ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு: தமிழக அரசு
by ayyasamy ram Today at 0:06

» செவ்வாய்க்கிழமைகளில் இந்த மந்திரத்தை உச்சரித்தால் முருகன் உங்கள் கஷ்டங்களை தீர்ப்பார் !
by krishnaamma Yesterday at 23:07

» மைக்ரோ கதை
by krishnaamma Yesterday at 22:40

» குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
by krishnaamma Yesterday at 22:38

» ஹாலிவோட்டில் பிரபலமான தமிழ் பெண்கள்
by krishnaamma Yesterday at 22:36

» மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...
by krishnaamma Yesterday at 22:25

» அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் - ஸுதபஸே நமஹ.....!!!
by krishnaamma Yesterday at 22:21

» படியளக்கும் பெருமாள் !
by krishnaamma Yesterday at 22:20

» இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ...
by krishnaamma Yesterday at 22:20

» நற்றமிழ் அறிவோம் - ஒருவன் , ஒருத்தி
by M.Jagadeesan Yesterday at 21:11

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Yesterday at 19:58

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 18:21

» படம் தரும் பாடம் (தினமலர்)
by ayyasamy ram Yesterday at 18:14

» முதல்வர் கூட்டத்தை புறக்கணித்த ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களுடன் ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 18:04

» மெகபூபாவிற்கு இன்னும் எத்தனை நாள் காவல்: உச்சநீதிமன்றம் கேள்வி
by ayyasamy ram Yesterday at 18:01

» இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Yesterday at 17:57

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:22

» செமஸ்டர் தேர்வில் 'மாஸ் காப்பி' : ஒரே மாதிரி விடைத்தாளால் குழப்பம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 13:16

» தேன் காய் என்ன என்பது எது?
by Guest Yesterday at 13:13

» கைரேகை ஜோசியர் தொழிலை மாத்திட்டார்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:52

» மஹாத்மாவே… மறுபடியும் பிறக்க வேண்டாம்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:37

» மகாத்மா காந்தியும், பல்லும்!
by ayyasamy ram Yesterday at 10:19

» ரஸ்கின்… தோரோ… டால்ஸ்டாய்!
by ayyasamy ram Yesterday at 10:18

» காந்திஜியும், கோவணமும்!
by ayyasamy ram Yesterday at 10:17

» சினிமா செய்திகள் (வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 10:16

» இன்று 5,589 பேருக்கு கொரோனா தொற்று: 70 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 10:07

» சென்னையில் கனமழை :
by ayyasamy ram Yesterday at 10:05

» நற்றமிழ் அறிவோம் - பல , சில
by M.Jagadeesan Yesterday at 7:55

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:44

» மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !
by krishnaamma Mon 28 Sep 2020 - 23:35

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - தனவந்தருக்கு குங்கும ப்ரசாதம் !
by krishnaamma Mon 28 Sep 2020 - 23:19

» ”சரணாகதி”
by krishnaamma Mon 28 Sep 2020 - 23:05

» யுயுத்சு ! - அறியாத கதை !
by krishnaamma Mon 28 Sep 2020 - 23:02

» தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் இந்த காய் உதவும்...
by krishnaamma Mon 28 Sep 2020 - 22:52

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by krishnaamma Mon 28 Sep 2020 - 22:49

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by krishnaamma Mon 28 Sep 2020 - 22:48

» எஸ்.பி.பி.யை முழுப் பெயர் சொல்லி அழைப்பவர்!
by krishnaamma Mon 28 Sep 2020 - 22:47

» ஆர்யா தான் பேயா..? சுந்தர் சி-யின் அரண்மனை-3 அப்டேட்ஸ்..!
by krishnaamma Mon 28 Sep 2020 - 22:46

» எனக்குப் பிடித்தமான SBP யின் பாடல்கள்....
by krishnaamma Mon 28 Sep 2020 - 22:44

» போர் வீரர்கள் சோர்ந்து போய் காணப்படுகிறார்களே?
by ayyasamy ram Mon 28 Sep 2020 - 22:15

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by M.Jagadeesan Mon 28 Sep 2020 - 21:03

» நிதிஷ் கட்சியில் போலீஸ் அதிகாரி
by ayyasamy ram Mon 28 Sep 2020 - 17:10

» எச்.ராஜாவுக்கு எம்.பி., பதவியா?
by ayyasamy ram Mon 28 Sep 2020 - 17:05

» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
by ayyasamy ram Mon 28 Sep 2020 - 16:56

» கரோனாவால் பாதித்த சுற்றுலாத் துறை: இன்று உலக சுற்றுலா தினம் !
by krishnaamma Mon 28 Sep 2020 - 0:17

» படமும் செய்தியும்!
by krishnaamma Mon 28 Sep 2020 - 0:14

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by சக்தி18 Sun 27 Sep 2020 - 23:03

» பாக்.,கில், 'சார்க்' மாநாடு முறியடிப்பு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 22:05

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by krishnaamma Sun 27 Sep 2020 - 22:02

» கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு !
by krishnaamma Sun 27 Sep 2020 - 21:56

Admins Online

கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது

Go down

கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது Empty கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்:எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது

Post by ayyasamy ram on Fri 6 Dec 2019 - 5:17

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட
சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்
மாநிலங்களவையில் பணிகள் முடங்கின.

ஆபத்தான நிலையில் சிகிச்சை


உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது
இளம்பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் ஒரு கும்பல் கற்பழித்தது.
இதில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,
நேற்று காலையில் அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அருகில் உள்ள
வயல்வெளிக்கு இழுத்து சென்ற ஒரு கும்பல், பின்னர் அவர் மீது
பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது.

இதில் 90 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் ஆபத்தான
நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன்னை கற்பழித்தவர்களே, தங்கள் நண்பர்களுடன் வந்து
தீ வைத்ததாக போலீசாரிடம் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதன்பேரில் அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அவை ஒத்திவைப்பு


இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்
ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

கற்பழிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நேற்று
நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் காலையில்
இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
ஆனால் இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார்.

இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை
அமைதி காக்குமாறு அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால்
உறுப்பினர்கள் இதற்கு செவிசாய்க்காததால் அவையை 12 மணி வரை
வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.

வரிவிதிப்பு திருத்த மசோதா


இதைப்போல பிற்பகல் 2 மணிக்கு அவை கூடிய போதும்,
இந்த பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் எழுப்பினர்.
அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, உன்னாவ்
சம்பவத்தை விவாதிக்கக்கோரும் எதிர்க்கட்சியினரின் விருப்பத்தையாவது
கேளுங்கள் என அவை துணைத்தலைவர் ஹரிவன்சை கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதற்கு ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவிக்கவே,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபை ½ மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

பின்னர் மீண்டும் அவை கூடியபோது வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா
மீது விவாதம் நடந்தது. பின்னர் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61243
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum