ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:48 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

Admins Online

“அடை” by Sujatha.

Go down

“அடை” by Sujatha. Empty “அடை” by Sujatha.

Post by krishnaamma on Fri Dec 20, 2019 7:58 pm

“அடை” by Sujatha.

“அடை” by Sujatha. GjDmSEcTIKmB5Kp6ohoH+IMG-20150103-WA0008

கேட்ட மாத்திரத்தில் “அட”  என்று வியக்க வைக்கும் டிபன் “அடை” – அந்தக் காலப் பாட்டிகளின் ஃபேவரிட் பலகாரமும் அடையும் வெல்லமும்தான்!

மாலை வேளையில், மத்திய தர ஓட்டல்களின் கரும்பலகைகளில், பச்சை, சிவப்பு, நீலம் என பல வண்ண எல் ஈ டி பல்புகளின் ஒளிர்வில், இரண்டு ஸ்டார்களுடன் மெனுவின் கடைசி ஐட்டமாய் வசீகரிக்கும் சூப்பர் ஸ்டார், “அடை – அவியல்”!

இட்லி, தோசை, பூரி போன்ற ஃபாஸ்ட் பெளலர்கள் போரடித்தால், மாற்றுக்கு வரும் ஸ்பின் பெளலர் அடை! ( என்னது, உப்புமாவா? அவர் ட்வெல்த் மேன் – அவசரத்துக்கு கூப்பிட்டுக்கொ ’ல்லலா ’ம்!).

காலையில்  ஊறவைத்த அரிசி, து.பருப்பு, க.பருப்பு கலவையை மதியம் காபி கடையுடன் (மதிய காபி நேரத்துக்கு செல்லப் பெயர்!) மிக்சியில் (அல்லது  கல் உரலில்) இரண்டு, மூன்று மிளகாய் வற்றலுடன் சிறிது கரகரவென்று, கூழாக இல்லாமல் அரைப்பது, மாலை சற்றே தடிமலான ‘மொறு’’மொறு’ அடைக்கு உத்திரவாதம்!

மஞ்சளுக்கும், ஆரஞ்சுக்கும் இடைப்பட்ட ‘பீச்’ கலரில் அடைமாவு – சிறு சிறு புள்ளிகளாக சிவப்பு மிள்காய்த் துகள்கள், எடுத்த கரண்டியில் தளும்பாமல், ஸ்திரமாய் நிற்பது – தோசைக் கல்லில் நடுசெண்டரில் இருந்து மெதுவாகப் பரவத் தோதானது! சிறிது தாராளமாக வார்க்கப்படும் எண்ணை, தடிமனான அடையின் மெரூன் கலரில் முறுகலான ஓரங்களுக்கு முக்கியம்! அவ்வாறே அடையின் நடுவில் கீறப்படும் ஓட்டையில் விடும் எண்ணையும்!

கருவேப்பிலை, முருங்கை இலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பல்லு பல்லாய் (சின்ன அழகிய அரிசிப்பல் போல!) தேங்காய்த் துண்டுகள், சிறு கத்தரித் துண்டுகள் சேர்ப்பதில் வேலை மெனக்கெடல் உண்டென்றாலும், அடையின் சுவைக்கு அவற்றின் பங்கு, அலாதியானது!

தோசையைப் போல் ஒல்லியாக வார்ப்பதுவும், ஓட்டல்கள் போல் ஒரு பக்கம் மட்டும் வேக வைப்பதுவும் அடைக்கு விரோதமானவை! மெரூன் கலரில் ‘க்ரிஸ்ப்’பான ஃப்ரில் ஓரங்களும், அங்கங்கே நம்மை முறைத்துப் பார்க்கும் தேங்காய்/ வெங்காயத் துண்டுகளும் நேசமான அடையின் அடையாளங்கள்!

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

“அடை” by Sujatha. Empty Re: “அடை” by Sujatha.

Post by krishnaamma on Fri Dec 20, 2019 8:01 pm

“அடை” by Sujatha. XsIArhJgRuyujCG8pIIa+IMG-20160407-WA0038

லாரல் இணை ஹார்டியைப் போல் அடைக்கு இணை, அவியல்தான்! காய்கறிகளுடன் ஓடும அவியலைவிட, வைத்த இடத்தில் நிற்கும் ( ராமன் முதுகில் அம்பறாத்துணியில் சொறுகி வைத்த அம்புகளைப் போல், நீளமாய் வெட்டப்பட்ட உருளை, சேனை, பீன்ஸ், மாங்காய், கேரட் துண்டுகள் துருத்திக் கொண்டு நிற்பது அவசியம்!) அவியலே என் சாய்ஸ்!

நல்ல மோர்க்குழம்பு (நீரோட்டமான ‘கடி’ – வடநாட்டு மோ.கு. மாதிரி – இதற்கு உதவாது!), பல்லில்லாதவர்களுக்கு உதவும் வகையில் அடைக்கு ஏற்ற ஜோடி!

மிளகாய்ப் பொடி – நல்லெண்ணை // வெல்லம் – வெண்ணை // வீட்டில் வைத்த அரைத்துவிட்ட சின்ன வெங்காய சாம்பார் எல்லாம் என்னதான் ஜோடி சேர்ந்தாடினாலும், கொஞ்சம் ’ஆபத்துக்குப் பாவமில்லை’ ரகம்தான்!

கல்லிலிருந்து, நேராகத் தட்டுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும் அடைகளுக்கு, உடனே வாயில் அடைக்கலம் கொடுப்பதுதான் நாம் அடைக்குச் செய்யும் மரியாதை. ஆறினது, ஹாட் பேக்கில் வியர்த்ததெல்லாம், ‘ஆறின கஞ்சி…..’ கதைதான்!

முதல்நாள் அடை மாவில், வெட்டிய வெங்காயம் சேர்த்து, நல்ல தேங்காய் எண்ணையில் மறுநாள் வார்க்கப்படும் முறுமுறு அடைக்கு ஒரு தனி மவுசும், ருசியும் உண்டு.- தே.எண்ணையுடன் சேர்ந்த மி.பொடியுடன் அந்த அடை உள்ளே செல்லும் ஒவ்வொரு முறையும் காதில் நாரத கானம் கேட்கும் பாக்கியம் பெறக்கூடும்!

ஆந்திர அன்பர்களின் அடை, ‘பெசரெட்’ – கொஞ்சம் அரிசியும், நிறைய பயத்தம்பருப்பும் சேர்ந்தது – தோசை போல மெல்லியதாக வார்த்து, மேலே பச்சைமிளகாய் விழுது, வெங்காயம், கொத்துமல்லி மற்றும் பெயர் தெரியா பொடிகள் தூவி ஒரு பக்கம் வேகவைத்த வஸ்து – தேங்காய் அல்லது கொத்தமல்லி கார சட்னியுடன் கண்ணில் நீரை வரவழைக்கும் டூயட்! இந்த பெசரெட்டின் நடுவில் ஒரு கரண்டி உப்புமாவை வைத்து மடித்துக் கொடுத்தால், அது ’’பெசரெட் உப்புமா” – நன்றாக இருந்ததாக என் சின்னப் பெண்ணின் திருமணத்தில் சாப்பிட்டவர்கள் சொன்னார்கள் – பெண்ணின் தோப்பனார் – எனக்கு பாக்கியம் இல்லை – நான் போனபோது தோசைக்கல்லும், கரண்டியும் மட்டும் கேட்பாரற்றுக் கிடந்தன!

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

“அடை” by Sujatha. Empty Re: “அடை” by Sujatha.

Post by krishnaamma on Fri Dec 20, 2019 8:02 pm

“அடை” by Sujatha. IjvWEbTvRmWfGCCx8A74+IMG-20170119-WA0079

அடையும் வெல்லமும் அந்தநாளைய பாட்டிகளின் பலகாரம் – ஆரோக்கியமானது. பருப்பில் புரதமும், வெல்லத்தில் இரும்புச் சத்தும் சேர்ந்து, ரத்தம் ஊறுகிறது – பாட்டிகளை மிஞ்சும் டயடீஷியன் இனிமேல்தான் பிறக்க வேண்டும்!

தயிர் சாதத்துக்கு, அடையும், மிளகாய்ப் பொடியும் நல்ல சைட் டிஷ் – அறியாதவர்கள், முயற்சித்து முக்தி அடையலாம்!

கொஞ்சமும் அடை ஜாடையே இல்லாத காரடையான் நோன்பு வெல்ல அடைக்கும்,, உப்பு அடைக்கும் அந்தப் பெயர் ஏன் வந்தது – தெரிந்தவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து, சொந்த செலவில் பக்கத்து ஓட்டலில் அடையுடன் வெண்ணை முழுங்கி பிறவிப் பயன் அடையலாம்!

அடையிடம் அடைக்கலம் அடைந்தோர் சார்பாக…………..

-எழுத்தாளர் சுஜாதா!

படங்கள் என்னுடையவை புன்னகை

நன்றி வாட்சப் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62185
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12605

Back to top Go down

“அடை” by Sujatha. Empty Re: “அடை” by Sujatha.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum