ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மும்பைக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா அணி பவுலிங்
by ayyasamy ram Today at 8:31 pm

» ஆகுற சுகம்
by bharathichandranssn Today at 8:30 pm

» 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
by ayyasamy ram Today at 8:19 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by T.N.Balasubramanian Today at 6:43 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Today at 5:09 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:49 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Today at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

Admins Online

தமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே?!

Go down

தமிழ்நாட்டிலும் இவர்கள்  உட்கார வைக்கப் படலாமே?!  Empty தமிழ்நாட்டிலும் இவர்கள் உட்கார வைக்கப் படலாமே?!

Post by ayyasamy ram on Tue Nov 26, 2019 5:59 pm

தமிழ்நாட்டிலும் இவர்கள்  உட்கார வைக்கப் படலாமே?!  RECOMMENDED-STORIES

கேரள அரசு துணிக்கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு அமர \
ஒரு இருக்கை தர வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது.

தமிழகத்தில் இந்த சட்டத்தை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்காகவும்
சேர்த்தே கொண்டு வர வேண்டியது அவசியம்.

ஒவ்வொருமுறையும் துணிக்கடைகளுக்குச் செல்லும் போது நானும் என்
கணவரும் அங்கிருக்கும் வேலையாட்களிடம் தவறாமல் கேட்கும் கேள்வி;

நீங்கள் ஏன் இப்படி நாள் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டும்?
சிறிது நேரமாவது உட்கார்ந்து கொள்ள ஒரு நாற்காலி கேட்கக் கூடாதா?
என்பதாகத்தான் இருக்கும்.

பாடியில் உள்ள பிரபல 9 மாடி ஜவுளிக்கடையில் ஒரு பெண் சொன்னார்.
அதெல்லாம் கேட்க முடியுங்களா மேம். காலைல சொன்ன நேரத்துக்கு 5 நிமிஷம்
லேட்டானாலே சம்பளத்துல கட் பண்ணிடுவாங்க, இதெல்லாம் கேட்டா அவ்வளவு
தான் வேலையை விட்டு நிறுத்திடுவாங்க. என்றார்.

அண்ணாநகரில் ஒரு பிரபல ஷோரூம் பணியாளரான ஆடவர் சொன்னது, சார்,
வீட்ல ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க, கல்யாணம் பண்ணனும், கடனைக்
கட்டனும். இதெல்லாம் தான் மனசுல இருக்கு. நிற்கத்தான் வேணும்னு சூப்பர்வைஸர்
சொன்னப்புறம் தானே நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டு வந்தேன், இப்பப் போய்
என்னத்தைக் கேட்க?!- என்றார்.

ஆணோ, பெண்ணோ இவர்களுக்கான அலுவல் நேரம் 10 மணி நேரம் என்று
சொல்லக் கேள்வி.

தொடர்ந்து நின்று கொண்டே வேலை பார்க்கும் பெண்களுக்கு உடலின் கீழ்ப்பகுதி
கடுமையாக பாதிக்கப்படும். மாதவிடாய் காலங்களில் தீவிர மன அழுத்தத்தோடு
உடல் நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும். சிறுநீர் கழிப்பதை அடக்குவதால் சிறுநீரகப்
பிரச்னை ஏற்படக்கூடும்.

மாதவிடாய் சிரமங்கள் தவிர பெண்களுக்கு நிகழ வாய்ப்பிருக்கும் அத்தனை சிரமங்களும்
ஆண்களுக்கும் பொருந்தக்கூடியவை தான்.

- என்கிறார்கள் மருத்துவர்கள்.

உலகெங்கும் தொழிலாளர் பிரச்சினைகள முன்னின்று நடத்தி எளிய அப்பாவி
மக்களின் வாழ்வில் உழைப்பைக் குறைத்து சற்றே ஆசுவாசம் பெற வழிவகை செய்த
பெருமை கம்யூனிஸ்டுகளையே சேரும் என்பார்கள். அப்படியொரு பாரம்பர்யத்தில்
வந்தவரான கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளத்தில் ஜவுளிக்கடைப்
பெண்களின் வலிமிகுந்த வாழ்வில் உட்கார இருக்கை தந்து ஒளியேற்றி விட்டார்.

நம் தமிழக முதல்வருக்கு அந்த எண்ணம் தோன்றுவது எப்போது?!


நம் தமிழகத்தின் ஜவுளிக்கடை ஆண்களும், பெண்களும் ஆட்கள் குறைந்த
நேரமேனும் சற்றே இளைப்பாற நாற்காலியில் அமர்ந்து தங்களது சோர்வான
கால்களை வலி தீர நீவிக் கொள்வது எப்போது?!

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61107
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum