூட் விமான கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தங்கள் விமானம் ஹைஜாக் செய்யப்பட்ட தகவலையும், ஹைஜாக் செய்தவர் கேட்ட கோரிக்கையையும் தெரிவித்தார். இதை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் உரிய அதிகாரிகளுக்கு இந்த தகவலைத் தெரிவித்தனர். இதையடுத்து விஷயம் தீவிரமானது. சீட்டேல் விமான நிலையம் முழுவதும் எஃப் பி ஐ கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. விமானத்தில் உள்ள பயணிகளை உயிருடன் காப்பாற்ற ஹைஜாக்கர் கேட்கும் தொகையை அளிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

விண்ணில் வட்டமடித்த விமானம்

இதையடுத்து சீட்டேலில் இருந்த நார்த் ஓரியன்டல் விமான நிலைய மேலாளர் ஹைஜாக்கரிடம் பிணையத் தொகை மற்றும் பொருளை ஒப்படைக்கும் நபராக நிர்ணயிக்கப்பட்டார். இதற்குள் விமானம் கிட்டத்தட்ட சீட்டேலை அடைந்துவிட்டது. ஆனால் பிணையத் தொகை மற்றும் பாராசூட் போன்ற பொருட்களைத் தயார் செய்ய விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்த தகவல் கூப்பருக்கு தெரிவிக்கப்பட்டது.

2 மணி நேரம் தாமதம்

கூப்பர் அதிகபட்சம் 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் பிணையத் தொகை, மற்றும் அனைத்தும் தயார் என எனக்குத் தகவல் வந்த பின்பு தான் விமானம் தரையிறங்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த தகவல் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விமானம் சீட்டேல் பகுதியையே சுற்றி வரத்துவங்கியது.

பொய் தகவல்

மாலை சுமார் 5.35 மணிக்கு எல்லாம் தயார் என விமானிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும். விமானிகள் குப்பருக்கு இந்த தகவலைத் தெரிவித்தனர். அதன் பின்னர் தான் கூப்பர் விமானத்தைத் தரையிறக்க உத்தரவிட்டார். இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது விமானத்திலிருந்த பயணிகள் யாருக்கும் தங்கள் விமானம் கடத்தப்பட்ட தகவலே தெரியாது. விமானிகள் விமான நிலையத்தில் சில மெக்கானிக்கல் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கத் தாமதமாகும் என்ற ஒரு பொய்யான தகவலைத் தான் மற்ற பயணிகளுக்குச் சொன்னார்.

ரமணியன்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:35 pm

விளக்கம்

இந்த பொய்யான தகவலைத் தெரிவிக்கும்படி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தான் விமானிக்கு உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் விமானத்தில் உள்ள மற்ற பயணிகளுக்குத் தேவையில்லாத பதற்றம் ஏற்படுவதை தடுக்கவே இந்த பொய்யான தகவல் சொல்லப்பட்டதாகப் பின்னர் பத்திரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பணம் ஒப்படைப்பு

கூப்பர் கேட்ட பிணையத்தொகை மற்றும் மற்ற பொருட்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டதும். விமானம் தரையிறங்கியது. விமானம் தனியாக வெளிச்சமான ஒரு இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. விமானத்தை எஃப் பி ஐ அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். எப்படியும் அங்கேயே அவரை பிடித்துவிடலாம் எனத் திட்டம் போட்டனர்.

எரிபொருள், பாராசூட்

திட்டமிட்டபடி நார்த் ஓரியன்டல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன மேலாளர் கூப்பர் இருக்கும் விமானத்திற்கு அவர் கேட்ட பணம் மற்றும் பாராசூட்களை கொண்டு சென்றார். விமானத்திற்கு எரிபொருள் ஏற்றும் பணி துவங்கியது.

கடத்தப்பட்ட தகவல்

தான் கேட்டது கிடைத்ததும் கூப்பர் மற்ற பயணிகளை விடுவிக்க அனுமதித்தார். அவர்கள் வெளியே வரும் வரை எவ்வளவு நேரம் நாம் கடத்தப்பட்டிருந்தோம் என்ற தகவலே மற்ற பயணிகளுக்குத் தெரியாது. தாங்கள் விமானம் கோளாறு காரணமாகத் தான் இவ்வாறு விசித்திரமாக நடப்பதாக மக்கள் எல்லாம் கருதினர்.

ரமணியன்

தொடருகிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:40 pm

மீண்டும் பறந்த விமானம்

இந்நிலையில் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறிய நிலையில் கூப்பர் விமானப் பணியாளர்களை வெளியே விட மறுத்துவிட்டார். விமான நிலையம் மூடப்பட்டது. கூப்பர் விமானிகளுக்கு விமானத்தைக் கிளப்பி மேக்ஸிக்கோவிற்கு செல்லும்படியும், விமானம் எக்காரணத்தைக் கொண்டும், பிரஷரைஸ் செய்யக்கூடாது என்றும் பிரஷரைஸ் செய்ததால் விமானத்தை சுமார் 10 ஆயிரம் அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்க உத்தரவிட்டார்.

அனுமதி வழங்கப்பட்டது.

விமானிகள் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்தனர். அதிகாரிகள் விமானம் செல்ல அனுமதியளித்தனர். டேக் ஆஃப் செய்ய ரன்வே யை கிளியர் செய்து கொடுத்தனர். எஃப் பி ஐ அதிகாரிகள் அந்த விமானம் மெக்ஸிக்கோவில் இறங்கியதும் தங்கள் கூப்பரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடலாம். தற்போது அதைச் செய்தால் விமானத்தில் உள்ள பணியாளர்களுக்குப் பிரச்சினை என அவர்கள் யோசித்தனர். அதனால் விமானத்தைப் பறக்கவிட அவர்களிடம் இருந்தும் அனுமதி கிடைத்தது.

மெக்ஸிக்கோ வந்த விமானம்

விமானம் மெக்ஸிக்கோவை நோக்கி பறந்தது. விமானம் சரியான நேரத்தில் மெக்ஸிக்கோவை அடைந்தது. முன்னதாகவே விமானம் தரையிறங்கப் பாதுகாப்பான ஏற்பாடுகள் விமானம் தனியாக நிற்க ஏற்பாடுகள் விமானம் தரையிறங்கியதும் எஃப் பி ஐ அதிகாரிகள் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் எல்லாம் தயாராகின.

குதித்த கூப்பர்
விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். 72126925

விமானம் தரையிறங்கியதும் விமானத்தில் உள்ள விமானி கூப்பர் பாராசூட்டை வைத்துத் தப்பி விட்டதாகவும் தற்போது விமானத்தில் விமானப்பணியாளர்கள் மட்டுமே இருப்பதாக அவர் கட்டுப்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். எஃப் பி ஐ அதிகாரிகள் விமானத்திற்குள் வந்து சோதனை செய்யும் போது விமானத்தில் கூப்பர் கேட்ட 4 பாராசூட்களில் இரண்டு மட்டுமே இருந்தது அவர் கேட்ட பணம், மேலும் 2 பாராசூட்கள் இல்லை.

எப்படி தப்பினார்

விமானப் பணியாளர்களிடம் விசாரித்தபோது அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் விமானத்தின் பின்புறம் உள்ள படிகட்டுகள் வழியாக அவர் குதித்துவிட்டதாகவும், பணத்தை அவர் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டனர். அதன் பின்னர் எஃப் பி ஐ அதிகாரிகள் பல விசாரணை நடத்தியும் இன்று வரை அதற்கு மேல் எந்த ஒரு ஆதாரத்தையும் எடுக்க முடியவில்லை.1981ம் ஆண்டு அவருக்கு கொடுத்த பணத்தின் சில பணம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இது பெரும்பரபரப்பை கிளப்பினாலும் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.

ரமணியன்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:47 pm

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். -

விமானப் பணியாளர்களிடம் விசாரித்தபோது அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் விமானத்தின் பின்புறம் உள்ள படிகட்டுகள் வழியாக அவர் குதித்துவிட்டதாகவும், பணத்தை அவர் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டனர். அதன் பின்னர் எஃப் பி ஐ அதிகாரிகள் பல விசாரணை நடத்தியும் இன்று வரை அதற்கு மேல் எந்த ஒரு ஆதாரத்தையும் எடுக்க முடியவில்லை.1981ம் ஆண்டு அவருக்கு கொடுத்த பணத்தின் சில பணம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. இது பெரும்பரபரப்பை கிளப்பினாலும் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.

இந்த விமானத்தில் ஹைஜாக் செய்தவர் டேன் கூப்பர் என்றாலும், இது குறித்த செய்தி பத்திரிக்கையில் வெளியான போது அவசரம் காரணமாக இவரது பெயர் டிபி கூப்பர் என அச்சிடப்பட்டது. பின்னர் அந்த பத்திரிக்கை அந்த பெயர் தவறு எனக் குறிப்பிட்டபோதும் மக்கள் மத்தியில் அந்த டிபி கூப்பர் என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.

இந்த விமானத்திலிருந்து குதித்த டிபி கூப்பர் என்ன ஆனார் என்ற எந்த தகவலும் இல்லை. சிலர் அவர் பாராசூட்டில் இருந்து குதிக்கும்போதே இறந்திருப்பார் எனக் கூறினார். ஆனால் அவரது உடலோ ஏன் பாராசூட்டின் சிறு பகுதியோ கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. மேலும் சிலர் அப்படி ஒரு மனிதனே இல்லை. இது விமான ஊழியர்கள் நடத்திய நாடகம் அவர்கள் பணத்தைப் பெற்று பங்குபோட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது அதற்கும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை.

1978ம் ஆண்டு அமெரிக்க விமானியாக பணியாற்றிய ராபர்ட் ராக்ஸ்டிரா என்பவர் மீது எஃப் பி ஐ அதிகாரிகள் சந்தேகப்பட்டு அவரை மடக்கி விசாரித்தனர். அவரது முகமும் டேன் கூப்பர் என்பவரது முகமும் கிட்டத்தட்ட ஒரே தோற்றத்தில் இருப்பதாக அவர்கள் கருதினர். ஆனால் அதுவும் சாத்தியமில்லை. அவர் அதை செய்யவில்லை என்பது 1979ம் ஆண்டு நிரூபனபமானது. சம்பவம் நடந்த 1971ம் ஆண்டில் ராபர்ட்டிற்கு வெறும் 21 வயது தான் ஆனால் டிபி கூப்பர் 40 வயது மதிக்க தக்க தோற்றத்தில் இருந்தார்.

ரமணியன்

தொடருகிறது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:51 pm

இன்று வரை உலகில் நடந்த விமான கடத்தல் சம்பவங்களில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஹைஜாக்கர் டேன் கூப்பர் மட்டுமே. மற்ற சம்பவங்களில் எல்லாம் விமானத்தைக் கடத்தியவர்களை ஒன்று பிடிபடுவார். அல்லது சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டு பயணிகள் காப்பாற்றப்படுவர். இந்த சம்பவத்திற்குப் பிறகு சிலர் டிபி கூப்பர் போலச் செயல்பட்டு விமானத்தைக் கடத்த முயன்றனர். ஆனால் விமானிகளின் யுக்தியால் அவர் பிடிபடுவார். விமானங்களில் கூப்பர் வேன் என்ற கருவி கூட இனி இது போன்ற ஹைஜாக்குகள் நடக்க கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டன.

மிஞ்சிய ஓவியம் மட்டுமே

விமானத்தை ஹைஜாக் செய்து உலகையே மிரள வைத்த மர்ம மனிதன். -

இந்த சம்பவத்திற்குப் பின்பு விமானம் கடத்தப்பட்டால் எப்படிச் செயல்படவேண்டும் என விமானிகளுக்கு தனிபாடமே தயாரிக்கப்பட்டது. இன்றுவரை இந்த டிபி குப்பர் ஒரு மர்மமான மனிதர்தான். இவர் குறித்த எந்த தகவலும் யாரிடமும் இல்லை. இவரைப் பார்த்தவர்கள் இவரது உருவம் குறித்துச் சொன்ன விஷயங்களை வைத்து இவர் இப்படி தான் இருப்பார் என நினைத்து வரையப்பட்ட ஓவியம் தான் இன்றும் உள்ளது

.கருத்தை எழுதவும்

ரமணியன்

நன்றி சமயம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 23, 2019 9:53 pm

இதை பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களையும் எண்ணோட்டங்களையும்
கூறவும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக